பப்பாளி உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு பழம் ஆகும். இது கேரிகாசிஸ்-ன் குடும்பத்தை சேர்ந்தது. பப்பாளிப் பழம் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது ஆச்சரியப்பட்டது உண்டா? பப்பாளி பழம் வெப்பமண்டல அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் இது முதன்முதலாக மெக்ஸிகோவில் வளர்ந்தது. போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு பாப்ளியைவை அறிமுகப்படுத்தினர். இது கிறிஸ்டோபர் கொலம்பஸால் "தேவதூதர்களின் பழம்" என்று அழைக்கப்பட்டது. பப்பாளி "பவ்பா" என்றும் அழைக்கப்படுகிறது.

பப்பாளியின் சுவை பெரும்பாலும் முலாம்பழங்களுடன் ஒப்பிடப்படுகிறது, ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது இது குறைவான இனிப்பு கொண்டது. பப்பாளியின் உண்மையான சுவை அது முழுமையாக பழுத்த பிறகு மட்டுமே உணர முடியும். பப்பாளி பழுக்காமல் பச்சையாக இருக்கும் போது பச்சை நிறமாக இருக்கும். பப்பாளி அரை கனியாக இருக்கும் போது, அது பாதி பச்சை மற்றும் பாதி மஞ்சள் நிறமாக இருக்கும். அது முழுமையாக பழுத்த பிறகு, பப்பாளியின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறம் வரை மாறுபடும். இந்த பழம் பல்வேறு வகையான சுகாதார நலன்களைக் கொண்டது. பப்பாளி அதன் பரந்த ஆரோக்கிய நலன்கள் மற்றும் சுவையின் காரணமாக மிகவும் பிரபலமானதாகவும், புத்துணர்ச்சியூட்டும் ஒரு பழமாகவும் உள்ளது. ஆண்டு முழுவதும் இது கிடைக்கும். மக்கள் வழக்கமாக இந்த பழத்தை தங்கள் காலை உணவு மற்றும் பழ சாலட்டில் சேர்த்து கொள்கிறார்கள்.

பப்பாளி என்பது நம் சமயல் தோட்டங்களில் மற்றும் வீட்டின் கொல்லை புறங்களில் எளிதாக வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த பழமாகும். இது நடவு செய்யப்பட்ட 8 முதல் 10 மாதங்களுக்குள்ளேயே விரைவாக வளர்ந்து பழங்களை தாங்கி நிற்க ஆரம்பித்துவிடும். இது புத்துணர்ச்சி தரும் ஒரு சுவையான பழம் ஆகும். இதில் வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இது உப்பு மற்றும் மிளகு சேர்த்து இல்லாவிட்டால் சர்க்கரை அல்லது எலுமிச்சை கொண்டு சாப்பிடக்கூடிய ஒரு பழம். பழுக்காத பழத்தை ஒரு காய்கறி போல சாப்பிடலாம். நாம் அதை கொண்டு ஊறுகாய் செய்ய முடியும்.

பப்பாளி பழம் பாப்பன் எனப்படும் ஒரு நொதியைக் கொண்டிருக்கிறது, மேலும் அது ஒப்பனை பொருட்கள், சுவிங் கம்கள், மருந்து தொழிற்துறை உற்பத்தி, பசைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. 40 வகையான பப்பாளிகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இவை 20 அங்குல நீளம் வரை வளரக்கூடிய பேரிக்காய் வடிவமான பழங்கள். ஒரு பப்பாளியில் நூற்றுக்கணக்கான மென்மையான, கருப்பு நிற வழவழப்பான விதைகள் இருக்கும். பப்பாளியின் ஒவ்வொரு பழமும் 0.49 கிலோ முதல் 1 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். சந்தையில் காணப்படும் பழங்கள் பொதுவாக 7 அங்குல நீளமும் சுமார் 1 கிலோ எடையும் கொண்டவை. இதை அப்படியே ஒரு பழமாக சாப்பிடலாம், ஸ்மூத்தீ செய்து சாப்பிடலாம் இல்லையெனில் மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். இதில் இயற்கையான நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய கனிம வகைகள் உள்ளன. வேர், பட்டை, தோல், விதைகள் மற்றும் கூழ் உள்ளிட்ட முழு பப்பாளி தாவரமும் மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில், பப்பாளி நாட்டின் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. தெற்கில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கில் மேற்கு வங்கம், அசாம் மற்றும் ஒரிசா.  மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய பப்பாளி உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் பப்பாளி சுமார் 3 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பப்பாளியின் மொத்த உலக உற்பத்தியில் பாதி இருக்கும். பெஹரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார் மற்றும் நெதர்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியா பப்பாளியை ஏற்றுமதி செய்கிறது.

