வாய்ப் புண் - Thrush in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 22, 2019

March 06, 2020

வாய்ப் புண்
வாய்ப் புண்

வாய்ப்புண் என்றால் என்ன?

இரு திரிபுக் காளான் நோய்/பூஞ்சைத் தொற்று, கனடா நோய்த்தொற்று என்று அழைக்கப்படும் வாய்ப்புண் உடலின் பல பகுதிகளை பாதிக்கும் ஒரு நுரைம (ஈஸ்ட்) நோய்த்தொற்று ஆகும். கேண்டிடா அல்பிகான்ஸ் எனப்படும் புஞ்சை இந்த நோய் உண்டாக காரணம் ஆகும், இது வழக்கமாக தோல் மற்றும் செரிமான பாதையில் இருக்கும் மற்றும் இவை இணைந்து வாழ்வதால் எந்தவொரு அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. சில நேரங்களில் எதிர்ப்பு சக்தி குறைவதனால் இவை பன்மடங்காக பெருகி வாய், உணவுக்குழாய், தொண்டை, ஆண் அல்லது பெண் பிறப்புறுப்புகளில் நோய்தொற்றை உண்டாக்கும். பாதிக்கப்பட்ட பாகத்தை பொறுத்து அவை பின்வரும் வகைகளில் ஒன்றாக இருக்கலாம்.

  • வாய் வெண்புண்.
  • யோனி வெண்புண்.
  • வாய்த்தொண்டை வெண்புண்.
  • உணவுக்குழாய் வெண்புண்.
  • ஆணுறுப்பு நுரைம(ஈஸ்ட்) நோய்த்தொற்று.

இது குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் உட்பட எல்லா வயத்தினரையும் பாதிக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

பூஞ்சையால் பாதிக்கப்பட்ட உடல் பகுதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஏற்படும் பொதுவாக அறிகுறிகள் பின்வருமாறு:

  • வெள்ளைத் திட்டு.
  • அரிப்பு.
  • நமைச்சல்.
  • துர்நாற்றம்.
  • வலி.
  • சற்று எழும்பிய சிவந்த சிதைவு.
  • காய்ச்சல்.

நோய் தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?

காண்டிடா நம் உடலில் இயல்பாக இருப்பது எனினும் நோய்த்தொற்று ஏற்படுத்தும் எண்ணிக்கையில் இருப்பதில்லை. பின்வரும் காரணிகள் பூஞ்சை பன்மடங்காக வளர்ந்து பின் நோய்த்தொற்றாக மாற காரணமாகின்றன:

  • இயக்க ஊக்கி மருந்துகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் நுண்ணுயிர்க் கொல்லிகள் போன்ற எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் மருந்துகள்.
  • கருத்தரித்தல்.
  • புகைப்பிடித்தல்.
  • வறண்ட வாய்.
  • பொருந்தாத பொய்ப்பற்கள்.
  • கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய்.
  • வலுகுறைந்த எதிர்ப்பபு சக்தி உண்டாகும் புற்றுநோய் மற்றும் எச்ஐவி போன்ற நிலைகள்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

வாய் வெண்புண் நிலையைக் கண்டறிய நேரடி உடற்சோதனை மற்றும் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மாதிரிகளை கொண்டு நுண்ணிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உணவுக்குழாய் வெண்புண் நிலையைக் கண்டறிய இயல்பாக எண்டோஸ்கோபி எனப்படும் உணவுப்பாதை உள்நோக்கல் உட்படுத்தப்படுகிறது. பிறப்புறுப்பு வெண்புண் நிலையைக் கண்டறிய நேரடி உடற்சோதனையுடன் அறிகுறிகள் பற்றிய சில கேள்விகள் உதவுகின்றன.

நைஸ்டாடின், மைகோனஸோல் மற்றும் க்ளோட்ரிமஸோல் போன்ற பூஞ்சைக் கொல்லி மருந்துகள் பூஞ்சைத் தொற்றுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாய் வழி அல்லது சிரை வழி ஃப்ளூகேன்ஸோல் உணவுக்குழாய் வெண்புண் மற்றும் தீவிர வெண்புண் நிலைக்கு வழிவகுக்கிறது.  ஃப்ளூகேன்ஸோல் பலனிழக்கும் நிலையில் மற்ற பூஞ்சைக்கொல்லி மருந்து முறைகள் இந்நிலையை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Thrush in men and women.
  2. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Thrush.
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Candida infections of the mouth, throat, and esophagus.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Yeast Infections.
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Vaginal thrush.

வாய்ப் புண் க்கான மருந்துகள்

Medicines listed below are available for வாய்ப் புண். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.