சோய்பீன் அல்லது சோயாபீன் என்பது, பட்டாணி குடும்பத்தை சேர்ந்த ஒரு உண்ணத்தகுந்த விதை ஆகும். அவை, இந்த விதைகளைக் கொண்டிருக்கும் சிறிய காய்களை உடைய சோயாபீன் செடியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த  விதைகள் வடிவத்தில், கோள வடிவத்திலும், மற்றும் நிறத்தில், அவை புதிதாக இருக்கும் பொழுது பச்சை நிறத்திலும், மற்றும் உலரும் பொழுது மஞ்சளில் இருந்து பழுப்பு நிறம் எனவும் வேறுபடுகிறது. 

சோயாபீன்கள், முதலில் தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. பிறகு அது, மெதுவாக ஜப்பான் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்குப் பரவியது. தற்போது, சோயாபீன் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், உலகில் சோயாபீன் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலாவதாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில், அர்ஜென்டினா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில், சோயாபீனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களாக மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.  

சோயாபீன்கள், சோயா பால் மற்றும் டோஃபு போன்ற, பல்வேறு சோயா-அடிப்படையிலான உணவுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அது, பல்வேறு இறைச்சி வகைகள் மற்றும் பால் பொருட்களுக்கு, ஒரு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆசிய நாடுகளில், சோயா குழம்பு, சோயா மொச்சை, புளிக்க வைக்கப்பட்ட சோயா கூழ், மற்றும் மிஸோ போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளின் முக்கிய அங்கமாக சோயா பயன்படுத்தப்படுகிறது. சோயாபீன்களை, சோயாபின் எண்ணெய் எடுப்பதற்கும் கூடப் பயன்படுத்த இயலும். ஒருமுறை சோயாபீன் எண்ணெய் எடுக்கப்பட்ட பிறகு, மீதமுள்ளவை, சோயாபீன் மாவு என்று அழைக்கப்படுகின்றன. அவை, அதிக அளவு புரதச்சத்து நிறைந்தவை மற்றும் சோயா புரதம் தயாரிக்கவோ அல்லது ஒரு கால்நடை உணவாகவோ பயன்படுத்தப்படுகின்றன.

சோயாபீன்கள், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை, அதிக அளவில் கொண்டிருக்கின்றன. அவை, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உடல் எடையைக் குறைக்க, மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவக் கூடியவை ஆகும். கூடவே சோயாபீன்கள், உறக்க குறைபாடுகளைத் தடுக்க, மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சோயாபீன்களை பச்சையாக உண்பது நச்சுத்தன்மை அளிக்கக் கூடியதாகும். எனவே சாப்பிடும் முன்பாக, அவை முறையாக சமைக்கப்பட வேண்டும்.

சோயாபீன்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்

 • தாவரவியல் பெயர்கிளைசின் மேக்ஸ்
 • குடும்பம்: பஃபாசியயி
 • பொதுவான பெயர்கள்: சோயாபீன், சோயா
 • சமஸ்கிருதப் பெயர்:  (சோயாமாஷா)
 • பயன்படும் பாகங்கள்: சோயாபீன்களின் மேல் தோல் உண்ணத்தகுந்தது அல்ல, எனவே, உள்ளே இருக்கும் பீன்களை எடுப்பதற்காக, அவை உரிக்கப்பட்டு விடுகின்றன
 • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: சோயாபீன், இந்தியாவில் விரைவாக வளர்கின்ற பயிர்களில் ஒன்று ஆகும். அது ஒரு கரிஃப் பயிர் போன்று வளர்க்கப்படுகிறது. போபால், இந்தியாவின் மிகப் பெரிய சோயாபீன் உற்பத்தியாளராக இருக்கிறது
 • சுவராசியமான தகவல்: உள்நாட்டுப் போரின் போது, காஃபி கொட்டைகள் கிடைப்பது அரிதாக இருந்ததால், அவற்றுக்குப் பதிலாக மக்கள் சோயாபீன்களைப் பயன்படுத்தினர்
 1. சோயாபீன் ஊட்டச்சத்து விவரங்கள் - Soybean nutrition facts in Tamil
 2. சோயாபீனின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Soybean health benefits in Tamil
 3. சோயாபீன்களின் பக்க விளைவுகள் - Side effects of soybeans in Tamil
 4. முக்கியக் குறிப்புகள் - Takeaway in Tamil

சோயாபீன் அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். அது, புரதங்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள், மற்றும் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. சோயாபீன், சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது.

