myUpchar प्लस+ के साथ पूरेे परिवार के हेल्थ खर्च पर भारी बचत

காப்பி மாய சக்திகள் கொண்ட ஒரு மாய பானம் ஆகும். ஒரு குளிர்கால நாளில் காப்பியின் சூடான ஒரு கோப்பையை  விரும்பாதவர் யார் இருப்பார்கள்!  இந்த கருநிறம் கொண்ட கஷாயம் கொஞ்சம் கசப்பாகவும் அமிலதன்ம்மை நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால், காலை உணவு ஒரு கப் இல்லாமல் நிறைவடையாது. ஒரு நாளைக்கு சுமார் 400 பில்லியன் கப் காப்பியை உலகம் முழுவதும் பருகிறார்கள் என்று அரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். 

நாம் அறிந்த, நறுமணம் நிறைந்த காப்பி கொட்டைகள் ஆகிய இவை, உண்மையில் காப்பி பழங்களின் வறுக்கப்பட்ட விதைகள் ஆகும். காப்பியின் மனம் மற்றும் சுவை, காப்பி பீன்ஸ் வறுத்தெடுக்கும் அளவுக்கு பொருத்தது. அரபு மற்றும் ராபஸ்டா காப்பியில் இரண்டு மிகவும் பிரபலமான வகைகள் ஆகும் . எனினும், அரபு காப்பி உயர்ந்த தரமாக கருதப்படுகிறது. அது ஒரு சிறந்த நறுமணம் மற்றும் சுவையை கொண்டுள்ளது. காப்பி பெரும்பாலும் சூடாக பரிமாறப்படுகிறது. ஆனால் குளிர்ந்த காப்பியும் ஒரு பிரபலமான பானம் ஆகும்.

பிரேசில் நாடு உலகத்தின் மிக பெரிய காப்பி உற்பத்தியாளர் ஆகும். இந்தியாவின் உள்ள மூன்று பெரிய காப்பி உற்பத்தி மாநிலங்களில், கர்நாடகா முதன்மையானது, அது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 71% பங்கு வகிக்கிறது. அதற்கு அடுத்தாக கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை உள்ளன. கர்நாடகவின் காப்பி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிக்மகளூர் மற்றும் கொடகு பகுதிகள் உற்பத்தி செய்கின்றன.

காப்பியை வெற்றிகரமான ஒரு பானமாக்க அதில் உள்ள காப்பின் ஒரு பெரிய பங்குவகிக்கிறது. அது மனித உடலில் சக்தி மேம்படுத்தும் தன்மை வாய்ந்தது. மேலும், காப்பி பல உடல் நலன்களையும் அளிக்கிறது. இது, மன அழுத்தத்தை குணப்படுத்த, மார்பக புற்றுநோய் தடுக்க மற்றும் கல்லீரலை பாதுகாக்கவும்  உதவுகிறது. இதில் அண்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ள்ளது மற்றும் பிற உயிரியல் சேர்மங்களின் ஆதாரமாக உள்ளது, மற்றும் உடல் ரீதியாக புத்துயிர் பெற உதவுகிறது 

காப்பி பற்றிய சில அடிப்படை விஷயங்கள் :

 • தாவரவியல் பெயர்: கோஃபி
 • குடும்பம் : ரூபியாசி
 • பொதுவான பெயர்: காப்பி
 • சமஸ்கிருத பெயர்: काफी (காப்பி) / पीयूष (பியுஷ்)
 • பயன்படுத்தப்படும் பாகங்கள்: காப்பி பீன்ஸ்
 • பூர்வீக பிராந்தியம் மற்றும் புவியியல் விநியோகம்: காப்பி செடி எதியோப்பியாவின் காஃபா பகுதியிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இது துணை சஹாரா ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகளை சேர்ந்தது. ஹவாய், மெக்சிகோ, பியுர்டோ ரிகோ, கோஸ்டா ரிகா, கொலம்பியா, பிரேசில், எத்தியோப்பியா, கென்யா, இந்தியா மற்றும் யேமன் ஆகிய பிரதேசங்களில் காப்பி தாவரங்கள் பயிரிடப்படுகின்றன
 • சுவாரஸ்யமான தகவல்கள்: உலகில் எண்ணெய்க்கு பிறகு இரண்டாவதாக மிகப் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுவது காப்பி ஆகும்
 1. காப்பியின் ஊட்டச்சத்து தகவல்கள் - Coffee nutrition facts in Tamil
 2. காப்பி உடலுக்கு அளிக்கும் பயன்கள் - Coffee health benefits in Tamil
 3. காப்பி யின் பக்க விளைவுகள் - Coffee side effects in Tamil
 4. எடுத்துசெல்வது - Takeaway in Tamil

