கிரீன் டீ

ஒரு காலத்தில் கிரீன் டீ என்னும் பெயர் கூட மக்களுக்கு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது கிரீன் டீ இன்று மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் இன்றியமையாத காலை சடங்குகளில் ஒன்றாகும். இது நம் வாழ்வில் பொருந்தக்கூடிய துல்லியமான இந்த தேயிலை, உயர்ந்த அழகியல் மதிப்புடன் உடல்நலத்தை ஊக்குவிக்கும் பானமாக இருந்து வருகிறது. நான் பந்தயம் கட்ட முடியும், உங்களுக்கு ஏற்கனவே அதன் நலன்களைப் பற்றி தெரிந்து இருந்தால், நான் ஏன் கிரீன் டீ சாப்பிட கூடாது என்ற உணர்வு இருக்கிறது? அதன் சுவையை நீங்கள் வெறுத்தாலும் கூட, இந்த டீ-யை, இப்பொது ஏறத்தாழ அனைத்து மக்களின் வீட்டிலும் ஒரு பானமாக இடம்பிடித்து இருப்பதை மறுக்க முடியாது. 

உங்களுக்கு தெரியுமா?

தேயிலையின் பூர்வீக இடம் பற்றிய தேடல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தய பண்டைய சீனாவிற்கு நம்மை அழைத்து செல்கிறது. அங்கே, ஒரு ஆர்வம் காரணமான முறைகளால் பல நிகழ்வுகளில், புராண பேரரசர் ஷெனோங் மூலம் இது "தற்செயலாக" கண்டுபிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது. சுவாரஸ்யமாக, ஷெனோங் "சீன மருத்துவத்தின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார். எனவே, இது உண்மையிலேயே ஒரு தற்செயலான கண்டுபிடிப்பா அல்லது நன்கு சிந்தனை செய்யபட்டு கண்டறிந்த சூத்திரமா? டீ-யின் காதலர்களிக்கு எடுத்துரைப்பதற்கு டீ உருவான ரகசியம் வரலாற்றின் பதிவில் எங்கோ புதைக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இருந்து, தேயிலை கலாச்சாரம் ஜப்பானுக்கு பரவியது, பின்பு விரைவிலேயே அது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இந்தியாவிற்கு, தேயிலை எப்படி வந்தது என்பதற்கான உண்மையான வரலாறு தெளிவாக இல்லை. அறியப்பட்டதிலிருந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வணிகமயமாக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவில் காட்டு தேயிலை (கிரீன் டீ-யாக இருக்கலாம்) பயன்படுத்தப்பட்டது.

 1. கிரீன் டீ-யின் வகைகள் மற்றும் பயன்பாடு - Green tea types and use in Tamil
 2. கிரீன் டீ எப்படி தயாரிப்பது - How to make green tea in Tamil
 3. கிரீன் டீ-யின் நன்மைகள் - Benefits of green tea in Tamil
 4. கிரீன் டீ-யின் பக்க விளைவுகள் - Green Tea Side Effects in Tamil
 5. நாள் ஒன்றுக்கு எத்தனை கப் கிரீன் டீ குடிக்கலாம்? - How many cups of green tea can be taken per day? in Tamil
கிரீன் டீ-யின் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் பயன்பாடு டாக்டர்கள்

நமக்கு எங்கிருந்து தேயிலை கிடைக்கிறது? போன்ற கிரீன் டீ பற்றிய கேள்விகள் நம் அனைவருக்கும் உண்டு. கிரீன் டீ என்றால் என்ன? எப்படி மற்ற டீ-களில் இருந்து, கிரீன் டீ வேறுபடுகிறது? உங்கள் வழக்கமான டீ-யை விட இது சிறந்ததா? ஆம் என்றால் எப்படி? இந்த வினவல்களுக்கான விடைகளுக்கு  ஒன்று ஒன்றாக விடையளிக்க முயற்சி செய்து பார்க்கலாம்.

அனைத்து வகையான டீ-யும், காமிலியா சைனென்சிஸ் அல்லது "தேயிலை செடி" என்று பொதுவாக அழைக்கப்படும் தாவரத்திலிருந்தே தயாரிக்கபடுகிறது என்று அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். தேயிலையின் இலைகள் வழியாக சென்றுள்ள ஆக்சிஜனேற்ற அளவு வேறுபாடுகளில் இருந்து பல்வேறு விதமான தேயிலைகள் வளர்கிறது. வெறுமனே, ப்லாக் டீ மிகவும் ஆக்ஸிஜனேற்றப்படுகிறது மற்றும் கிரீன் டீ ஆக்ஸிஜனேற்றப்படாதது . பிரபலமான ஓலொங் டீ பகுதியளவு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது, ஆனால் டீ-யில் சில வகைகள் உள்ளன, அவை எப்போதும் புளிக்கவைக்கப்படுகின்றன, ஆனால் எப்பொழுதும் ஆக்சிஜனேற்றபடுவது அல்ல.