யு.எஸ்.டி.ஏ தேசிய ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி, 100கி சோயாபீன் பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 67.50 கி
ஆற்றல் 147 கி.கலோரி
புரதம் 12.95 கி
கொழுப்புகள் 6.80 கி
கார்போஹைட்ரேட் 11.05 கி
நார்ச்சத்து 4.2 கி
தாதுக்கள்  
சுண்ணாம்புச்சத்து 197 மி.கி
இரும்புச்சத்து 3.55 கி
மெக்னீஷியம் 65 மி.கி
பாஸ்பரஸ் 194 மி.கி
பொட்டாசியம் 620 மி.கி
சோடியம் 15 மி.கி
துத்தநாகம் 0.99 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் ஏ 9 மி.கி
வைட்டமின் பி1 0.435 மி.கி
வைட்டமின் பி2 0.175 மி.கி
வைட்டமின் பி3 1.650 மி.கி
வைட்டமின் பி6 0.065 மி.கி
வைட்டமின் பி9 165 மி.கி
கொழுப்புகள்/ கொழுப்பு அமிலங்கள்  
செறிவுற்றவை 0.786 கி
ஒற்றை செறிவற்றவை 1.284 கி
பன்மை செறிவற்றவை 3.200 கி

சோயாபீன் சந்தேகமே இல்லாமல் ஒரு ஊட்டச்சத்தளிக்கும் உணவு தான். ஆனால், அதன் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் என்ன? இப்பொழுது காணலாம்.

 • உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது: சோயாபீன்கள், உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கின்ற, மற்றும் தசைகளின் நிறையை அதிகரிக்கின்றதாக அறியப்படும் பேரூட்டச்சத்தான புரதங்களின், செறிவான ஆதாரங்களில் ஒன்று ஆகும். சோயாபீன்களை உட்கொள்வது, உடல் எடை மற்றும் மொத்த கொழுப்பு அளவுகளைக் குறைக்க காரணமாகிறது என்பது இப்பொழுது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
 • எலும்புகளை உறுதியாக்குகிறது: ஆய்வு ஆதாரங்கள் சோயாபீன், அதன் ஈஸ்ட்ரோ ஜென்னைப் போன்ற விளைவுகளின் காரணமாக,எலும்புகளைப் பாதுகாக்கும் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது எனக் காட்டுகின்றன. தொடர்ச்சியாக சோயாபீன் உட்கொள்வது, குறிப்பாக மாதவிடாய் நிற்றலுக்கு முன்பு மற்றும் பின்பான காலத்தில், பெண்களின் எலும்புகளை வலிமையாக்குவதில் திறன்மிக்கதாக இருக்கிறது.
 • உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது: மருத்துவ ஆய்வுகளில், சோயாபீன் உட்கொள்வது, உறக்க-விழிப்பு சுழற்சியை முறைப்படுத்துவதுடன் உறக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் அது, உறங்கும் நேர அளவையும் அதிகரிக்க உதவுகிறது.
 • நீரிழிவு-எதிர்ப்பு: சோயாபீன்கள், இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகின்ற  மூலக்கூறுகளின் ஒரு அணிவகுப்பைக் கொண்டிருக்கின்றன . அது, இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதும், மற்றும் உணவுக்குப் பிந்தைய (சாப்பாட்டுக்கு-பிறகு) இரத்த சர்க்கரை அளவுகள் எகிறுவதைக் குறைப்பதும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
 • மாதவிடாய் நின்ற பெண்களுக்கான நன்மைகள்: மாதவிடாய் நிற்றலுக்கு முன்னர் மற்றும் பின்னர் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதற்காக, சோயாபீன் உட்கொள்வது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அது, மாதவிடாய் நிற்றலின் போது ஏற்படும் சூடான திரவ வெளியேற்றத்தின் தீவிரம், மற்றும் அந்த நிகழ்வுகளின் எண்ணிக்கையை குறைப்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
 • இரத்தசோகையைத் தடுக்கிறது: விலங்கு மாதிரிகளில், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் மற்றும் ஆர்.பி.சி அளவுகளை அதிகரிக்க, சோயாபீன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வு, சோயாபீன்களில் உள்ள, இரும்புச்சத்தினை சேமித்து வைத்து, தேவைப்படும் பொழுது விடுவிக்கும் ஒரு புரதமான ஃபெரிட்டின் காரணமாக நடைபெறுகிறது.

