பாதாம் ,ஒரு சிறிய சிப்பிக்குள் அடைத்துவைக்கபட்ட ஊட்டசத்துக்கள் நிறைத்த ஒரு பொருளாகும். இது  பொதுவாக இதன் இந்திய பெயரான பாதாம் என்று அறியப்படுகிறது. பாதாம் விதைகள் பாதாம் பழங்கள் கடினமான ஓட்டுக்குள் உண்டாகும் விதைகள் ஆகும்  உள்ளன. பாதாம் முட்டை வடிவம் கொண்டு ஒரு புறத்தில் ஒரு முனை கொண்டிருக்கும். இந்த விதையில் ஒரு மெல்லிய பழுப்பு தோல் இருக்கும் ,அதனுள் வெள்ளை நிறத்தில்  பருப்பு இருக்கும் உள்ளது. ஒரு சில மணிநேரங்களுக்கு நீரில் ஊரும்போது தொலை எளிதாக உரித்துவிடலாம் .

. பாதாம், , பீச், ஆப்பிள், பேரீஸ், பிளம்ஸ், செர்ரிஸ் மற்றும் ஆப்பிரகோட் போன்ற பல மர பழங்களுடன் கொண்ட ரோஜா குடும்பமத்தை சேர்ந்தது  பாதாம். அவை மத்திய ஆசியா மற்றும் சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. தற்போது, ​​அமெரிக்கா பாதாமின் உற்பத்தியில் முதன்மையான  உற்பத்தியாளராகவும், அதனை தொடர்ந்து ஸ்பெயினும்  ஈரானும்  உள்ளது. இந்தியாவில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிங்கள் படாமின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது .

பெரும்பாலான மக்கள் பாதாம் பருப்பை பச்சையாக சாப்பிட விரும்பினால் கூட, அது பல்வேறு வகையான உணவாகவும் பயன்படுத்தலாம். மத்திய கிழக்கில், பாதாம் இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களை தயாரிக்க பயன்படுகிறது, மேலும் காபிக்கு கூட சேர்க்கப்படுகிறது. அவர்கள் கேக்குகள், குக்கீகள், நொகட், மிட்டாய்கள், சிற்றுண்டி பார்கள் மற்றும் இனிப்புகளில் மேல்புறங்களைப் போன்ற பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். பாதாம் வெண்ணெய், பாதாம் பால் மற்றும் பாதாம் எண்ணெய் தயாரிக்கவும் பாதாம் பயன்படுத்தப்படுகிறது. 

பாதாம் பல உடல் நன்மைகளை கொண்டதாக கருதப்படுகிறது. அவை புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் இழைகள் நிறைந்தவை. பாதாம் கொழுப்பு அளவு குறைக்க உதவுகிறது மற்றும் இதயநாள பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் தடுக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.

பாதாம் பற்றிய சில அடிப்படை தகவல்கள் :

  • அறிவியல் பெயர்: ப்ரூனஸ் டல்கிஸ்
  • குடும்பம்: ரோசேசே.
  • பொதுவான பெயர்: அல்மொண்ட்ஸ் ,பாதாம்
  • பூர்வீக பிராந்தியம் மற்றும் புவியியல் பரவல்: தென்மேற்கு ஆசியாவைச் பூர்வீகமாக கொண்டுள்ளது பாதாம் மரம். ப்ருனஸ் துல்கிஸ் என்பது பிரதானமாக மத்திய தரைக்கடல் காலநிலையங்களில் வளரும்  பொருளாதாரத்தில்  முக்கியதுவம் வாய்ந்த ஒரு பயிர் மரமாகும்.உலகத்தின் மொத்த உற்பத்தியில்  70 சதவீதத்தை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது.கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட பாதாம் வகைகள் கலிபோர்னியாவில் வளர்க்கப்படுகின்றன. மார்கோனா மற்றும் வாலென்சியா பாதாம் ஸ்பெயினிலிருந்து வருகிறது , மற்றும் கிரேக்கத்தில் இருந்து ஃபெராக்கன்கள் பாதாம் இறக்குமதி செய்யப்படுகின்றன. பாதாம் மரம் மத்திய கிழக்கில், இந்திய துணைக் கண்டத்திலும், வட ஆபிரிக்காவிலும் வளரக்கூடியது .
  1. பாதாமின் ஊட்டசத்து தகவல்கள் - Almond nutrition facts in Tamil
  2. பாதாமினால் உடல் நன்மைகள் - Health benefits of almonds in Tamil
  3. பாதாமின் பக்கவிளைவுகள் - Almonds side effects in Tamil
  4. எடுத்துசெலவது - Takeaway in Tamil

பாதாம் உடலுக்கு பயனல்லிக்கும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த கொட்டைகள் புரதங்கள், நார் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. மேலும்  இதில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிம ஆதாரங்களும் நிறைந்திருக்கும் .

