பேசில் அல்லது துளசி "மூலிகைகளின் ராணி" அல்லது "வாழ்க்கைகான அமுதம்" என்று அழைக்கப்படுகிறது. அதன் மருத்துவ, சமையல் மற்றும் ஆன்மீக பண்புகள் காரணமாக மற்ற மூலிகைகள் மத்தியில் ஒரு ஒப்பற்ற நிலையில் உள்ளது துளசி. துளசியில் மூன்று வெவ்வேறு வகைகள் உள்ளன. பச்சை இலைகள் கொண்டிருக்கும் ராம துளசி, ஊதா இலைகள் கொண்ட கிருஷ்ணா துளசி மற்றும் லேசான பச்சை நிற இலைகள் கொண்ட அதிகப்படியாக காணப்படும் வன துளசி ஆகியவை துளசியின் மூன்று வகைகள் ஆகும்.  

வேத காலத்தில் இருந்து இந்தியாவில் துளசி தாவரங்கள் வளர்ந்து வருகின்றன, மேலும் இவை இந்துக்களால் புனிதமானவையாக கருதப்படுகின்றன. அவை பொதுவாக கோயில்களுக்கு நடுவே வளர்க்கப்படுகிறது, மேலும் பெரும்பாலான இந்திய வீடுகளில் காணப்படுகின்றன. துளசி தாவரங்களின் அளவு மற்றும் நிறம் புவியியல் பரப்பு, மழை பொழிவு மற்றும் தாவரத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும்.

இது சமையலில் இருந்து மருந்துகள் வரை ஒரு பரவலான பயன்பாடுகளை கொண்டுள்ளன. சாலட்கள் மற்றும் சாஸ்கள் உடன் உண்ணும் போது துளசி அவற்றின் நாசியை துழைக்கும் வாசனை மற்றும் கசப்பான சுவையினால் நாக்கின் சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்க கூடியது ஆகும். புராதன காலங்களில், துளசி தூய்மைக்கு அடையாளமாக கருதப்பட்டது. துளசி செடிக்கு அருகே சென்று அதன் வாசனையை நுகர்வது கூட நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

அதன் ஆன்மீகத் தன்மையின் காரணமாக, இது புனித துளசி என்றும் அழைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில், துளசி உடல் ஆரோக்கிய நலன்களை பரந்த அளவில் வழங்குவதாக அறியப்படுகிறது. துளசி நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மூட்டுவலி எதிர்ப்பு, கீமோ-தடுப்பு, ஹெபடோபுரோடக்டிவ் (கல்லீரைப் பாதுகாக்கிறது), நீரிழிவு எதிர்ப்பு , மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

துளசி பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

  • தாவரவியல் பெயர்: ஒசிமம் சன்க்டம்
  • குடும்பம்: லமியாசீஸ்
  • பொது பெயர்: तुलसी துளசி
  • சமஸ்கிருத பெயர்: துளசி
  • மற்ற பெயர்கள்: புனித துளசி, ராம துளசி, ஷியாம் துளசி
  • தோற்றம் மற்றும் புவியியல் பரப்பு: துளசி இந்தியாவிற்கு சொந்தமானது இருப்பினும் மத்திய ஆபிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை வெப்ப மண்டலப் பகுதிகளில் இது காணப்படுகிறது.
  • சுவாரசியமான தகவல்: சுற்றுச்சூழல் வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க தாஜ் மஹாலை சுற்றி ஒரு மில்லியன் துளசி செடிகளை விதைத்தனர்.
  1. துளசியின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Basil nutrition facts in Tamil
  2. துளசியின் சுகாதார நலன்கள் - Basil health benefits in Tamil
  3. துளசியின் பக்க விளைவுகள் - Basil side effects
  4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

துளசி புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், உணவு நார்ச்சத்து, ஃபிளவனாய்டுகள் மற்றும் பல கரிம சேர்மங்களின் நல்ல ஆதாரமாக உள்ளது. துளசிவில் இருக்கும் ஃப்ளாவனாய்டுகள் முகப்பருஆஸ்துமா, அலற்சி மற்றும் சுவாச பிரச்சினைகள் போன்றவற்றின் சிகிச்சைக்கு உதவலாம். 