உடல் எடைக் குறைப்புக்காக சோயாபீன்கள் - Soybeans for weight loss in Tamil

உடல் பருமன், நீடித்த பிரச்சினைகளான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயநாள நோய்கள் போன்ற நோய்களை ஏற்படுத்தும் முக்கியமான அபாய காரணி ஆகும். சோயாபீன் உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவக் கூடியது என்று ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

புரதங்கள் நிறைந்த உணவு, வயிறு நிரம்பிய உணர்வை அதிகரிக்கிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். இது, நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதைக் குறைக்குமாறு செய்கிறது. மேலும், புரதங்கள் நிறைந்த ஒரு உணவு, கொழுப்புகளைக் குறைக்க மற்றும் தசை திசுக்களை அதிகரிக்க உங்களுக்கு உதவும். புரதங்களின் ஒரு செறிவான ஆதாரமாக இருப்பதால் சோயாபீன்கள், இந்த நன்மைகளை உங்களுக்கு வழங்குகின்றன.

உடல் பருமன் உள்ள நபர்களிடம் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது, உடல் எடைக் குறைப்பு மற்றும் உடல் கொழுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்தது.

புரதச்சத்து எடுத்துக் கொள்வது அதிகரிக்கும் பொழுது,  வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும் பணியைக் கொண்ட ஒய்.ஒய் ஹார்மோன் புரதக்கூறு அதிகரிப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தின.

பல்வேறு முன் மருத்துவ ஆய்வுகள், தொடர்ச்சியாக சோயாபீன்களை உட்கொண்டு வருவது, உடலின் எடையைக் குறைப்பதுடன், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவுகள் (எல்.டி.எல்), மற்றும் மொத்த கொழுப்பு (டி.சி) அளவைக் குறைக்க வழிவகுக்கிறது என்று சுட்டிக் காட்டி உள்ளன.

சோயா புரதம் உட்கொள்வது, உடலில்  சேருகின்ற கொழுப்பு அளவையும் கூடக் குறைக்கிறது. அது, பித்தநீர் அமிலங்கள் சுரப்பை அதிகரித்து, கல்லீரலில் சேரும் கொழுப்பு அளவைக் குறைக்கக் காரணமாகிறது.

எனவே, சோயாபீன்கள் பல்வேறு செயல்முறைகள் வழியாக உங்கள் எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுன்றன மற்றும் ஒரு ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்பு பிற்சேர்க்கைப் பொருளாக இருக்கின்றன.

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்காக சோயாபீன்கள் - Soybeans for diabetes control in Tamil

நீரிழிவு என்பது, சர்க்கரைகளை வளர்சிதை மாற்றம் செய்வதில் ஏற்படும் ஒரு குறைபாட்டின் காரணமாக, இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதன் மூலம் குறிப்பிடப்படும், ஒரு நீடித்த பிரச்சினை ஆகும். தனி நபர்கள், அவர்களின் உடல், சர்க்கரை அளவுகளை முறைப்படுத்தும் பொறுப்பைக் கொண்ட இன்சுலினைப் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யாமல் இருப்பதாலோ, அல்லது கணையத்தினால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை, அவர்களது உடல் திறம்படப் பயன்படுத்த இயலாமல் இருப்பதாலோ, நீரழிவு நோயாளிகளாக மாறுகின்றனர். பின்னர், உடல் பருமன் காரணமாக ஏற்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்படுகிறது.

சோயாபீன் உட்கொள்வது, உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதன் மூலம், இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்து இருக்கின்றனர்.

ஒரு மருத்துவ ஆய்வு, உணவு சாப்பிடுவதற்கு 60 நிமிடங்கள் முன்பாக சோயாபீன் எடுத்துக் கொள்வது, உணவு அருந்திய பிறகான சர்க்கரை அளவை ( உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு) முறைப்படுத்த உதவக் கூடியது என்று சுட்டிக் காட்டியது. இந்த விளைவு, சோயாபீன்களில் இருக்கின்ற பினிட்டோல் என அழைக்கப்படும் ஒரு நீரழிவு எதிர்ப்புக் காரணியின் காரணமாக ஏற்படுகிறது.