பப்பாளி பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

 • தாவரவியல் பெயர்: காரிகா பப்பாயா.
 • குடும்பம்: கேரிகாசீஸ்
 • பொது பெயர்: பப்பாளி பிரபலமாக பாப்பா அல்லது பாபாவ் என அழைக்கப்படுகிறது. இது சில நேரங்களில் "முலாம்பழம் மரம் " என்று அழைக்கப்படுகிறது.
 • சமஸ்கிருத பெயர்: எரண்ட் கர்காதி
 • பயன்படுத்தப்படும் பகுதிகள்: பழம், இலைகள், மலர்கள், தண்டுகள், வேர்கள் மற்றும் விதைகள் என அனைத்தும் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
 • தோற்றிய இடம்: இது மெக்ஸிக்கோ மற்றும் வடக்கு தென் அமெரிக்காவிற்கு சொந்தமானது. ஆனால் இப்போது பப்பாளி உலகின் அனைத்து வெப்ப மண்டல பகுதிகளிலும் வளர்ந்து வருகிறது.
 • சுவாரஸ்யமான உண்மைகள்: ஜூன் மாதம் தேசிய பப்பாளி மாதமாக கருதப்படுகிறது.
 1. பப்பாளியின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Papaya nutrition facts in Tamil
 2. பப்பாளியின் சுகாதார நலன்கள் - Papaya health benefits in Tamil
 3. பப்பாளியின் பக்க விளைவுகள் - Papaya side effects in Tamil
 4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

பப்பாளி தண்ணீர் சத்து நிறைந்ததாக உள்ளது. இதில் உள்ள நார்சத்து உள்ளடக்கம் மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும். பப்பாளியில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உள்ளன. பப்பாளியில் சோடியம் குறைந்த அளவே உள்ளது. பப்பாளியில் உயர் பொட்டாசியம், குறைந்த சோடியம் உள்ளடக்கம் இருப்பது இதய நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதை சிறந்த ஒன்றாக செய்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி பப்பாளியில் அதிகம் இருப்பதால் நம் தோலை பாதுகாக்க மற்றும் அதை ஈரப்பதமாக வைத்திருக்க மற்றும் அதை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பப்பாளி ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது.

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து டேட்டாபேஸ் படி, 100 கிராம் பப்பாளி பின்வரும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

ஊட்டக்கூறு 100 கிராமுக்கான மதிப்பு
சாறு 88.06 கிராம்
ஆற்றல் 43 கி.கே.
புரதம் 0.47 கிராம்
கொழுப்பு 0.26 கிராம்
கார்போஹைட்ரேட் 10.82 கிராம்
நார்ச்சத்து 1.7 கிராம்
சர்க்கரைகள் 7.82 கிராம்

 

கனிமங்கள் 100 கிராமுக்கான மதிப்பு
கால்சியம் 20 மிகி
இரும்பு 0.25 மிகி
மக்னீசியம் 21 மிகி
பாஸ்பரஸ் 10 மிகி
பொட்டாசியம் 182 மிகி
சோடியம் 8 மி.கி.
துத்தநாகம் 0.08 மிகி

 

வைட்டமின்கள் 100 கிராமுக்கான மதிப்பு
உயிர்ச்சத்து ஏ 47 μg
வைட்டமின் பி1 0.023 மிகி
வைட்டமின் பி2 0.027 மிகி
வைட்டமின் பி3 0.357 மிகி
வைட்டமின் பி6 0.038 மிகி
வைட்டமின் பி9 37 μg
விட்டமின் சி 60.9 மிகி
வைட்டமின் ஈ 0.3 மி.கி
வைட்டமின் கே 2.6 μg

 

கொழுப்புகள் 100 கிராமுக்கான மதிப்பு
கொழுப்பு அமிலங்கள், சாசுரேட்டட் 0.081 கிராம்
கொழுப்பு அமிலங்கள், மோனோஅன்சாசுரேட்டட் 0.072 கிராம்
கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாசுரேட்டட் 0.058 கிராம்
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