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து தகவல்களின் படி, 100 கிராம் பாதாம் பின்வரும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது:

ஊட்டசத்து விவரங்கள் 100 கிராமிற்கு  அளவு
சக்தி 571 கி.கால்
புரத சத்து 21.43 கி
மாவுசத்து 21.43 கி
நார்சத்து 10.7 கி
சர்க்கரை 3.57 கி
கொழுப்பு 50 கி
கனிமங்கள் 100 கிராமிற்கு  அளவு
கால்சியம் 286 மி.கி
இரும்பு 3.86 மி.கி
மெக்னீசியம் 286 மி.கி
பாஸ்பரஸ் 536 மி.கி
பொட்டாசியம் 714 மி.கி
தாமிரம் 1.07 மி.கி
மாங்கனீசு 2 மி.கி
வைட்டமின்  
வைட்டமின் b2 0.911 mg
கொழுப்புகள் / கொழுப்பு அமிலங்கள் Value per 100 g
செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 3.57 கி
ஒற்றை செறிவூட்டப்படாத கொழுப்புகள் 32.14 கி
பல இரட்டைப்பிணைப்புக் கொழுப்புகள் 12.5 கி

(மேலும் படிக்க : வைட்டமின் bபயன்கள் )

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

பாதாம் பருப்பு ஊட்டசத்து மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சேமிப்புகிடங்காக  இருக்கின்றன, அவை உகந்த ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட பாதாமின்  சில ஆரோக்கிய நன்மைகள் இவையாகும்:

  • மூளைக்கு:பாதாம் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நன்மைகள் என்று கூறபடுகிறது மூளைக்கு தான். மூளை செயல்பாடு மேம்படுத்துவதொடு அறிவாற்றல் மற்றும் நினைவக மேம்படுத்தி ; பார்கின்சன்ஸ் மற்றும் அல்சைமரின்  மற்றும் ஆபத்தை தடுக்கிறது.
  • எடை இழப்பிற்கு : பாதாம் தினமும் எடுதுகொல்வதனால் எடையை குறைக்கலாம் ,எடையின் சுற்றளவை குறைத்து பருமனை தடுக்கலாம் .மேலும் இது ஜீரண சக்தியை மேம்படுத்தி ,உடனடி ப்ரீபயோடிக் தன்மையால் வயிற்றின் ஆரோக்யத்தை மேம்படுதிகிறது
  • கொழுப்பிற்கு : பாதாம்கள் கொழுப்பு எல்டிஎல் எச்டிஎல்  (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) கொழுபின் அளவுகளை குறைத்து , ஒரு நல்ல வகை கொழுபான  எச்டிஎல் (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) அளவை அதிகரிக்க உதவுகிறது.
  • எலும்புகளுக்கு : படம் எடுதுகொள்வதனால் எலும்பு ஆரோக்கியம் எலும்பு வலிமையை மேம்படுத்த படுகிறது  நீரிழிவுக்கு : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதாம் நல்லது, ஏனெனில் அவர்களுக்கு உணவு சாப்பிட்ட  பிறகு சரியான கிளைசெமிக் கட்டுப்பாடு மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது . இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆக்சிடேடிவ்  அழுத்தத்தையும் அழர்ச் யையும் குறைக்க உதவுகிறது .
  • புற்றுநோய்க்கு : பாதாம் தொடர்ந்து எடுதுக்கொளுவதனால் மார்பக புற்றுநோய், ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களிலிருந்து காப்பாற்றுகிறது .