யுஎஸ்டிஏ தேசிய ஊட்டச்சத்து தரவுத்தளத்தின்படி, 100 கிராம் துளசி பின்வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது:

ஊட்டக்கூறு

100 கிராமுக்கான மதிப்பு

நீர்

92.06 கிராம்

ஆற்றல்

23 கி.கே.

புரதம்

3.15 கிராம்

கொழுப்பு

0.64 கிராம்

கார்போஹைட்ரேட்

2.65 கிராம்

நார்ச்சத்து

1.6 கிராம்

சர்க்கரைகள்

0.30 கிராம்

கனிமங்கள்

 

கால்சியம்

177 மிகி

இரும்பு

3.17 மி.கி

மக்னீசியம்

64 மிகி

பாஸ்பரஸ்

56 மி.கி

பொட்டாசியம்

295 மிகி

சோடியம்

4 மி.கி

துத்தநாகம்

0.81 மிகி

வைட்டமின்கள்

 

வைட்டமின் ஏ

264 μg

வைட்டமின் பி1

0.034 மிகி

வைட்டமின் பி1

0.076 மிகி

வைட்டமின் பி3

0.902 மிகி

வைட்டமின் பி6

0.155 மிகி

வைட்டமின் பி9

68 μg

விட்டமின் சி

18 மி.கி

வைட்டமின் ஈ

0.80 மிகி

வைட்டமின் கே

414.8 μg

கொழுப்புகள் / கொழுப்பு அமிலம்

 

சாசுரேட்டேட்

0.041 கிராம்

மோனோஅன்சாசுரேட்டேட்

0.088 கிராம்

பாலிஅன்சாசுரேட்டேட்

0.389 கிராம்

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW
  • ஒரு ஆக்ஸிஜனேற்றியாக: துளசியில் உயிரியக்க சேர்மங்கள் இருப்பதால் அது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக உள்ளது. எனவே இது நம் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாக திகழ்கிறது. தோல் மற்றும் முடியின் வடிவத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில் அதிகப்படியான விஷத்தன்மை அழுத்தம் மற்றும் சேதத்தில் இருந்து இது உடலை பாதுகாக்கிறது. கூடுதலாக, பல தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் தடிப்பு அழற்சி, தொழுநோய் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்றவற்றிற்கு எதிராக இது பயனுள்ளதாகும். ஒரு ஆண்டிமைக்ரோபியல் ஏஜெண்டாக, இது தோல் காயங்கள் மற்றும் பூச்சி கடித்தலின் மேலாண்மைக்கு உதவுகிறது. முடியை பொருத்த வரை, துளசியின் பயன்பாடு முடி நரைப்பதை தாமதமாக்குவது மற்றும் முடி உதிர்வை குறைப்பது மட்டும் இல்லாமல், மேலும் வழுக்கை மற்றும் அலோபியா ஆகியவற்றையும் தாமதமாக்குகிறது.
  • வாய்வழி ஆரோக்கியத்திற்காக: துளசி பல் சொத்தை, பல்வலி மற்றும் பற்குழிகள் ஆகியவற்றின் மேலாண்மைக்கு உதவுகிறது.
  • வயிற்றுக்காக: செரிமானத்தை செயல்முறைப்படுத்துவதன் மூலம் மலச்சிக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் துளசி உதவுகிறது. துளசி சாப்பிடுவது பசியின்மையை அதிகரிக்க உதவுகிறது.
  • மன அழுத்தம்: துளசி உடல், உளவியல், வேதியியல் மற்றும் வளர்சிதை மாற்ற மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் சிறந்தது.
  • கண்கள் மற்றும் காதுகளுக்கு: கண்களுக்கான சொட்டு மருந்து வடிவில் துளசி இலைகளின் பயன்பாடு கிளௌகோமா, கண்புரை மற்றும் வெண்படலம் போன்ற வலிமையான கண் நிலைமைகளைத் தடுக்க உதவுகிறது. துளசி எண்ணெய் நடு காதுகளில் தொற்று மற்றும் வலி நிவாரணம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
  • புற்றுநோய்க்கு எதிராக: பல ஆய்வுகள் துளசியின் புற்றுநோய் எதிர்ப்பு  திறனை ஆராய்ந்தன. மேலும் அதில் வயிற்று புற்றுநோய் மேலாண்மைக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் மற்றும் கட்டிகளுக்கான துளசி - Basil for cancer and tumours

