உடலில் யூரிக் அமிலம் - High Uric Acid Levels in the Blood in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

July 12, 2017

March 06, 2020

உடலில் யூரிக் அமிலம்
உடலில் யூரிக் அமிலம்

சுருக்கம்

உடலில் யூரிக் அமிலம் என்பது, அசாதாரணமான அளவில், உடம்பில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். புரதங்கள் உடைக்கப்பட்ட பிறகு, உடலில் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. புரதங்கள் உடைக்கப்படும் பொழுது, அவற்றுள் இருக்கும் ப்யூரின்கள் எனப்படும் வேதிப்பொருள் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகிறது. யூரிக் அமில அளவுகள் உடலில் அதிகரிப்பது மூன்று முக்கியக் காரணங்களால் ஏற்படலாம்- அதிகரிக்கப்பட்ட யூரிக் அமில உற்பத்தி, குறைவான யூரிக் அமில வெளியேற்றம், அல்லது இந்த இரண்டு இயக்க முறைகளின் சேர்க்கை.

உடலில் யூரிக் அமிலம் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் (அறிகுறியின்மை) அல்லது இணைந்த அறிகுறிகளோடு (அறிகுறித்தன்மை) இருக்கக் கூடும். இணைந்த அறிகுறிகளோடு உடலில் யூரிக் அமில அளவுகள் அதிகரிப்பதன் விளைவாக ஏற்படும் மருத்துவப் பிரச்சினைகள் அதிகம் உள்ளன. அவற்றுள் யூரிக் அமில சிறுநீரக நோய் (சிறுநீரில் அதிகரித்த யூரிக் அமில அளவு காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைதல்), முடக்குவாதம் (இரத்த சுழற்சியில் இருக்கும் அதிகரித்த யூரிக் அமில அளவுகளின் காரணமாக மூட்டுக்களில் சிறுநீர் உப்புப் படிமம் சேருதல்), மற்றும் யூரிக் அமில சிறுநீரக கல் (யூரிக் அமில சிறுநீரக கற்கள்) ஆகியவை அடங்கும். உடலில் யூரிக் அமிலத்தோடு இணைந்த அறிகுறிகள் எதுவும் இல்லையென்றால், வழக்கமாக சிசிக்சை பரிந்துரைக்கப்படாது, ஆனால், அறிகுறிகள் உள்ள உடலில் யூரிக் அமிலத்துக்கு  மருத்துவமனை நடைமுறைகளின்படி சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. உடலில் யூரிக் அமிலத்தினால் ஏற்படும் பிரச்சினைகளில், முடக்குவாதம், தீவிரமான யூரிக் அமில சிறுநீரக நோய், யூரிக் அமில சிறுநீரக கல், நாள்பட்ட சிறுநீரக பற்றாக்குறை ஆகியவை அடங்கும்.

உடலில் யூரிக் அமிலம் அறிகுறிகள் என்ன - Symptoms of High Uric Acid (hyperuricemia) in Tamil

உங்களுக்கு உடலில் யூரிக் அமிலம் பிரச்சினை இருந்தால், உங்கள் மருத்துவர், உங்களுக்கு அறிகுறித்தன்மையா அல்லது அறிகுறியின்மையா என்பதை அறிய மற்றும் அதற்கான காரண காரணிகளையும், கூடவே இருக்கும் மற்ற மருத்துவப் பிரச்சினைகளையும் கண்டறிய, உங்களின் முழுமையான மருத்துவ சரித்திரத்தை எடுப்பார்.

அறிகுறிகள் இல்லாத பொழுது, வழக்கமாக மருத்துவமனை பரிசோதனைகளில் சிறப்புக் கண்டறிதல்கள் ஏதுமில்லை. அறிகுறிகள் தோன்றும் பொழுது, பரிசோதனையில் பின்வரும் கண்டறிதல்கள் இருக்கக் கூடும்:

  • தீவிரமான முடக்குவாத மூட்டு வீக்கம்-ல்,பாதிக்கப்பட்ட மூட்டு, தோற்றத்தில் சிவந்ததாக (எரிதிமேட்டோஸ்), தொடுவதற்கு வெதுவெதுப்பாக, வீக்கமாக, மற்றும் மிகவும் வலிமிகுந்ததாக இருக்கிறது.
  • நீண்ட கால முடக்குவாத மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கு, உள்வளைவு ஊடுருவி அல்லது காது குறுத்தெலும்பில், முன்னங்கையின் உட்புற மேற்பரப்பில், முழங்கையின் எலும்பு முனைக்கும் தோலுக்கும் இடையில் இருக்கும் மெல்லிய திரவ பையில் அல்லது உடலின் மற்ற திசுக்களில் படிக யூரிக் அமில படிவுகள் (டோஃபி) ஏற்படலாம்.
  • யூரிக் அமில சிறுநீரகக் கல்லில், அந்த நபருக்கு வயிற்றில் அல்லது பக்கவாட்டில் (இடுப்புக்கும் விலா எலும்புக்கும் இடையிலான உடலின் பகுதி) வலி தோன்றக் கூடும். (மேலும் படிக்க - சிறுநீரக கற்கள் சிகிச்சை)

