myUpchar Call

பாலுணர்வு என்பது ஒரு நபரின் செக்ஸ் ஊக்கம், அல்லது செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஆசையைக் குறிக்கிறது. இது, செக்ஸ் ஹார்மோன்கள், மற்றும் மூளையில் அவற்றுக்கான மையங்களின் ஆதிக்கத்தினால் ஏற்படுகிறது. ஆனால், இது எளிதான ஒன்றாகத் தோன்றினாலும், பாலுணர்வானது உங்கள் உணவுமுறை, மற்றும் உங்கள் துணையின் மீதான உங்கள் ஈர்ப்பு போன்ற மற்ற பல்வேறு காரணிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அநேகமாக உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளும் உங்கள் செக்ஸ் ஊக்கத்தைப் பாதிக்கின்றன.

பெண்களின் பாலுணர்வின் மீது, பெண்ணுறுப்பில் வறட்சி, அல்லது வலிமிகுந்த உடலுறவு போன்ற குறிப்பிட மருத்துவப் பிரச்சினைகளினாலும் கூட ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. மன இறுக்கம், தன்னம்பிக்கை குறைவு, தூக்கம் பாதிக்கப்படுதல் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளும் கூட, ஒரு விளைவைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை, சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மற்றும் ஒரு சிறந்த முறையில் உடலுறவு கொள்வதன் மூலம் சமாளிக்கப்படக் கூடியவை ஆகும்.

(மேலும் படிக்க: தூக்கமின்மை மேலாண்மை)

இருந்தாலும், செக்ஸ் ஊக்கம் என வரும் பொழுது, 'இயல்பு நிலை' என்ற ஒன்று கிடையாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சில நபர்கள் இயற்கையாகவே மற்றவர்களை விட அதிக ஊக்கத்துடனும், மற்றும் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான அதிக விருப்பத்தையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால், இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக, நீங்கள் உறுதியாக பாலுணர்வு ஊக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். இந்தக் கட்டுரை, பாலுணர்வுத் தூண்டிகளின் மீதான ஒரு சிறப்பு கவனத்துடன், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலினத்தவருக்கும் பாலுணர்வை அதிகரிக்கின்ற ஒரு சில வீட்டு நிவாரணிகளைப் பற்றி விவரிக்கிறது.

ஆக, பாலுணர்வுத் தூண்டிகள் என்பவை என்ன? தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.

  1. செக்ஸ் ஊக்கி உணவுகள் - Sex drive foods in Tamil
  2. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலுணர்வு குறைபாட்டுடன் இணைந்துள்ள அதற்கான காரணிகள் - Managing factors associated with low libido in men and women in Tamil
  3. பாலுணர்வை அதிகரிக்க வீட்டு மருத்துவங்கள் - Home remedies to increase libido in Tamil
  4. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிப்பதற்கான குறிப்புகள் - Tips to increase libido in men and women in Tamil
பாலுணர்வை அதிகரிப்பது எப்படி: உணவுகள் மற்றும் நிவாரணிகள் டாக்டர்கள்

பாலுணர்வுத் தூண்டிகள் அல்லது செக்ஸ் ஊக்கிகள் என்பவை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலுணர்வு விருப்பத்தை அதிகரிக்கின்ற, மற்றும் செக்ஸ் செயல்பாட்டினை மேம்படுத்துகின்ற திறனை உடைய குறிப்பிட்ட உணவுகள் மற்றும் மருந்துகளைக் குறிக்கின்றன. அவை ஒரு நபரின் செக்ஸ் உள்ளுணர்வைத் தூண்டுதல், மற்றும் அதற்கு காரணமாகுதல் மூலமாக இதை செய்கின்றன. இதைக் கேட்பதற்கு மிகவும் சிக்கலான விஷயம் போலத் தோன்றும் அதே வேளையில், இந்த 'மருந்துகள்' நீங்கள் தினசரி சாப்பிடுகின்ற மாதுளம் பழம், மற்றும் காஃபி போன்ற பல்வேறு உணவுகளில் இயற்கையாகவே இருக்கின்றன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக் கூடும். மற்றவை, உங்கள் பாலுறவு செயல்பாட்டினை அதிகரிக்க, உங்கள் உணவுமுறையில் நீங்கள்  மிகவும் எளிதாக சேர்த்துக் கொள்ளக் கூடியவை ஆகும்.