புற்று நோய் என்பது உடல் செல்களில் அசாதாரண வளர்ச்சியை குறிக்கிறது. புற்று நோய் சிகிச்சையின் தற்போதைய வரிசை பல பக்க விளைவுகளுடன் தொடர்புபட்டிருப்பதால், புற்று நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்கான இயற்கை மாற்றங்களை கண்டறிய உலகளவில் பல விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த போக்கில், பல ஆய்வுகள் சாத்தியமான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் துளசியில் இருப்பதாக காட்டுகிறது. துளசி மற்றும் வேம்பு இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாறினை பயன்படுத்தி ஒரு முன் மருத்துவ ஆய்வு செய்யப்பட்டது. அந்த  ஆய்வு துளசியில் இருந்து தயாரிக்கப்பட்ட சாறு வயிற்று புற்றுநோய் தடுப்புக்கு பயனுள்ளது என்பதை தெரிவிக்கிறது. அதில் செல்களின் அசாதாரண வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருந்தது தெரிய வந்தது. மற்றொரு ஆராய்ச்சியில், துளசியில் புற்றுநோய் கட்டிகளை எதிர்க்கும் அர்சோலிக் மற்றும் ஒலீஆனோலிக் அமிலங்கள் உள்ளன என்பது காட்டப்பட்டது.

கதிர்வீச்சின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து உடலின் ஆரோக்கியமான உயிரணுக்களை பாதுகாக்கக்கூடிய கதிர் வீச்சு பாதுகாப்பு திறனை துளசி கொண்டுள்ளது. கூடுதலாக, துளசியின் அழற்சி எதிர்ப்பு தன்மை வீக்கத்தைத் தடுக்கிறது, இது அதிக அளவில் புற்றுநோய் எதிர்புடன் தொடர்புடையதாக இருக்கிறது.

துளசியின் ஆக்ஸிஜனேற்ற கொள்ளளவு - Basil antioxidant capacity

இலவச ராடிகல்கள் என்பது செல் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையற்ற மூலக்கூறுகள். அவை புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய்கள் போன்ற பல நோய்களில் விளைவைக் கொண்டுள்ளன. இலவச ராடிகல்களின் காரணமாக ஏற்படும் சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் இயற்கை பொருட்கள் ஆக்ஸிஜனேற்றிகள் ஆகும். எனவே, இலவச ராடிகல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுக்கும் இடையில் ஒரு சமநிலையை பராமரிக்க வேண்டியது அவசியம். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் ஒரு ஏற்றத்தாழ்வு, விஷத்தன்மை அழுத்தம் என்று கூறப்படுகிறது. பல ஆய்வுகள், துளசியில் இருக்கும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகளின் காரணமாக உடலை விஷத்தன்மை அழுத்த சேதத்தில் இருந்து பாதுகாக்கும் திறன் துளசியில் உள்ளது என்று காட்டுகின்றன.

ஒரு விலங்கு ஆய்வு ஒரு அடிப்படை மூலப்பொருளாக துளசியை கொண்ட ஒரு மூலிகை தூள் குறிப்பிடத்தக்க ஆக்ஸிஜனேற்ற பண்புகளை வெளிப்படுத்துகிறது என்று குறிக்கிறது. மற்றொரு முன் மருத்துவ ஆய்வு, காடலாஸ் மற்றும் குளுதாதயோன் டிரான்ஸ்ஃபெராஸ் ஆகியவற்றில் இருக்கும் அதிகமான ஆக்ஸிஜனேற்றிகளை போலவே துளசியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறிலும் அதிகமான ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதை காட்டியது.

(மேலும் வாசிக்க: ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் இருக்கும் உணவு ஆதாரங்கள்)

முடிக்கு துளசியின் நன்மைகள் - Basil benefits for hair

நமக்கு வயதாவதால், நாம் தோல் பிரச்சினைகளை மட்டும் எதிர்கொள்வது இல்லை, மேலும் முடியிலும் பிரச்சினைகள் தோன்றுகின்றன. முடி நரைத்தல், கூந்தல் இழப்பு, முடியின் அடர்த்தி குறைதல் மற்றும் சொட்டை ஆகியவை வயதானவர்களுக்கு வரும் சில  பொதுவான பிரச்சினைகள் ஆகும். இந்த முடி பிரச்சினைகள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் சில மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, பரம்பரை பிரச்சினைகள் மற்றும் சில மருந்துகள் பயன்பாடு ஆகியவை அடங்கும். துளசி ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு களஞ்சியமாக உள்ளது, இதனால் துளசி முடி நரைத்தலை குறைப்பதற்கும், மாசு மற்றும் யு.வி கதிர்களில் இருந்து முடியை பாதுகாக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்ட்ரோஜெனிக் அலோபெசியா என்பது அதிகப்படியான முடி உதிர்வு மற்றும்  வழுக்கை என  வகைப்படுத்தப்படும் ஒரு நிலையில் உள்ளது. இந்த நிலையை தடுக்கும் துளசி துளசியின் திறனை ஒரு ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. அந்த ஆராய்ச்சி படி, முடியின் வேரில் செய்ய்யப்படும் துளசி அடிப்படையிலான சிகிச்சை முடி உதிர்வுக்கு காரணமான என்சைமின் செயல்பாட்டை தடுக்கிறது. முடியின் வேரில் செய்ய்யப்படும் துளசி அடிப்படையிலான சிகிச்சை கூட முடியை மீண்டும் வளர செய்ய உதவியது. மேற்கொண்டு செய்யப்பட்ட ஆய்வு, முடியின் வேரில் செய்ய்யப்படும் துளசி அடிப்படையிலான சிகிச்சை ஆரம்பித்த இரண்டு மாத காலத்திற்கு பிறகு, முடி இழப்பு 31% குறைந்துவிட்டது என்று மேலும் தெரிவித்தது.

சருமத்திற்கு துளசியின் நன்மைகள் - Basil benefits for skin

துளசி தோலுக்கான ஒரு ஆசீர்வாதம் ஆகும். பாரம்பரிய மருந்து துளசியின் பல தோலுக்கான சிகிச்சைமுறை நன்மைகளுக்கு உறுதி அளிக்கிறது. பல ஆய்வுகள்  எக்ஸிமாசொரியாசிஸ்தொழுநோய் மற்றும் ஸ்டேஃப் நோய்த்தொற்றுகள் போன்ற தோல் நோய்களில் இருந்து உங்கள் தோலை பாதுகாக்கும் துளசியின் திறனை பற்றி குறிப்பிடுகிறது.

துளசி சாறு பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் கொல்லி பண்புகளுக்காக அறியப்படுகிறது. எனவே, இது திறந்த காயங்களுக்கு ஒரு பெரிய ஆண்டிசெப்டிகாக செயல்படுகிறது. ஆயுர்வேதத்தில், துளசி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் பூச்சிக் கடிப்பதால் ஏற்படும் எரிச்சலை தடுக்க தோல் மீது பயன்படுத்தப்படுகிறது. துளசி துளையில் அர்சோலிக் அமிலம் இருப்பதால், தோல் சுருக்கங்களைத் தடுக்கலாம், தோலை மேலும் மீள் தன்மை உடையதாக மாற்றலாம், காயங்களைக் குணப்படுத்தலாம், மேலும் தோல் புற்றுநோயை தடுக்க உதவலாம்.

மற்றொரு ஆய்வு துளசி இலைகள் தோலில் நோய்த்தாக்குதல் ஏற்படுத்தும் முகவரான  எஸ். ஆரீயஸ்  க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைத்தது. துளசியில் இருக்கும் கம்ஃபோர், யூகலிப்டால், யூஜினோல், மற்றும் β- கார்ரோஃபிலீன் போன்ற கூறுகள் துளசியின் ஆண்டிமைக்ரோபியல் செயல்பாட்டிற்கு காரணமாக உள்ளது.

பற்கள் மற்றும் ஈறுகளுக்கு துளசியின் பயன்கள் - Basil benefits for teeth and gums

துளசியின் சில இலைகளை மெல்லுவது பல் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. துளசி  ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மோடன்ஸ் என்று அழைக்கப்படும் பல் சொத்தையை ஏற்படுகிற ஒரு வகை பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படுகிறது. கார்ராக்ரோல், டெட்ஃபீன் மற்றும் செஸ்குட்டர்பென் பி-கேரியோபினைன் போன்ற துளசி செடியின் பண்புகள் துளசியை ஒரு பாக்டீரிய எதிர்ப்பு முகவராக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

துளசியில் இருக்கும் யூஜினோலின் அதை ஒரு வலி நிவாரணியாக (அனல்கீசிக்) இருக்க செய்கிறது. இதனால் துளசி பல் வலியை  குறைக்க உதவுகிறது. சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட துளசி இலைகளை பொடித்து அதை பல் பொடியாக பயன்படுத்தலாம்.

பற்குழிகள் ஒரு பொதுவான ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஈறு பிரச்சனை ஆகும். துளசி பொடியை கொண்டு ஈறுகளை துலக்குதல் இந்த நோயை தடுக்க உதவும்.

இரைப்பைக் கோளாறுகளுக்கான துளசி - Basil for gastrointestinal disorders

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மலச்சிக்கல் மற்றும் ஆசன வாய் பிளவுகள் போன்ற நிலைகள் இரைப்பைக் கோளாறுகளில் அடங்கும். இந்த நிலைமைகளில் சில நீண்ட காலமாகவும் இருக்கலாம் மேலும் அவை  பெருங்குடல் புற்றுநோய் போன்ற சிக்கலான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆராய்சிகள் இரைப்பைக் கோளாறுககளை குணப்படுத்துவதற்கான துளசி இலைகளின் திறனைக் குறிப்பிட்டு காட்டுகிறது. துளசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வடி நீர் வேகமாக நோய்களை குணப்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது. துளசி உங்கள் பசியை அதிகரிக்க உதவுகிறது. துளசி  மலச்சிக்கலை தடுக்க உதவும் மலமிளமிக்க பண்புகள் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, மற்றும் மலம் கழிக்கும் இயக்கங்கள் தொடர்ந்து சீராக வைக்கவும் உதவுகிறது.

துளசி இலை சாறு வயிற்றுக்கடுப்பு மற்றும் செரிமான மண்டலத்தின் அலற்சி (செரிமானமின்மை) ஆகியவற்றை தடுக்க உதவும். ஒரு முன் மருத்துவ ஆய்வானது, அசிடிட்டி மற்றும் சிறுநீரக புண்கள் ஆகியவற்றை துளசி சாப்பிடுவதால் குறைக்கப்பட்டது என தெரிவிக்கிறது.

