பேரீச்சை என்பது பேரீச்சை மரத்தில் காய்க்கும், நீள் வடிவ வடிவிலான வியத்தகு பழங்கள் ஆகும்.  இது உலகம் முழுவதும் சப்பிடப்படும் ஒரு பழம் ஆகும். இந்த பழத்தை சமயலில் உணவு தயாரிப்பில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு மேலும் ருசி சேர்க்கிற ஒரு சிறப்பான ரகசியம் அதில் உள்ளது. எல்லா கடைகளிலும் கிடைக்க கூடிய இந்த பழத்தில் அப்படி என்ன மிகவும் மர்மம் மற்றும் சிறப்பு உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். சரி, மிகவும் நல்ல விஷயங்கள் பொதுவாக நம் மூக்கு கீழ் இருக்கும். 

அந்த பேரீச்சை சாகுபடி மரத்தின் பழங்களுள் பழமையானதாக இருப்பதை அறிவதற்கும், பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள 'உயிரின் மரம்' என்று கூறப்படுவது இந்த மரத்தை தானா என்று ஊகங்கள் இருப்பதும் உங்களுக்கு தெரியும் போது ஆச்சரியம் ஏறபடலாம். கடவுளே அதை அழைத்தபோது, அதில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.

பேரீச்சை மரம் மீது பேரீச்சை பழம் கொத்து கொத்தாக வளரும். பேரீச்சை இயற்கை வழியில் செரிமான செயல்பாட்டில் உதவும் மிகவும் பயனுள்ள பல நன்மைகாள் கொண்ட பழங்களில் ஒன்றாகும். இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்களை வழங்குகின்றது, இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் நோய்களையும் தடுக்கவும் உதவுகிறது. உண்மையில், அதன் ஆரோக்கிய நலன்கள் காரணமாக, சமீப ஆண்டுகளில் பேரீச்சை பழம் மிகவும் பிரபலமாகிவிட்டது.

பேரீச்சை மரங்கள் பொதுவாக உயரம் 21-23 மீட்டர் (69-75 அடி) வரை உயரமாக வளரும். பேரீச்சை  பழம் ருசியான இனிப்பு சுவை கொண்டது. உலர்ந்த பின்பு அதில் 75 சதவீதம் சர்க்கரையை கொண்டிருக்கிறது. மென்மையான பேரீச்சை, அரை மென்மையான பேரீச்சை மற்றும் உலர்ந்த பேரீச்சை என  பேரீச்சைகளில் 3 முக்கிய வகைகள் உள்ளன.  பார்ஹி பேரீச்சை , டேக்லெட் நூர் பேரீச்சை , ஹலாவி பேரீச்சை , க்ஹட்ரவி பேரீச்சை  தூரி பேரீச்சை , சஹிடி பேரீச்சை ஆகியவை சில பொதுவான பேரீச்சை வகைகளில் அடங்கும்.  வகையை பொறுத்து, பேரீச்சை   பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும், கருப்பு நிறத்தில் மற்றும் வெள்ளை நிறமாகவும் இருக்கும். 

ஈராக், அரேபியா, வட ஆபிரிக்கா, மொராக்கோவில் பேரீச்சை ஒரு முக்கியமான பாரம்பரிய பயிர். உலகின் மிகப்பெரிய பேரீச்சை உற்பத்தியாளர்களான எகிப்து, ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளே உள்ளன. முக்கியமாக பேரீச்சை உற்பத்தியில் இந்தியாவின் மாநிலங்களில் மேற்கில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மற்றும் தெற்கில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை அடங்கும். பேரீச்சையின் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இந்தியா திகழ்கிறது.

