லிஸ்டிரியோசிஸ் - Listeriosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 10, 2018

July 31, 2020

லிஸ்டிரியோசிஸ்
லிஸ்டிரியோசிஸ்

லிஸ்டிரியோசிஸ் என்றால் என்ன?

லிஸ்டிரியோசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜெனெஸினால் ஏற்படும் மிக கடுமையான பாக்டீரியல் தொற்று ஆகும். சில நேரங்களில், இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியவின் பெயரைக் காரணமாக கொண்டு இது 'லிஸ்டீரியா' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தொற்றுநோய் ஆரம்பத்தில் உணவினால் ஏற்படுகின்றது, ஆகையால், பாக்டீரியாக்கள் முதலில் குடலில் பாதிப்பேற்படுத்துகின்றன. இது பொதுவாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பினை கொண்ட தனிநபர்களை பாதிக்கின்றது, அதாவது:

  • மூத்த குடிமக்கள் (வயது > 65 ஆண்டுகள்).
  • புற்றுநோய், சிறுநீரக நோய், அல்லது நீரிழிவு நோயாளிகள்.
  • எச் ஐ வி தொற்று அல்லது எய்ட்ஸ் நோயாளிகள்.
  • புதிதாக பிறந்த குழந்தைகள் ஆகியோருக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

ஊடுருவும் லிஸ்டிரியோஸிஸ் வழக்குகளில், பாக்டீரியல் தொற்று குடல் சுவர்களையும் தாண்டி பரவுகிறது, இதன் தொடர்புடைய அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

கர்ப்பிணிப் பெண்கள்: கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் காய்ச்சல் மற்றும் ஃப்ளுவினை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சிகிச்சையளிக்க தவறிவிட்டால், இந்த தொற்றின் தாக்கம் கருவின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்ககூடும். இது கருச்சிதைவு மட்டுமின்றி உரியகாலத்திற்கு முற்பட்ட பிரசவத்திற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. (மேலும் வாசிக்க: கர்ப்பக் காலத்திற்கான பராமரிப்பு).

இருப்பினும், சராசரியான வயதுடைய நோயாளிக்கு, தொற்றுநோய் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்:

ஊடுருவும் நோய்த்தொற்றினை தொடர்ந்து ஆரம்பகட்ட அறிகுறிகள் 1 லிருந்து - 4 வாரங்களுக்குள் வெளிப்பட துவங்கலாம்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

இந்த தொற்றின் பொதுவான மூலாதாரம் லிஸ்டீரியா பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்தலே. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி (WHO), இந்த தொற்று மிக அரிதாக ஏற்படக்கூடியது, இருப்பினும் உயிர்-அச்சுறுத்தல் தரும் அளவிற்கு திறன்கொண்டது. எனவே, பின்வரும் உணவு மூலாதாரங்கள் பாக்டீரியாவின் கேரியர்களாக இருக்கலாம்:

  • நீண்ட நாளான உணவு.
  • பச்சை உணவு.
  • பதபடுத்தப்படாத பாலிலிருந்து செய்யப்படும் பால் பொருட்கள்.
  • மாமிசம்.
  • சாப்பிட தயார்நிலையில் உள்ள குளிர்ந்த உணவு.
  • டெலி இறைச்சி.

மேலும், கர்ப்பிணிப் பெண்களில், இந்த தொற்றுநோய் தாயிடமிருந்து அவளுடைய பிறக்காத குழந்தைக்கு நஞ்சுகொடி மூலம் பரவக்கூடும். 

சிகிச்சையளிக்க தவறிவிட்டால், இந்த தொற்றுநோய், செபிசிஸ் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைகளை நோக்கி முன்னேறக்கூடும். மூளை சிதைவு மற்றும் மூளை கட்டியின் காரணியாகவும் லிஸ்டிரியோஸிஸ் அறியப்படுகிறது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

இரத்த பரிசோதனையின் மூலம் பாக்டீரியல் நோய்த்தொற்றின் இருப்பை உறுதிப்படுத்தலாம். காந்த அதிர்வு விம்பங்கள் (எம்ஆர்ஐ) ஏதேனும் மூளை செல் சேதம் ஏற்பட்டிருந்தால் அவற்றை கண்டறியப் பயன்படுகிறது.

நோய்த்தொற்று மற்றும் பாக்டீரியல் வளர்ச்சியை தடுக்க ஆண்டிபயாடிக் சிகிச்சையை பின்பற்றலாம்.

அதேபோல, இந்நிலைக்கான அறிகுறிகள் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம் மேலும் உங்களுக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு பின்வருவற்றின் காரணத்தால் ஏற்படுகிறது:

  • நீரிழிவு.
  • கீமோதெரபி.
  • எய்ட்ஸ்.

துப்புரவான மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தினால் இந்நிலை பெரும்பாலும் தடுக்கப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைகளுள் அடங்குபவை:

  • சாப்பாட்டுக்கு முன் கைகளை கழுவுதல்.
  • சமையல் / உணவை உட்கொள்ளும் முன்னர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவி பயன்படுத்துதல்.
  • காலாவதியாகும் தேதி முடிந்த உணவுகளைத் தவிர்த்தல்.
  • சமைக்கப்படாத இறைச்சி மற்றும் மீன் உண்பதை தவிர்த்தல்.
  • குளிர்சாதன பெட்டியில் 2 நாட்களுக்கு மேலாக வைக்கப்பட்ட உணவுகளை அப்புறப்படுத்துதல்.
  • பாக்டீரியல் உருவாக்கத்தைத் தவிர்க்க குளிர்சாதனப் பெட்டி மற்றும் இறைந்திருக்கும் உணவை அடிக்கடி சுத்தப்படுத்துதல்.
  • சமைக்கப்படாத கடல் உணவுகள் மற்றும் காய்கறிகளை சமைத்த உணவுகளிடமிருந்து தனியாக வைத்தல்.



மேற்கோள்கள்

  1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Listeria (Listeriosis)
  2. U.S. Department of Health & Human Services. Bacteria and Viruses. Washington; [Internet]
  3. Douglas A. Drevets, Michael S. Bronze. Listeria monocytogenes : epidemiology, human disease, and mechanisms of brain invasion . FEMS Immunology & Medical Microbiology, Volume 53, Issue 2, July 2008, Pages 151–165
  4. Marler Clark. Everything You Never Wanted to Know About Listeria, But Need To. July 4, 2013
  5. National Health Service [Internet]. UK; Listeriosis