உடலில் யூரிக் அமிலம், இதே மாதிரி அறிகுறிகள் கொண்ட மற்ற மருத்துவ நிலைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. அவற்றுள் அடங்கியவை:  

  • மதுவினால் ஏற்படும் கெட்டொசிடோசிஸ்
    மது பயன்பாடு மற்றும் பட்டினியால் ஏற்படும் வளர்சிதை மாற்ற கோளாறு. 
  • நீரிழிவு கெட்டொசிடோசிஸ்
    நீண்ட நாட்களுக்கு உங்கள் இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும் போது உங்கள் இரத்தத்தில் உருவாகும் அமிலங்கள்.
  • முடக்கு வாதம் மற்றும் போலி கீல்வாதம்
    இவை அழற்சியான மூட்டு வீக்கத்தின் வகைகள்.
  • ஹீமோலிட்டிக் இரத்த சோகை
    உடலில் தங்கள் இயல்பான வாழும் காலம் முடிவதற்கு முன்னரே, இரத்த சிகப்பு அணுக்கள் அழிக்கப்படும் ஒரு நிலை.
  • ஹாட்ஜ்கின் நிணநீர் புற்றுநோய்
    இரத்த வெள்ளை அணுக்களில் இருந்து தோன்றும் ஒரு வகைப் புற்றுநோய்.
  • உயர்ந்த இணை தைராய்டு
    இந்த நிலையில், இரத்த ஓட்டத்தில் அளவுக்கதிகமான இணை தைராய்டு ஹார்மோன் இருக்கிறது.
  • தைராய்டு பற்றாக்குறை
    உடல் போதுமான அளவுக்கு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாத ஒரு நிலை.
  • சிறுநீரக கல்
    சிறுநீரக அமைப்பிற்குள் கற்கள் தோன்றுதல்.
  • முன்சூல்வலிப்பு
    கர்ப்பிணி பெண் (முன்பு உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்), கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தம், மற்றும் தங்கள் சிறுநீரில் அதிக அளவிலான புரதங்களையும் கொண்டிருக்கும் ஒரு சிக்கல்.
  • லா வகை கிளைகோஜென் சேமிப்பு நோய்
    உடல் செல்களில் சேரும் கிளைகோஜென்னின் காரணத்தால் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு.
  • யூரிக் அமில சிறுநீரக நோய்
    சிறுநீரில் இருக்கும் அதிக அளவிலான யூரிக் அமிலத்தின் காரணமாக சிறுநீரக செயல்பாடுகள் சீரழியும் ஒரு நிலை.

உடலில் யூரிக் அமிலம் சிகிச்சை - Treatment of High Uric Acid (hyperuricemia) in Tamil

அறிகுறியற்ற உடலில் யூரிக் அமிலம்

அறிகுறியற்ற உடலில் யூரிக் அமிலம் உள்ளவர்களுக்கு, பொதுவாக மருத்துவ சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படாது. இந்த வகை நபர்களுக்கு, யூரிக் அமில அளவுகளை சரியாக வைக்க உதவக் கூடிய, உணவுப் பழக்க மாறுதல்கள் மற்றும் உடற்பயிற்சி உட்பட வாழ்க்கைமுறை மாற்றங்கள் அறிவுறுத்தப்படுகிறது.

அறிகுறியுள்ள உடலில் யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலம் பிரச்சினையில், முடக்குவாதம், சிறுநீரக அமில கற்கள், அல்லது யூரிக் அமில சிறுநீரக நோய் வடிவில் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

முடக்குவாதம்

  • தீவிரமான முடக்குவாத மூட்டு வீக்கம்
    தீவிரமான முடக்குவாத மூட்டு வீக்கத்துக்கு அளிக்கும் சிகிச்சையின் முக்கிய நோக்கம் வலி நிவாரணம். ஆகவே, வீக்கத்தின் அறிகுறிகள் தீர்கிற வரை என்எஸ்ஏஐடிக்கள் (ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) பரிந்துரைக்கப்படுகின்றன. அவை மருத்துவத் தோற்றத்தைப் பொறுத்து 7-10 நாட்கள் அளவு அல்லது 3-4 நாட்கள் அளவு பரிந்துரைக்கப்படுகின்றன.
  • நாள்பட்ட முடக்குவாத சிகிச்சை
    தீவிரமான முடக்குவாத மூட்டு வீக்கத்தின் அறிகுறிகள் குறைந்த பிறகு, முடக்குவாத மூட்டு வீக்கம் உள்ள ஒரு நபர்  இக்கட்டான பருவத்தின் இடையே நுழைகிறார். இங்கே வழக்கமாக, நோய்த்தடுப்பு கால்சிசின், யூரிக்கோசுரின் மருந்துகள் (யூரிக் அமில வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் மருந்துகள்), மற்றும் எக்ஸ்சான்தைன் ஆக்ஸிடேஸ் தடுப்பிகள் (யூரிக் அமில உற்பத்தியைத் தடுக்கும் மருந்துகள்) ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன.