கொழுப்பை குறைக்க பாதம்கள் - Almonds reduce cholesterol in Tamil

பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு கொழுப்பு தேவைப்படுகிறது. இருப்பினும், இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன - குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) மற்றும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (எச்.டி.எல்). எச்.டி.எல் ஆரோக்கியமானதாக (நல்ல கொலஸ்ட்ரால்) கருதப்பட்டாலும், எல்டிஎல் இன் அதிகரிப்பு நேரடியாக இருதய நோய்களால் ஏற்படக்கூடும். கொழுப்பு அளவு அதிகரித்த 20 நோயாளிகளுக்கு பாதாம் கொடுத்து  ஒரு மருத்துவ ஆய்வு செய்தபொது , எல்.டி.எல் அளவை குறைத்து மொத்த கொழுப்பு (டி.சி.) அளவுகள் குறைந்தடு கண்டறியப்பட்டது.இதனால் நல்ல கொழுபின்  (hdl) அளவும் அதிகரித்தது இருந்தது

மற்றொரு ஆய்வில், பாதாம் அளவை அதிகரிப்பதுடன் உடலிலிருந்து எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) வெளியேற்றுவதர்க்கும் தூண்டுதலாக உள்ளது என்று தெரியவந்துள்ளது. பாதாம் கொழுப்பு-குறைப்பு தன்மைக்கு  பின்னால் இருக்கும்  சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், இந்த முடிவுகள் பாதாம் ஒரு சிறந்த ஹைபோகோளெஸ்டிரோலிமிக் (கொழுப்பை குறைக்கும்) மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளை குறைப்பதிளும்  உதவிகரமாக இருக்கும் என்று கூறுகின்றன.

(மேலும் படிக்க : (அதிக கொழுப்பிர்க்கான சிகிச்சை )

புற்றுநோயை தடுக்க பாதாம் - Almond prevents cancer in Tamil

பல்வேறு ஆய்வுகள், பாதாம் மற்றும் பிற கொட்டைகள்; ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தன்மையை கொண்டுள்ளது  என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இத்தை தொடர்ந்து எடுத்துகொண்டு வந்தால் புற்றுநோய்களால் ஏற்படும் மரணத்தை கூட தவிர்க்கலாம் . ஏனெனில் இது பாதாம் அண்டி ஆக்சிடென்ட்  மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது , இது புற்றுநோய் செல்களை வளர்ச்சி குறைத்து  பரவுவதை தடுக்க செய்கிறது. மேலும், பாதாமில் உள்ள ஆல்ஃபா-டோகோபரோல் வேதிபாதுகாப்பு  தன்மை கொண்ட சேர்மங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

எனினும், பாதாமின் வேதிபாதுகாப்பு  மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் .

மூளைக்கு பாதாமின் நன்மைகள் - Almonds benefits for brain in Tamil

நாம் வயதடையும் பொது , நமது மூளை தொடர்ச்சியான மாற்றங்களுக்குள்ளாகிறது .முதுமையை அடையும்  மூளையில்  அறிவாற்றல் மற்றும் நினைவக இழப்பு ஏற்படுகிறது. ஆராய்ச்சியின் படி, பாதாம் நினைவக இழப்பு தடுப்பது மட்டுமல்லாமல், பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நரம்பியல் அழற்சி நோய்களின் ஆபத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். பாதாம்பின்கள் பாலிபினால்கள், டோகோபிரல், வைட்டமின் b9 மற்றும் போன்ற நிறைவுறாதக் கொழுப்பு அமில சேர்மங்கள் உள்ளன. இந்த மூலகூறுகள் முதுமை தொடர்பான மூளை கோளாறுகளை தாமதப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது  

ஒரு முன்னுரை மருத்துவ ஆய்வின் படி பாதாம் எடுத்துகொள்வது நினைவிழப்பு நிகழ்வதை தடுக்கிறது பாதாமில் உள்ள அசிடைல்கொலின் என்றழைக்கப்படும் ஒரு இரசாயனம் நினைவக சக்தி அதிகரிக்க வழிவகுக்கிறது. மேலும், பாதாமில் உள்ள ஃபிளாவோனாய்டுகள் மூளையால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. இந்த ஃப்ளவாநாய்டுகள் நரம்பியல்பாதுகாப்பு தன்மை உடையவை

ஜீரணத்திற்கு பாதாம்கள் - Almonds for digestion in Tamil

ப்ரீபையோடிக்ஸ் கலவைகள் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டும். இந்த பாக்டீரியா குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது, மேலும் நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாத சில செரிமான நொதிகள் வழங்குகிறது. பாதாம் மற்றும் பாதாம் தோல் இரண்டிற்கும் ப்ரீபையோடிக்ஸ் தன்மை இருப்பதற்கு காரணம் அதிலுள்ள  உணவு நார் மற்றும் பிற உயிர் வளியேற்றக் கூறுகள், என்று ஆராய்ச்சி கூறுகிறது.