பேரீச்சை பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

 • தாவரவியல் பெயர்: ஃபீனிக்ஸ் டாக்லிலைஃபெரா
 • குடும்பம்: பால்ம் குடும்பம், அரேக்கேசே
 • பொது பெயர்: டேட் பால்ம், காஜுர்
 • சமஸ்கிருத பெயர்: கார்ஜூரா
 • பயன்படுத்தப்படும் பகுதிகள்: பழங்கள், கொத்துக்கள், இலைகள், விதைகள் மற்றும் மணம்.
 • உள்ளூர் பகுதி மற்றும் புவியியல் பரப்பு: எகிப்திற்கும் மெசொப்பொத்தாமியாவிற்கும் இடையே வளமான பகுதியிலிருந்து பேரீச்சை தோன்றியது. அவை முக்கியமாக வட ஆபிரிக்கா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயிரிடப்படுகின்றன.  
 • சுவாரஸ்யமான உண்மைகள்: பேரீச்சை  பழங்களுடன் ஒட்டக பாலை சேர்த்து சாப்பிடுவது ஒரு தோற்கடிக்க முடியாத கலவை ஆகும். ஒட்டக பாலில் கொழுப்பு மற்றும்  வைட்டமின் சி.  பேரீச்சையில் முழுமையாக  வைட்டமின் ஏ, B, மற்றும் D ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கிறன. இவை இரண்டும் சேர்ந்த கலவை அதிகப்படியான ஊட்டச்சத்து நிறைந்த நன்மைகளை வழங்குகிறது.
 1. பேரீச்சையின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Dates nutrition facts in Tamil
 2. பேரீச்சையின் சுகாதார நலன்கள் - Dates health benefits in Tamil
 3. பேரீச்சையின் பக்க விளைவுகள் - Dates side effects in Tamil
 4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

யு.எஸ்.டி.ஏ படி, பேரீச்சை, வைட்டமின்கள், ஆற்றல், சர்க்கரை, இரும்பு, சோடியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும்  கால்சியம் முதலியவை நிறைந்த ஒரு உணவு ஆதாரமாக உள்ளது.

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து தரவுத்தளத்தின் படி, 100 கிராம் பேரீச்சை பழங்கள் பின்வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன:

a

ஊட்டக்கூறுகள் 100 கிராமுக்கான மதிப்பு
நீர் 21.32 கிராம்
ஆற்றல் 277 கி.கே.
புரதம் 1.81 கிராம்
கொழுப்பு 0.15 கிராம்
கார்போஹைட்ரேட் 74.97 கிராம்
நார்சத்து 6.7 கிராம்
சர்க்கரைகள் 66.47 கிராம்
கனிமங்கள்  
கால்சியம் 64 மிகி
இரும்பு 0.9 மிகி
மக்னீசியம் 54 மி.கி
பாஸ்பரஸ் 62 மிகி
பொட்டாசியம் 696 மிகி
சோடியம் 1 மிகி
துத்தநாகம் 0.44 மிகி
வைட்டமின்கள்  
வைட்டமின் ஏ 7 μg
வைட்டமின் பி1 0.05 மிகி
வைட்டமின் பி1 0.06 மிகி
வைட்டமின் பி3 1.61 மிகி
வைட்டமின் பி6 0.249 மிகி
ஃபோலேட் 15 μg
வைட்டமின் கே 2. 7

உங்கள் ஆரோக்கியத்திற்கும் நலத்திற்கும் பேரீச்சையினால் பல பலன்களை வழங்க முடியும். நன்கு அறியப்பட்ட மற்றும் சில குறிப்பிடத்தக்க பேரீச்சை வகைகள் பற்றிய நன்மைகளை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆய்வுகளில் சிலவற்றை ஆராயலாம்:

 • ஆற்றலுக்காக: பேரீச்சைகள் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளால் நிரப்பப்பட்டுள்ளன, அதனால்தான் நோன்பின் நடுப்பகுதியில் அல்லது நோன்பு இருந்த ஒரு நாளுக்குப்பின் இதை சாப்பிடும் போது நம் உடலை ஆற்றலால் உடனடியாக நிரப்புகிறது.
 • எடை அதிகரிப்புக்கு: இந்த பழத்தின் உயர் கலோரி உள்ளடக்கம் இதை ஒரு சிறந்த, ஆரோக்கியமான மற்றும் இயற்கை உணவு உணவு ஆதாரமாக மாற்றுகிறது.
 • எலும்புகளுக்கு: பேரீச்சையை வழக்கமான சாப்பிடுவதால் எலும்புப்புரை மற்றும் பலவீனமான எலும்புகளை தடுப்பதற்கு உதவலாம்.
 • மாலை கண் நோயை எதிர்க்கிறது: பேரீச்சையின் மேற்பூச்சு பயன்பாடு மாலை கண் நோயை தடுக்க ஒரு பாரம்பரிய தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
 • இரத்த சோகைக்கு: பேரீச்சை இரும்பு சத்து நிறைந்த ஒரு மூல பொருளாக உள்ளது. இதனால் இரத்த சோகை தடுப்புக்கு இது  பயனுள்ளதாக இருக்கும். இவை இரத்த சோகை உள்ளவைகளுக்கு ஒரு சிறந்த இரும்பு சத்து வழங்கி உணவாக துணை செய்கிறது.
 • வாய் மற்றும் வயிற்றுக்கு: பல் சேதம் மற்றும் ஈறு  குறைபாடுகளை தடுக்க பேரீச்சை உதவலாம். இது செரிமானத்திற்கும் மற்றும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சுவதை மேம்படுத்துவதிலும் இது உதவுகிறது.
 • மூளைக்கு: அல்சைமர் மற்றும் முதுமையினால் ஏற்படும் மறதி போன்ற சீர்குலைவுகளை தடுக்கவும் பேரீச்சை உதவக்கூடும் மற்றும் இது நினைவகம் மற்றும் அறிவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.
 • தோலுக்கு: உணவில் பேரீச்சை பழம் சேர்க்கப்படுவதால் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் வயதான ஆரம்ப அறிகுறிகளையும் குறைக்கலாம்.
 • கர்ப்ப காலத்தில்: கர்ப்ப காலத்தில் பேரீச்சை சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நிவாரணம் பெற உதவுவதோடு மற்றும் சுக பிரசவத்தை தூண்டவும் உதவலாம்.

எலும்புகளுக்கு பேரீச்சையின் நன்மைகள் - Dates benefits for bones in Tamil

உங்களுக்குத் தெரியுமா, பேரீச்சையை வழக்கமான சாப்பிடுவது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி அத்துடன்  ஆஸ்டியோபோரோசிஸ் யை தடுக்க உதவும் என்று? பேரீச்சை பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்தவை மற்றும் அதில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புத் தாது அடர்த்திக்கு முக்கியமான ஒரு பகுதியாக திகழ்கிறது.

நமக்கு வயதாகிக் கொண்டே இருப்பதால், நம் எலும்புகள் அதன் தாதுக்களை இழக்க ஆரம்பிக்கும். இதனால் எலும்பு முறிவுகள் மற்றும் தசை வலிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சத்து மாத்திரைகள் இதை தவிர்க்க உதவும் என்றாலும், அவை வழக்கமாக பரிந்துரைக்கப்படுவது இல்லை. இப்போது நாம் அதை சந்ப்போம், பேரீச்சையின் இனிப்பு சுவை சத்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட நன்றாக இருக்கும்.

வயதான மக்கள் மட்டுமே பலவீனமான எலும்புகளுக்கு ஆளாவது இல்லை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றும் மக்களுக்கும் இது பொதுவானது. கூடுதலாக, பெண்கள் வயதாக ஆக வேகமாக கால்சியம் சத்தை இழக்கின்றனர். இது ஏனெனில், கால்சியம் குறைபாட்டின் காரணமாக, நமது உடல் அந்த பற்றா குறையை பூர்த்தி செய்ய எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்ற தொடங்குகிறது. பேரீச்சையில் கனிம வளங்கள் அதிகமாக இருப்பதால், இளைஞர்கள் இதை சாப்பிடுவதால் தங்களுக்கு தேவையான தினசரி சத்துக்களை அடைவதற்கு உதவலாம். 