மன அழுத்தத்திற்கு துளசி - Basil for stress

துளசி ஒரு சக்திவாய்ந்த மன அழுத்த எதிர்ப்பு முகவர் என்று கருதப்படுகிறது. பல ஆய்வுகள் துளசி உடல், உளவியல், வேதியியல் மற்றும் வளர்சிதை மாற்ற அழுத்தம் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகிறது என தெரிவிக்கின்றன.

துளசிவின் மன அழுத்த எதிர்ப்பு விளைவுகளை மதிப்பிடுவதற்கான ஒரு முன் மருத்துவ ஆய்வு, உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிப்பதைத் தடுப்பதில் துளசி சிறந்தது என்பதைக் காட்டுகிறது. மேலும் அந்த ஆராய்ச்சி துளசியில் இருக்கும் அர்சோலிக் அமிலம் அதன் மன அழுத்த எதிர்ப்பு விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியது.

(மேலும் வாசிக்க: மன அழுத்த சிகிச்சை)

கண்களுக்கு துளசியின் நன்மைகள் - Basil benefits for eyes

மிகவும் முக்கியமான உணர்ச்சி உறுப்புகளில் கண்கள் ஒன்றாகும். இருப்பினும், நமக்கு வயதாக ஆக, நம் பார்வை பலவீனமாகிறது மற்றும் கண் நோய்களை பெறுவதற்கான நிகழ்தகவு கூர்மையாக அதிகரிக்கிறது. மிகவும் பொதுவான கண் நோய்களில்  மகுலர் டிஜெனரேஷன், கண்புரை, மற்றும் கிளௌகோமா (கண் அழுத்தத்தை கட்டமைத்தல்) போன்ற சில வயது தொடர்பானவை.

ஆயுர்வேதம் எப்போதுமே கண்களுக்கான மருந்துகளை தயாரிப்பதில் மிகவும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக துளசியை பயன்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் படி, துளசி இலை சாறு, கண்களுகான சொட்டு மருந்து வடிவில் பயன்படுத்தும் போது, பசும்படலம்கண்புரை மற்றும் வெண்படலம் போன்ற வலி மிகுந்த கண் நோய்களைத் தடுக்க உதவும்.

காதுகளுக்கு துளசியின் நன்மைகள் - Basil benefits for ears

காது வலி, காதுகளில் காயம் அல்லது காதுகளில் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படும். காது வலி மற்றும் தொற்றுநோயைக் குறைப்பதில் துளசியை திறம்பட பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. துளசி இலைகள் மற்றும் புதிதாக தயாரித்த பூண்டு சாறு ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட துளசி எண்ணெய் காதுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.

நடு காதில், ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளுயன்ஸா என்ற ஒரு பாக்டீரியா தொற்றால் ஏற்படும் ஒரு கடுமையான நிலை ஓடிடிஸ் மீடியா ஆகும். ஒரு முன் மருத்துவ ஆய்வு  ஓடிடிஸ் மீடியா வுக்கு எதிரான துளசி எண்ணெயின் ஆண்டிமைக்ரோபைல் செயல்பாட்டை அணுகுவதற்காக செய்யப்பட்டது. காது கால்வாயில் விடப்படும் துளசி எண்ணெயானது நோய் தொற்றுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்று அந்த ஆராய்ச்சி தெரிவித்தது.

  • கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவுகளில் துளசிவைப் பயன்படுத்துவது தாய்க்கும் குழந்தைக்கும் நீண்ட கால சிக்கல்களை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்களில் கருப்பை சுருக்கங்களைத் தூண்டுவதற்கான சாத்தியம் துலசியில் உள்ளது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் துளசியை சாப்பிட ஆரம்பிக்கும் முன் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • உடற்கூறியல் ஆய்வுகள் துளசி உடலில் கருவுறுதல் அளவை குறைக்கிறது என்று கூறியது. கருவுற முயற்சிக்கும் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் துளசிவைத் தவிர்க்க வேண்டும். துளசி இலைகளின் வழக்கமான நுகர்வு, ஆண்களில் விந்தணு எண்ணிக்கையை குறைப்பதைக் கண்டறியப்பட்டுள்ளதால், மனிதர்களில் கருவுறுதல் அளவுகளை பாதிக்கலாம்.
  • யூஜெனோல் என்பது துளசியில் இருக்கும் ஒரு சக்திவாய்ந்த கலவை ஆகும். இதன் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி பண்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வாறாயினும், யூஜினோலின் அதிகப்படியான நுகர்வு, வாய் மற்றும் தொண்டை வீக்கத்திற்கு வழிவகுக்கலாம், அது மட்டும் இன்றி குமட்டல், விரைவான இதய துடிப்பு, வலிப்பு மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹425  ₹850  50% OFF
BUY NOW