காப்பியில் காஃபின் நிறைந்துள்ளது மற்றும் பல வகையான உடல் நலனை கொண்டுள்ளது. காப்பி பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற கனிமங்கள் பலவற்றிற்கும் நல்ல ஆதாரமாக உள்ளது.

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து தகவல்கள் பொறுத்தவரை, 100 கிராம் உடனடி காப்பி தூள் பின்வரும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது:

ஊட்டசத்து 100 கிராமுக்குறிய அளவுகள்
தண்ணீர்
 
3.1கி
சக்தி 353 கி.கால்
புரத சத்து 12.2 கி
மொத்த கொழுப்பு (கொழுப்பு) 0.5 கி
மாவுசத்து 75.4 கி
கனிமங்கள்  
கால்சியம் 141 மி.கி
இரும்பு 4.41 மி.கி
மெக்னீசியம் 327 மி.கி
பாஸ்பரஸ் 303 மி.கி
பொட்டாசியம் 3535 மி.கி
சோடியம் 37 மி.கி
துத்தநாகம் 0.35 மி.கி
வைட்டமின்  
வைட்டமின் B1 0.008 மி.கி
வைட்டமின் B2 0.074 மி.கி
வைட்டமின் B3 28.173 மி.கி
வைட்டமின் B6 0.029 மி.கி
வைட்டமின் K 1.9 µகி
கொழுப்புகள் / கொழுப்பு அமிலங்கள்  
செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 0.197 கி
ஒற்றை செறிவூட்டப்படாத கொழுப்புகள் 0.041 கி
பல இரட்டைப்பிணைப்புக் கொழுப்புகள் 0.196 கி
காஃபின் 3142 மி.கி
 • மன அழுத்தத்திற்கு: காப்பி உட்கொள்ளுவதின் விளைவு டோபமைன் எனும் ஹார்மோனில் நிகழ்கிறது, அது மன அழுத்ததை தடுக்க உதவுகிறது.
 • பார்வைக்கு: விழித்திரை சீரழிவை தடுப்பதற்கு காப்பி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 • வாய் சுகாதாரத்திற்கு: பாலும் சக்கரையும் செர்க்கமால் காப்பி அருந்தினால் பல் அரிபின் ஆபத்தை தடுக்கலாம்
 • நீரிழிவு நோய்க்கு: காப்பி அருந்துவதனால் நீரிழுவு னி டைப் 2 டை தடுக்கலாம்
 • இதயத்திற்காக: ஒவ்வொரு நாளும் 3 கப் காப்பி குடிப்பதனால்  பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பல இருதய நோய்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்கலாம்
 • நீண்ட ஆயுளுக்கு: காப்பி இதய நோய்களால் இறப்பதர்க்கான  ஆபத்தை குறைக்கிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 4 கப் காப்பி எடுத்துகொண்டால்  தனிநபர்கள் வாழ்நாளை மேம்படுத்தி ஆயுள் அதிகரிக்கும் என்று அறியவந்துள்ளது .
 • புற்றுநோய்க்கு எதிராக: பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு வரும் மார்பக புற்றுநோயின் அபாயத்தை, காப்பி குடிபதனால் 10% வரை குறைகலாம். இது குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கவும் உதவும். கூடுதலாக, இது பல தசைதடிமன் ஆபத்துகளை மாற்றக்கூடும்.
 • கல்லீரலுக்கு: காப்பியின் வழக்கமான நுகர்வு கல்லீரல் என்சைம்கள் மீது தாக்கம் செலுத்தி மூலம் ஒரு கலீரல் பாதுகாப்பு தன்மையை கொண்டிருக்கிறது.
 • மூளைக்கு : காப்பியின் நரம்பு பாதுகாப்பு தன்மையினால் அதை குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சைமர் ஆபத்து குறைக்கிறது
 1. நீண்ட ஆயுளுக்கு காப்பி - Coffee for longevity in Tamil