43176 சீன நாட்டு நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, இனிப்பூட்டப்படாத சோயா பொருட்களை உட்கொள்வது, இந்த நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவியதாக வெளிப்படுத்தியது. சோயா ஐசோஃபுளோவோன்கள் மற்றும் நார்ச்சத்து, பல்சக்கரைடுகள், பய்டோஸ்டரால் போன்ற மற்ற மூலக்கூறுகள் மற்றும் செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் ஆகியவை, சோயா உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதற்கும், மற்றும் நீரிழிவின் அபாயம் குறைவதற்கும் இடையே உள்ள, இந்த தலைகீழ் தொடர்புக்குப் பொறுப்பாக இருந்தன.

இரத்தசோகை தடுப்புக்காக சோயாபீன்கள் - Soybeans for anaemia prevention in Tamil

இரத்தசோகை என்பது, உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் ஒரு பிரச்சினை ஆகும். இரத்தசோகைக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால் முக்கியமான காரணமாக இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது.

சோயாபீன்கள், இரும்புச்சத்து குறைபாட்டு இரத்தசோகையின் மீது, ஒரு சாதகமான விளைவைக் கொண்டிருக்கக் கூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இரத்தசோகையைக் கொண்ட விலங்கு மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, சோயாபீன் அளிப்பது, இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையில் ஒரு அதிகரிப்பு,, மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளில் ஒரு மேம்பாடு, ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது என சுட்டிக் காட்டியது.

ஃபெர்ரிட்டின் என்பது, இரும்புச்சத்தினை சேமித்து, தேவைப்படும் பொழுது விடுவிக்கும் ஒரு வகை புரதம் ஆகும். சோயாபீனில் ஏற்கனவே கொஞ்சம் ஃபெர்ரிட்டின் இருக்கிறது. அது இரும்புச்சத்தினை சேமித்து வைக்க உதவுகிறது. ஃபெர்ரிட்டினுடன் உயிர் வலுவூட்டல் செயல்பாடு, இந்த அளவை மேலும் அதிகரிக்க உதவி செய்து, இரத்தசோகையைத் தடுக்க வழிவகுக்கிறது.

இதயத்துக்காக சோயாபீன்கள் - Soybeans for the heart in Tamil

இதயநாள நோய்கள் (சி.வி.டி.க்கள்), இதயம் மற்றும் இரத்தக் குழாய்களின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன. உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள், இதயநாள நோய்களை ஏற்படுத்துகின்ற குறிப்பிடத்தக்க அபாய காரணிகளாக இருக்கின்றன.

சோயா புரதம் மாற்றம் ஐசோஃபிளாவோன்கள் ஆகியவை, கெட்ட கொழுப்பு அளவுகளைக் குறைப்பதன் மூலம், இதயநாள நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்று சில ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.

இருப்பினும், மற்றொரு ஆய்வுகளின் தொகுப்பு, சோயாபீன்களில் உள்ள செறிவான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பன்மை செறிவற்ற கொழுப்பு உட்பொருட்கள் ஆகியவை, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன என்று நிரூபித்தது.

செயல்படும் முறை எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம், ஆனால்,சோயாபீன்கள் உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்துக்காக சோயாபீன்கள் - Soybeans for bone health in Tamil

எலும்புகள் உடலின் அமைப்புகளுக்கு ஆதாரமானவையாக இருக்கின்றன. அவை, உடலின் இயக்கம், செயல்பாடு மற்றும் உள்ளுறுப்புகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகின்றன. மேலும் அவை, தாதுக்களை சேமித்து வைத்து, உடலின் மற்ற செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் பொழுது அவற்றை விடுவிக்கின்ற பொறுப்பையும் கொண்டிருக்கின்றன.  மேலும் எலும்புகள், மற்ற உறுப்புகள் காயம் அடைவதில் இருந்து பாதுகாப்பும் அளிக்கின்றன.