வாழ்வின் அமுதமான துளசி, பல ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. கண்கள், காதுகள் மற்றும் பற்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், இது ஒரு சாத்தியமான புற்றுநோய் எதிர்ப்பு முகவர் ஆகும்.  இது பாக்டீரியல் எதிர்ப்பு , மைக்ரோபியல் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு  குணங்களை வெளிப்படுத்துகிறது மற்றும் இது ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்து காணப்படுகிறது. எனினும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்கள் துளசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை குறைப்பதாக அறியப்படுகிறது. எனவே, மிதமான அளவில் மட்டுமே துளசியை உடல் நலத்திற்கு பயன் படுத்துவது முக்கியம்.


Medicines / Products that contain Tulsi

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 02044, Basil, fresh. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Yuvaraj Ponnusam et al. Antioxidant Activity of The Ancient Herb, Holy Basil in CCl4-Induced Liver Injury in Rats. Ayurvedic. 2015 Nov; 2(2): 34–38. PMID: 26925464
  3. Eshrat Halim M. A. Hussain, Kaiser Jamil, Mala Rao. Hypoglycaemic, hypolipidemic and antioxidant properties of tulsi (Ocimum sanctum linn) on streptozotocin induced diabetes in rats. Indian J Clin Biochem. 2001 Jul; 16(2): 190–194. PMID: 23105316
  4. Marc Maurice Cohen. Tulsi - Ocimum sanctum: A herb for all reasons. J Ayurveda Integr Med. 2014 Oct-Dec; 5(4): 251–259. PMID: 25624701
  5. Manikandan P, Vidjaya Letchoumy P, Prathiba D, Nagini S. Combinatorial chemopreventive effect of Azadirachta indica and Ocimum sanctum on oxidant-antioxidant status, cell proliferation, apoptosis and angiogenesis in a rat forestomach carcinogenesis model.. Singapore Med J. 2008 Oct;49(10):814-22. PMID: 18946617
  6. Seth Rakoff-Nahoum. Why Cancer and Inflammation? Yale J Biol Med. 2006 Dec; 79(3-4): 123–130. PMID: 17940622
  7. Hanaa A. Yamani et al. Antimicrobial Activity of Tulsi (Ocimum tenuiflorum) Essential Oil and Their Major Constituents against Three Species of Bacteria. Front Microbiol. 2016; 7: 681. PMID: 27242708
  8. Fernández E et al. Efficacy of antioxidants in human hair. J Photochem Photobiol B. 2012 Dec 5;117:146-56. PMID: 23123594
  9. Kristinsson KG et al. Effective treatment of experimental acute otitis media by application of volatile fluids into the ear canal. J Infect Dis. 2005 Jun 1;191(11):1876-80. Epub 2005 Apr 29. PMID: 15871121
  10. Marc Maurice Cohen. Tulsi - Ocimum sanctum: A herb for all reasons. J Ayurveda Integr Med. 2014 Oct-Dec; 5(4): 251–259. PMID: 25624701
  11. Hojjat Rouhi-Boroujeni et al. Use of lipid-lowering medicinal herbs during pregnancy: A systematic review on safety and dosage. ARYA Atheroscler. 2017 May; 13(3): 135–155. PMID: 29147122
Read on app