தோல் புண்களுக்கு பப்பாளி - Papaya for skin ulcers in Tamil

அதன் பழம், பட்டை, இலைகள் மற்றும் விதைகள் உள்ளிட்ட முழு பப்பாளி செடியையும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று அறியப்படுகிறது. இதில் உள்ள பல்வேறு தாதுக்கள், குறிப்பாக வைட்டமின் ஏ, பி மற்றும் சி மற்றும் பப்பாளியில் உள்ள பாபெய்ன் என்று அழைக்கப்படும் ஒரு நொதியின் காரணமாக இது முதன்மையானதாக திகழ்கிறது. இதில் உள்ள சிமோபாபெய்ன் என்னும் மற்றொரு நொதிகூட நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என அறியப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் நொதிகளின் காரணமாக பப்பாளி வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. பப்பாளி மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, பப்பாளி விதைகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன, மேலும் கடுமையான தோல் புண்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் என காட்டியது.

ஆஸ்துமாவுக்கு பப்பாளி - Papaya for asthma in Tamil

பீட்டா கரோட்டின் என்பது சிவப்பு ஆரஞ்சு நிறமி ஆகும், இது ஆஸ்துமாவை தடுக்க அவசியமான ஒன்றாகும். இந்த நிறமி சில காய்கறிகளிலும், பழங்கள் மீதும் அதிகமாக உள்ளது. அந்த பழங்களில் ஒன்று பப்பாளி ஆகும். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இடமான டோகோவில்,  பல நோய்களை குணப்படுத்த தாவர அடிப்படையிலான மருந்தைப் பயன்படுத்துகிறது. டோகோவின் தாவரம் சார்ந்த மருந்துகளை ஆஸ்துமா சிகிச்சையில் பயன்படுத்த முடியுமா என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பயன்படுத்தப்பட்ட 98 தாவரங்களில், மிக முக்கியமான தாவரங்களில் ஒன்றாக பப்பாளி இருந்தது. இந்த ஆய்வு மூலம், ஆய்வாளர்கள் இந்த தாவரத்தை பயன்படுத்தி  ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப ஆதாரங்களைக் காண முடிந்தது.

மலேரியா சிகிச்சைக்காக பப்பாளி - Papaya for malaria treatment in Tamil

புதிய மலேரியா எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் தென்மேற்கு இந்தியாவில் இருக்கும் மக்கள் மலேரியா நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தும் சில பாரம்பரிய தாவரங்களைப் பயன்படுத்தினர். இந்த தாவரங்களில் பப்பாளியும் இருந்தது. இந்த தாவரங்களின் குறிப்பிட்ட தாவர பாகங்கள்  மலேரியாவை தடுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க விளைவை காட்டியுள்ளன.

டெங்கு நோய்க்கான பப்பாளியின் நன்மைகள் - Papaya benefits for dengue in Tamil

டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் நோய் மற்றும் கொசு கடிப்பதால் முக்கியமாக பரவுகிறது. இந்த நோய் உலகில் பல மக்களை பாதிக்கிறது, சில சமயங்களில் இந்த நோய் மரணத்திற்கு வழிவகுக்கிறது. இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளை கண்டறிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. பப்பாளி இலைகளின் சாறு பாதிக்கப்பட்ட நோயாளியின் இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவ முடியும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. பப்பாளி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு காய்ச்சலைக் குறைக்க உதவும் என்று மற்றொரு ஆய்வு காட்டுகிறது.

இதயத்திற்கு பப்பாளியின் நன்மைகள் - Papaya benefits for heart in Tamil

உடலில் கொழுப்பு அதிகரிப்பு மாரடைப்பு,  உயர் இரத்த அழுத்தம் போன்ற பல இதய நோய்களுக்கு வழிவகுக்கும். பப்பாளியில் இருக்கும், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை தற்போது தமனிகளில் கொழுப்புக்கள் படிவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நச்சுத்தன்மையையும் தடுக்க உதவும். எனவே நமது உணவில் அதிக அளவு பப்பாளியை சேர்த்து கொள்வதால்  பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது.