இன்னும் பேரீச்சை வாங்க ஷாப்பிங் போகவில்லையா?

பேரீச்சை மாலை கண் நோயை தடுக்கிறது - Dates prevent night blindness in Tamil

மாலை கண் நோய் முக்கியமாக வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. ஆராய்ச்சியில், பேரீச்சை வைட்டமின் ஏ குறைபாட்டில் இருந்து தடுக்கிறது என்பது மட்டுமல்லாமல் மாலை கண் நோய்  ஏற்படாமல் தடுத்து அது உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

பாரம்பரிய நம்பிக்கைக்கு ஏற்ப, பேரீச்சை பழம் மற்றும் பேரீச்சை மர இலைகள் மாலை கண் நோயை தடுக்க உதவுகிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பேரீச்சையை ஒரு சாந்து போல அரைத்து, மாலை கண் நோயைக் குறைப்பதற்காக கண்களைச் சுற்றிக் தடவிக் கொள்வார்கள்.

எடை அதிகரிப்புக்கான பேரீச்சை - Dates for weight gain in Tamil

சில கூடுதல் கிலோ எடை போட உங்களுக்கு ஒரு சிறந்த உணவாக பேரீச்சை பழங்கள் விளங்குகின்றன. இது ஒரு கலோரி அதிகமான பழம். சர்க்கரை, புரதங்கள் மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து எடை அதிகரிப்பு முயற்சியை சுலபமாக்க உதவுகின்றன. மேலும், பேரீச்சையில் கொழுப்பு குறைவாகவும் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. அதாவது நீங்கள் பெறும் கூடுதல் கிலோக்கள் ஆரோக்கியமானவை, அதிக கொழுப்பு சேர்வது இல்லை.

இந்த பழத்தின் அதிகபட்ச பயனை பெற, நீங்கள் அதை பால் மற்றும் வாழை பழத்துடன் எடுத்து கொள்ளலாம். வெள்ளரிக்காய் பசையிடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, இது உங்கள் உடலை கச்சிதமாக வைத்திருக்க உதவும்.

(மேலும் வாசிக்க: எடை அதிகரிப்புக்கான உணவுமுறை விளக்கப்படம்)

கர்ப்பிணி பெண்களுக்கு பேரீச்சையின் நன்மைகள் - Dates benefits for pregnant women in Tamil

நீடித்த பிரசவ நேரம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும், இது குழந்தக்கு பிறந்த பின் இறப்பு மற்றும் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும். இது பிரசவத்தின் போது தாயின் இறப்புக்கான ஒரு அச்சுறுத்தலாகவும் உள்ளது. பிரசவத்தின் 4 வாரங்களில் முன்பிருந்து பேரீச்சையை சாப்பிடுவது  பிரசவத்தை தூண்டுவதற்கும் பிரசவ வலி அதிகரிப்பதற்கும் தேவைப்படும் மருந்துகளை குறைப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இது ஏனென்றால், ஆக்ஸிடாசின் போல பேரீச்சை  செயல்படுவதால், கர்ப்பப்பை வாய்ப் பிளவை அதிகரிக்கிறது, இதனால் பிரசவத்திற்கு உதவுகிறது.

நார்ச்சத்துள்ளதாக இருப்பதால், கர்ப்பத்தின் பிற்பகுதியில் மலச்சிக்கலை நிறுத்தவும், ஊட்டச்சத்து நிறைந்த சக்தியையும் வலிமையையும் அளிக்கவும் பேரீச்சை உங்களுக்கு உதவலாம்.

எவ்வாறாயினும், பேரீச்சையை சாப்பிட ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் பெண்ணியலாளரிடம் பேசுவதே சிறந்தது, குறிப்பாக நீங்கள்  கர்ப்பத்தின் ஆரம்பகால கட்டத்தில் இருந்தால்.