நீண்ட ஆயுளுக்கு காப்பி - Coffee for longevity in Tamil

காப்பி குடிப்பது உங்கள் ஆயுளை நீடிக்கும் என்று நீங்கள் அறிவீர்களா? பல ஆய்வுகள் காப்பி குடிப்பதற்கும் ஆயுள் நீடிபதர்க்கும் நேரடியான தொடர்பை குறிபிடுகின்றன. பல்வேறு நோய்களால் மரணம் அடையும் ஆபத்தை காப்பி குடிப்பது தவிர்க்க உதவும் என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது.

5 லட்சத்திற்கும் அதிகமான காப்பி பருக்பவர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வானது, பல்வேறு நோய்களினால் மரணம் அடைவதையும் காப்பி குடிப்பதற்கும் இடையே உள்ள எதிரான உறவைக் கண்டறிந்துள்ளது .

அண்மையில் நடந்த ஒரு ஆய்வின் படி, நாளொன்றுக்கு 1-4 கப் காப்பி குடிப்பது நீண்ட ஆயுளுக்கு உதவும்.

 • காப்பி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்
  ஒரு மருத்துவ ஆய்வு காப்பி நுகர்வு இரத்த நாளங்கள் உள்ள விறைப்பு அதிகரித்து இரத்த அழுத்ததை அதிகரிக்க கூடும் என பரிந்துரைக்கிறது. எனவே, உயர் இரத்த அழுத்ததால்  பாதிக்கப்படுகிறவர்கள் அதிகப்படியான காப்பி சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். (மேலும் வாசிக்க: உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை)
 • காப்பியால் தூக்கமின்மை
  ஒரு மருத்துவ ஆய்வில், 18 வயது மேலுள்ள ஆண்கள் காஃபின், வழக்கமான காப்பி, மற்றும் காஃபின் நீக்கப்பட்ட காப்பி ஆகியவை உறங்குவதற்கு 30 நிமிடங்கள் முன் சமமான அளவுகளில் வழங்கப்பட்டது. வழக்கமான காப்பி மற்றும் காஃபின்  தூக்க அமைபபில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூக்கமின்மை உண்டாக்கியது என்று கண்டறியவந்துள்ளது.
 • காப்பி அஜீரணமும் தலைவலியும் ஏற்படுத்துகிறது
  அதிகப்படியான காஃபின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. அஜீரணம், நெஞ்சு படபடப்பு மற்றும் தலைவலி போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. காஃபின் காப்பியின் முக்கிய மூலபொருட்களில்  ஒன்றாகும், எனவே தினமும் அதிக காப்பி சாப்பிடுவதை தவிர்பத்து நல்லது.
 • காப்பி கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்
  ஒரு ஆய்வின் படி, தம்பதிகள் அதிகமாக காப்பி குடிப்பதனால் பெண்களிடையே கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது, குறிப்பாக கருத்தரிக்கும் நேரத்தில். கர்ப்பத்தின் முதல் ஏழு வாரங்களில் இரண்டு கப் காப்பிக்கு மேல் குடிப்பதால், கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
 • காப்பி ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகத்தின் ஆபத்தை அதிகரிக்கிறது
  ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக நோய், ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகம் என அழைக்கப்படும் இது, நோயற்ற மார்பகத்தில் கட்டிகள் உருவாகும் நோயாகும். இது ஒரு கடுமையான ஆரோக்ய பிரச்சனை இல்லை என்றாலும், இது தொடர்ந்து அசௌகரியமும் வலியும் ஏற்படுத்தலாம். தினசரி அதிகப்படியான காஃபின் உட்கொள்ளும் பெண்களுக்கு ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக நோயால் பாதிக்கப்படும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் ஒரு ஆய்வில்,கண்டறியப்பட்டுள்ளது.