  • சாக்லேட்டுகள்
  • கடற்சிப்பிகள்
  • இறைச்சி
  • கோழி
  • வஞ்சிரம் மற்றும் டூனா போன்ற மீன்கள்
  • பால்
  • பாலடைக்கட்டி
  • சிவப்பு ஒயின்
  • அவகோடா
  • உலர் திராட்சைகள்
  • பேரீச்சம் பழங்கள்
  • வாதுமை பழங்கள்
  • அக்ரூட்டுகள்
  • கீரைகள் மற்றும் பிற பச்சை இலை காய்கறிகள்
  • வாழைப்பழங்கள்
  • நிலக்கடை வெண்ணெய்
  • பரட்டைக்கீரை
  • பீன்ஸ்
  • காஃபி

இந்த உணவுகளின் பாலுணர்வைத் தூண்டும் விளைவுகளுக்கான ஆதாரம்

  • சாக்கலேட்டுகள், ஒரு நன்கு அறியப்பட்ட பாலுணர்வுத் தூண்டியாக உள்ளன மற்றும் அவை பெண்களுக்கு பாலுணர்வு விருப்பத்தை அதிகரிப்பதாக, மற்றும் பாலுணர்வு இன்பத்தை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, சாக்லேட்டுகளை உட்கொண்ட பெண்களுக்கு, அதை உட்கொள்ளாத பெண்களோடு ஒப்பிடும் போது, பெண்களின் பாலுணர்வு செயல்பாட்டுக் குறியீட்டு எண் (FSFI) மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
  • கடற்சிப்பிகள், இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவை, ஆண்களுக்கு பாலுணர்வுரீதியான முதிர்ச்சி தாமாதமாதல், மற்றும் மலட்டுத்தன்மையுடன் தொடர்புடைய ஒரு குறைபாடான, துத்தநாகத்தை செறிவாகக் கொண்டஉணவுகள் ஆகும். எனவே, அவை ஆண்களின் செக்ஸ் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம், உங்கள் பாலுணர்வை அதிகரிப்பதன் மீது ஒரு மறைமுக விளைவைக் கொண்டிருக்கக் கூடும்.
  • இறைச்சி, பால் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவை, ஆண்களின் கரு உண்டாக்கும் திறன், மற்றும் பாலுணர்வு விருப்பங்களோடு நெருக்கமான தொடர்புடையதாக இருக்கின்ற கார்னிடைனை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. கார்னிடைன் என்பது, விந்து திரவத்தின் ஒரு மூலக்கூறு தொகுதி ஆகும். அது, விந்தணுக்களின் எண்ணிக்கை, மற்றும் அவற்றின் நகரும் தன்மை ஆகியவற்றை அதிகரித்தலோடு தொடர்புடைய ஒரு அதிகமான உட்பொருள் ஆகும். எனவே அது, பாலுணர்வு மற்றும் செக்ஸ் ஊக்கத்தை அதிகரிக்க, குறிப்பாக ஆண்களுக்கு, அதிகரிப்பதில் உதவக் கூடும்.
  • சிவப்பு ஒயின், பெண்களுக்கான அதன் திறனை நிரூபிக்கின்ற பல்வேறு ஆய்வு முடிவுகளைக் கொண்டுள்ள, ஒரு குறிப்பிடத்தக்க பாலுணர்வுத் தூண்டி ஆகும். அந்த ஆய்வுகளில், சிவப்பு ஒயினை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது, பெண்களின் சிறப்பான பாலுணர்வு விருப்பம் மற்றும் செயல்பாட்டினை சுட்டிக் காட்டுகின்ற, ஒரு அதிகரித்த FSFI புள்ளியோடு தொடர்புடையதாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டு உள்ளது.
  • அவகோடா மற்றும் உலர் திராட்சை உட்பட உலர் பழங்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் வாதுமை பழங்கள் ஆகியவை போரான் உடைய செறிவான ஆதாரங்கள் ஆகும். போரான் எடுத்துக் கொள்வது, அநேகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் செக்ஸ் ஸ்டெராய்டுகளின் அளவுகளை அதிகரிக்கிறது என ஆய்வு ஆதாரம் தெரிவித்து இருக்கிறது. இருப்பினும், அனேகமாக போரான் எடுத்துக் கொண்டதன் காரணமாக நன்மை அடைந்திருக்கக் கூடிய, ஆண்கள், குறிப்பாக வயது முதிர்ந்த ஆண்களுக்கு இடையே ஒரு கணிசமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.
  • பச்சை இலை காய்கறிகள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவை, உங்கள் பாலுணர்வு செயல்பாட்டில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்ற மெக்னீஷியத்தினை செறிவாகக் கொண்டிருக்கிறது. மெக்னீஷியத்தில் ஏற்படும் பற்றாக்குறையானது, விறைப்புத்தன்மை குறைபாடு, மற்றும் குறைவான பாலுணர்வுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, அதன் அளவுகளை அதிகரிப்பது, ஒரு சாதகமான விளைவைக் கொண்டிருக்கக் கூடும்.
Delay Spray For Men
₹349  ₹499  30% OFF
BUY NOW