இப்போது, டீ மற்றும் உங்கள் புரிதலுக்கு இடையே ஆக்ஸிஜனேற்றம் என்ற உயிரியல் சம்மந்தபட்ட வார்த்தை வரும்? அதை இப்பொது விளக்குவோம். ஆக்சிஜனேற்றம் என்பது உணவினால் ஆக்சிஜன் உறிஞ்சப்படுதல் என்பது ஆகும்.  இதனால் ஆக்சிஜன், உணவில் உயிர் வேதியியலில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த வழக்கில், கிரீன் டீ இலைகள் பற்றி நாம் இப்போது பேசிக்கொண்டு இருக்கிரோம். ஆப்பிளை வெட்டி வைத்திருந்தால் அது எப்பொழுதும் பழுப்பு நிறமாக மாறியிருப்பதை எப்போதாதவது கவனித்திருக்கிறீர்களா? அதுதான் ஆக்கிஜனேற்றம். இருப்பினும், தேயிலை தயாரிப்பில், ஆக்ஸிஜனேற்றம் என்பது பாதி இயற்கையானது மற்றும் மீதி அறைகளின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கண்காணிப்பதன் மூலம் கட்டுப்பாட்டு நிலையில் செய்யப்படுகிறது. இலைகள் ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜனேற்றத்தை அடைந்தவுடன், செயல்முறை ஒரு குறிப்பிட்ட வெப்ப நடைமுறையால் நிறுத்தப்படுகிறது. எனினும், ஆக்சிஜனேற்றம் என்பது ஒரு இயற்கை செயல்முறை. மேலும் அதை முற்றிலும் நிறுத்த முடியாது. ஆனால், ஆக்சிஜனேற்ற செயலை போதுமான அளவு மெதுவாக்கி அந்த டீ-க்கு ஒரு நல்ல அடுக்கு வாழ்க்கை கொடுக்க முடியும்.

உங்கள் வழக்கமான தேநீர் பொதுவாக கருப்பு தேநீருடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் சர்க்கரை கூடுதலாக தேநீருடன் சேர்க்கபடுவது நல்லது செய்யாமல் உங்கள் உடல் நலத்திற்கும் மேலும் தீங்கு விளைவிப்பதாகக் கூறுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எதிரான கருத்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, விஞ்ஞான ஆதாரங்களின் பற்றாக்குறையால், நம் உடல் வகைக்கு எந்த வகை டீ நன்றாக பொருந்துகிறது என்பதைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணரிடம் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். 

தேயிலைத் தாவரத்திற்கு பதிலாக செம்பருத்தி, மல்லிகை, சாமோமில் போன்ற பல்வேறு தாவரங்களிலிருந்து மூலிகை டீ தயாரிக்கப்படுகிறது. எனவே, அவை கிரீன் டீ என்று கருதப்படுவதில்லை. இருப்பினும், புதினா கிரீன் டீ, மல்லிகை கிரீன் டீ, எலுமிச்சை கிரீன் டீ போன்ற பல சுவைகளில் சந்தையில் கிரீன் டீ சுவைகள் நிறைய உள்ளன. தயாரிப்பின் உண்மை தன்மையை உறுதி செய்ய டீ பொட்டலத்தின் மீதுள்ள லேபிளை சரிபார்க்க எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

கிரீன் டீ-யின் நிறைய டீ பிராண்டுகள் வணிக ரீதியாக கிடைக்கின்றது. நீங்கள் ஒரு டீ ஆர்வலராக இருந்து ஒரு குறிப்பிட்ட டீ வகையை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் எளிதாக டீ பைகள், கிரீன் டீ தூள், காப்ஸ்யூல்கள், மற்றும் மாத்திரைகளின் வடிவில் அதை வாங்க முடியும்.

காஃபின் நீக்கப்பட்ட கிரீன் டீ என்பது டீ-யில் இருந்து அதன் காஃபின் அகற்றப்படும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட கிரீன் டீ-யின் ஒரு வகையாகும். காஃபின் ஒவ்வாமை கொண்டவர்களை பொறுத்தவரை, இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்பட்டாலும், காஃபின் அகற்றப்படும் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதால் இந்த டீ-யில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால், காஃபின் அகற்றப்பட்ட கிரீன் டீ மற்றும் சாதாரண டீ ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை கண்டறிய எந்த ஆய்வும் இல்லை.

கிரீன் டீ-யின் வகைகள்

தேயிலை உலகின் கதவுகளில் நுழைந்து பார்த்தால், தேயிலை உலகம் பெரியது என்பதை உணர்ந்துகொள்ளலாம். ஆனால் இந்த டீ உலகத்தைவிட வேறு எந்த பெரிய உலகமும் இல்லை. ஜப்பானில் மட்டும் குறைந்தபட்சம் 10 பிரபலமான தேயிலை வகைகளை வளர்க்கிறது. நாம் தேயிலை வகைகளை பட்டியலிட ஆரம்பித்தால், அதற்கென ஒரு புதிய கட்டுரையே தேவைப்படக் கூடும், ஒருவேளை யாருக்கு இன்னும் அதிகமாக தெரியும். இருப்பினும், தகவலுக்காக, சந்தையில் கிடைக்கக்கூடிய விற்பனைக்கு உள்ள சில தெரிந்த தேயிலை வகைகளை பற்றி நாம் படிக்க வேண்டும்.

 • சென்ச்சா கிரீன் டீ: சென்ச்சா என்பது மிகவும் பொதுவான ஜப்பனீஸ் கிரீன் டீ வகை மேலும் அதை தயார் செய்யும் முறையும் எளிதானது. பச்சை இலைகள் வேகவைக்கப்பட்டு, ஆக்கிஜனேற்றத்தை நிறுத்தவும், மற்றும் அவற்றின் பாரம்பரிய வடிவத்தை கொடுக்கவும், சுருட்டப்பட்டு, உலர்த்தப்படுகின்றன. இலைகள் பின்னர் ஒரு கப் தண்ணீரில் அந்த தண்ணீர் உறிஞ்சப்படுவதற்காக கொதிக்க வைக்கப்படுகிறது.
 • க்யோகுரோ கிரீன் டீ:  இந்த வகை டீ சென்ச்சா டீ-யின் செயலாக்கத்தில் இருந்து வேறுபடுகிறது. அறுவடைக்கு குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன், ஒரு துணியால் டீ தாவரங்கள் மூடப்பட்டுகின்றன. டீ யை அதிக நறுமணம் மிக்கதாக மாற்றும் கேட்சன்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்காக, இவ்வாறு செய்யப்படுகிறது. கபுசெசா தேயிலை என்பது மற்றொரு வகை டீ. இது க்யோகுரோ டீ போலவே வளர்க்கப்படுகிறது. ஆனால் தேயிலை தாவரம் ஒரு வாரம் மட்டுமே மூடப்பட்டிருக்கும்.
 • மட்சா கிரீன் டீ: டென்சா என்று அழைக்கப்படும் மற்றொரு வகை கிரீன் டீ-யின் ஒரு அரைக்கப்பட்ட (பொடித்த) வடிவமாகும். கொய்குரோவைப் போலவே டென்ச்சா-வும் நிழலில் வளர்க்கப்படுகிறது. ஆனால் மூடி வைக்கப்படும் காலம் 20 நாட்களுக்கு அதிகமாகவும், மற்றும் இலைகள் சுருட்டப்படாமலும் உலர்த்தப்படுகின்றன. டென்சா தேயிலை, அது அனுப்பப்படுவதற்கு முன்னர் அரைக்கப்பட்டால், மட்சா என அழைக்கப்படுகிறது.
 • சீன துப்பாக்கி தூள் தேநீர்: இந்த சீன கிரீன் டீ-யின் பெயரானது செயலாக்கப்பட்டு மற்றும் ஆவியில் வேகவைக்கப்பட்ட பின், அதன் இலைகள் தனித்துவமான வடிவத்தில் சுருட்டப்பட்டு மற்றும் உலர்த்தப்படுவதால், இந்த பெயரை பெறுகிறது. இது ஒரு தனித்துவமான ஸ்மோக்கி சுவை கொண்டது, அதன் பெயருக்கு பொருத்தமானது.

சரியான  முறையில் ஒரு கோப்பை டீ காய்ச்சுதல்:

தேயிலை காதலர்கள் தங்களது சரியான கோப்பை தேநீர் தயாரிக்க தங்கள் சொந்த தனிப்பட்ட வழிகளைக் கொண்டிருக்கின்றனர், ஆனால் இங்கே உங்களுக்காக ஒரு கோப்பை கிரீன் டீ தயாரிப்பதற்கான ஒரு பொதுவான முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது:

 1. 2-3 கிராம் தேயிலை இலைகளை ஒரு பாத்திரத்தில்/டீ பானையில் போடவும்.
 2. தேவையான அளவு கொதிக்கும் நீரை பாத்திரத்தில் (20-100 மில்லி தேயிலை மற்றும் உங்களுக்கு விருப்பமான சுவையை) ஊற்றவும்.
 3. ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்களுக்கு அது அப்படியே இருக்கட்டும். (சிலர் தங்கள் சுவைக்கேற்ப அப்படியே வெகு நேரம் வைத்திருப்பதை விரும்புகிறார்கள்)
 4. டீ இலையை வடிகட்டி, சூடாக பரிமாறவும்.

ஆனால் நீங்கள் மிகவும் சோம்பேறியாக இருந்தால், ஒரு கப் தேநீர் பையை உபயோகித்து இந்த எல்லா வலிகளில் இருந்தும் விடுபட்டலாம், மேலும் உங்கள் டீ-யை எந்த தொந்தரவுகளும் இல்லாமல் அனுபவிக்கலாம்.

உபயோகிக்கப்பட்ட கிரீன் டீ பைகளை வீங்கிய கண்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.

மட்சா கிரீன் டீ மிகவும் பிரபலமாக பேஷ் மாஸ்க் தயாரிக்க பயன்படுகிறது.1 தேக்கரண்டி கிரீன் டீ தூளை, ½ தேக்கரண்டி தேனுடன் கலந்து புத்துணர்ச்சி தரும் பேஷ் மாஸ்க் தயாரிக்கலாம்.

நாம் கிரீன் டீ-யை வழக்கபடுத்தி கொள்வதற்கு முன் நம் மனதிற்கு வரும் முதல் விஷயம்: கிரீன் டீ ஆரோக்கியமானதா? அல்லது அது ஒரு நவீன கால கொத்து தானா. நல்லது, ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கிரீன் டீ-யின் சுவை ஒரு சிறிய கசப்பானதாக இருப்பதை தவிர, வேறு சுவைகளும் கிடைக்கிறது. மேலும் இதில் பல சுகாதார நலன்களும் உள்ளன. உண்மையில், கிரீன் டீ-யின் சுகாதார நலன்களுக்கு பெரும்பாலான டீ இலைகளில் உள்ள கேட்டிசின்-கள் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகை கலவைகள் தான் காரணம். டீ கொதிக்க வைக்கப்படும் போது கேட்டிசின் தண்ணீரில் கரைந்துவிடக் கூடியது. ஒரு சூடான கோப்பை கிரீன் டீ-யை பருகும்போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை இப்போது ஆராயலாம்.

 • மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஒரு தொடர் ஆய்வுகளில், கிரீன் டீ-யில் உள்ள கேட்டிசன்கள் மூளையில் உள்ள செல்களைத் தூண்டுகின்றன மற்றும் நினைவாற்றலையும் அறிவாற்றலையும் மேம்படுத்துகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. இது அல்சைமர் போன்ற நியுரோடிஜெனரேட்டிவ் (நரம்பியல் சம்மந்தமான) நோய்களைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.
 • இதய அமைப்புக்கு நல்லது: கிரீன் டீ  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றான தமனிகளில் தகடு உருவாக்கத்தை தடுக்கிறது. இது உங்கள் இதய தசைகளை வலுவாக்கி, ஒரு மேம்பட்ட இதய செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
 • தோலுக்கான நன்மை: கிரீன் டீ பைகள் கண்களுக்கு கீழ் உள்ள கரு வளையங்கள் மற்றும் வீங்கிய கண்கள் ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது. கிரீன் டீ-யின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் தோலை ஆரோக்கியமானதாகவும் மற்றும் ஒரு துடிப்பான பளபளப்பு கொண்டு ஜொலிக்கவும் செய்யும் என்பதை உறுதி செய்கிறது.
 • எடை இழப்பை ஊக்குவிக்கிறது: கிரீன் டீ-ல் உள்ள அதிக அளவு கேட்டிசன்கள் மற்றும் காஃபின் பிஎம்ஐ-ஐ அதிகரிக்கிறது. மேலும், மேம்பட்ட பிஎம்ஐ நேரடியாக கொழுப்பு குறைப்பு மற்றும் எடை இழப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
 • வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஒரு பாக்டீரியா எதிர்பானாக இருப்பதால், கிரீன் டீ-யில் உள்ள கேட்டிசன்கள் உங்கள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லும். இதனால் ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கப்படுகிறது. கிரீன் டீ-யை தொடர்ந்து  குடிப்பதனால் மூச்சுவிடுவதில் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

மூளைக்கு கிரீன் டீ-யின் நன்மைகள் - Green tea benefits for brain in Tamil

நீங்கள் தினசரி பருகும் ஒரு கோப்பை தேநீர் உங்கள் மூளையை கூர்மையாக வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேத டாக்டர்களின் கூற்றுப்படி, கிரீன் டீ-யில் காஃபின் நிறைந்திருக்கிறது, இது மூளையின் உயிரணுக்களின் நேரடி தூண்டுதல் விளைவைக் கொண்டுள்ளது. நமது மூளையின் செயல்பாட்டின் மீது காஃபின் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் சரியான வழிகளை ஆய்வு செய்ய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அந்த பெரும்பாலான ஆய்வுகள் நமது மூளையில் உள்ள ஒரு இரசாயனத்தின் (அடெனோசின்) செயல்பாட்டை காஃபின் தடுக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன. அடினோசின்-ன் அளவுகள் குறைக்கப்படுவதால், மூளையின் உயிரணுக்களின் செயல்பாடு அதிகரிக்கிறது. காஃபின்-னை மிதமாக உட்கொள்வது மூளையை தூண்டுவது மட்டுமல்ல, அது நினைவாற்றல் மற்றும் மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எடை இழப்புக்காக கிரீன் டீ - Green tea for weight loss in Tamil

கிரீன் டீ எடை இழப்புக்கு உதவுகிறது என்று சமீபத்தில் நீங்கள் கேள்விப்பட்டீர்களா? இந்த கிரீன் டீ அவர்களுக்கு எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை யாராவது உங்களிடம் விவரித்தார்களா? உங்களுக்கு இன்னும் அதை பற்றி தெரிந்திருக்கவில்லை என்றால் ஒரு நல்ல பதிலை பெற, ஆராய்ச்சி செய்து பாருங்கள் அதன் நன்மைகள் உங்களுக்கு தெரிய வரும். எடை இழக்க உதவுவதில் கிரீன் டீ-யின் திறன் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை கிரீன் டீ எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கின்றன. மேலும் அந்த ஆராய்சிகள் கிரீன் டீ-யில் உள்ள கேட்டிசங்கள் மற்றும் காஃபின், இரண்டும் சேர்ந்து, ஒன்றாக, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது என தெரிவிக்கின்றன. மேலும் கோட்பாட்டின் படி, அதிகரித்த வளர்சிதை மாற்றம் நம் உடலை விரைவாக ஆற்றலை ஏரிக்க செய்வதோடு மேலும் கொழுப்பை உடைத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது. ஆனால், இந்த பெரும்பாலான ஆய்வுகளில் ஒரு கோப்பை கிரீன் டீ-இல் பொதுவாக இருக்கும்  கேட்டிசன்கள் மற்றும் காஃபின் அளவுகளைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுப் படி, கிரீன் டீ ஒரு வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் சேரும்னபோது நன்மைகளை சேர்க்கிறது. ஆனால், நீங்கள் அதிக அளவு துரித உணவு உட்கொள்வதோடு, ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் கொண்டு இருந்தால், கிரீன் டீ எந்த ஒரு அதிசயமும் புரியாது. பயனுள்ள வகையில் உடல் எடையை குறைக்க, கிரீன் டீ-யுடன் சேர்த்து உடற்பயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இதயத்திற்கான கிரீன் டீ-ன் நன்மைகள் - Green tea benefits for heart in Tamil

கார்டியோவாஸ்குலர் (இதய மற்றும் இரத்த ஓட்ட அமைப்பு தொடர்பான) நோய்கள் அண்மைக் காலத்திலேயே பெருமளவில் அதிகரித்து வருகின்றன. மாசுபாடு, உடல் பருமன்  மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகளின் எழுச்சி, வயதானவர்களுக்கு மட்டும் வரக்கூடிய இந்த வகை நோய்கள் இப்போது சமமாக இளைய தலைமுறையினரையும் பாதிக்கிறது. இதய பிரச்சினைகள் மிகவும் அதற்கான பொதுவான காரணங்கள் குறைப்பதில் கிரீன் டீ உதவியாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, எமது உடலில் எல்டிஎல் (குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு) அல்லது மோசமான கொழுப்பு, இலவச ரடிகல்-கள் (மன அழுத்தம் அல்லது மாசுபாடு மற்றும் அதன் சொந்த வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக நமது உடலில் உருவாக்கப்பட்ட ஒரு வகை ஆக்ஸிஜன்) உடன் இணைந்து, தமனிகளில் பிளெக்-களை (கொழுப்பு சேர்ந்து) உருவாக்குகிறது. இந்தத் பிளேக் இரத்த நாளங்களை குறுகளடைய செய்து பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. கிரீன் டீ, ஒரு ஆக்ஸிஜனேற்றியாக, இலவச ரடிகல்களை அகற்றி மேலும் இந்த ஆக்ஸிஜனேற்றம் செயல்முறை நடைபெறாமல் நிறுத்துகிறது. இதனால் மிகவும் பொதுவான இதய பிரச்சினைகளின் ஆபத்துக்கள் குறைக்கிறது.

கிரீன் டீ ஒரு சிறந்த ஆண்டிமைக்ரோபியல் ஆகும் - Green tea is an effective antimicrobial in Tamil

ஆராய்ச்சிகளின் முன்னேற்றத்தால், மனிதர்கள் பெரும்பாலான நோய்களுக்கு எதிராக ஆண்டிபயாடிக்குகளை உருவாக்கியுள்ளனர். ஒரு காலத்தில் அந்த நோய் வந்தால் மரணம்தான் என்று கருதப்பட்ட நிறைய நோய்கள் தற்போது குணப்படுத்தப்பட கூடியவை. எனவே நாளடைவில் வளந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மிக்க நன்றி. ஆனால் இந்த வெற்றி, மருந்துகளையே எதிர்க்க கூடிய வல்லமை பெற்ற நுண்ணுயிர்களின் வளைர்ச்சியின் வடிவில் முற்றிலும் வித்தியாசமான சவாலை நமக்குக் கொண்டு வந்தது. இத்தகைய நேரங்களில், பரந்த அளவில் செயல்படும்,  நுண்ணுயிரிகளை எதிர்க்க  முடியாமல் தடுக்கும் இயற்கை உற்பத்திக்கான தேவை அதிகமாகவும் அதை உருவாக்குவது கடினமாகவும் உள்ளது.  பூஞ்சை, வைரஸ், மற்றும்  பாக்டீரியா தொற்றுகள் ஆகியவற்றை  எதிர்ப்பதில் கிரீன் டீ-யின் திறன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. கிரீன் டீ-யின் இந்த பண்பு, அதில் உள்ள கேட்டிசன்-களின் காரணமாக அதிகப்படியான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கிறது என்று கூறப்படுகிறது, இதனால் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை, கேட்டிசன்-களால் திறம்பட அழிக்க முடியும். கூடுதலாக, கிரீன் டீ-யின் ஆண்டிமைக்ரோபியல் விளைவுகள் MRSA (மெதிசில்லின்-எதிர்ப்பு ஸ்டாடிலோக்கோகஸ் ஆரியஸ்) போன்ற மருந்து எதிர்ப்பு-தடுப்பு பாக்டீரியாக்கள் மீது பயனுள்ளதாக உள்ளன. இருப்பினும், மருத்துவ சிகிச்சையில் கிரீன் டீ-யின் இந்த ஆண்டிமைக்ரோபியல் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கான சரியான வழியை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் இன்னும் உலகளவில் நடந்து கொண்டு இருக்கிறது.

மோசமான மூச்சுக்கு கிரீன் டீ - Green tea for bad breath in Tamil

நீங்கள் மோசமான மூச்சினால் பாதிக்கப்படுகிறீர்களா? ஈறு பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா? நல்ல செய்தி என்னவென்றால் கிரீன் டீ-யின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்களுக்கு உதவ சரியான ஒன்றாக இருக்கலாம். ஈறு அல்லது பற்கள் தொற்று என்பது கெட்ட மூச்சுக்கு முக்கிய காரணங்களாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு ஆராய்ச்சியின் படி, கிரீன் டீ-களில் காணப்படும் கேட்சன்கள் உங்கள் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்லும், இதனால் கெட்ட சுவாசம் என்பதிலிருந்து உங்களை விடுவிக்கிறது. கூடுதலாக, கிரீன் டீ-யின் நறுமணமூட்டும் தன்மை (டியூட்டரண்ட் விளைவு), வெங்காயம் அல்லது பூண்டு போன்ற இயல்பாகவே சல்பர் அதிகம் உள்ள சில வகையான உணவுகளை சாப்பிடுவதால் வரும் கெட்ட மூச்சு பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.

தோலுக்கான கிரீன் டீ-ன் நன்மைகள் - Green tea benefits for skin in Tamil

நீங்கள் பிரகாசிக்கிறீர்களா அல்லது அது ஒரு டீ-யா? கிளிஷே போல இருக்கிறது இல்லையா. ஆனால் வழக்கமாக கிரீன் டீ சாப்பிடுவதால், இந்த கனவு உண்மையாக மாறலாம். கிரீன் டீ-யின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கிரீன் டீ-யை ஒரு சிறந்த வயது எதிர்ப்பு உணவாக மாற்றுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வழக்கமாக கிரீன் டீ சாப்பிடுவது, முகச் சுருக்கம், மெல்லிய கோடுகள் மற்றும் முன்கூட்டிய வயதான பிற அறிகுறிகள் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முதல் படி என அறியப்படுகிறது. கூடுதலாக, பயன்படுத்தப்பட்ட கிரீன் டீ பைகளை மேற்பூச்சாக பயன்படுத்துவது வீங்கிய கண்களுக்கு ஒரு அறியப்பட்ட தீர்வு ஆகும். மருத்துவ பயிற்சியாளர்களின் படி, கிரீன் டீ-யில் உள்ள காஃபின் கண்களை சுற்றியிள்ள நரம்புகளை கட்டுப்படுத்துகிறது, இதனால் கண் பகுதியை சுற்றி ரத்த ஓட்ட சுழற்சியை அதிகரித்து கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை குறைகிறது. எனவே அடுத்த முறை நீங்கள் நீண்ட நேர வேலைக்குப் பிறகு ஓய்வெடுக்க வேண்டும் என விரும்பினால், உபயோகப்படுத்தப்பட்ட கிரீன் டீ பையினை கொண்டு உங்கள் களைத்து போன கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுங்கள்.

முடிக்கான கிரீன் டீ-ன் நன்மைகள் - Green tea benefits for hair in Tamil

கிரீன் டீ வைட்டமின்கள் நிறைந்த ஆதாரமாக உள்ளது. குறிப்பாக வைட்டமின் பி, சி மற்றும் ஈ இதில் ஒன்றாக சேர்ந்து இருப்பதால், இந்த வைட்டமின்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்க மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் சி ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பான் ஆகும், இதனுடன் கிரீன் டீ-யில் உள்ள கேட்டிசங்கள் முடி உதிர்தலுக்குக் காரணமான ஆக்சிஜனெற்ற சேதத்தால் ஏற்படக்கூடிய முடி இழப்புக்கு (மன அழுத்தம் மற்றும் மாசுபாடுகளால் ஏற்படும் சேதத்தை) எதிராக போராடுகிறது . மிருகங்கள் மீதான மற்றும் ஆய்வக ஆய்வுகள், கிரீன் டீ-யின் மேற்பூச்சு பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன்-னால்-தூண்டப்பட்ட முடி இழப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் இருவருக்குமான சொட்டை தன்மை சிகிச்சைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன. எனினும், மனித சான்றுகள் இல்லாத நிலையில், கிரீன் டீ பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசனை பெறவும்.

நீரிழிவு நோயாளிக்கு கிரீன் டீ-யின் நன்மைகள் - Green tea benefits for diabetes patients in Tamil

சமீபத்திய ஆய்வுகள்  கிரீன் டீ  உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது என்று கூறுகின்றன. கிரீன் டீ-யை வழக்கமான சாப்பிடுவதால், கிரீன் டீ இந்த ஹார்மோனை (இன்சுலின்) இரத்தத்தில் இருந்து அதிக அளவு குளுக்கோஸை எடுத்துக்கொள்ள செய்கிறது. இதனால் உடலில் இரத்த சக்கரை அளவு குறைகிறது. ஜப்பான் மக்களைப் பற்றிய மேலும் ஆய்வில், தினமும் கிரீன் டீ குடிக்கிற மக்களுக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு மிகக் குறைவான வாய்ப்பே இருப்பதாகக் கூறப்பட்டது .

கீல்வாதத்தில் கிரீன் டீ-ன் நன்மைகள் - Green tea benefits in arthritis in Tamil

பலதரப்பட்ட ஆய்வுகளின் படி, கிரீன் டீ கீல்வாத  எதிர்ப்பு சிகிச்சைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆய்வுகள் கிரீன் டீ பாலிபினால்கள் என அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகுப்பு உயிரியல் சேர்மங்களை கொண்டு உள்ளது, குறிப்பாக EGCG (எப்பிகேல்லொகேட்டிசின்-3 கேலேட்), இது ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பான் மற்றும் ஆக்ஸிஜனேற்றி ஆகும். அது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது, தாங்க முடியாத இந்த இரு  கீல்வாத அறிகுறிகளிடமிருந்து நிவாரணம் அளிக்கிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட மற்றும் ஒரு ஆய்வில், கீல்வாத எதிர்ப்பு சிகிச்சையில், EGCG யின் வலிமையான சிகிச்சை மதிப்பு உறுதிப்படுத்துகிறது. EGCG  யின் எலும்புகளை பாதுகாத்தல் குணங்கள் எலும்புப்புரை போன்ற எலும்பு நோய்களின் அறிகுறிகளை ஒழிப்பதில் கிரீன் டீ-களில் காணப்படும் ஃப்ளோரைடின் விளைவுடன் பரவலாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மருந்தின் மருந்தளவு மற்றும் நிர்வாகம் அல்லது மனித ஆரோக்கியத்தின் மீதான அதன் சாத்தியமான விளைவுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, கீல்வாத நோயாளிகள் கிரீன் டீ-யின் சாத்தியமான  கீல்வாத எதிர்ப்பு விளைவுகளை பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்க பரிந்துரைக்கப்படுகிறது.

அல்சைமர்-க்கான கிரீன் டீ-ன் நன்மைகள் - Green tea benefits in alzheimer's in Tamil

இன்றளவில் அல்சைமர் மற்றும் பார்கின்ஸைன்ஸ்  போன்ற நோய்கள் மிகவும் பொதுவான நரம்பியல் நோய்கள் (மூளை செல்களை அழிக்கும் நோய்கள்) ஆகும். இந்த நோய்கள் மூலம் ஏற்படும் மூளை செல்களின் சீரழிவு  டிமென்ஷியா மற்றும் மனிதர்களின் அறிவாற்றல் செயல்பாடு இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சமீபத்திய ஆராய்ச்சிகள், இந்த நரம்பியல் நோய்களில் பெரும்பாலான நோய்களின் அறிகுறிகளைக் குறைப்பதற்கு, கிரீன் டீ சாறு, பெரும் சிகிச்சை மதிப்பு கொண்டுள்ளது என குறிப்பிடுகின்றன. கிரீன் டீ-யின் ஆக்ஸிஜனேற்ற பண்பு நரம்பியல் பாதுகாப்பிற்கு (மூளை செல்களை பாதுகாக்கிறது மற்றும் நியூரான்களின் சேதத்தைத் தவிர்க்கிறது) பொறுப்பேற்கின்றன என ஆய்வுகள் மேலும் தெரிவிக்கின்றன .

