ஆண்குறி கோளாறுகள் - Penis Disorders in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

May 04, 2019

March 06, 2020

ஆண்குறி கோளாறுகள்
ஆண்குறி கோளாறுகள்

ஆண்குறி கோளாறுகள் என்றால் என்ன?

ஆண்குறி என்பது ஆண்களின் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஆண்களின் பிறப்புறுப்பு ஆகும்.ஆண்குறி கோளாறுகள் அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நபரின் பாலியல் செயல்பாடுகளை பாதிக்கின்றன, மேலும் கருவுறுதல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கின்றன.சில பொதுவான ஆண்குறி நிலைகளில், விறைப்பு குறைபாடு, ஆணுறுப்பு முனைஅழற்சி (பலனிடிஸ்), தொடர்ந்து ஆண்குறி விறைத்தல் (ப்ரியப்ரிசும்), பெரோனிஸ் நோய் மற்றும் அரிதாக, ஆண்குறி புற்றுநோய் ஆகியவை அடங்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

அறிகுறிகள் அடிப்படை நிலையைப் பொறுத்து இருக்கும், எனவே அதற்கேற்ப அவற்றை விவரிக்க முடியும்.

 • விறைப்புச் செயலிழப்பு - இது மிகவும் பொதுவான ஒரு நிலை ஆகும்.விறைப்பைத் தக்கவைக்கப்பதில் சிரமம் அல்லது இயலாமை.
 • ப்ரியப்ரிசும் - ஆண்குறி 4 மணி நேரத்திற்கும் மேலாக விரைப்புடன் இருக்கும் ஒரு வலிமிகுந்த நிலை.
 • ஃபிமோஸிஸ் - இந்த நிலையில், ஆண்குறியின் நுனித்தோல் மிகவும் இறுக்கமாக இருக்கும் மற்றும் அது தானாக சுருங்கமுடியாததால் கடுமையான வலிக்கு வழிவகுக்கும்.
 • பெரோனிஸ் நோய் - இந்த நோயில், ஆண்குறி உட்புற புறணியில் வடு திசுக்களால் ஆன கடினமான கட்டிகளை உருவாகிறது, இது விறைப்பின்போது ஒரு பக்கத்திற்கு ஆண்குறியை வளையச் செய்கிறது. தடிப்புகள், அரிப்பு, தோல் நிறமிழப்பு மற்றும் ஆண்குறியின் புண்களுக்கு இந்த தோல் கோளாறுகள் வழிவகுக்கிறது.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

 • சில மருந்துகள், மது, காயங்கள், முதுகுத் தண்டு நிலைகள் ஆகியவை ப்ரியப்ரிசும் நோயின் காரணங்களாகும்.
 • செயல்திறன் கவலை, மன அழுத்தம் மற்றும் உடலுறவு அடக்குதலின் வரலாறு ஆகியவற்றால் விந்து விரைவில் வெளியேறுதல் ஏற்படுகிறது.
 • முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்காத ஃபிமோஸிஸ், விருத்தசேதனம் செய்யப்பட்ட ஆண்களில் பொதுவாக காணப்படுகிறது.
 • பெரோனிஸ் நோயின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் குருதிநாள அழற்சி (வாஸ்குலிட்டிஸ்), காயங்கள், மற்றும் பரம்பரை காரணங்கள் ஆகியவை இந்த நோயுடன் சம்பந்தப்பட்ட சில காரணிகள் ஆகும்.
 • புகைப்பிடித்தல் மற்றும் ஹெச்.பி.வி (மனித பாப்பிலோமா வைரஸ்) ஆகியவை ஆண்குறி புற்றுநோயின் முக்கியமான காரணங்கள்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

பொதுவாக ஆண்குறி மற்றும் விந்தகங்களைப் பரிசோதிப்பதன் மூலம் நோயறிதல் செய்யப்படுகிறது.ஒரு நபரின் கருவுறுதல் வளம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒரு வழக்கமான விந்து எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட பகுதி சொனோகிராபி செய்யப்படுகிறது.சிகிச்சை நோயின் காரணத்தைச் சார்ந்துள்ளது.

 • ஒரு ஊசி மூலம் ஆண்குறியிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ப்ரியப்ரிசும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 • ஃபிமோஸிஸ் நோய்க்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.  
 • பெரோனிஸ் நோய், மிதமான நிலையில் இருந்தால், 15 மாதங்களுக்குள் எந்த சிகிசையும் இல்லாமல் தானாகவே குணமடைந்துவிடும்.
 • ஆண்குறி புற்றுநோயானது அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவற்றால் சிகிச்சையளிக்கப்படுகிறது.

ஆண்குறி கோளாறுகள் கையாள்வதற்கு அதிர்ச்சிகரமான இருக்கலாம் மற்றும் அது ஒருவரின் உணர்ச்சி நல்வாழ்வை பாதிக்கும்.

சில சுய பாதுகாப்பு குறிப்புகள் ஆண்குறி கோளாறுகளைத் தடுப்பதில் உதவுகின்றன, அது ஒரு ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது.இந்த குறிப்புகள் பின்வருமாறு:

 • ஆண்குறியை சுத்தமாக வைத்திருத்தல்.
 • பிறப்புறுப்புகளை ஒரு வழக்கமான அடிப்படையில் பரிசோதித்தல்.
 • பல நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்தல்.
 • இறுக்கமான உள்ளாடைகளை அணியாமல் இருந்தல்.
 • தீவிர வெப்ப வெளிப்பாட்டிலிருந்து ஆண்குறியைப் பாதுகாத்தல்.
 • புகைப்பிடித்தலை நிறுத்துதல்.

ஆணுறுப்பில் ஏதேனும் அசாதாரணமான மாற்றங்கள் இருந்தால், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைப்பெறுவதற்க்காக ஒரு நபர் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.மேற்கோள்கள்

 1. English JC et al. Dermatoses of the glans penis and prepuce. J Am Acad Dermatol. 1997;37:1–24. PMID: 9216519
 2. West DS, Papalas JA, Selim MA, Vollmer RT. Re: Dermatopathology of the Foreskin: An Institutional Experience of over 400 Cases. J Cutan Pathol. 2013;40:11–8. Volume 191 Issue 5 May 2014 Page: 1319-1321
 3. Edwards S. Balanitis and balanoposthitis: A review. Genitourin Med. 1996;72:155–9. PMID: 8707315
 4. Brown GD, Denning DW, Gow NA, Levitz SM, Netea MG, White TC. Hidden killers: Human fungal infections. Sci Transl Med. 2012;4:165rv13.
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Penis Disorders.

ஆண்குறி கோளாறுகள் டாக்டர்கள்

Pallavi Tripathy Pallavi Tripathy General Physician
3 वर्षों का अनुभव
Dr Sarath Dr Sarath General Physician
Dr. Mukesh Prajapat Dr. Mukesh Prajapat General Physician
3 वर्षों का अनुभव
Dr. Hitesh Suthar Dr. Hitesh Suthar General Physician
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

ஆண்குறி கோளாறுகள் க்கான மருந்துகள்

ஆண்குறி கோளாறுகள் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

ஆண்குறி கோளாறுகள் की जांच का लैब टेस्ट करवाएं

ஆண்குறி கோளாறுகள் के लिए बहुत लैब टेस्ट उपलब्ध हैं। नीचे यहाँ सारे लैब टेस्ट दिए गए हैं:

टेस्ट का नाम