சோயாபீன்கள், எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகின்றன என ஆய்வுகள் காட்டுகின்றன. சோயாபீன்கள், ஈஸ்ட்ரோஜென் செயல்பாடுகளைக் கொண்ட, மற்றும் எலும்புப்புரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை ஒத்த அமைப்பைக் கொண்ட ஒரு வேதியியல் மூலக்கூறான, ஐசோஃபிளாவோன் மூலக்கூறுகளின் சிறந்த ஒரு ஆதாரமாக இருக்கின்றன. ஈஸ்ட்ரோஜென், எலும்பு அமைப்புகளுக்குப் பாதுகாப்பை வழங்கக் கூடியது. ஈஸ்ட்ரோஜென் போன்ற மூலக்கூறுகளை செறிவாகக் கொண்டிருப்பதால் சோயாபீன்கள், எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு பொருத்தமான உணவாக இருக்கிறது. சோயாபீனில் உள்ள  ஐசோஃபிளாவோன்கள், மாதவிடாய் நிற்றலுக்கு முன்னர் மற்றும் பின்னர், பெண்களுக்கு எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் திறன் உள்ளவை ஆகும். ஆய்வுகள், எலும்பு ஆரோக்கியத்தை மேம்பபடுத்துவதற்காக, உணவுப் பழக்கத்தில் சோயாபீனை சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு  திடமான பரிந்துரையை செய்கின்றன.

உறக்க குறைபாடுகளுக்காக சோயாபீன்கள் - Soybeans for sleep disorders in Tamil

உறக்கக் குறைபாடுகள், உடலின் மீது ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, உறங்கும் முறைகளில் செய்கின்ற மாற்றங்களோடு தொடர்புடையவை ஆகும். உறக்கக் குறைபாடுகளின் சில பொதுவான அறிகுறிகளில், உறக்கமின்மை, சோர்வு, பதற்றம் மற்றும் பகல் நேரத்தில் உறங்க வேண்டுமென்ற ஒரு தீவிரமான உந்துதல் ஆகியவை அடங்கும்.

ஆய்வின் அடிப்படையில், சோயாபீனில் இருக்கின்ற ஐசோஃபிளாவோன்கள், உறக்கத்தின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது. தாவர ஈஸ்ட்ரோஜென்னின் ஒரு வகையான ஐசோஃபிளாவோன், மனித உடலில் காணப்படும் ஈஸ்ட்ரோஜென் அமைப்போடு ஒப்பிடும் போது, அதே மாதிரியான அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஈஸ்ட்ரோஜென். உறக்க-விழிப்பு சுழற்சியை முறைப்படுத்துகிற பொறுப்பைக் கொண்டதாகும்.

1076 வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, ஐசோஃபிளாவோன்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வது, உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிற அதே வேளையில், கூடவே உறக்கத்துக்கான நேர அளவையும் முறைப்படுத்துகிறது என்பதை சுட்டிக் காட்டியது.

169 மாதவிடாய் நிற்றல் ஏற்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, ஐசோஃபிளாவோன்கள் சிறந்த உறக்க தரத்துடன் தொடர்புடையவையாக இருந்ததை வெளிப்படுத்தியது.

எனவே, நன்கு உறங்குவதற்கு, ஒரு கிண்ணம் நிறைய சோயாபீன்களை ஆசையோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு சிகிச்சையளிக்க சோயாபீன்கள் - Soybeans to treat irritable bowel syndrome in Tamil

எரிச்சல் கொண்ட குடல் நோய் (ஐ.பி.எஸ்) என்பது, பெருங்குடலைப் பாதிக்கின்ற ஒரு பிரச்சினை ஆகும். அது, வயிற்றுப் பிடிப்புகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு வீங்குதல் போன்ற செரிமான அறிகுறிகள், மற்றும் குடல் செயல்பாட்டில் ஏற்படுகிற மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இந்தப் பிரச்சினை குணப்படுத்த முடியாதது என்றாலும், உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையை சரியாகக் கையாள்வதன் மூலம், இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

உணவுப் பழக்கத்துடன் சோயாபீன்களை சேர்த்துக் கொள்வது, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதன் மூலம், ஐ.பி.எஸ் -ஐக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவக் கூடியது என்று ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இருந்தாலும் அது, ஆய்வுக் காலத்தின் போது, அறிகுறிகளில் எந்த ஒரு முன்னேற்றத்தினையும் உறுதியளிக்கவில்லை.

அந்த ஆய்வு, ஐசோஃபுளோவோன்கள் மற்றும் அவற்றின் வடிமங்களான டைட்செயின் மற்றும் ஜெனிஸ்டைன் ஆகியவை குடல் தடுப்பு அரண்களின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன என்று குறிப்பிட்டது. ஐசோஃபுளோவோன்கள் அவற்றின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளின் காரணமாக, குடல்களையும் கூடப் பாதுகாக்கின்றன.