அல்ஜீமருக்கு பப்பாளி - Papaya for Alzheimer's in Tamil

அல்சைமர் நோய் (AD) முதியோர்காளுக்கு டிமென்ஷியாவை ஏற்படுத்தும் மிகவும் பொதுவான நரம்பு சம்மந்தப்பட்ட ஒரு நோய் ஆகும். AD உடைய நோயாளிகள் படிப்படியாக நினைவு சரிவு மற்றும் பிற அறிவாற்றல் செயல்பாடு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கின்றனர், இது இறுதியில் மூளை செயல்பாடு அற்று போகுதல் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கிறது. பப்பாளி  அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

சறுமத்திற்கான பப்பாளியின் நன்மைகள் - Papaya benefits for skin in Tamil

பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் ஆகியவை நிறைந்துள்ளது, இது தோலை பாதுகாக்க மற்றும் முன்கூட்டிய வயது முதிர்ச்சியை குறைக்க உதவும். ஒரு ஆய்வு லைகோபீன், வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற கலவையின் நுகர்வு சுருக்கங்களை குறைக்க உதவும் என்பதைக் காட்டுகிறது. மற்றொரு ஆய்வில், லைகோபீன் வழங்கிகளை 10-12 வாரங்களுக்கு உபயோகிப்பதன் மூலம், அதிக அளவு சூரிய வெளிச்சம் படுவதால் சருமத்தில் ஏற்படும் சிவப்புத்தன்மை குறிப்பிடதக்க அளவு குறைக்கப்படுவதாகக் காட்டியது.

நீரிழிவு நோய்க்கு பப்பாளி - Papaya for diabetes in Tamil

நீரிழிவை உங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதிகமான நார்சத்துள்ள பொருட்களை சாப்பிடுவது, எடை குறைப்பு உத்திகள் மற்றும் பழங்கள், காய்கறிகள், மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்து கொள்வது ஆகிய செயல்கள் இன்சுலினின் செயல்பாட்டை கட்டாயப்படுத்துவதில் அதிக விளைவைக் கொண்டுள்ளன. புளிக்க வைக்கப்பட்ட பப்பாளி தயாரிப்பை (FPP) சாப்பிடுவது இந்த பிரச்சனையை பூர்த்தி செய்யலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. FPP இன் வாய்வழி நிர்வாகம் ஆரோக்கியமான நபர்களிடமிருந்தும் அதே போல் வகை II நீரிழிவு நோயாளிகளிலும் பிளாஸ்மா சர்க்கரையின் அளவில் கணிசமான சரிவை உருவாக்கும் திறனை கொண்டுள்ளது என்று ஊகிக்கப்படுகிறது.

அலற்சிக்கு பப்பாளி - Papaya for inflammation in Tamil

பப்பாளி என்பது பீட்டா கரோட்டின் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு வளமான ஆதாரமாகும். பல நோய்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகளே நீண்டகால அலற்சிக்கு முக்கிய காரணத்தின் ஆணி வேராக இருக்கிறது, இந்த நிலை மேலும் தீவிரமடையலாம். கரோடெனோயிட் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது, ஆரோக்கியமான மற்றும் புகை பிடிக்காத ஆண்களின் அலற்சியை குறையும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

பெருங்குடல் புற்றுநோய்க்கான பப்பாளி - Papaya for colon cancer in Tamil

பப்பாளியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களால் பெருங்குடல் புற்றுநோயை தடுக்கலாம். ஆரோக்கியமான பெருங்குடல் உயிரணுக்கள் பப்பாளியில் உள்ள நார் நரம்புகளால் பெருங்குடல் புற்றுநோயால் ஏற்படக்கூடிய நச்சுத்தன்மையுடன் பிணைக்கப்படுவதை தடுக்கின்றன.

செரிமானத்திற்கான பப்பாளி - Papaya for digestion in Tamil

பப்பாளியில் இருக்கும்  பாபெயின் என்று அழைக்கப்படுகிற ஒரு நொதி செரிமானத்திற்கு உதவுகிறது. ஒரு சிகிச்சைநிலை பார்வையில் இருந்து, பாபெயின் அதன் செரிமான பண்புகளுக்கு உயர் மதிப்பீட்டில் அறியப்படுகிறது, இது உணவுப் பொருட்களில் இருக்கும் புரதத்தை ஜீரணிக்க உதவுகிறது. மலச்சிக்கல் தடுப்பு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், வலியுடைய குடல் இயக்கங்கள், மற்றும் வழக்கமான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதைக்கு ஊக்கமளித்தல் ஆகிய செயல்கள் பப்பாளியில் உள்ள நார்சத்து மற்றும் தண்ணீர் உள்ளடக்கம் காரணமாக சாத்தியமாகும்.