மூளைக்கு பேரீச்சையின் நன்மைகள் - Dates benefits for brain in Tamil

நமக்கு வயதாக ஆக, நமது மூளை மந்தமாகி விடுகிறது. இதன் விளைவாக, ஒரு ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் அந்த உணவு நம் உடல் மற்றும் வயதுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. பொட்டாசியம் ஆரோக்கியமான மற்றும் பதிலளிக்கும் நரம்பு மண்டலத்தை ஊக்குவிப்பதற்கான பொறுப்பான பிரதான பொருட்களில் ஒன்றாகும். இது மூளைக்கு சிக்னல்களை மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது, இது மூளை செயல்பாடுகளின் வேகம் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகிறது. பொட்டாசியத்தின் ஒரு அற்புதமான ஆதாரமான, பேரீச்சை உங்கள் மூளைக்கு ஒரு சிறந்த உணவு, குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு தங்கள் மனதை கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது.

கூடுதலாக, பேரீச்சை வைட்டமின் B6 இன் நல்ல ஆதாரமாக இருக்கின்றன, இது மேம்படுத்தப்பட்ட மூளை செயல்திறனுடன் தொடர்புடையதாகும். இன்ப ஹார்மோன்கள் டோபமைன் மற்றும் செரோடோனின் உள்ளிட்ட சில நரம்பியக்கடத்திகள் உருவாக்கத்தில் முக்கியமானது, வைட்டமின் B6 இன் குறைபாடு அறிவாற்றல் மற்றும் முதுமையில் ஞாபக மறதியுடன் தொடர்புடையது.

இது மட்டும் இல்லாமல், பேரீச்சையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மூளையில் அமியோயிட் தகடுகள் உருவாக்குவதைத் தடுத்து  அல்சைமரை  தடுக்க உதவும் மருந்தாகவும் செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பேரீச்சை ஆற்றலை அதிகரிக்கின்றன - Dates boost energy in Tamil

பாரம்பரியமாக, பேரீச்சை மற்றும் நீர் நீண்ட விரதங்களை முடிக்க உட்கொள்ளப்படுகிறது. இதற்கு காரணம் பேரீச்சை இயற்கையான ஆற்றலின் பூஸ்டர்கள் என்பதால் தான். பேரீச்சை  அதிக கலோரி மதிப்பை வழங்குகின்றன மற்றும் உடனடியாக ஆற்றல் தரக் கூடிய குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற போதுமான சர்க்கரைகளை கொண்டிருகின்றன.  இயற்கையான கொழுப்பு இல்லாத பேரீச்சையை ஒரு விரைவான மதிய வேளை சிற்றுண்டியாக சாப்பிடுவது, கனமான மதிய உணவுக்குப் பிறகு மந்தமான மற்றும் மயக்கமான உணர்வை குறைக்க உதவும். கூடுதலாக, பேரீச்சையை அதிகப்படியாக சாப்பிடுவது பசியின்மையை தூண்டலாம், இதனால், அதிகப்படியாக பேரீச்சை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது மக்களுக்கு விரதத்தை முடிக்க குறிப்பாக பயனளிக்கிறது. 

வயிற்றுக்கான பேரீச்சையின் நன்மைகள் - Dates benefits for stomach in Tamil

இரைப்பை குடல் அமைப்புக்கான பல நன்மைகளை பேரீச்சை கொண்டுள்ளது:

 • பேரீச்சை காணப்படும் நிகோடின் உள்ளடக்கம் பல வகையான குடல் கோளாறுகளை குணப்படுத்த மிகவும் பயன்மிக்கது.
 • குடல்களில் உள்ள நட்பு பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்ட பேரீச்சை உதவி செய்கிறது.
 • பேரீச்சையில் காணப்படும் கரையாத மற்றும் கரையக்கூடிய நார் சத்துக்கள் இரைப்பை குடல் முறையை சுத்தம் செய்ய உதவுகிறது.
 • பேரீச்சை பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
 • பேரீச்சையில் உள்ள அமினோ அமிலங்கள் உணவின் செரிமானத்தை ஊக்குவிப்பதோடு உடலமைப்பைச் சிறந்ததாக்க உதவும்.
 • வழக்கமாக பேரீச்சையை சாப்பிடுவது உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சுவதற்கு செரிமானப் அமைப்பிற்கு உதவும்.

