விலா எலும்பு வலி - Rib Pain in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 12, 2019

March 06, 2020

விலா எலும்பு வலி
விலா எலும்பு வலி

விலா எலும்பு வலி என்றால் என்ன?

விலா எலும்பு வலி என்பது ஒன்று அல்லது இருபக்க விலா எலும்புகளில் ஏற்படும் வலி ஆகும்.ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விலா எலும்புகளில் வலி ஏற்படலாம். 

அதன் முக்கிய தொடர்புடைய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மார்பில் உள்ள வழக்கமான வலி தவிர, விலா எலும்பு வலிக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கலாம்:

 • காஸ்டோகாண்ட்ராய்டிஸாக இருக்கும் சமயத்தில், விலா குருத்தெலும்பு வீக்கம் அடைதல்  அல்லது புடைப்பு மற்றும் மார்பு பகுதியில் மென்மையான தன்மை போன்றவை குறிப்பிடப்படவேண்டியவை.வலி மேல் விலா எலும்புகள் மற்றும் மார்பு எலும்புக்கு நெருக்கமாக உணரலாம். இருப்பினும், அதன் கடுமையான சமயத்தில்,அறிகுறிகள் உடலின் கீழ்ப்பகுதியில் ஒரு தொடர்ச்சியான வலி உருவாகி மோசமடையும்.அத்தகைய சமயத்தில் மருத்துவ சிகிச்சை  உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • இதேபோன்று, நுரையீரல் உறை வீக்கம் என்பது மார்புப் பகுதி மற்றும் நுரையீரல்களுக்கு இடையே உள்ள உறையில் ஏற்படும் வீக்கமாகும்.இந்த நிலைமையில் வலி மிகவும் பொதுவான அறிகுறியாகும்.வழக்கமாக, இந்த பிரச்சினை தானாகவே சரியாகக்கூடியது ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஆண்டிபயாடிக் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.மேலும், மூச்சுக்குழாய் வீக்கம், அதாவது மூச்சுக்குழல்களில் ஏற்படும் வீக்கம் கூட, விலா எலும்பு பகுதியைச்சுற்றி வலியை ஏற்படுத்தலாம்.
 • நுரையீரல் புற்றுநோயானது விலா அல்லது மார்பு பகுதியில் வலியை ஏற்படுத்துகின்றது, சிரிக்கும்போது அல்லது இருமும்போது வலி மோசமடையும்இது மூச்சுத் திணறல், சளி மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட வழிவகுக்கும்.
 • ஃபைப்ரோமியால்ஜியா நோயாளிகளில், வலியின் தன்மை எரிச்சலாக,குத்துவது போன்று அல்லது தொடர்ந்து வலி இருக்கும்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

விலா எலும்பு வலி பொதுவானதாகவும் சிலசமயங்களில் அரிதான நிலைகளில் மார்பு வலியினை அதிகரிக்கும் மற்றும் வயிற்று வலி மற்றும் காய்ச்சலுடன் சேர்ந்து இருக்கலாம்.

பொதுவான காரணங்களாக அடங்குவன:

 • காஸ்டோகாண்ட்ராய்டிஸ் (விலா குருத்தெலும்பு பகுதியில் வீக்கம்).
 • மார்பு முதுகெலும்பில் வலி.
 • மார்பு எலும்புத் தசை நோய்க்குறி (ஸ்டெர்னலிஸ் சிண்ட்ரோம்) - மார்பு உறையில் வலி ஏற்படுகின்ற ஒரு அரிய நோய்க்குறி.
 • காயம், விளையாட்டு, விபத்து, தாக்குதல் அல்லது விழுதல் காரணமாக உடைந்த விலா எலும்புகள்.

அரிய காரணங்களாவன:

 • அழுத்த முறிவுகள்.
 • முடக்குவாத (எலும்பு மற்றும் மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி) காரணிகள்.
 • ஃபைப்ரோமியால்ஜியா - தசை வலி மற்றும் விரைப்புடன் மூட்டுகளில் வலி.
 • அறிவாள் உரு சிகப்பணு சோகை (சிக்கில் செல் அனீமியா) - அறிவாள் வடிவ சிவப்பு இரத்த அணுக்களின் காரணமாக இரத்தத்தின் ஆக்ஸிஜன் எடுத்து செல்லும் திறன் குறைகிறது.
 • பலகுருத்தெலும்பு வீக்கம் (பாலிகண்டிரைடிஸ்) - குருத்தெலும்பில்(உறுதியான எளிதில் வளையத்தக்க சவ்வு ) வீக்கம் அல்லது புடைப்பு.
 • எலும்பு மெலிதல் (ஆஸ்டியோபோரோசிஸ்) - மாதவிடாய் நின்ற பிறகு எலும்பு அடர்த்தி குறைதல்.
 •  லூபஸ் எரிதிமாடோசஸ் - ஒரு தன்னியக்க நிலை.
 • விலா எலும்பு இடுப்பு நழுவுதல் நோய்க்குறி  (ஸ்லிப்பிங்  ரிப்  சின்ரோம்) - கீழே உள்ள விலா எலும்புகளின் குருத்தெலும்பு நழுவும் அரிய நிலை, இதனால் வலி  ஏற்படும்.
 • கட்டிகள்.
 • பித்தக்கற்கள்.
 • நுரையீரல் உறை வீக்கம் (புலுரசி).
 • நுரையீரல் குருதிக்குழாயடைப்பு.

இது எப்படி நோயறியப்படுகிறது  மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

மேலே உள்ள நிலைமைகள் அறிகுறிகள் மூலம் கண்டறியப்படலாம்.மார்பக எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ, அல்லது சி-எதிர் புரத அளவு போன்ற பல சோதனைகளை காரணத்தைத் தீர்மானிப்பதற்கு மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.   
இவை தவிர, மருத்துவர் மேலும் பரிந்துரைக்கலாம்:

 • வலிநீக்கி (அனல்ஜிசிக்) அல்லது வலி நிவாரணி மருந்துகள்.
 • தற்காலிகமாக உடலை அதிக கடினமான வேலைகளை மேற்கொள்ளாமல் தவிர்த்தல்.
 • வெப்ப / குளிர் ஒத்தட சிகிச்சை.
 • உடலியக்க சிகிச்சை முறைகள் (பிசியோதெரபி).
 • கார்டிகோஸ்டெராய்டுகளினால் சிகிச்சை.

தீவிர சந்தர்ப்பங்களில், புற்றுநோய் மற்றும் உடைந்த விலா எலும்புகள் போன்ற நிலைமைகளுக்கு மருத்துவர் குறிப்பிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Broken or bruised ribs.
 2. Department of Health Chest injuries and rib fractures. Government of Western Australia [Internet]
 3. Minerva Med. 1975 Aug 18;66(54):2679-89. PMID 1153118
 4. Australian Family Physician [Internet] The Royal Australian College of General Practitioners; Musculoskeletal chest wall pain
 5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Rib injuries
 6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Ribcage pain
 7. healthdirect Australia. Costochondritis. Australian government: Department of Health

விலா எலும்பு வலி டாக்டர்கள்

Dr. Tushar Verma Dr. Tushar Verma Orthopedics
5 वर्षों का अनुभव
Dr. Urmish Donga Dr. Urmish Donga Orthopedics
5 वर्षों का अनुभव
Dr. Sunil Kumar Yadav Dr. Sunil Kumar Yadav Orthopedics
3 वर्षों का अनुभव
Dr. Deep Chakraborty Dr. Deep Chakraborty Orthopedics
10 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

விலா எலும்பு வலி க்கான மருந்துகள்

விலா எலும்பு வலி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।