 1. ஒவ்வாமை மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது: பப்பாளியால் சிலருக்கு ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்படலாம். பப்பாளி மரத்தின் வடியும் பால் சிலருக்கு தோல் எரிச்சலை உண்டாக்கும். பப்பாளி இலைகளை ஏராளமாக எடுத்துக் கொண்டால், அவை வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். பப்பாளி பழச்சாறு மற்றும் பப்பாளி இலைகளும் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் எனவும் நம்பப்படுகிறது. பப்பாளியில் இருக்கும் பாபெயின் வீக்கம், தலைச்சுற்றல், தலைவலி, தடிப்புகள், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
   
 2. பப்பாளியால் கருச்சிதைவு ஏற்படலாம்: பப்பாளி கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். இது கருக்கலைப்பை ஏற்படுத்தலாம். இது 'சூடான' பழமாகக் கருதப்படுகிறது. பச்சையான மற்றும் அரை-பழுத்த பப்பாளியில் கரு கலைப்புக்கு வழிவகுக்கும் கருப்பை சுருக்கங்கள் ஏற்பட காரணமான அதிக செறிவு கொண்ட மரப்பால் காணப்படுகிறது. மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு பழுக்காத பப்பாளியை சாப்பிடுவதன் மூலம் கருக்கலைப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் தினசரி பழுத்த பப்பாளியை சாப்பிடுவது ஒரு பயனுள்ள கருத்தடையாக இருக்க முடியும். மேலும், பப்பாளியில் உள்ள பாபெயினானது கர்பத்திற்கு கருப்பையை தயார் செய்வதற்கு தேவைப்படும் புரோஜெஸ்ட்டிரோன் (பாலின ஹார்மோன்) ஐ ஒடுக்குவதாக ஆராய்ச்சி கூறுகிறது. பெண்ணின் உடலில் பாபெயின் சில சவ்வுகளை சேதப்படுத்தலாம், இது கரு வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று ஆகும். தாய்ப்பால் கொடுக்கும் போது கூட பப்பாளி பாதுகாப்பான ஒன்றாக இருக்காது. இது சம்பந்தமாக சில ஊகங்கள் உள்ளன, மேலும் ஆராய்ச்சி எதுவும் மிகவும் தெளிவாக இல்லை. பப்பாளி சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
   
 3. பப்பாளி உணவு குழாயை சேதப்படுத்தும்: வயிற்றையும் உங்கள் தொண்டையையும் இணைக்கின்ற உணவு குழாயான ஈசோஃபாகஸ், பப்பளியை அதிகப்படியாக சாப்பிடுவதன் விளைவாக சேதம் அடையலாம்.
   
 4. பப்பாளி சாப்பிடுவதால் குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படலாம்: இதற்கு குறைவான ஆராய்ச்சிகளே இருக்கிறது, இருப்பினும் குறைந்த இரத்த சர்க்கரை அளவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் பப்பாளி சாப்பிடுவதால் அவர்களின் சர்க்கரை அளவு மேலும் குறைந்து விடக் கூடும் என்று சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறைந்த இரத்த அழுத்தத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களின் இரத்த அழுத்தம் கடுமையாக குறைக்க கூடும்.
   
 5. பப்பாளி ஆண்மை வளத்தை குறைக்கலாம்: பப்பாளி விதை சாற்றில் ஆண்கள் கருவுறுத்துதலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இது ஆண்களில் விந்தணுக்களின் செயல்பாட்டை குறைக்கிறது. ஆண் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு, பப்பாளி விதைகளில் இருந்து எடுக்கப்படும் நீர்ம சாறு சிகிச்சை மூலம் லிபிடோவில் மீளுருவாக்கம் மற்றும் நச்சுத்தன்மையியல் பண்புகளில் எதிர்மறையான விளைவுகள் இல்லாமல், ஆண் எலிகளில்  தலைகீழ் மலட்டுத்தன்மையை தூண்ட முடியும் என்று காட்டியது. 30 - 45 நாட்களுக்கு பிறகு பப்பாளி விதைகளை சாப்பிடுவதை நிறுத்திய உடன் கருவுறுதல் மற்றும் பிற தொடர்புடைய மாற்றங்கள் இயல்பான நிலைக்கு திரும்பின.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

பப்பாளி பழத்தின் அனைத்து பாகங்களும் பயன்படுத்த தக்கவை மற்றும், மிகவும் பயனுள்ளவை. பப்பாளி விதை, இலைகள் மற்றும் பழத்தின் சதை, இவை அனைத்திற்கும் சில மதிப்பு உண்டு. இந்த பழம் சாத்தியமான பக்க விளைவுகளைக் கொண்டிருப்பினும், இந்த பழத்தை மிதமான முறையில் பயன்படுத்துவது அதிக பயன் தரும், மேலும் ஆரோக்கியமானதாக இருக்கும். எனவே உங்கள் பப்பாளி பழங்களை சரியான அளவில் அனுபவித்து ஆரோக்கியமாக இருங்கள்.