தன்னுடல் தாக்க நோய்களுக்கான கிரீன் டீ - Green tea for autoimmune diseases in Tamil

தன்னுடல் தாக்க நோய்கள் என்பது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த செல்கள் எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிற ஒரு நிலை. பலவீனமான உடல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு பல பொதுவான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறது. ஒரு நோயெதிர்ப்பு ஆற்றலைக் தாக்கும்(தன்னுடல் தாக்க நோய்கள்) குணம் கொண்ட ஒரு நபருக்கு சிகிச்சை அளிப்பது, ஒரு சாதாரண நபருக்கு சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் மிகவும் கடினமாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரேகான் மாநில பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் படி, கிரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கிரீன் டீ-யில் உள்ள சில கலவைகள் ஒழுங்குமுறை T செல்களின் (உடலின் சொந்த செல்களை தாக்குவதிலிருந்து நோயெதிர்ப்பு அமைப்பைக் காக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள ஒரு வகையான உயிரணுக்கள்) அளவை அதிகரிக்கிறது என்று அந்த கட்டுரை கூறுகிறது. ஒழுங்குமுறை டி உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலம் உடலின் சாதாரண செல்களை தாக்குவதை குறைக்கிறது. இதன் மூலம் தன்னுடல் தாக்க நோயின் தீவிரம் குறையும்.

கிரீன் டீ-யின் புற்றுநோய் எதிர்ப்பு சாத்திய கூறு - Green tea anti cancer potential in Tamil

மார்பக புற்றுநோய் உலகம் முழுவதும் பெண்களின் இறப்புக்கான முன்னணி காரணங்களில் ஒன்றாகும். மருந்துகள் பல இருப்பினும், இந்த அதிகரித்து வரும் பிரச்சனை, குறிப்பாக உயர் ஆபத்து கொண்ட மக்கள் (தங்கள் குடும்பத்தில் மார்பக புற்றுநோய் வரலாறு கொண்டவர்கள்) சமாளிக்க மிகவும் கடினமாக உள்ளது. சமீபத்திய ஆய்வுகள் மார்பக புற்றுநோய்க்கான மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துடன் சேர்த்து கிரீன் டீ சாப்பிடுவது புற்றுநோய்களைக் கொல்வதற்கும் புற்றுநோய் பரவுவதை தடைசெய்வதற்கும் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது என அறிவுறுத்துகிறது. மேலும் கிரீன் டீ-யில் உள்ள கேட்டிசன்கள் புற்றுநோய்க்கான எதிர்ப்பு முகவராக இருக்கலாம் என்று அறிவுறுத்துகிறது. கூடுதலாக, சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான கிரீன் டீ-யின் புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கிரீன் டீ கதிர்வீச்சினால் ஏற்பட்ட எரி காயங்களின் விளைவுகளை குறைப்பதில் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், புற்றுநோய் செல்களின் மீது கிரீன் டீ-யின் செயல்பாடுகளுக்கு சரியான அதிகமான சான்றுகள் கிடைக்கவில்லை. இந்த துறையில், சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இன்னும் அதிகமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

மிதமான அளவில் எடுத்துக்கொள்ளப்படும் போது கிரீன் டீ பாதுகாப்பானது, ஆனால் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளப்படும் போது பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்:

 1. கிரீன் டீ-யின் முக்கிய கூறுகளில் ஒன்றான காஃபின் சார்பு மற்றும் திரும்பப் பெறும் அறிகுறிகளைக் கொண்டுள்ளது. நீண்ட காலத்திற்கு அதிகப்படியாக கிரீன் டீ-உபயோகிக்கும் மக்களுக்கு  பதட்டம், தூக்கமின்மை மற்றும் அமைதியின்மை ஆகியவை ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
 2. சில நேரங்களில், கிரீன் டீ-யின் அதிகமாக நுகர்வு கல்லீரல் சேதத்துடன் தொடர்புடையது. எனினும், அமெரிக்க மருத்துவக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வெறும் வயிற்றில் சாப்பிடப்படும் போது கிரீன் டீ சாறு நச்சுத்தன்மை உடையது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சில சமீபத்திய ஆராய்ச்சிகள் கிரீன் டீ கல்லீரலுக்கு நச்சுத்தன்மையானது அல்ல என்று கூறுகின்றன. எனவே, நிறைய முரண்பட்ட தகவல்கள் உள்ளன. எனவே, ஏற்கனவே உங்கள் கல்லீரல் பலவீனமான இருந்தால், கிரீன் டீ எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
 3. கிரீன் டீ சில சிகிச்சை மருந்துகள் மற்றும் மூலிகை வைத்தியத்தின் நடவடிக்கைகளில் குறுக்கிடலாம் என அறியப்படுகிறது. எனவே, நீங்கள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டு இருந்தால், கிரீன் டீ எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது.
 4. உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், கிரீன் டீ குடிக்கக்கூடாது. இது இரும்புச் சத்து உடலில் உறிச்சப்படுவதை குறைப்பதாகக் கூறப்படுகிறது.
 5. பச்சை தேயிலை உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக அறியப்படுகிறது. எனவே, பரிந்துரைக்கபட்ட நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய கிரீன் டீ-யின் சரியான அளவை தீர்மானிக்க உங்கள் மருத்துவரிடம் பரிந்துரை பெற வேண்டும்.
 6. கிரீன் டீ யை ஒரு நாளில் 2 க்கும் மேற்பட்ட கப் எடுத்து கொள்வது உங்கள் உடலில் இருந்து கால்சியத்தை வெளியேற்றிவிடும் இதனால் எலும்புகள் பலவீனமானதாக மாற வழிவகுக்கிறது. எனவே, மிதமான அளவு கிரீன் டீ குடிப்பது நல்லது.
 7. கர்ப்ப காலத்தில் கிரீன் டீ பாதுகாப்பற்றதாகக் கருதப்படாவிட்டாலும், அதில் காஃபின் ஒரு ஆதாரமாக இருப்பதால், மிதமான அளவு கிரீன் டீ குடிக்க வேண்டும். எனவே, நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்களுக்காக கிரீன் டீ-ன் சரியான அளவை தெரிந்துகொள்ள உங்கள் மருத்துவரிடம் பேசுவது எப்போதும் நல்லது.
 8. பச்சை தேயிலையில் காஃபின் நிறைந்திருக்கிறது, எனவே குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