தொடர்ந்து பாதாம் எடுத்துகொள்ளும் 48 நபர்களிளுடைய மலத்தில் செய்யப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், பிபிடோபக்டேறியம் போன்ற நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது இந்த பாக்டீரியா மூலம் சுரக்கும் செரிமான நொதியின் செயல்பாட்டில் ஒரு மாற்றமும் ஏற்பட்டுள்ளது, இது ஒரு ப்ரீபையோடிக் தன்மையை விளைவிக்கிறது

நீரிழிவுக்கு பாதாம்கள் - Almonds for diabetes in Tamil

. உடலில் உள்ள இன்சுலின் முறையை பயன்படுத்த முடியாத நிலையில் சர்க்கரை அளவு அதிகரித்து 2 வகை நீரிழிவு உண்டாகுகிறது. பாதாம் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு விருப்பமான சிறந்த சிற்றுண்டியாக இருக்கலாம். 2 டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு பாதாம் தாக்கத்தை மதிப்பீடு செய்ய 24 வாரங்களுக்கு ஒரு ஆய்வு செய்யப்பட்டது. கிளைசெமிக் அளவில்  (குறைந்த இரத்த சர்க்கரை) குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு கண்டறியப்பட்டது. இருப்பினும், இன்சுலின் உணர்திறனைத் தூண்டுவதற்கு பதிலாக, கிளைசெமிக் கட்டுப்பாட்டு (இரத்த சர்க்கரை அளவுகளில்) மூலம் உடலில் உள்ள இன்சுலின் முறையான மேலாண்மை. உண்டாக்கி பாதாம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு கூறுகின்றன  

. 14 பெரியவர்களில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், பாதாம் சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைத்து, ஒரு நீண்ட காலத்திற்கான வயிறு நிரம்பிய ஒரு உணர்வை வழங்கியது. இதற்க்கு முன்னிலை காரணம் பாதாம் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஆகும். ஆயினும்கூட, பாதாம் பருப்பு நீரிழிவு மேம்பாட்டில்  சாதகமான சிகிச்சையளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

அழர்ச்சி எதிர்ப்பியாக பாதம்கள் - Almonds as an anti-inflammatory in Tamil

பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது  நிறைவுறாக் கொழுப்புஅமிலம்,அண்டி ஆக்சிடேண்டுக்கள் உணவுப் நாறுகள்  மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள்  இருப்பதன் காரணமாக இருக்கலாம் நுண்ணுயிர்களின் தொடர்ந்து இதி எடுத்துகொண்டால்  சில அழற்சி ஏற்படுத்தும் சைட்டோகின்களின் அளவுகளில் குறைத்து அதன் விளைவாக அழர்ச்சி குறைய உதவுகிறது , என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன,

ஆக்சிடடிவ் அழுத்தம் என்ற நிலை; தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களுக்கு (ஒற்றை ஆக்ஸிஜன்) மற்றும் அண்டி ஆக்சிடேண்டுகளுக்கும் இடையிலுள்ள சமநிலை பட்திப்பினால் உருவாகிறது. ஆக்சிடேண்டுகளுக்கும் இந்த ஃப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக செயல்பட்டு  உடலை பாதுகாக்குகிறது. ஆய்வின் படி, நீண்டகால ஆக்சிடேடிவ் அழுத்தம் வீக்கத்திற்கு வழிவகுக்கும், இதனால் நமது உடலில் பல நோய் பாதிப்பு ஏற்படலாம் .