பின்வருபவை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே வேறுப டக்கூடிய, குறைவான பாலுணர்வுக்காண பல்வேறு காரணிகள் ஆகும். இந்தக் காரணிகளில் சில ஏற்கனவே மேலே பட்டியலிடப்பட்டு உள்ளன. இவற்றை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதைத் தனித்தனியாக நாம் இப்பொழுது விவாதிக்கலாம்.

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரோன் அளவுகளை அதிகரித்தல் - Increasing testosterone levels in men in Tamil

ஆண்களுக்கு, செக்ஸ் ஊக்கம் என்பது ஆண் செக்ஸ் ஹார்மோன், அல்லது டெஸ்டோஸ்டெரோனால் அதிகமாக ஆதிக்கம் செலுத்தப்படுவதாக இருக்கிறது. எனவே, இந்த ஹார்மோனின் அளவுகளை அதிகரிப்பது, அவர்களின் செக்ஸ் ஊக்கத்தின் மீது ஒரு நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது என யூகிக்கப்படுகிறது. வரலாற்று சகாப்தத்தின் ஆரம்பத்தில் இருந்து, செக்ஸ் ஊக்கம், செயல்பாட்டினை மேம்படுத்துதல், செக்ஸ் கொள்ளும் கால அளவை அதிகரித்தல், அல்லது உணர்ச்சியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காக, இயற்கை உணவுகள் ஆண்களால் உண்ணப்பட்டு வருகின்றன.

(மேலும் படிக்க: டெஸ்டோஸ்டெரோன் அளவுகளை அதிகரிக்க வீட்டு மருத்துவங்கள்)

இந்த உணவுகளில் பெரும்பாலானவை, ஏற்கனவே உங்கள் தினசரி உணவுமுறையில் இருக்கின்றவையாகவும், மற்றவை, அடுத்த படியாக நாம் விவாதிக்கப்போகும் சிறப்பு ஆயுர்வேத உட்பொருட்களாகவும் உள்ளன.  ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரோன் அளவுகளை அதிகரிக்கின்ற மகத்தான திறனை உடைய அது போன்ற உணவுகளில் இஞ்சியும் ஒன்றாகும். இஞ்சி, அதன் வேதியியல் கலவைகள் ஆதிக்கத்தின் காரணமாகவுள்ள அதன் தனிப்பட்ட சுவை, மற்றும் மணத்தின் காரணமாக, அது ஆண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கிறது.

அது, ஆண்களுக்கு ஒரு சிறந்த செக்ஸ் ஊக்கத்துக்கு வழிவகுக்கக் கூடியவாறு, டெஸ்டோஸ்டெரோன் அளவுகளை மற்றும் பாலுணர்வுரீதியான திறனை அதிகரிக்கிறது. அது விந்தின் அளவு மற்றும் வெளியேறுதல்களையும் கூட அதிகரிக்க உதவக் கூடும். மற்றும் அது, விந்தணுவுக்கு சிறப்பான நம்பகத்தன்மை மற்றும் நகரும் திறனை வழங்குவதில், மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, உங்கள் உணவுமுறையில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது ஒரு நல்ல யோசனை ஆகும்.

நீங்கள் அதனை இஞ்சி தேநீர், இஞ்சித் தண்ணீர் வடிவத்தில் எடுத்துக் கொள்ளலாம், அல்லது உணவுக்கு சுவையூட்டும் ஒரு பொருளாகப் பயன்படுத்தலாம்.