இரத்த சோகைக்கான பேரீச்சை - Dates for anemia in Tamil

வளரும் நாடுகளில் இரத்த சோகைக்கான (அனீமியா) மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் ஆகியவை மிகவும் பொதுவான நிலைகளில் ஒன்றாகும். வயது, பாலினம் மற்றும் வாழ்க்கை முறை அதன் காரணத்தால் விளைவைக் கொண்டிருக்கும் நிலையிலும், இரும்புச்சத்து குறைபாடு இந்த நிலைக்கு மிகவும் முக்கியமானது. இது பொதுவாக சோர்வு, பலவீனம் மற்றும் மயக்கம் ஆகியவற்றோடு தொடர்புடையது மற்றும் இது  கருச்சிதைவு  போன்றவற்றிற்கு கர்ப்பிணி பெண்களில் ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம். இரும்பு சத்திற்கு ஒரு இயற்கை ஆதாரமாக இருப்பதால், பேரீச்சை  இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரும்பு சத்தின் ஒரு சரியான உணவு ஆதாரமாக இருக்கும். 

இதில் இருக்கும் அதிக அளவிலான இரும்பு சத்து,  இரத்த சோகையால் பாதிக்கப்ப்பட்ட மக்களுக்கு அந்த இரும்பு சத்து பற்றாக்குறையை ஈடுகட்ட பேரீச்சை உதவுகிறது. மேலும், வழக்கமான பேரீச்சையின் நுகர்வு ஆற்றல் மற்றும் பலத்தை அதிகரிப்பதால் சோர்வு மற்றும் மந்தமான தன்மையை  குறைக்கும்.

பல் சிதைவுக்கான பேரீச்சை - Dates for tooth decay in Tamil

தேதிகள் இயற்கையாகவே இனிப்பாக இருக்கின்றன, இது பற்களுக்கு நல்லது இல்லை என நினைப்பது தவறு. நல்லது, நல்ல செய்தி என்னவென்றால், இந்த பழங்கள் உங்கள் பற்களில் அதிசயங்கள் செய்ய முடியும். கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஃவுளூரைடு ஆகிவை பேரீச்சையில் அதிகமாக உள்ளன, அவை அனைத்தும்  பல் சிதைவை தடுக்கும். மேலும் உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரியும். அமெரிக்க பல்மருத்துவ சங்கத்தின் கூற்றுப்படி, ஃவுளூரைடு உங்கள் பற்களில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பற்களின் மீது பாதுகாப்பான அடுக்கு ஒன்றை உருவாக்குகிறது, இது தகடு உருவாவதைக் குறைப்பதற்கும், உங்கள் பல்லின் எனாமல் அழிக்கப்படாமல் தடுக்கபடுவதற்கும் உதவுகிறது.

கூடுதலாக, கால்சியம் உங்கள் தாடை எலும்புகளை உறுதிப்படுத்துகிறது மற்றும் உங்கள் பற்களை அதன் இடத்திலேயே வைத்திருக்க உதவும். 

எனவே, சில இனிப்பு சர்க்கரைகளுக்கு பதில் சில பேரீச்சைகளை மாற்றாக பயன்படுத்தலாம். இதனால் இயற்கை இனிப்பு அனுபவத்தை சேர்க்கலாம்.

(மேலும் வாசிக்க: பல் தகடுகள் ஏற்பட காரணங்கள்)

பேரீச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கிறது - Dates reduce blood pressure in Tamil

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இரத்த அழுத்தத்தை பேரீச்சை  குறைக்க உதவும் என்று மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதற்கு காரணம் கால்சியம் மற்றும் மெக்னீசியம் என்னும் மிக முக்கியமான கனிமங்களில் இரண்டு பேரீச்சையில் இருப்பதே ஆகும், இது இரத்த அழுத்த அளவை பரிசோதிக்கும் பொறுப்பைக் கொண்டது.