Medicines / Products that contain Papaya

மேற்கோள்கள்

 1. National Horticulture Board, Ministry of Agriculture and Farmers Welfare, Government of India. PAPAYA
 2. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 09226, Papayas, raw . National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 3. Dawkins G, Hewitt H, Wint Y, Obiefuna PC, Wint B. Antibacterial effects of Carica papaya fruit on common wound organisms. West Indian Med J. 2003 Dec;52(4):290-2. PMID: 15040064
 4. Gbekley HE et al. ETHNOBOTANICAL STUDY OF PLANTS USED TO TREAT ASTHMA IN THE MARITIME REGION IN TOGO. Afr J Tradit Complement Altern Med. 2016 Nov 23;14(1):196-212. PMID: 28480398
 5. Bhat GP, Surolia N. In vitro antimalarial activity of extracts of three plants used in the traditional medicine of India. . Am J Trop Med Hyg. 2001 Oct;65(4):304-8. PMID: 11693874
 6. N Sarala, SS Paknikar. Papaya Extract to Treat Dengue: A Novel Therapeutic Option? Ann Med Health Sci Res. 2014 May-Jun; 4(3): 320–324. PMID: 24971201
 7. Nisar Ahmad et al. Dengue fever treatment with Carica papaya leaves extracts. Asian Pac J Trop Biomed. 2011 Aug; 1(4): 330–333. PMID: 23569787
 8. Barbagallo M, Marotta F, Dominguez LJ. Oxidative stress in patients with Alzheimer's disease: effect of extracts of fermented papaya powder. Mediators Inflamm. 2015;2015:624801. PMID: 25944987
 9. Jenkins G, Wainwright LJ, Holland R, Barrett KE1, Casey J. Wrinkle reduction in post-menopausal women consuming a novel oral supplement: a double-blind placebo-controlled randomized study.. Int J Cosmet Sci. 2014 Feb;36(1):22-31. PMID: 23927381
 10. Watzl B, Kulling SE, Möseneder J, Barth SW, Bub A. A 4-wk intervention with high intake of carotenoid-rich vegetables and fruit reduces plasma C-reactive protein in healthy, nonsmoking men. Am J Clin Nutr. 2005 Nov;82(5):1052-8. PMID: 16280438
 11. Muss C, Mosgoeller W, Endler T. Papaya preparation (Caricol®) in digestive disorders. Neuro Endocrinol Lett. 2013;34(1):38-46. PMID: 23524622
 12. Asiaweek. 1994 May 18:12. The natural way. A tropical contraceptive. PMID: 12288101
 13. Lohiya NK1, Goyal RB, Jayaprakash D, Ansari AS, Sharma S. Antifertility effects of aqueous extract of Carica papaya seeds in male rats. Planta Med. 1994 Oct;60(5):400-4.PMID: 7997464
 14. Okpe Oche, et al. Antimalarial Potential of Carica papaya and Vernonia amygdalina in Mice Infected with Plasmodium berghei. J Trop Med. 2016: 8738972. PMID: 28042299.
 15. World Health Organisation [Internet]. Geneva. Switzerland; Malaria
 16. Zeleke Gemechu, et al. In Vivo Antimalarial Activity of the Solvent Fractions of Fruit Rind and Root of Carica papaya Linn (Caricaceae) against Plasmodium berghei in Mice. J Parasitol Res. 2017; 2017: 3121050. PMID: 29391947.
 17. Rajapakse Senaka, et al. Carica papaya extract in dengue: a systematic review and meta-analysis. BMC Complement Altern Med. 2019; 19: 265. PMID: 31601215.
 18. Zhang J, Mori A, Chen Q, Zhao B. Fermented papaya preparation attenuates beta-amyloid precursor protein: beta-amyloid-mediated copper neurotoxicity in beta-amyloid precursor protein and beta-amyloid precursor protein Swedish mutation overexpressing SH-SY5Y cells. Neuroscience. 2006 Nov 17; 143(1): 63-72. PMID: 16962711.
Read on app