பெண்களின் யோனி வலியைக் குறைத்தல் - Reducing vulvar pain in women in Tamil

சில பெண்கள், அவர்களின் செக்ஸ் ஊக்கத்தை இயற்கையாகவே குறைக்கக் கூடிய, செக்ஸ் வைத்துக் கொள்வதை ஒரு வலிமிகுந்த அனுபவமாக மாற்றுகின்ற, டிஸ்பரெயுனியா, அல்லது பாலியல் உடலுறவின் பொது வலி ஏற்படும் பிரச்சினையை அனுபவிக்கின்றனர். , அதற்கான காரணத்துக்குப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன்னர், அது உடலியல் ரீதியானதா அல்லது நோயை ஒத்திருக்கும் நோய்க்குறி தொடர்பான பிரச்சினையா என அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

பொதுவாக, பாலுறவுக்குப் பிறகு ஒரு சூடான வெந்நீர் குளியல், மற்றும் செக்சின் பொழுது ஒரு உயவுத்தன்மையுடைய பொருளைப் பயன்படுத்துவது வலியைக் குறைக்க உதவக் கூடியது ஆகும். இஞ்சி சாறும் கூட வலியைக் குறைப்பதில் உதவக் கூடிய ஒரு மூலிகை நிவாரணியாகக் கொடுக்கப்படக் கூடியதாக இருக்கிறது. மேலும், இஞ்சி ஒரு இயற்கையான பாலுணர்வுத் தூண்டியாக மற்றும் நீண்ட காலப் பயன்பாட்டின் போதும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒன்று ஆகும்.

(மேலும் படிக்க: யோனி வலியின் வகைகள்)

பெண்களின் யோனி வறட்சியைக் குறைத்தல் - Reducing vaginal dryness in women in Tamil

பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படுவது, வலிமிகுந்த செக்ஸ்க்கும், அவர்களின் பாலுணர்வு குறைவதற்கும் காரணமான, பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். இந்த வறட்சித்தன்மை, ஒரு மறைந்திருக்கும் நோய்த்தொற்று அல்லது ஹார்மோன்களின் காரணமாக இருக்கக் கூடும். வறட்சித்தன்மைக்கான காரணத்தைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் முக்கியமாக இருக்கின்ற அதே வேளையில், உடலுறவின் பொழுது யோனி உயவுப் பொருட்களை, மற்றும் யோனிக்கு ஈரப்பசையை அளிக்கும் பொருட்களை வழக்கமாகப் பயன்படுத்துவது உதவிகரமாக இருக்கக் கூடும்.

(மேலும் படிக்க: யோனி ஈஸ்ட் தொற்றுக்கான வீட்டு மருத்துவங்கள்)

குழந்தைப்பிறப்பு பெண்களுக்கு பாலுணர்வு குறைவதன் காரணமாகிறது - Childbirth causes reduced libido in women in Tamil

குழந்தைப்பிறப்புக்குப் பிறகு, குறிப்பாக பாலூட்டும் காலகட்டத்தின் பொழுது, சோர்வை ஏற்படுத்துகின்ற அதிகரித்த பொறுப்புகளின் காரணமாக, பெண்கள் பாலுணர்வு வேட்கை குறையும் பிரச்சினையை அடிக்கடி சந்திக்கின்றனர். இது மட்டும் அல்லாமல், பெண்கள் இந்த காலகட்டத்தின் போது உடலுறவு கொள்வதில் தயக்கமும், மற்றும் தூண்டுதலின் போது மார்புகளில் வலியையும் கூட உணர்கிறார்கள். எனவே, இந்த கால கட்டத்தின் பொழுது உங்கள் துணையிடம் மிகவும் இதமாகவும் மற்றும் அக்கறையுடனும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது ஆகும்.  உடலுறவின் போது கூட, குறிப்பாக மார்புகளைத் தொடுகின்ற பொழுது, இதமான செயல்பாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

(மேலும் படிக்க: எப்படி கர்ப்பம் தரிப்பது)

ஏற்கனவே விவாதித்தவாறு, பாலுணர்வு குறைவை பல்வேறு காரணங்களினால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வித்தியாசமாக உணர்கிறார்கள். இது உங்களது செக்ஸ் வாழ்க்கை, மற்றும் அதனால் உங்கள் துணையின் செக்ஸ் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். உங்கள் பாலுணர்வை அதிகரிக்கின்ற விஷயத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாலுணர்வு தூண்டிகள், மற்றும் உணவுகள் ஒரு பங்கினைக் கொண்டிருக்கும் வேளையில், இவற்றை மட்டுமே உட்கொள்வது உங்கள் செக்ஸ் ஊக்கத்தில் விரும்புகின்ற விளைவுகளை அடையும் சாத்தியமற்றதாக இருக்கக் கூடும். எனவே, உங்கள் பாலுணர்வை அதிகரிப்பதில் அவற்றின் விளைவுகளை ஆயுர்வேதம், மற்றும் மூலிகை அறிவியலில் முயற்சித்து,  மற்றும் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட ஒரு சில நிவாரணிகள் மற்றும் மூலிகைகளை நாங்கள் இங்கே பட்டியலிட்டு இருக்கிறோம். அவற்றின் செயல்பாடுகளில் தனித்தன்மையை கொண்டிருப்பதால், இந்த நிவாரணிகளைப் பயன்படுத்துவதினால் உங்கள் செக்ஸ் ஊக்கத்தில் சிறந்த விளைவுகளைக் கொடுக்கக் கூடும்.