உடலில் சோடியத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நடுநிலைப்படுத்துவதன் மூலம் இரத்தக் குழாய்களின் நீரோட்டத்தில் பொட்டாசியம் உதவுகிறது. இதனால் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் போது, இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

கூடுதலாக, பேரீச்சை இயற்கை ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டிருக்கின்றன, எனவே இது சில ஹைபோடென்ஷன் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும். 

(மேலும் வாசிக்க: உயர் இரத்த அழுத்த சிகிச்சை)

தோலுக்கான பேரீச்சையின் நன்மைகள் - Dates benefits for skin in Tamil

பேரீச்சை நம்முடைய சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் செயலில் சேர்மங்களை கொண்டிருக்கும். 

அவை  வைட்டமின் பி யை கொண்டிருக்கும். இது தோல் எரிச்சலை தடுக்கிறது மற்றும் பல்வேறு தோல் நிலைகளை வளப்படுத்துகிறது.

பேரீச்சையிலுள்ள வைட்டமின் சி தோலின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதோடு தோல் ஃபைப்ரோபிளாஸ்ட்கள் வளர்ச்சியையும் ஊக்குவித்து ஆரோக்கியமான தோல் பராமரிப்புக்கு உதவுகிறது. அதாவது, உங்கள் முகத்தில் பேரீச்சையை தடவுவது வயதான அறிகுறிகள் மற்றும் சுருக்கங்கள் அகற்றுவதில் உங்களுக்கு உதவும்.

பேரீச்சை  பழம் கொண்டிருக்கும் ஆக்ஸிஜனேற்றிகளின் காரணமாக தோல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பேரீச்சை  இருக்கும் முக கிரீம்கள் பயனுள்ளவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேரீச்சை பனை கர்னல் பைட்டோஹோமோன்களை (தாவர அடிப்படையிலான ஹார்மோன்கள்) கொண்டிருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, இது உங்கள் தோலின் தோற்றத்தை மேம்படுத்தவும் சுருக்கங்களை சுத்தமாகவும் உதவும். உண்மையில், இது வயதாவதை தடுக்கும் தீர்வுகளுக்கான பெரிய வாக்குறுதிகளை வைத்திருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

 • பேரீச்சை ஃப்ருக்டோஸைக் கொண்டிருக்கின்றன, இது ஒரு இயற்கையான இனிப்பை அளிக்கிறது. ஒரு சிலர் பிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமல், பேரீச்சையை ஜீரணிப்பதை கடினமாக உணர்வார்கள்.
 • பேரீச்சை சாப்பிடுவதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவில் குறைவு ஏற்படலாம். சர்க்கரை முற்றிலும் செரிக்கப்படாவிட்டால், அது  வயிற்று வலி மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
 • ஒரு முழுமையான பழுத்த பேரீச்சையில்  சுமார் 80% சர்க்கரை வரை உள்ளது. அது தன்னை ஒரு கெட்ட விஷயமாக மாற்றி கொள்வது அல்ல, அது உண்மையில் ஒரு நல்ல ஆற்றலை வழங்கும் பழமாக இதை செய்கிறது. ஆனால் உடல் உழப்பு இல்லாத வாழ்க்கை முறை கொண்ட மக்கள், அதிக கலோரி உணகளை உண்பதால் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பு ஏற்பட வழிவகுக்கும். இது உடலில் கூடுதல் கலோரிகளை சேர்க்கிறது. எனவே அதிக எடை கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையிலான பேரீச்சைகளை தவிர்க்க வேண்டும்.
 • பேரீச்சையில் மிக அதிக அளவு நார் சத்து இருக்கிறது. நீங்கள் ஒரு முழு கொத்து பேரீச்சை பழங்களை சாப்பிட்டால், உங்களுக்கு பல்வேறு வயிற்று தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
 • சிலருக்கு இயற்கையாகவே பேரீச்சை ஒவ்வாமை இருக்கலாம்.