மேலும் அந்த ஆய்வு, சோயா ஐசோபுளோவோன்கள், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு காரணமாகின்ற, அழற்சி தரும் சைடோகைன்களிடம் இருந்து குடலைப் பாதுகாக்கிறது என்று கூறியது.

புற்றுநோய் தடுப்புக்காக சோயாபீன்கள் - Soybeans for cancer prevention in Tamil

புற்றுநோய், மிகவும் அஞ்சத்தக்க நோய்களில் ஒன்றாகும். அது, செல்களின் அசாதாரணமான வளர்ச்சியின் காரணமாக ஏற்படுகிறது மற்றும் அதன் அபாய காரணிகளில், உடல் பருமன், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுற்றுச்சூழல் மாறுதல்கள், புகைப்பிடித்தல் மற்றும் நாள்பட்ட அழற்சி ஆகியவை அடங்கும்.

ஆய்வுகள், சோயா பொருட்கள் மற்றும் சோயா புரதம் ஆகியவை, புற்றுநோயைத் தடுக்க உதவக் கூடிய ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்று கூறுகின்றன. இந்தப் பண்புகள், அவற்றில் காணப்படும் பாலிஃபெனோலிக் மூலக்கூறுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த மூலக்கூறுகளில், ஐசோஃபுளோவோன்கள், குளோரோஜெனிக் அமிலம், காஃபியிக் அமிலம், மற்றும் ஃபெருலிக் அமிலம் ஆகியவை அடங்கும்.

மார்பகப் புற்றுநோயைக் கொண்ட 6000 க்கும் மேற்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, ஐசோஃபுளோவோன்கள் நிறைந்த சோயா உணவுகளை உட்கொள்வது, இந்த நோயின் காரணமாக இறப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றது என்று வெளிப்படுத்தியது.

மாதவிடாய் நிற்றல் அறிகுறிகளுக்காக சோயாபீன்கள் - Soybeans for menopausal symptoms in Tamil

மாதவிடாய் நிற்றல் என்பது, இனப்பெருக்க ஹார்மோன்கள் உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சி காரணமாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுதல் நிரந்தரமாக நின்று போவது ஆகும். வழக்கமாக இது, 40-50 வயதுக்கு இடையேயான பெண்களுக்கு ஏற்படுகிறது. மாதவிடாய் நிற்றலின் சில பொதுவான அறிகுறிகளில், வெப்பமான திரவ வெளியேற்றம் (ஒரு வெப்பமான உணர்வு), உறக்கத்தில் இடையூறுகள், பதற்றம் மற்றும் மனநிலை கோளாறுகள் ஆகியவை அடங்கும்.

ஆய்வின் அடிப்படையில் சோயாபீன்கள், மாதவிடாய் நிற்றலின் ஆரம்பத்தில், மற்றும் இறுதியில் ஏற்படும் அறிகுறிகளைப் போக்கக் கூடியவை ஆகும்.

மேலும் அந்த ஆய்வு, சோயாவில் காணப்படும் ஐசோஃபுளோவோன்கள், பெண்களுக்கு ஏற்படும் வெப்பமான திரவ வெளியேற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை, மற்றும் கடுமையைக் குறைக்கக் கூடியவை என்பதை சுட்டிக் காட்டியது.

 • ஒவ்வாமை விளைவுகள்: சோயா மீதான ஒவ்வாமை, வழக்கமாக குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிறது. அதன் அறிகுறிகளில், தோலின் மீது அரிப்பை உடைய அழற்சி, மற்றும் குடல்கள் அழற்சி மற்றும் பெருங்குடல் அழற்சி  (பெருங்குடல் அழற்சி) ஆகியவை அடங்கும். பசுவின் பாலுக்கு ஒவ்வாமையைக் கொண்டிருக்கும் நபர்கள், சோயாவுக்கும் ஒவ்வாமையைக் கொண்டிருக்கின்றனர்.
 • வயிற்றுப் பொருமல்: வயிற்றுப் பொருமல் என்பது, செரிமான அமைப்பில் வாயு திரளுதல் ஆகும். சோயாவில் இருக்கின்ற குறிப்பிட்ட டிரிஷாசாராய்டுகள், டெஸ்ட்ராசாராய்டுகள் மற்றும் ஒலிகோசாராய்டுகள் ஆகியவை வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தக் கூடியவை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சோயாவை சாப்பிடுவதற்கு முன்னர், அவற்றை நீரில் ஊற வைத்து, முளை விட வைப்பது, சோயாவினால் ஏற்படும் வயிற்றுப் பொருமலைத் தடுக்க உதவுகிறது.
 • இது மட்டும் அல்லாமல், சோயாபீன்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது, உடல் எடை அதிகரிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் ஏற்படக் காரணமாகக் கூடும். சோயாபீன் ஐசோஃபுளோவோன்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, கருப்பை திசு மிகை வளர்ச்சி (கருப்பையின் எண்டோமெட்ரியல் உட்சுவர் தடிமனாகுதல்) பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