பாலுணர்வுக்காக வெந்தயம் - Fenugreek for libido in Tamil

வெந்தயம் அல்லது மெத்தி, அதன் விதைகள் மற்றும் இலைகள் இரண்டுமே சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும், இந்திய உணவுமுறைகளின் பொதுவான ஒரு உட்பொருள் ஆகும். ஒரு சமீபத்திய ஆய்வின் படி, இந்த மூலிகையை எடுத்துக் கொள்வது, ஆண்களின் பாலுணர்வை 28% அளவுக்கு அதிகரிக்கிறது. இது, செக்ஸ் ஹார்மோன்களின், குறிப்பாக டெஸ்டோஸ்டெரோன் உற்பத்தியை அதிகரிக்கின்ற, வெந்தயத்தில் உள்ள சபோனின்களின் காரணமாக நடைபெறுவதாக இருக்கக் கூடும்.

இதன் சுவை மீது ஒரு உங்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது என்றால், இதை உங்கள் உணவுமுறையில் இயற்கையான முறையில் சேர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, இதன் பிற்சேர்க்கைப் பொருள் வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். டெஸ்டோபென் பிற்சேர்க்கையின் திறனை மதிப்பிடுவதற்காக  நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்களின் செக்ஸ் ரீதியான ஊக்கத்தின் மீது ஒரு ஒட்டுமொத்த சாதகமான விளைவு கண்டறியப்பட்டது. அது, டெஸ்டோஸ்டெரோன் அளவுகளை இயல்பான அளவில் பராமரிக்க உதவி, அதன் மூலம் பாலுணர்வைப் பராமரிக்க உதவுகிறது.

வெந்தயம் பெண்களுக்கும் அதே அளவு நன்மை அளிக்கக் கூடியது ஆகும். அது, பெண்களின் பாலுணர்வு வேட்கையில் ஒரு பங்கு வகிக்கக் கூடிய, மார்பக அளவுகளை அதிகரித்தல், மற்றும் மார்பக திசுக்களின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரித்தல் போன்ற பயன்களை அளிக்கிறது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Oil by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic oil is recommended by our doctors to lakhs of people for sex problems (premature ejaculation, lack of erection in the penis, lack of libido in men) with good results.
Men Massage Oil
₹394  ₹449  12% OFF
BUY NOW

மக்கா பாலுணர்வை அதிகரிக்கிறது - Maca increases libido in Tamil

பெருவை சொந்த பிராந்தியமாகக் கொண்ட மக்கா, உங்கள் பானங்கள் மற்றும் பருகும் பொருட்களில் எளிதாகக் கலந்து கொள்ளக் கூடிய வகையில் பொடிகள் ,மற்றும் பிற்சேர்க்கைப் பொருட்களாகக் கிடைக்கின்றன. அது ஒரு பாலுணர்வு அதிகரிப்பானாக பயன்படுத்தப்படுகிறது, மற்றும் கருவுறுதல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு பிற்சேர்க்கைப் பொருளாகப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கருவுறுதல் தன்மை அதிகரிப்பானாக, மற்றும் பாலுணர்வு வேட்கைக்கான ஒரு முன்னோடியாக இருக்கும் மக்கா, ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிப்பதாகவும் அறியப்படுகிறது.

அஸ்வகந்தா பாலுணர்வை அதிகரிக்கிறது - Ashwagandha improves libido in Tamil

அஸ்வகந்தா, அதன் மகத்தான நன்மைகளுக்காக இந்தியாவில் மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மூலிகை ஆகும். அதன் முக்கியமான பயன்களில் ஒன்று, உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆகும். அஸ்வகந்தா, ஆண்கள் மற்றும் பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும் அது, அவர்களின் பாலுணர்வு வேட்கை, பாலுணர்வு, செயல்பாடு மற்றும் இன்பத்தையும் அதிகரிக்கிறது. இந்த நன்மையானது, இரத்தத்தில் உள்ள செக்ஸ் ஹார்மோன்களின் அளவுகளை அதிகரித்தல், மற்றும் அவற்றின் சமநிலையை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலமாக அடையப்படுகிறது.

