கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று - Eye Infections in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 28, 2018

July 31, 2020

கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று
கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று

கண்ணில் ஏற்படும் நோய்த்தொற்று என்றால் என்ன?

கண்ணில் ஏற்படும் நோய்த்தொற்று என்பது அசௌகரியத்தை தரக்கூடிய ஒரு பொதுவான நோய் ஆகும். பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை ஆகியவை கண்ணில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு காரணமாக இருக்கலாம், இதன் விளைவாக கண் சிவத்தல், வீக்கம், அரிப்பு, நீர் வெளியேற்றம் மற்றும் கண்களில் வலி தோன்றலாம்.  இதில் மிக பொதுவான கண் நோய்த்தொற்று விழிவெண்படல அழற்சி ஆகும் இது வழக்கமான ஒரு வைரஸ் தோற்று ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பொதுவான கண்ணில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு சம்மந்தப்பட்ட அறிகுறிகள் பின்வருமாறு:

 • விழிபடல அழற்சி மற்றும் கண் இமை அழற்சி:
  • கண்களில் வீக்கம்.
  • வலி.
  • வீக்கம்.
  • கண்ணில் இருந்து நீர் போன்ற வெளியேற்றம்.
 • பாக்டீரியாவால் ஏற்படும் விழிப்பாவை அழற்சி:
 • ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸால் ஏற்படும் விழிப்பார்வை அழற்சி:
  • வலி.
  • குறைவான அல்லது மங்கலான பார்வை.
  • தேய்மானம்.
  • நீர் வெளியேற்றம்.
  • புண்.
  • அரிப்பு.
  • ஒளி அச்சம்.
 • விழிக்குழி அழற்சி:
  • வலி.
  • பார்வை குறைவு.
  • கண் சிவத்தல்.
 • கண்கட்டி:
  • வலி.
  • சீழ் பிடித்திருக்கும் கட்டி.
  • கண்கள் சிவப்பாகவும், நீர் தேங்கியிருப்பது போன்றும் காணப்படும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஒவ்வொரு கண் தொற்றிற்கும் காரணம் வேறுபடும். அவை பின்வருவனவற்றை உள்ளடக்கக்கூடும்:

 • விழிவெண்படல அழற்சி: விழிவெண்படல அழற்சி முக்கியமாக பாதிக்கப்பட்ட ஒருவருடனான அடிக்கடி நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.
 • பாக்டீரியாவால் ஏற்படும் விழிப்பவை அழற்சி: இது பொதுவாக தொடு வில்லைகள் அணிவது அல்லது பெரும் அதிர்ச்சியின் விளைவாக ஏற்படக்கூடும்.
 • ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸால் ஏற்படும் விழிப்பார்வை அழற்சி: இது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ற வைரஸால் ஏற்படுகிறது.
 • விழிக்குழி அழற்சி: இது நுண்ணுயிர் தொற்றால் ஏற்படும் வீக்கம் ஆகும். இது பொதுவாக கண் அறுவை சிகிச்சை, பெரும் அதிர்ச்சி இன்ட்ராவிட்ரியல் (கண்களுக்குள்) ஊசிகள் முதலானவற்றிற்குப் பின் ஏற்படக்கூடும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கண் தோற்று பொதுவாக மருத்துவ வரலாறு மற்றும் கவனமான உடல் பரிசோதனையின் அடிப்படியில் கண்டறியப்படுகிறது.

கண்மருத்துவர் ஒரு பிளவு-விளக்கு நுண்ணோக்கி மூலம் உங்கள் கண்களை பரிசோதிப்பார்

ஆய்வுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

 • கருவிழி அல்லது வெண்படலத்தில் இருந்து உரசி எடுத்த ஊடுபொருள் கலவை பண்படுத்தி சோதனை செய்யப்படுகிறது.
 • கீழுள்ள வெண்படலச் திசுப்பை அல்லது கண்ணிமையிலுள்ள வெளியேற்றம் பண்படுத்தி சோதனை செய்யப்படுகிறது.
 • கருவிழி திசுப் பரிசோதனை.

சிகிச்சை நோய்த்தொற்றின் வகை, அறிகுறிகள் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றை சார்ந்துள்ளது. பொதுவான கண் நோய்த்தொற்றிற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • வைரல் விழி வெண்படல அழற்சி ஏற்படும் போது, உங்கள் மருத்துவர் வைரஸ் எதிர்ப்பு சொட்டு மருந்துகள் அல்லது ஜெல் பரிந்துரை செய்வார். பாக்டீரியாவால் ஏற்படும் விழி வெண்படல அழற்சியின் சிகிச்சைக்கு வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படுகின்றன.
 • பாக்டீரியா வால் ஏற்படும் விழிப்பாவை அழற்சிக்கு பொதுவாக குளோரம்பெனிகால் மருந்து பரிந்துரைக்கப்படும்.
 • ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸால் ஏற்படும் விழிப்பார்வை அழற்சிக்கு வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மேற்பூச்சு ஸ்டீராய்டு மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
 • விழிக்குழி அழற்சி வாய்வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் விட்ரியல் ஊசிகள் அல்லது நரம்பு வழியாக செலுத்தப்படும் ஊசிகள் முலம் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
 • கண் கட்டிக்கான சிகிச்சை பாராசித்தமோல் அல்லது மற்ற வலி நிவாரணிகள் (வலி நீக்கிகள்) மூலம் அறிகுறிகளில் இருந்து விடுபெறுவதை உள்ளடக்குகிறது. ஒரு சில நிமிடங்கள் உங்கள் கண்களுக்கு மேல் ஒரு வெதுவெதுப்பான துணியை வைத்திருத்தல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

உங்களுக்கு நோய்த்தொற்று முற்றிலும் குணமடையும் வரை தொடு வில்லைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி உங்கள் கண் மருத்துவர் அறிவுறுத்துவார்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Eye Infections
 2. NPS MedicineWise. Common eye infections. Australia. [internet].
 3. Healthdirect Australia. Eye infections. Australian government: Department of Health
 4. National Health Service [Internet]. UK; Stye
 5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; About Fungal Eye Infections

கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று டாக்டர்கள்

Dr. Meenakshi Pande Dr. Meenakshi Pande Ophthalmology
22 वर्षों का अनुभव
Dr. Upasna Dr. Upasna Ophthalmology
7 वर्षों का अनुभव
Dr. Akshay Bhatiwal Dr. Akshay Bhatiwal Ophthalmology
1 वर्षों का अनुभव
Dr. Surbhi Thakare Dr. Surbhi Thakare Ophthalmology
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று க்கான மருந்துகள்

கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।