பேரீச்சை ஆரோக்கியமான பல நலன்களைப் பெற்றுள்ளன, உடலில் அதிக அளவு சக்தியை உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட 10 கனிமங்கள் பேரீச்சையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை இயற்கையான இனிப்பு வகைகள் இதனால் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், சிலர் இந்த பழத்தினால் ஒவ்வாமை கொண்டுள்ளனர். பேரீச்சையின் பக்க விளைவுகள் நீங்கள் அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது மட்டுமே பாதிக்கும்.


उत्पाद या दवाइयाँ जिनमें Date palm है

மேற்கோள்கள்

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 09421, Dates, medjool. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. Ibrahim A. Alhaider et al. Date Palm (Phoenix dactylifera) Fruits as a Potential Cardioprotective Agent: The Role of Circulating Progenitor Cells. Front Pharmacol. 2017; 8: 592. PMID: 28928656
 3. Abdellaziz Souli et al. Effects of Dates Pulp Extract and Palm Sap (Phoenix dactylifera L.) on Gastrointestinal Transit Activity in Healthy Rats. J Med Food. 2014 Jul 1; 17(7): 782–786. PMID: 24611963
 4. H.A. Hajar Al Binali. Night Blindness and Ancient Remedy. Heart Views. 2014 Oct-Dec; 15(4): 136–139. PMID: 25774260
 5. Masoumeh Kordi. Effect of Dates in Late Pregnancy on the Duration of Labor in Nulliparous Women. Iran J Nurs Midwifery Res. 2017 Sep-Oct; 22(5): 383–387. PMID: 29033994
 6. Al-Kuran O et al. The effect of late pregnancy consumption of date fruit on labour and delivery. J Obstet Gynaecol. 2011;31(1):29-31. PMID: 21280989
 7. Selvaraju Subash et al. Diet rich in date palm fruits improves memory, learning and reduces beta amyloid in transgenic mouse model of Alzheimer's disease. J Ayurveda Integr Med. 2015 Apr-Jun; 6(2): 111–120. PMID: 26167001
 8. Noura Eid et al. The impact of date palm fruits and their component polyphenols, on gut microbial ecology, bacterial metabolites and colon cancer cell proliferation. J Nutr Sci. 2014; 3: e46. PMID: 26101614
 9. Eid N et al. Impact of palm date consumption on microbiota growth and large intestinal health: a randomised, controlled, cross-over, human intervention study. Br J Nutr. 2015 Oct 28;114(8):1226-36. PMID: 26428278
 10. Vayalil PK. Date fruits (Phoenix dactylifera Linn): an emerging medicinal food. Crit Rev Food Sci Nutr. 2012;52(3):249-71. PMID: 22214443
 11. Al-Farsi MA, Lee CY. Nutritional and functional properties of dates: a review. Crit Rev Food Sci Nutr. 2008 Nov;48(10):877-87. PMID: 18949591
 12. Taleb H et al. Chemical characterisation and the anti-inflammatory, anti-angiogenic and antibacterial properties of date fruit (Phoenix dactylifera L.). J Ethnopharmacol. 2016 Dec 24;194:457-468. PMID: 27729284
 13. Reem A. Al-Alawi et al. Date Palm Tree (Phoenix dactylifera L.): Natural Products and Therapeutic Options. Front Plant Sci. 2017; 8: 845. PMID: 28588600
 14. Al-Shahib W, Marshall RJ. The fruit of the date palm: its possible use as the best food for the future? Int J Food Sci Nutr. 2003 Jul;54(4):247-59. PMID: 12850886
 15. Mohammed I. Yasawy The unexpected truth about dates and hypoglycemia. J Family Community Med. 2016 May-Aug; 23(2): 115–118. PMID: 27186159
 16. David O. Kennedy. B Vitamins and the Brain: Mechanisms, Dose and Efficacy—A Review. Nutrients. 2016 Feb; 8(2): 68. PMID: 26828517
 17. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Anaemia.