காப்பி பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆண்டியாக்ஸிடண்டுகள், பைட்டோகெமிக்கல்ஸ், தாதுக்கள் மற்றும் காஃபின் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. காப்பி மார்பக புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் வகை 2, மற்றும் மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது . இருப்பினும், அதிகப்படியான காப்பி குடிப்பதால் சிக்கல்கள் ஏற்படலாம், குறிப்பாக உங்களுக்கு  தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது கர்ப்பமாக முயற்சி செய்கிறீர்கள் என்றாலோ. எனவே, ஒரு நாளில் எத்தனை கோப்பை காப்பி குடிப்பீர்கள் என்று கணக்கு வைத்துகொள்வது நல்லது

और पढ़ें ...

References

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 14214, Beverages, coffee, instant, regular, powder. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. Gunter MJ et al. Coffee Drinking and Mortality in 10 European Countries: A Multinational Cohort Study. Ann Intern Med. 2017 Aug 15;167(4):236-247. PMID: 28693038
 3. Erikka Loftfield, Marilyn C. Cornelis, Neil Caporaso, et al. Association of Coffee Drinking With Mortality by Genetic Variation in Caffeine Metabolism. JAMA Intern Med. 2018;178(8):1086-1097.
 4. Aruna Surakasula, Govardhana Chary Nagarjunapu, K. V. Raghavaiah. [link[. J Res Pharm Pract. 2014 Jan-Mar; 3(1): 12–18. PMID: 24991630
 5. Lafranconi A et al. Coffee Intake Decreases Risk of Postmenopausal Breast Cancer: A Dose-Response Meta-Analysis on Prospective Cohort Studies. Nutrients. 2018 Jan 23;10(2). pii: E112. doi: 10.3390/nu10020112. PMID: 29360766
 6. Wang L, Shen X, Wu Y, Zhang D. Coffee and caffeine consumption and depression: A meta-analysis of observational studies. Aust N Z J Psychiatry. 2016 Mar;50(3):228-42. PMID: 26339067
 7. N D Volkow et al. Caffeine increases striatal dopamine D2/D3 receptor availability in the human brain Transl Psychiatry. 2015 Apr; 5(4): e549. PMID: 25871974
 8. Holim Jang et al. Chlorogenic Acid and Coffee Prevent Hypoxia-Induced Retinal Degeneration. J. Agric. Food Chem.2014621182-191 Publication Date:December 2, 2013
 9. PC Anila Namboodiripad, Sumathi Kori. Can coffee prevent caries?. J Conserv Dent. 2009 Jan-Mar; 12(1): 17–21. PMID: 20379435
 10. Wadhawan M, Anand AC. Coffee and Liver Disease. J Clin Exp Hepatol. 2016 Mar;6(1):40-6. PMID: 27194895
 11. Maia L, de Mendonça A. Does caffeine intake protect from Alzheimer's disease? Eur J Neurol. 2002 Jul;9(4):377-82. PMID: 12099922
 12. Aimée E. van Dijk et al. Acute Effects of Decaffeinated Coffee and the Major Coffee Components Chlorogenic Acid and Trigonelline on Glucose Tolerance. Diabetes Care 2009 Jun; 32(6): 1023-1025.
 13. Muley A, Muley P, Shah M. Coffee to reduce risk of type 2 diabetes?: a systematic review. Curr Diabetes Rev. 2012 May;8(3):162-8. PMID: 22497654
 14. Pereira MA, Parker ED, Folsom AR. Coffee consumption and risk of type 2 diabetes mellitus: an 11-year prospective study of 28 812 postmenopausal women. Arch Intern Med. 2006 Jun 26;166(12):1311-6. PMID: 16801515
 15. Anne Gulland. Scientists wake up to coffee’s benefits. BMJ 2017;359:j5381
 16. National Institutes of Health; [Internet]. U.S. Department of Health & Human Services; Couples’ pre-pregnancy caffeine consumption linked to miscarriage risk.