சோயாபீன்கள், உடலுக்குத் தேவைப்படும் புரதம், வைட்டமின்கள், மற்றும் பிற முக்கியமான மூலக்கூறுகளின் மிகச் சிறந்த ஒரு ஆதாரமாக இருக்கின்றன. அவை, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும் ஐசோஃபுளோவோன்களின் செறிவான ஒரு ஆதாரம் ஆகும். சோயாபீன்களைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, அதன் ஆக்சிஜனேற்றப் பண்புகளின் காரணமாக, புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் உதவிகரமாக இருக்கிறது. சோயாபீன்கள், மாதவிடாய் நிற்றல் அறிகுறிகள், எரிச்சல் கொண்ட குடல் நோய், இரும்புச்சத்து பற்றாக்குறை இரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், மற்றும் இதயத்தைப் பாதுகாக்கவும் உதவக் கூடியவை ஆகும். ஆனால், சிலருக்கு, சோயாபீன்கள் மற்றும் சோயா பொருட்கள் மீது ஒவ்வாமை ஏற்படும். மேலும் அது, சிலருக்கு வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தக் கூடும். அதனால், சோயாபீன்களை உட்கொள்ளும் முன்னர் ஒவ்வாமைகளைப் போக்குவது மற்றும் அதன் பிறகும் கூட மிதமான அளவுகளில் சோயாபீனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.


उत्पाद या दवाइयाँ जिनमें Soybean है

மேற்கோள்கள்

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 11450, Soybeans, green, raw. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. Manuel T. Velasquez, Sam J. Bhathena. Role of Dietary Soy Protein in Obesity Int J Med Sci. 2007; 4(2): 72–82. PMID: 17396158
 3. Kang MJ, Kim JI, Yoon SY, Kim JC, Cha IJ. Pinitol from soybeans reduces postprandial blood glucose in patients with type 2 diabetes mellitus. J Med Food. 2006 Summer;9(2):182-6. PMID: 16822203
 4. Noel T. Mueller et al. Soy intake and risk of type 2 diabetes mellitus in Chinese Singaporeans. Eur J Nutr. 2012 Dec; 51(8): 1033–1040. PMID: 22094581
 5. Messina M, Messina V. Soyfoods, soybean isoflavones, and bone health: a brief overview. J Ren Nutr. 2000 Apr;10(2):63-8. PMID: 10757817
 6. Yufei Cui et al. Relationship between daily isoflavone intake and sleep in Japanese adults: a cross-sectional study. Nutr J. 2015; 14: 127. PMID: 26715160
 7. Mahsa Jalili et al. Soy Isoflavones Supplementation for Patients with Irritable Bowel Syndrome: A Randomized Double Blind Clinical Trial Middle East J Dig Dis. 2015 Jul; 7: 170–176. PMID: 26396720
 8. Database of Abstracts of Reviews of Effects (DARE): Quality-assessed Reviews [Internet]. York (UK): Centre for Reviews and Dissemination (UK); 1995-. Extracted or synthesized soybean isoflavones reduce menopausal hot flash frequency and severity: systematic review and meta-analysis of randomized controlled trials. 2012.
 9. J.J. RACKIS. Flatulence Caused. by Soya and Its Control through Processing. TEE JOl'RNAL OF THE AMERICAN OIL CHDlISTS' SOCIETY, Vol. 58, No, 3, Pages: 503-510 (1981), United States Department of Agriculture
 10. National Center for Complementary and Integrative Health [Internet] Bethesda, Maryland; Soy
ऐप पर पढ़ें