பூஞ்சணப் புண் - Sporotrichosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 14, 2019

March 06, 2020

பூஞ்சணப் புண்
பூஞ்சணப் புண்

பூஞ்சணப் புண் என்றால் என்ன?

பூஞ்சை ஸ்போரட்ரிக்கோசிசினால் ஏற்படும் நீண்ட கால பூஞ்சை தொற்றை பூஞ்சணப் புண் (ஸ்போரோட்ரிக்கோசிஸ்) எனப்படுகிறது. இந்த பூஞ்சை வெப்பமான பருவநிலையின் மண்ணில் வாழ்கிறது மற்றும் பெரும்பாலும் ரோஜா புதர்கள், பாசி மற்றும் வைக்கோல் போன்றவைகளில் காணப்படுகிறது, இது ரோஜா தோட்டக்காரரின் நோய் என பொதுவாக அழைக்கப்படுகிறது. பூஞ்சை தொற்று, தோல் மீது சிறிய வெட்டுக்கள் அல்லது காயங்கள் மூலம் பரவக்கூடியது. இந்த தொற்று பொதுவாக விவசாயிகளையும் தோட்டக்காரர்களையும் பாதிக்கிறது.

அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?

பூஞ்சணப் புண் நோய்க்கான அறிகுறிகள் எந்தவொரு நேரத்திலும் ஏற்படலாம்,  வெட்டு அல்லது காயம் மூலம் ஸ்போரோத்ரிக்ஸ் ஸ்கென்கி பூஞ்சை தொற்று ஏற்பட்ட 12 வாரங்களுக்குள் அறிகுறிகள் தோன்றலாம்.

இது முதலில் தோலில் ஒரு வலியற்ற சிறிய சிவப்பு கொப்புளம் போல காணப்படுகிறது, பின்னர் ஒரு புண் போல் அது மாறுகிறது. உடலில் தொற்று ஏற்பட்டு பூஞ்சை சுவாச மண்டலத்தில் நுழையும் போது, மூச்சு திணறல், இருமல், மார்பு வலி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

பூஞ்சணப் புண் இரண்டு வகைகள் உள்ளன: நிலையான மற்றும் பரவலாக ஊடுருவதல். நிலையான பூஞ்சணப் புண் சருமத்தில் மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்தும், அதேசமயத்தில், பரவலாக ஊடுருவும் பூஞ்சணப் புண் தோலிலிருந்து உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. நீரிழிவு நோய், புற்றுநோய்கள், எய்ட்ஸ் போன்ற நோயாளிகளுக்கு இப்பரவலாக பரவக்கூடிய பூஞ்சணப் புண் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மூட்டுவலி, தலைவலி மற்றும் வலிப்பு போன்ற தாக்கங்கள் பரவலாக  ஊடுருவும் பூஞ்சணப் புண்ணின் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன.

முக்கிய காரணங்கள் என்ன?

பாதிக்கப்பட்ட தாவரங்களைக் கையாளும் போது கரங்களில் அல்லது கைகளில் திறந்த காயம் அல்லது வெட்டு இருந்து அதன்  மூலம் பூஞ்சானால் தொற்று ஏற்படுகிறது அதை வெற்று ஸ்போரட்ரிச்சோசிஸ் என்பர். பூஞ்சை காளான்களை நுகரும் போது ஸ்போரட்ரிச்சோசிஸ் நுரையீரலை ஊடுருவி அரிதாக பாதிப்பை விளைவிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பரவலாக ஊடுருவக்கூடிய பூஞ்சணப் புண்ணால் உடனே பாதிப்புக்குள்ளாகின்றனர். ஏனென்றால் நோய்த்தொற்று இவ்வகை மக்களுக்கு மிக விரைவாக பரவும்.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

உங்கள் மருத்துவர் பூஞ்சணப் புண்ணை (ஸ்போரட்ரிச்கோசிஸ்) வெறுமனே மருத்துவரீதியாகவும் மற்றும் நோயறிதல் மூலமும் பரிசோதித்துக் கொள்ளலாம். தோல் முடிச்சிலிருந்து சீழ் மாதிரியை பரிசோதனைக்கு சேகரித்து மற்றும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள தோலின் மாதிரியை எடுத்து பயாப்ஸி(திசு பரிசோதனை) செய்து கொள்வதன் மூலம் நோயறிதலை உறுதிப்படுத்தலாம். வெற்று ஸ்போரோட்ரிக்கோசிஸ் பெரும்பாலும் இரத்த பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது. இந்த நோய்த்தாக்கங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றாலும், அவை இட்ராகோனசோல் போன்ற எதிர்பூஞ்சை மருந்துகளால் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். எனினும், இந்த மருந்து கர்ப்பக்காலத்தில் பயன்படுத்தப்படக்கூடாது. ஸ்போரட்ரிச்சோசிஸ்ஸின் நிலை தீவிரமடையும் போது ஆம்ப்ஃபோடெரிசின் பி நரம்பு ஊசியை உட்செலுத்துதல் மூலம்  சிகிச்சையளிக்கப்படுகிறது.

நோயை தடுக்க, காயத்தை முழுமையாக சுத்தம் செய்து பூஞ்சை மேலும் எந்த தொற்று உடலின் வெட்டு அல்லது காயம் மூலம் பரவாதபடி இருக்க அதை மூடி வைக்கவும். வேகமாக குணமடைய காயத்தை சொறிவதை தவிர்க்க வேண்டும்.



மேற்கோள்கள்

  1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Sporotrichosis.
  2. Department of Health[internet]. New York State Department; Sporotrichosis.
  3. Michael J. Burns,Neel N. Kapadia,Eric F. Silman. Sporotrichosis. West J Emerg Med. 2009 Aug; 10(3): 204. PMID: 19718388
  4. American Osteopathic College of Dermatology. Sporotrichosis. Kirksville, Missouri. [Internet]
  5. Rosane Orofino-Costa et al. Sporotrichosis: an update on epidemiology, etiopathogenesis, laboratory and clinical therapeutics. An Bras Dermatol. 2017 Sep-Oct; 92(5): 606–620. PMID: 29166494