இது ஆண்களுக்கு, அவர்கள் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவுகின்ற வகையில் செக்ஸ் ஆற்றலை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அஸ்வகந்தா, விந்துவின் தரம், மற்றும் அளவைப் பராமரிப்பதிலும் ஒரு பங்கு வகிக்கிறது, அதனால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு, அஸ்வகந்தா சாற்றினை வாய்வழியாக எடுத்துக் கொள்வது, பாலுணர்வை அதிகரிக்க உதவக் கூடிய அவர்களின் செக்ஸ் செயற்பாட்டினை மேம்படுத்துவதாக அறியப்பட்டு இருக்கிறது.

அஸ்வகந்தா உலர்ந்த மற்றும் பொடியாக்கப்பட்ட வடிவத்தில் கிடைக்கிறது, அதே போல், உங்கள் ஆயுர்வேத மருத்துவரின் மேற்பார்வையின் கீழ்,அதன் புது வேர்களையும் நீங்கள் பயன்படுத்த இயலும்.

சிறப்பான பாலுணர்வுக்காக கேட்டுயபா பட்டை - Catuaba bark for better libido in Tamil

கேட்டுயபா என்பது, இந்திய ஆண்களின் பாலுணர்வு வேட்கையை அதிகரிக்க, மற்றும் பாலுணர்வு தூண்டுதலை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும், மிகவும் விரும்பி முயற்சிக்கப்படுகின்ற ஒரு மூலிகை ஆகும். அது, பாலுணர்வு விருப்பங்களை அதிகரிக்க உதவுகின்ற ஒரு தூண்டுதல் விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் அது, ஆண்களுக்கு விறைப்புத்தன்மையின் கால அளவை அதிகரிக்கின்ற, மற்றும் சிறப்பான உச்சகட்டத்தை அடையுமாறு செக்ஸ் மகிழ்ச்சியை அதிகரிக்கின்றன வகையில், பாலுறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கேட்டுயபா, நேரடியாக மரத்தின் பட்டைகளில் இருந்து எடுக்கக் கூடியது, மற்றும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே, ஒரு பிற்சேர்க்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது ஆகும்.

கோர்டிசெப்கள் வயதான ஆண்களுக்கு பாலுர்ணவை அதிகரிக்கிறது - Cordyceps improves libido in elderly men in Tamil

கோர்டிசெப்ஸ்கள் அவற்றின் ஆண்களின் பாலுணர்வு தூண்டுதலுக்கான பாராட்டத்தக்க நன்மைகளின் காரணமாக, 'இமாலய வயாக்ரா' என்றும் அறியப்படுகிறது. அது, மலைப்பகுதிகளில் வளர்கின்ற பூஞ்சை இனத்தை சேர்ந்த ஒன்றாகும். அது பாலுணர்வு மற்றும் செயல்பாட்டை, குறிப்பாக வயதாவதன் காரணமாக அவர்களின் கரு உண்டாக்கும் தன்மை குறைந்து கொண்டிருக்கிற வயதான ஆண்களுக்கு அதிகரிப்பதில் உதவுகிறது.

டெஸ்டோஸ்டெரோன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அது, விந்தணுக்களின் தரத்தையும் மற்றும் அவற்றின் நகரும் தன்மையையும் கூட அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே அது இந்தியாவில் பாலுணர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு, ஒரு பிரபலமான நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

கோர்டிசெப்கள், ஒரு நாட்டு மருந்தாகவும் இருக்கின்றன, மேலும் இந்தியாவின் பண்டைய மக்களால் செக்ஸ் விருப்பங்கள், மற்றும் பாலுணர்வை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பாரம்பரியங்கள், கார்டிசெப் சாற்றினை ஒரு கோப்பை பாலுடன் கலந்து பருகுவதை, ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலினத்தவருக்கும் பரிந்துரைக்கின்றன. அது, பாலியல் திறன், மற்றும் விருப்பங்களை அதிகரிக்க உதவக் கூடியது ஆகும்.

மன இறுக்கம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவை நவீன கால அழுத்தங்களின் காரணமாக ஏற்படுகின்ற பொதுவான குறைபாடுகள் ஆகும். இது, உங்கள் பாலியல் வேட்கையில் எதிர்மறையாகப் பாதிக்கக் கூடிய, மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படக் கூடிய பாலுணர்வு குறைவுக்கு வழிவகுக்கக் கூடும். மன இறுக்கத்தின் காரணமாக ஏற்படுகின்ற பாலுணர்வு குறைவானது, மன அழுத்தத்துடன் இணைந்திருக்கின்ற DHEA (ஹார்மோன்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற பாலுறவு விருப்பம்) அளவுகள் குறைவதன் காரணமாக ஏற்படுகிறது.