2 டாம் வகை நீரிழிவு தொடர்புடைய வீக்கம் மற்றும் ஆக்சிடேடிவ் அழுத்தம் 12 வார காலத்திற்கு பாதாம் எடுத்துக்கொண்டதனால் குறைந்துள்ளதாக ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது

(மேலும் படிக்க: அழற்சி நோயின் அறிகுறிகள் )

ஆரோக்யமான எலும்புகளுக்கு பாதாம் - Almonds for healthy bones in Tamil

எலும்பின் உயிரணுக்கள், எலும்பு திசை திருப்பலுக்கு காரணமாக அமைந்திருக்கும் ஒரு வகை உயிரணு ஆகும், இதன் மூலம் எலும்பு திசுக்கள் உடைக்கப்படுகின்றன. பாதாம் எடுத்துகொள்வது அதிகரிகும்போது  எலும்பு வலிமையை அதிகரிக்கிறது மற்றும் எலும்பு சிதைவு தடுக்கபடுகிறது என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

14 பெரியவர்களில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, 60 கிராம் பாதாம் நுகர்வதனால் எலும்பு-அழிப்பு-உயிரணு உருவாவதைக் 20% மும், 15 சதவிகிதம் டார்ட்ரேட்-எதிர்க்கும் பாஸ்பேடாஸ் அமில (ஒரு எலும்பு முறிவு என்சைம்) செல்களின் எண்ணிக்கையை குறைத்தது என்பதை நிரூபித்ததுள்ளது. இந்த முடிவுகள், உணவில்  பாதாம் சேர்க்கப்படுவதனால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

Almonds for weight loss - Almonds for weight loss in Tamil

உடல் பருமன், உடலில் கொழுப்பு அதிகப்படியான குவிப்பு காரணமாக ஏற்படுகிறது. அதிக எடை கொண்ட 65 நபர்களில் ஒரு மருத்துவ ஆய்வு நடத்தியபோது பாதாமுடன் கூடிய ஒரு குறைந்த கலோரி உணவை எடுத்தபோது  இடுப்பு சுற்றளவு குறைந்து ,ஒரு குறிப்பிடத்தக்க எடை இழப்பு வழிவகுத்தது என்று நிரூபணம் செய்துள்ளது. எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) மற்றும் எச்.டீ.எல் (நல்ல கொலஸ்ட்ரால்) அதிகரிப்பு ஆகியவற்றில் கணிசமான குறைப்பு இருந்தது, இவை இரண்டும் உடல் எடையை பாதிக்கும் காரணிகள் ஆகும்.

தினமும் 50 கிராம் பாதாம் சாப்பிட்ட பருமனான 108 பெண்களில் நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வில், பாதாம் உட்கொள்ளல், எடை, இடுப்பு சுற்றளவு மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் ஆகியவற்றை குறைக்க வழிவகுத்தது தெரிய வந்துள்ளது .

( மேலும் படிக்க : எடை இழப்புக்கான உணவு பட்டியல் )

  • செரிமான கோளாறு
    அதிகமாக பாதாம் சாப்பிட்டால், அது மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்று பிரச்சனை உண்டாக்கலாம்  ஏனெனில் பாதாபியில் நிறைய நார்சத்து  உள்ளது.
  • வைட்டமின் அதிக அளவு 
    100 கிராம் (அரை கப்) பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் e  இருக்கும் நமது தினசரி வைட்டமின் e  தேவை, 15 மில்லி கிராம் ஆகும் . அதிகமாக பாதாம்களை எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு, தலைச்சுற்று மற்றும் பார்வை மாற்றங்களை உருவாக்கலாம்.
  • சிறுநீரக கற்கள்
     பாதாமில் சிறுநீரக கற்கள் ஏற்படுத்தக்கூடிய ஆக்ஸலேட் உள்ளன. ஆக்ஸலேட் உடலை கால்சியம் உட்கொள்வதைத் தடுக்கிறது மற்றும் அதற்கு பதிலாக சிறுநீரகங்களில் ஒரு கால்சியம் படிவத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் சிறுநீரக கற்களால் பாதித்திருந்தால், பாதாம் உட்கொள்ளுதல் குறைக்க வேண்டும்  அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

