myUpchar Call

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

புணர்ச்சி கடத்து நோய்கள் என்றும் அறியப்படும் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி-க்கள்) எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றுகளினால் கடத்தப்படும் நோய்களே ஆகும்.உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, உலகெங்கிலும் தினசரி 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பால்வினை நோய்கள் இருப்பதாக கண்டறியப்படுகிறது.இந்தியாவில் ஆண்டுதோறும் 30-35 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பெரும்பாலான நேரங்களில், இதன் அறிகுறிகள் தெளிவாக காணப்படுவதில்லை.இதன் பொதுவான மருத்துவ தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • பிறப்பு உறுப்புகள் வழியாக அசாதாரண திரவங்கள் வெளியேறுதல்.
  • பிறப்புறுப்பு மண்டலத்தை சுற்றி புண்கள் அல்லது மருக்கள் இருத்தல்.
  • சிறுநீரகம் கழிப்பதில் சிரமம்.
  • துர்நாற்றத்துடன் கூடிய யோனி வெளியேற்றம்.
  • உடல் வெப்பநிலை அதிகரித்தல்.
  • உடலுறவு கொள்வதில் அசௌகரியம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பால்வினை நோய்கள் முக்கியமாக பின்வரும் காரணங்களால் ஏற்படுகின்றன:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர் உடல் பரிசோதனை, மருத்துவ பின்புலம் மற்றும் ஆய்வக சோதனைகளை பரிந்துரை செய்யக்கூடும்.நோய்த்தொற்றின் வகையைப் பொறுத்து, கூடுதல் சோதனைகள் பின்வருமாறு  பரிந்துரைக்கப்படலாம்:

  • விரைவான எச்.ஐ.வி சோதனை.
  • எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் அறிய எலிசா சோதனை.
  • எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் அறிய எலிசா சோதனை.

இதற்கான சிகிச்சை என்பது அடிப்படை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதே ஆகும்.பால்வினை நோய்க்கு காரணமான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றைப் பொறுத்து, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் போன்றவை இதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுப்பதே இதற்கு சிகிச்சை அளிப்பதை விட எளிதானதாகும்.பால்வினை நோய்கள் ஏற்படாமல் பின்வரும் முறைகள் மூலம் தடுக்க முடியும்:

  • ஆணுறைகளின் பயன்பாடு எஸ்.டி.டி-யின் பரவலை தடுக்க உதவுகிறது.
  • எஸ்.டி.டி குணப்படுத்தப்படும் வரை உடலுறவு கொள்வதை தவிர்ப்பது நல்ல.
  • நீரால் கழுவுதலை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், இது தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் சாதாரண யோனி சூழலைக் கட்டுப்படுத்துகிறது.
  • ஹெச்.பி.வி தடுப்பூசி போன்ற சில தடுப்பூசிகள் இத்தகைய நோய்த்தொற்றுகளை தடுக்க உதவும்.
  • பலருடன் பாலியல் உறவு கொள்வது எஸ்.டி.டி ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, இது தவிர்க்கப்பட வேண்டும். பரஸ்பர ஒற்றை மணவாழ்க்கை, அதாவது ஒரே ஒருவருடன் மட்டுமே உடலுறவு கொள்வது, இத்தகைய நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும்.
  • பால்வினை நோய்த் தொற்றுள்ளவர் மட்டும் சிகிச்சை பெற்றால் போதாது. அவருடைய துணையோடு சேர்ந்து ஒரே சமயத்தில் சிகிச்சை பெற வேண்டும். எனவே, கணவன் மனைவி இருவரும் பால்வினை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்  என்று பரிந்துரைக்கப்படுகிறது.

சரியான பராமரிப்பு எடுக்கப்படாவிட்டால், வாழ்க்கை துணைக்கு இடையில் எஸ்.டி.டி-க்கள் பரவக்கூடும்.இந்த நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வுடன் செயல்பட்டால், கண்டிப்பாக இந்நோயை தடுக்க முடியும்.

பால்வினை நோய்கள் டாக்டர்கள்
Dr. Zeeshan Khan

Dr. Zeeshan Khan

Sexology
9 Years of Experience

Dr. Nizamuddin

Dr. Nizamuddin

Sexology
5 Years of Experience

Dr. Tahir

Dr. Tahir

Sexology
20 Years of Experience

Dr. Ajaz  Khan

Dr. Ajaz Khan

Sexology
13 Years of Experience

மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Sexually Transmitted Diseases
  2. Office on women's health [internet]: US Department of Health and Human Services; Sexually transmitted infections
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; How You Can Prevent Sexually Transmitted Diseases
  4. American Academy of Pediatrics. Diagnostic Testing For Sexually Transmitted Infections. Committee on Infectious Diseases Pediatrics [internet]
  5. Centre for Health Informatics. [Internet]. National Institute of Health and Family Welfare Sexually transmitted infections
  6. National institute of child health and human development [internet]. US Department of Health and Human Services; What causes sexually transmitted diseases (STDs) or sexually transmitted infections (STIs)?
Read on app