1-2 கப் கிரீன் டீ ஒரு நாளைக்கு குடிப்பது பாதுகாப்பாக கருதப்படுகிறது. இருப்பினும், உடல் வகை, உடலியல் மற்றும் பருவத்தை பொறுத்து சரியான கிரீன் டீ-யின் அளவு மாறுபடும். எனவே, உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு முறையில் கிரீன் டீ-யை சேர்க்கும் முன்பு ஒரு ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

Dt. Akanksha Mishra

Dt. Akanksha Mishra

Nutritionist
8 वर्षों का अनुभव

Surbhi Singh

Surbhi Singh

Nutritionist
22 वर्षों का अनुभव

Dr. Avtar Singh Kochar

Dr. Avtar Singh Kochar

Nutritionist
20 वर्षों का अनुभव

Dr. priyamwada

Dr. priyamwada

Nutritionist
7 वर्षों का अनुभव


उत्पाद या दवाइयाँ जिनमें Green tea है

மேற்கோள்கள்

 1. Sabu M Chacko. Beneficial effects of green tea: A literature review. Chin Med. 2010; 5: 13. PMID: 20370896
 2. Nehlig A1, Daval JL, Debry G. Caffeine and the central nervous system: mechanisms of action, biochemical, metabolic and psychostimulant effects.. Brain Res Brain Res Rev. 1992 May-Aug;17(2):139-70. PMID: 1356551
 3. Dietz C1, Dekker M1. Effect of Green Tea Phytochemicals on Mood and Cognition. Curr Pharm Des. 2017;23(19):2876-2905. PMID: 28056735
 4. Nobre AC1, Rao A, Owen GN. L-theanine, a natural constituent in tea, and its effect on mental state. Asia Pac J Clin Nutr. 2008;17 Suppl 1:167-8. PMID: 18296328
 5. Yiannakopoulou ECh. Green tea catechins: Proposed mechanisms of action in breast cancer focusing on the interplay between survival and apoptosis. Anticancer Agents Med Chem. 2014 Feb;14(2):290-5. PMID: 24069935
 6. Miyata Y. Anticancer Effects of Green Tea and the Underlying Molecular Mechanisms in Bladder Cancer. Medicines (Basel). 2018 Aug 10;5(3). pii: E87. PMID: 30103466
 7. Fritz H. Green tea and lung cancer: a systematic review. Integr Cancer Ther. 2013 Jan;12(1):7-24. PMID: 22532034
 8. Sueoka N. A new function of green tea: prevention of lifestyle-related diseases. Ann N Y Acad Sci. 2001 Apr;928:274-80. PMID: 11795518
 9. Liu K. Effect of green tea on glucose control and insulin sensitivity: a meta-analysis of 17 randomized controlled trials. Am J Clin Nutr. 2013 Aug;98(2):340-8. PMID: 23803878
 10. Haqqi TM. Prevention of collagen-induced arthritis in mice by a polyphenolic fraction from green tea. Proc Natl Acad Sci U S A. 1999 Apr 13;96(8):4524-9. PMID: 10200295
 11. Chwan-Li Shen, James K. Yeh, Jay Cao, Jia-Sheng Wang4. Green Tea and Bone metabolism. Nutr Res. 2009 Jul; 29(7): 437–456. PMID: 19700031
 12. Steinmann J1, Buer J, Pietschmann T, Steinmann E. Anti-infective properties of epigallocatechin-3-gallate (EGCG), a component of green tea. Br J Pharmacol. 2013 Mar;168(5):1059-73. PMID: 23072320
 13. Lodhia P. Effect of green tea on volatile sulfur compounds in mouth air. J Nutr Sci Vitaminol (Tokyo). 2008 Feb;54(1):89-94. PMID: 18388413
 14. Weinreb O1, Mandel S, Amit T, Youdim MB. Neurological mechanisms of green tea polyphenols in Alzheimer's and Parkinson's diseases. J Nutr Biochem. 2004 Sep;15(9):506-16. PMID: 15350981
 15. Zong-mao Chen, Zhi Lin. Tea and human health: biomedical functions of tea active components and current issues. J Zhejiang Univ Sci B. 2015 Feb; 16(2): 87–102. PMID: 25644464
 16. Kim YY. Effects of topical application of EGCG on testosterone-induced hair loss in a mouse model.. Exp Dermatol. 2011 Dec;20(12):1015-7. PMID: 21951062
 17. Kwon OS et al. Human hair growth enhancement in vitro by green tea epigallocatechin-3-gallate (EGCG).. Phytomedicine. 2007 Aug;14(7-8):551-5. Epub 2006 Nov 7. PMID: 17092697