அனைத்து உடல் நன்மைகளையும் மனதில் வைத்து கொண்டால்  ஒருவர் அவரது உணவில் பாதாம் சேர்க்க கூடத்து என்று கூறுவதற்கு ஒரு காரணம் கூட இல்லை. நாள் ஒன்றிற்கு சில பாதாம்களால் உங்கள் உடலிற்கு  தேவையான அனைத்து கனிமங்கள் மற்றும் கலோரிகளை கொடுக்க முடியும். இது உங்கள் எலும்புகளை பாதுகாக்க உதவுகிறது, இதய நோய்கள் தடுக்கிறது மற்றும் ஒரு சிறந்த அழற்சி எதிர்பியாகவும்  அண்டி அக்சிடேன்ட்டாகவும் உள்ளது. இது நீரிழிவு கட்டுப்படுத்த உதவும்.  பாதாம் ஆரோக்கியமான தின்பண்டங்களின் சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு சில பாதாம் பருப்புகள் எடுத்துகொல்வதனால் பசி தனிந்து , ஒசில சமயம் வரை வயிறு நிறைந்ததாக உணரவைக்கும். ஆனால், எதிலும் ஒரு அளவுகோல் இருக்கவேண்டும் அதிகப்படியான பாதாம் உட்செலுத்துதல் வயிற்றுத் பிரச்சனைகள்  மற்றும் சிறுநீரகக் கற்கள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.


Medicines / Products that contain Almond

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Full Report (All Nutrients): 45279270, RAW ALMONDS. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Bento AP, Cominetti C, Simões Filho A, Naves MM. Baru almond improves lipid profile in mildly hypercholesterolemic subjects: a randomized, controlled, crossover study. Nutr Metab Cardiovasc Dis. 2014 Dec;24(12):1330-6. PMID: 25149894
  3. Berryman CE, Fleming JA, Kris-Etherton PM. Inclusion of Almonds in a Cholesterol-Lowering Diet Improves Plasma HDL Subspecies and Cholesterol Efflux to Serum in Normal-Weight Individuals with Elevated LDL Cholesterol. J Nutr. 2017 Aug;147(8):1517-1523. PMID: 28615375
  4. Liu Z. Prebiotic effects of almonds and almond skins on intestinal microbiota in healthy adult humans. Anaerobe. 2014 Apr;26:1-6. PMID: 24315808
  5. Seema Gulati, Anoop Misra,Metab Syndr Relat Disord. 2017 Mar 1; 15(2): 98–105. PMID: 28051354 Ravindra M. Pandey. Effect of Almond Supplementation on Glycemia and Cardiovascular Risk Factors in Asian Indians in North India with Type 2 Diabetes Mellitus: A 24–Week Study.
  6. Mori AM, Considine RV, Mattes RD. Acute and second-meal effects of almond form in impaired glucose tolerant adults: a randomized crossover trial. Nutr Metab (Lond). 2011 Jan 28;8(1):6. PMID: 21276226
  7. Salas-Salvadó J, Casas-Agustench P, Murphy MM, López-Uriarte P, Bulló M. The effect of nuts on inflammation. Asia Pac J Clin Nutr. 2008;17 Suppl 1:333-6. PMID: 18296371
  8. Simone Reuter, Subash C. Gupta, Madan M. Chaturvedi, Bharat B. Aggarwal. Oxidative stress, inflammation, and cancer: How are they linked? Free Radic Biol Med. 2010 Dec 1; 49(11): 1603–1616. PMID: 20840865
  9. Liu JF et al. The effect of almonds on inflammation and oxidative stress in Chinese patients with type 2 diabetes mellitus: a randomized crossover controlled feeding trial. Eur J Nutr. 2013 Apr;52(3):927-35. PMID: 22722891
  10. Batool Z et al. Repeated administration of almonds increases brain acetylcholine levels and enhances memory function in healthy rats while attenuates memory deficits in animal model of amnesia. Brain Res Bull. 2016 Jan;120:63-74. PMID: 26548495
  11. Wien MA, Sabaté JM, Iklé DN, Cole SE, Kandeel FR. Almonds vs complex carbohydrates in a weight reduction program. . Int J Obes Relat Metab Disord. 2003 Nov;27(11):1365-72. PMID: 14574348
  12. Abazarfard Z, Salehi M, Keshavarzi S. The effect of almonds on anthropometric measurements and lipid profile in overweight and obese females in a weight reduction program: A randomized controlled clinical trial. J Res Med Sci. 2014 May;19(5):457-64. PMID: 25097630
  13. Platt ID et al. Postprandial effects of almond consumption on human osteoclast precursors--an ex vivo study. Metabolism. 2011 Jul;60(7):923-9. PMID: 20947104
Read on app