சால்மோனெல்லா - Salmonella in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 12, 2019

March 06, 2020

சால்மோனெல்லா
சால்மோனெல்லா

சால்மோனெல்லா  என்றால் என்ன?  

சால்மோனெல்லா நோய்த்தொற்று அல்லது சால்மோனெல்லோசிஸ் என்பது குடல் பாதையில் ஏற்படும் பாக்டீரியா நோய்த்தொற்று ஆகும்.இந்த நுண்ணுயிர் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் காணப்படுகின்றன, மேலும் அவை மலம் வழியாக வெளியேற்றப்படுகின்றன.இருப்பினும், தொற்றுநோய் அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவுகிறது.

வழக்கமாக, சால்மோனெல்லோசிஸ் நோய் அறிகுறிகளான, வயிற்றுப்போக்கு, பிடிப்புகள் மற்றும் காய்ச்சல் நோய்த்தொற்று ஏற்பட்ட  2 மணிநேரத்திற்குள் ஏற்படும்.குறிப்பிட்ட சிகிச்சை இல்லாமல் இந்த நோய்த் தொடரிலிருந்து மீண்டு வர முடியும்.ஒரு எளிய மலச் சோதனை நோய் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.எனினும், இந்த  நோய் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மரணத்தை விளைவிக்கக்கூடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்நிலை பின்வரும் எண்ணற்ற அறிகுறிகள் மூலமாக அடையாளம் காணப்படுகிறது.

நோய் முற்றிய கால கட்டத்தில், தொடர்ந்து காய்ச்சல் நீடிக்கலாம் அதனால் நோயாளியின் நிலை மோசமடையக்கூடும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சால்மோனெல்லா நோய்த்தாக்கம் சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாவால் மாசடைந்த உணவுப்பொருட்களான பச்சையான பால் பொருட்கள் அல்லது நன்கு வேகவைக்காத இறைச்சி அல்லது கோழிப்பண்ணை பொருட்கள் முதலியவற்றை உட்கொள்வதன் விளைவாக ஏற்படுகிறது.சால்மோனெல்லா டைஃபி நுண்ணுயிர்களினால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணையிலிருந்து உரம் பயன்படுத்தினால், பழங்கள் மற்றும் காய்கறிகளும் இதனால் பாதிக்கப்படலாம்.வயிற்றின் மீதான இதன் தாக்கம் காரணமாக, இது இரையகக்குடலிய அழற்சி அல்லது வயிற்றுப் பொருமல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மிருகங்களின் கழிவுகளை தொடுவதாலும் மிருகங்களைத் தொட்ட பிறகு உணவு உட்கொள்வதன் மூலம் மக்கள் பாதிக்கப்படலாம்.இதேபோல், நோய் கடத்திகளான மனிதர்கள் மோசமான சுகாதார நிலைமைகளால் மற்றவர்களை பாதிக்கலாம்.

எனவே, பின்வரும் பொருட்களை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்:

 • முட்டைகள்.
 • இறைச்சி.
 • கோழி பண்னை பொருட்கள்.
 • பதப்படுத்ததப்படாத பால்.
 • ஊர்வன.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நோய்த்தாக்கத்தின் மூல காரணத்தை, உறுதி செய்வதற்காக நோய்த்தொற்றுடைய நபரின் இரத்தம் அல்லது மலத்தின் மாதிரி பரிசோதனை மூலம் நோயறிதல் சாத்தியமாகும், அஃதாவது மலத்தில் உள்ள பாக்டீரியா அல்லது இரத்தத்தில் உள்ள டைபாய்டு பாக்டீரியாக்கு எதிரான நோய் எதிர்ப்புப் பொருட்கள் இருப்பது கண்டறியப்படுகிறது.சால்மோனெல்லோசிஸை குணாதிசயப்படுத்த கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்று இயற்கையான நோயெதிர்ப்பு அமைப்பு மூலம் கையாளப்படுகிறது.எனினும், நோய் முற்றியவர்களுக்கு, கடுமையான அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவமனையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சிகிச்சையுடன் நரம்பு வழி உடல்நீர் வறட்சி நீக்கல் சிகிச்சை தேவைப்படுகிறது.

தொற்றுநோயை தடுக்க, பின்வருவனவற்றை பின்பற்ற வேண்டும்:

 • அதிக அபாய உணவுகள் அல்லது வேக வைக்காத கோழிப்பொருட்களை தவிர்க்கவும்.
 • குளிரேற்றப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
 • சமையல் செய்வதற்கு மற்றும் சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவவும்.
 • சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகளை தனித்தனியாக சேமிக்கவும்.
 • சமையல் செயல்முறை முடிந்ததும்  மேற்பரப்புகளையும், கவுண்டர்களையும் சுத்தமாக வைக்கவும்.
 • எந்த விலங்கினத்தையும் தொட்ட பிறகு கைகள் கழுவ வேண்டும்.
 • செல்லப்பிராணிகளின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கவனத்துடன் பேணி பாதுகாக்க வேண்டும்.மேற்கோள்கள்

 1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Salmonella
 2. Department for Health and Wellbeing. Salmonella infection - including symptoms, treatment and prevention. Government of South Australia [Internet]
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Salmonella Infections
 4. Food Safety [Internet] U.S. Department of Health & Human Services. Salmonella.
 5. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Salmonella (non-typhoidal).