DHEA அளவுகள், வயதானவர்களுக்கு ஏற்படும் செக்ஸ் ஊக்கக் குறைவுக்குப் பொறுப்பான வயது அதிகரித்தலின் காரணமாகவும் குறையக் கூடும். மோசமான உடல் தோற்றம், மற்றும் குறைவான சுய மரியாதை ஆகியவையும் பாலுணர்வைப் பாதிக்கின்ற பொதுவான காரணங்களாக இருக்கின்றன. இந்தப் பிரிவு, இந்த மாதிரி பிரச்சினைகளை சமாளிக்க உங்களுக்கு சில குறிப்புகளை வழங்கப் போகிறது.

பாலுணர்வை அதிகரிக்க தியானம் - Meditation to improve libido in Tamil

தியானம், மன அழுத்தங்களைக் குறைக்க மற்றும் உங்கள் மனநிறைவை அதிகரிக்க உதவும். ஆராய்ச்சியாளர்கள், மனநிறைவை மேம்படுத்தும் உத்திகள், பாலுணர்வு குறைவை சமாளிக்க, குறிப்பாகப் பெண்களுக்கு உதவக் கூடியவை என்று நிரூபித்து இருக்கிறார்கள்.

மேலும் தியானம், சில பெண்களுக்கு ஏற்படும் உடலுறவு தொடர்பான உடலியல் ரீதியான வலியைக் குறைக்கவும் உதவக் கூடும். அது அவர்களின் பாலுணர்வை அதிகரிக்க உதவலாம். இது மட்டும் அல்லாமல், தியானம், ஒருவரின் செக்ஸ் ஊக்கத்தின் மீது நன்மையளிக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கின்ற வகையில், ஒரு சிறந்த சுய தோற்றத்தை உருவாக்குவதிலும் உதவுகிறது.

தியான செயல்பாட்டின் மூலம் வெளிப்படுகின்ற என்டார்பின்கள் அல்லது 'மகிழ்ச்சி ஹார்மோன்களும் கூட உதவிகரமாக இருக்கக் கூடும்.

ஒரு சிறப்பான செக்ஸ் ஊக்கத்துக்காக யோகா செய்கின்ற வேளையில், அமைதிக்கான மூச்சு விடுதல் பயிற்சிகள், மற்றும் பார்வை மூலம் மற்றும் தொடுதல் மூலமான தூண்டுதல்கள் ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன.

(மேலும் படிக்க: அனுலோம் விலோம் பிராணாயாமத்தின் நன்மைகள்)

பாலுணர்வை அதிகரிக்க உளவியல் சிகிச்சை - Psychotherapy to improve libido in Tamil

உளவியல் சிகிச்சை என்பது, உணர்வுரீதியான மற்றும் நடத்தை கோளாறுகளைத் தீர்மானிக்க, மற்றும் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அற்ற ஒரு அணுகுமுறை ஆகும். அது, விருப்ப கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. உளவியல் சிகிச்சை, ஒரு நபரின் குறைவான பாலுணர்வுக்கான சரியான காரணத்தைத் தீர்மானிக்க உதவும். பின்னர் அதற்கு சிகிச்சை அளிக்க இயலும்.

(மேலும் படிக்க: மனநிலை பாதிப்புக்கான சிகிச்சை)

பாலுணர்வை அதிகரிக்க எடையைக் குறைத்தல் - Weight loss to improve libido in Tamil

உடல் எடை மற்றும் BMI -யில் ஏற்படும் ஒரு அதிகரிப்பானது, உடலில் உள்ள செக்ஸ் ஹார்மோனைகளைப் பாதிக்கக் கூடிய வகையில் ஹார்மோன் சமநிலையில் ஒரு தொந்தரவை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க, ஒரு ஆரோக்கியமான உணவுமுறை, மற்றும் வாழ்க்கைமுறையை பின்பற்ற இயலும். அது, செக்ஸ் ஹார்மோன்களின் அளவுகள் இயல்பாக இருப்பதை உறுதி செய்கிறது, மற்றும் உங்கள் பாலுணர்வின் மீதும் ஒரு விளைவைக் கொண்டிருக்கக் கூடும்.

இது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் மற்றொரு வழியில் செய்யக் கூடிய உதவி, உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உடல் தோற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் துணையுடன் ஒரு சிறந்த பாலுறவு அனுபவத்தை வழங்க உதவுவது, ஆகும்.

(மேலும் படிக்க: எடைக்குறைப்பு உணவுமுறை விளக்கப்படம்)

Dr. Zeeshan Khan

Dr. Zeeshan Khan

Sexology
9 Years of Experience

Dr. Nizamuddin

Dr. Nizamuddin

Sexology
5 Years of Experience

Dr. Tahir

Dr. Tahir

Sexology
20 Years of Experience

Dr. Ajaz  Khan

Dr. Ajaz Khan

Sexology
13 Years of Experience

மேற்கோள்கள்

  1. healthdirect Australia. Loss of female libido. Australian government: Department of Health
  2. healthdirect Australia. Loss of male libido. Australian government: Department of Health
  3. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Libido
  4. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Magnesium Fact Sheet for Health Professionals.
  5. Salonia A et al. Chocolate and women's sexual health: An intriguing correlation. J Sex Med. 2006 May;3(3):476-82. PMID: 16681473
  6. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Zinc.
  7. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Carnitine.
  8. Mondaini N et al. Regular moderate intake of red wine is linked to a better women's sexual health. J Sex Med. 2009 Oct;6(10):2772-7. PMID: 19627470
  9. Lara Pizzorno. Nothing Boring About Boron. Integr Med (Encinitas). 2015 Aug; 14(4): 35–48. PMID: 26770156
  10. Omer Toprak et al. The impact of hypomagnesemia on erectile dysfunction in elderly, non-diabetic, stage 3 and 4 chronic kidney disease patients: a prospective cross-sectional study. Clin Interv Aging. 2017; 12: 437–444. PMID: 28280316
  11. Marcello Maggio et al. The Interplay between Magnesium and Testosterone in Modulating Physical Function in Men. Int J Endocrinol. 2014; 2014: 525249. PMID: 24723948
  12. Jalil Hosseini et al. The influence of ginger (Zingiber officinale) on human sperm quality and DNA fragmentation: A double-blind randomized clinical trial. Int J Reprod Biomed (Yazd). 2016 Aug; 14(8): 533–540. PMID: 27679829
  13. Laleh Khodaie, Omid Sadeghpoor. Ginger From Ancient Times to the New Outlook Jundishapur J Nat Pharm Prod. 2015 Feb; 10(1): e18402. PMID: 25866718
  14. healthdirect Australia. Vaginal dryness. Australian government: Department of Health
  15. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vaginal dryness alternative treatments
  16. Viola Polomeno. Sex and Breastfeeding: An Educational Perspective. J Perinat Educ. 1999 Winter; 8(1): 30–40. PMCID: PMC3431754
  17. Steels E, Rao A, Vitetta L. Physiological aspects of male libido enhanced by standardized Trigonella foenum-graecum extract and mineral formulation. Phytother Res. 2011 Sep;25(9):1294-300. PMID: 21312304
  18. Sabna Kotta, Shahid H. Ansari, Javed Ali. Exploring scientifically proven herbal aphrodisiacs . Pharmacogn Rev. 2013 Jan-Jun; 7(13): 1–10. PMID: 23922450
  19. Swati Dongre, Deepak Langade, Sauvik Bhattacharyya. Efficacy and Safety of Ashwagandha (Withania somnifera) Root Extract in Improving Sexual Function in Women: A Pilot Study. Biomed Res Int. 2015; 2015: 284154. PMID: 26504795
  20. Ashok Kumar Panda, Kailash Chandra Swain. Traditional uses and medicinal potential of Cordyceps sinensis of Sikkim. J Ayurveda Integr Med. 2011 Jan-Mar; 2(1): 9–13. PMID: 21731381
  21. Wasser SK, Sewall G, Soules MR. Psychosocial stress as a cause of infertility. Fertil Steril. 1993 Mar;59(3):685-9. PMID: 8458480
  22. R. Gina Silverstein, Anne-Catharine H. Brown, Harold D. Roth, Willoughby B. Britton. Effects of Mindfulness Training on Body Awareness to Sexual Stimuli: Implications for Female Sexual Dysfunction. Psychosom Med. 2011 Nov-Dec; 73(9): 817–825. PMID: 22048839
  23. Keith A. Montgomery. Sexual Desire Disorders. Psychiatry (Edgmont). 2008 Jun; 5(6): 50–55. PMID: 19727285
Read on app