யூரிக் அமில சிறுநீரக கல்

இந்த வகைகளில், அல்லோபுரினோ, மருந்துத் தேர்வாக இருக்கிறது.

யூரிக் அமில சிறுநீரக நோய்

சிறுநீரை நீர்த்துப் போகச் செய்யும் இரத்தக் குழாய்க்குள் செலுத்தப்படும் உப்புக்கரைசல் மற்றும் மருந்துகள் (ஃபுரோசெமைட் அல்லது மன்னிட்டோல் போன்ற மருந்துகள்), தொடர்ந்த யூரிக் அமில அதிகரிப்பைத் தடுக்க பரிந்துரைக்கப்படுகின்றன. சோடியம் பை கார்பனேட் அல்லது அசிட்டாசோலமைட் உடன் சிறுநீர் அமில நீக்குதலும் செய்யப்படலாம்.

மருத்துவத் தோற்றம் மற்றும் நோய் கண்டறிதலைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்களைப் பரிந்துரைக்கலாம்.

  • தீவிரமான அல்லது நாள்பட்ட முடக்குவாத மூட்டு வீக்கம் உள்ள நபர்களுக்கு, முடக்குவாதவியல் நிபுணரை சந்திக்குமாறு கூறப்படலாம்.
  • தீவிரமான சிறுநீர் அமில சிறுநீரக கோளாறு அல்லது நாள்பட்ட சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு, ஒரு சிறுநீரக சிகிச்சை நிபுணரின் அறிவுரை தேவைப்படலாம்.
  • அறிகுறியுள்ள யூரிக் அமில சிறுநீரக கல் உள்ளவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவரை ஆலோசிக்குமாறு கூறப்படலாம்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

உடலில் யூரிக் அமிலம், குறிப்பாக அறிகுறியற்ற வகையை, வாழ்க்கைமுறை மாற்றங்களால் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். அறிகுறியுள்ள உடலில் யூரிக் அமிலம் நிலையும் இந்த மாற்றங்களால் பயன் பெறுகிறது.

உணவுப்பழக்க மாறுதல்கள்

  • என்ன சாப்பிடக் கூடாது?
    • ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்ற சிகப்பு இறைச்சிகளைத் தவிர்க்கவும்.
    • கொழுப்புள்ள கோழிகள் மற்றும் உயர் கொழுப்பு பால் பொருட்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தவும்.
    • சர்டைன், டுனா மீன் வகைகள், நண்டு மற்றும் நெத்திலி போன்றவற்றில் பியூரின்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை உட்கொள்வதைக் குறைக்கவும். மிட்டாய்கள், பேக்கரி உணவு வகைகள் மற்றும் இனிப்பான தானியங்கள் போன்ற இனிப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
    • பழ சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் மதுவகைகளைத் (குறிப்பாக பீர்) தவிர்க்கவும்.
  • என்ன சாப்பிட வேண்டும்?
    • போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நல்ல நீர்ச்சத்துடன் இருக்கவும்.
    • குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் புரதம் ஆதாரமான பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளவும்.
    • அதிகப் பழங்கள் (குறிப்பாக வைட்டமின் சி நிறைந்தவை), காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை எடுத்துக் கொள்ளவும்.
  • உடற்பயிற்சி
    உடற்பயிற்சி செய்வது உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்கவும். தவிர, யூரிக் அமில உற்பத்தியை குறைக்கவும், மூட்டுக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும் மற்றும் மூட்டுக்களை வலுவாக்கவும் உதவுகிறது.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹716  ₹799  10% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases [Internet]. National Institute of Health; Gout.
  2. Kuo, C.F., Grainge, M.J., Zhang, W. & Doherty, M. (2015). Global epidemiology of gout: prevalence, incidence and risk factors. Nature Reviews Rheumatology. Vol 11, 649–662. PMID: 26150127
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Uric acid - blood
  4. Am Fam Physician. 1999 Apr 1;59(7):1799-1806. [Internet] American Academy of Family Physicians; Diagnosis and Management of Gout.
  5. Lindsey A. MacFarlane, MD, Seoyoung C. Kim. Gout: a review of non-modifiable and modifiable risk factors. Rheum Dis Clin North Am. 2014 Nov; 40(4): 581–604. PMID: 25437279
  6. Choi HK, Curhan G. Beer, liquor, and wine consumption and serum uric acid level: the Third National Health and Nutrition Examination Survey.. Arthritis Rheum. 2004 Dec 15;51(6):1023-9. PMID: 15593346
  7. Office of Disease Prevention and Health Promotion. 2015-2020 Dietary Guidelines . [Internet]
  8. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Gout
  9. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Physical Activity for Arthritis

உடலில் யூரிக் அமிலம் டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

உடலில் யூரிக் அமிலம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for உடலில் யூரிக் அமிலம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for உடலில் யூரிக் அமிலம்

Number of tests are available for உடலில் யூரிக் அமிலம். We have listed commonly prescribed tests below: