இந்தியாவில் பெருங்காயம் ஹிங் என பொதுவாக அழைக்கப்படுகிறது. பெருங்காயம் ஃபெரூலா அசாபோடிடா மற்றும் அதன் பல வகை மரபணு மூலிகைகளின் வேரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மரப்பால் (கம் போன்ற பொருள்) ஆகும். இந்த தாவரம் பிரதானமாக மத்திய தரைக்கடல் பகுதிகளில் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படுகிறது. பெருங்காயம் அதன் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிப்பு வாய்ந்தது, குறிப்பாக செரிமானத்தில் உதவுகிறது.

ஆயுர்வேதத்தில், பெருங்காயம்  ஒரு மலமிளக்கி (செரிமானத்தில் பயன்படும் மற்றும் மலம் கழிப்பதை ஊக்குவிக்கிறது) என அறியப்படுகிறது, மற்றும் ஃப்லாடுலேன்ட் (வாயு வெளியேற்ற உதவுகிறது மற்றும் வயிறு உப்புசத்தை குறைக்கிறது) ஆக வேளை செய்கிறது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.

பெருலா வில் சுமார் 170 இனங்கள் உள்ளன. இதில் மூன்று இந்தியாவில் வளர்கின்றன, முக்கியமாக காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இது அதிகமாக காணப்படுகிறது. இந்த தாவரம் அபியாசீஸ் என்னும் குடும்பத்தை சேர்ந்தது. மேலும் இது ஒரு பெரன்னியல் (இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழ கூடியது) மூலிகை மற்றும் பொதுவாக 4 மீட்டர் உயரம் வரை வளர கூடியது. இந்த தாவரத்தின் தண்டு வெற்றிடமானது மற்றும் சதைப்பற்று (நீரை சேமித்து வைக்க கூடியது) உள்ளது ஆகும். இதன் பூக்கள் வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேர்கள் மற்றும் வேர்த்தண்டுக்கிழங்கு (வேர்களின் கிடைமட்டமாக பருமன்) என்பது இந்த தாவரத்தின்ன் மிக மதிப்புள்ள பகுதியாகும், அதிலிருந்து தான் மரபால் 'ஒலியோரிஸின்' எடுக்கப்படுகிறது. இந்த மரபால் உலரவைக்கப்பட்டு பெருங்காயம் அல்லது ஹிங் தயாரிக்கப்படுகிறது.

அசாபோடிடா பற்றிய சில அடிப்படை தகவல்கள் (ஹிங்)

 • தாவரவியல் பெயர்: ஃபெருலா அசாபோடிடா
 • குடும்பம்: அபியாசீஸ்  
 • பொது பெயர்: ஹிங், ஹின்ஜர், கியாம், யங், ஹாங்கு, பெருங்காயம், இன்குவா, இங்குமோ
 • சமஸ்கிருத பெயர்: பத்ஹிகா, அகுடகண்டு
 • பயன்படுத்தப்படும் பகுதிகள்: வேர்கள் மற்றும் வேர்த்தண்டுக்கிழங்குகளின் உலர்ந்த மரப்பால் (பிசின்)
 • இதன் பிராந்தியம் மற்றும் புவியியல் பரவல்: மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதிகள்
 1. பெருங்காயத்தின் (ஹிங்) பயன்கள் மற்றும் நன்மைகள் - Asafoetida (hing) uses and benefits in Tamil
 2. பெருங்காய (ஹிங்) தூள் - Asafoetida (hing) powder in Tamil
 3. பெருங்காயத்தின் பரிந்துரைக்கப்படும் பயன்பாட்டு அளவு - Asafoetida (hing) dosage in Tamil
 4. பெருங்காயம் (ஹிங்) பக்க விளைவுகள் - Side effects of asafoetida (hing) in Tamil

ரோமானிய சாம்ராஜ்ஜியத்திற்குப் முன்னால் இருந்தே பெருங்காயம் பயன்பாட்டில் இருக்கிறது. இன்றும்கூட, பெருங்காயம், குழம்பு மற்றும் ஊறுகாய்களுக்கு சேர்க்கப்படும் மணம் கூட்டி முகவராக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பொருட்களில் ஒன்றாகும். இதன் சில முக்கிய நன்மைகளைப் பார்ப்போம்.

 • செரிமானத்தை மேம்படுத்துகிறது: ஆயுர்வேத மருத்துவத்தில் பெருங்காயம் அதன் செரிமான நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்று pH அளவில் சமநிலையை ஏற்படுத்துகிறது மற்றும் செரிமான சாறுகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது வயிற்று வாயு மற்றும் வயிறு உப்புசத்தை குறைக்கிறது.
 • நினைவாற்றலை அதிகரிக்கிறது: ஹிங் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது மூளையின் சமிக்ஞைகளை செலுத்துவதற்கு பொறுப்பான ஒரு ரசாயனமான அசிடைல்கோலின் முறிவுத் தடுக்கிறது. இது நினைவாற்றலை பாதுகாப்பதற்கும் அறிவாற்றலை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது (கற்றல் திறன்).
 • எடையை குறைகிறது: பெருங்காயம் கொழுப்பு உடலில் சேர்வதை குறைப்பதன் மூலம் எடை இழப்பை ஊக்கப்படுத்துகிறது. இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இதனால் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கும் கலோரிகளை உடனடியாக எரிக்க பெருங்காயம்  உதவுகிறது.
 • இரத்த அழுத்தத்தை குறைகிறது: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறைப்பதில் ஹிங் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருங்காயத்தில் இருக்கும்  செயலில் பொருட்கள் அதன் முக்கியமாக வாஸோரிலாக்ஸன் பண்புகளுக்கு (இரத்த நாளங்களைத் தளர்த்துவது) காரணமாக இருக்கின்றது.
 • சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது: பாரம்பரிய மருத்துவத்தில் பெருங்காயம் ஒரு டையூரிடிக் என்று அறியப்படுகிறது. பெருங்காயம் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், சிறுநீரக சேதத்தை தடுக்கிறது மற்றும் சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
 • இயற்கை ஆண்டிமைக்ரோபியல்: பெருங்காயம் சக்தி வாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டிருக்கிறது மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகள் சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காய அத்தியாவசிய எண்ணெய், மிகவும் பொதுவான நோய்க்கிருமி பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கிறது. இது ஊறுகாய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு உணவு பாதுகாப்பாக பயன்படுத்தப்படுகிறது.

செரிமானத்திற்கான பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for digestion in Tamil

பெருங்காயத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், செரிமான செயல்பாட்டில் உதவுவது ஆகும். ஆயுர்வேத உரை 'சரக் சமிதா' பெருங்காயம் செரிமானத்தை மேம்படுத்துகின்ற ஒரு மூலிகை என்று குறிப்பிடுகின்றது. ஹிங் என்பது சூரணம் (ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தூள் செய்யப்பட்ட மூலிகைகளின் கலவை) பலவற்றின் முக்கிய அம்சமாகும், குறிப்பாக செரிமானத்தை மேம்படுத்தக்கூடிய சூரணங்களில் பெருங்காயம் ஒரு முக்கிய கலவை பொருள் ஆகும்.

பெருங்காயம் வயிற்றில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் செரிமான அமைப்பு மற்றும் செரிமான சாறுகளின் மென்மையான செயல்பாட்டை பராமரிக்க அவசியமான அதன் பிஹெச் (அமில சமநிலையை) அளவை மீட்டெடுக்க உதவுகிறது. பெருங்காயத்தை வழக்கமான உணவு முறையில் பரிந்துரைக்கப்படும் அளவுகளில் உட்கொண்டால் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (மலச்சிக்கல்வயிற்றுப்போக்குவயிறு பிடிப்புகள்) போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இது குறைப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

ஒரு அமில நீக்கியாக பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) as an antacid in Tamil

பெருங்காயத்தின் நுகர்வு உமிழ்நீர் மற்றும் இரைப்பைச் சாறுகளின் ஓட்டத்தை அதிகரிக்கிறது என்பதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. பெருங்காயம் வயிற்றில் உள்ள என்சைம்கள் செயல்படுவதை ஊக்கப்படுத்தி, வயிற்றில் அமிலத்தன்மையை குறைப்பதன் மூலம் வயிறு உப்புசம் குறைந்து வயிற்றில் இருந்து வாயுவை பிரிக்கிறது. பெருங்காயம்  உட்கொள்வது, செரிமானத்திற்கு பங்களிக்கும் கணைய சாறுகளின் ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இரைப்பை குடல் (வயிற்று மற்றும் குடல் சம்பந்தப்பட்ட) கோளாறுகள் இருக்கும் நோயாளிகளுக்கு பெருங்காயம்  பரிந்துரைக்கப்படுகின்றது. பெருங்காயத்தின் பரிசோதிக்கப்பட்ட  பயன்பாட்டின் மூலம் இரைப்பை புண்கள் அடிக்கடி வருவதை தடுக்கலாம்.

ஆண்டிமைக்ரோபியலாக பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) as antimicrobial in Tamil

ஆன்டிமைக்ரோபியல் ஏஜெண்டாக பெருங்காயத்தின் நன்மைகள் நன்கு அறியப்பட்டவை. மூலிகை மருந்துகளில், பலவகையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான சிகிச்சைக்காக பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது.  ஃபெரூலா அசாபோடிடா கம்-பிசினில் (மரப்பால்) இருந்து பெறப்பட்ட அத்தியாவசிய எண்ணெய்கள் பேசில்லஸ் சப்லிலிஸ்எஷ்சரிச்சியா கோலிஸ்டீஃபிலோகோகஸ் ஆரியஸ்,ஆஸ்பெர்ஜில்லஸ் நைகர் மற்றும் சூடோமோனாஸ் ஏருஜினோசா போன்ற பலவிதமான நோய் கிருமிகளுக்கு எதிராக ஆண்டிமைக்ரோபயல் விளைவுகளை கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனால், நுண்ணுயிர் தொற்று நோயாளிகளுக்கு மருத்துவ மற்றும் சிகிச்சை நோக்கங்களுக்காக பெருங்காயம் பரிந்துரைக்கப்படுகிறது.

உணவு பதபடுத்துவதற்காக பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for food preservation in Tamil

ஹிங் இன் ஆண்டிமைக்ரோபியல் பண்பு காரணமாக உணவைப் பதபடுத்துவதற்காக அதை பயன்படுத்தப்படலாம். பெருங்காயத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில அத்தியாவசிய எண்ணெய்கள் இயற்கை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. உணவுக்குச் சேர்க்கப்படும் போது பெருங்காயம், அவற்றை விஷம் ஏறுவதில் இருந்து தடுக்கிறது மேலும் ஒரு உணவு பாதுகாப்பானாக செயல்படுகிறது.

கூடுதலாக, பெருங்காயம் தேவையற்ற பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இதன் காரணமாகவே ஊறுகாய்களில் மற்றும் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக விரும்பப்படும் பதபடுத்தியாக பெருங்காயம் இருக்கிறது. கொழுப்பு உணவுகளை சேமித்து வைப்பதில் ஆக்ஸிஜனேற்ற நிலைத்தன்மையை வழங்குவதற்கும் மற்றும் உணவுத் தொழில் துறையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் ஒரு நல்ல ஆதாரமாகவும் பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரலுக்கு பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for liver in Tamil

மற்ற மருந்து மூலிகளுடன் சேர்த்து பெருங்காயத்தை இணைத்து தயாரிக்கப்பட்ட தயாரிப்பு முறைகள் ஒரு நல்ல ஹெபாடோப்ரோடக்டிவ் (கல்லீரல்-பாதுகாப்பு) முகவராக செயல்படுகின்றன. ஒரு ஆய்வில், கல்லீரல் தொடர்பான சிக்கல்கள் கொண்ட நோயாளிகளுக்கு பெருங்காயத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட  நீர் பத (அக்யூஸ்) சாறு கல்லீரலின் வளர்சிதை மாற்றங்களை குறைக்கும் சில என்சைம்கள் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் கணிசமான மீட்பு தன்மையை காட்டியது. மேலும் அந்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் கார்பன் டெட்ராகுளோரைடு காரணமாக கல்லீரலில் ஏற்படும் நச்சுத்தன்மை, பெருங்காயத்தின் கட்டுப்படுத்தப்பட்ட அளவான மருந்தின் நிர்வாகத்தின் மீது கணிசமாக குறைக்கப்பட்டது என காட்டபட்டது.

இதயத்திற்கான பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for heart in Tamil

ஃபிளாவோனாய்டுகள் போன்ற பெருங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாறில் இருக்கும் கலவைகள் அதன் ஆக்ஸிஜனேற்ற ஆற்றலுக்கான பண்புகளுக்கு பொறுப்பானவை. ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த ஓட்டத்தில் இருக்கும் இலவச ராடிகல்களை நடுநிலையாக்க பொறுப்பாளிகள் ஆகும். இலவச ராடிகல்கள் இயற்கையில் மிகவும் எதிர் வினையாற்றும் மற்றும் உள் உறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஒன்று ஆகும். ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலைமைகளின் கீழ், ஃபிளவனாய்டுகள் இதயத்தை பாதுகாக்கிறது. ஃபிளாவனாய்டுகள் பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற அபாயத்தை குறைக்கும் பல அத்தியாவசிய உயிரியல் செயல்பாடுகளில் பங்களிக்கின்றன.

சிறுநீரகத்திற்கான பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for kidney in Tamil

பாரம்பரிய ரீதியாக, பெருங்காயம் டையூரிக்காக இரானிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, அதனால் சிறுநீர் கழிக்கும் அளவு அதிகரிக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வில், பெருங்காயத்தின் கண்காணிக்கப்பட்ட பயன்பாடு  சிறுநீரின் அளவு மற்றும் சிறுநீரில் இருக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு ஆகியவற்றை அதிகரித்தது. பெருங்காயத்தின் பசை சாறில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற உயிரியக்க சேர்மங்கள் போன்றவை அதன் டையரிடிக் பண்புகளுக்கு காரணம் ஆகும்.

நினைவாற்றலுக்கான பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for memory in Tamil

பெருங்காயம் குறிப்பிடத்தக்க அளவு நினைவக திறன் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. அசோபீடிடா ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் அசிட்டில்கோலினெஸ்டேரேஸ் என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த அசிட்டில்கோலினெஸ்டேரேஸ் நொதியே, நரம்பு தூண்டுதலின் பரிமாற்றத்தை அனுமதிக்கும் இரசாயனமான அசெட்டில்கோலின் நரம்பியக்கடத்தியின் முறிவுக்கு காரணமாகும்.

நினைவக கலங்களின் சரியான செயல்பாட்டிற்கு அசிடைல்கோலைன் தேவைப்படுகிறது. இதனால் பெருங்காயம், நரம்பியக்கடத்தியை பாதுகாப்பதன் மூலம், மூளையின் நினைவக திறனை செயல்படுத்துகிறது. ஆய்வுகள்,டிமென்ஷியா எதிர்ப்பு சிகிச்சைகளில்  பெருங்காயத்தை உபயயோகிப்பது பயனளிக்கும் என்பதை நிரூபிக்க முடியும்.

தளர்வுக்கு பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for relaxation in Tamil

ஆய்வுகள் ஃபெரூலா அசாபோடிடா வில் இருந்து எடுக்கபட்ட பசை சாறில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் (ஆசுவாசப்படுத்தும்) பண்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது. பெருங்காயம் அடிக்கடி தசை பிடிப்பில் இருந்து நிவாரணம் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

அசாபோடிடாவில் இருந்து எடுக்கபட்ட பசை சாறில் இருக்கும் பல தளர்வுக்கு உதவும் கலவைகள், குறிப்பிட்ட  மூளை செல்களில் இருக்கும் எதிர்வினையாற்றிகளுடன் வினை புரிந்து, அசுவாச உணர்வை ஏற்படுத்துகிறன்றன. மேலும் இந்த கலவைகள் தசை செல்களை சுருங்கச் செய்ய தேவையான உயிரணுக்களில் இருக்கும் கால்சியம் அயனிகளுக்கு இயங்கும் தன்மையை அளிக்கின்றன.  

இரத்த அழுத்தத்திற்கு பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for blood pressure in Tamil

ஒரு டோஸ் சார்ந்த முறையில் எடுத்துக்கொள்ளும் போது, ஹிங் ஒரு ஹைபோடென்சிவ்  (இரத்த அழுத்த குறைபான்) முகவராகவும் செயல்படுகிறது. ஒரு ஆய்வில், அசாபோடிடாவின் பசை சாறு ஹைபோடென்சென் வர விடாமல் தடுக்கிறது அல்லது ஹைபோடென்சென் கொண்ட நோயாளிகளின் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இந்த மூலிகையின் ஒரு பெரிய பகுதியாக, ஃபெரூலிக் அமிலம் இரத்த அழுத்த குறைப்பு திறன் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த அமிலம் நைட்ரஜன் ஆக்சைடின் இருப்பு அளவை அதிகரிக்கிறது. இரத்த அணுக்களால் உற்பத்தி செய்யப்படுகிற இந்த நைட்ரஜன் ஆக்சைடு ஒரு வஸோரிலாக்ஸன் (ரத்த நாளங்களில் பதற்றத்தை குறைக்கிறது) ஆகும். எனவே, உடலில் இரத்த அழுத்தம் குறைகிறது.

நீரிழிவு நோய்க்கான பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for diabetes in Tamil

அசாபோடிடாவில் இருந்து பெறப்பட்ட சாறு, இரத்தச் சர்க்கரை அளைவை குறைக்கும் பண்பு கொண்டுள்ளது என கண்டுபிடிக்கபட்டுள்ளது. எனவே, பெருங்காயம் இரத்த சர்க்கரையை குறைக்கிறது.

பெருங்காயத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிசினில், பினொலிக் அமிலம் மற்றும் டானின் போன்ற கலவைகள் இருப்பதால்,  அது நீரிழிவு நோயின் தன்மைக்கு எதிராக பங்களிப்பதாக நம்பப்படுகிறது. நீரிழிவை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறு விவோ ஆராய்ச்சியின் கீழ் பெருங்காயத்தில் உள்ளது என நிறுவப்பட்டது.

(மேலும் வாசிக்க: நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்)

புற்றுநோய்க்கான பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for cancer in Tamil

பெருங்காய சாறு கட்டிகளை குறைக்கூடிய பண்புகளையும் கூட கொண்டிருப்பதாக கண்டறியபட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, கார்சினோஜென்ஸ்களின் விளைவு (சுற்றுச்சூழலில் காணப்படும் புற்றுநோய் ஏற்படுத்த கூடிய உறுப்புக்கள்) குறிப்பிடத்தக்க வகையில், பெருங்காயத்தின் பயன்பாட்டின்னால் குறைவதால், பெருங்காயம் கட்டிகளுக்கு எதிராக செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குகிறது.

அதிகரித்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் மருந்து பொருட்களை கொண்டு சேர்த்தல் (வழங்கல்) போன்ற பெருங்காயத்தின் பண்புகள் மேலும் பெருங்காயத்தின் புற்றுநோய்களுக்கு எதிரான காரணிகளுக்கு பங்களிப்பு செய்கின்றன. அதனால்தான் பெருங்காயம், ஒரு கீமோ தடுப்பான் ( புற்றுநோய் தடுக்கும்) மூலிகையாக இருக்கலாம்.

எடை இழப்புக்கான பெருங்காயம் (ஹிங்) - Asafoetida (hing) for weight loss in Tamil

பெருங்காயத்திலும் உடல் பருமனைத் தடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. பெருங்காயத்தை சேர்த்து கொள்வதால், அசாதாரண கொழுப்பு மற்றும் உடல் எடையைக் குறைப்பதன் மூலம், பெருங்காயத்தால் எடை குறைப்பில் பங்களிக்க முடியும். பெருங்காயம் மேலும் செரிமானத்தில் உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுகிறது, இந்த அனைத்து காரணிகளும் எடையை நிர்வகிக்க உதவுகின்றன. நீரிழிவு நோய் உடல் பருமனை தூண்டுகிறது. இதை பெருங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் குறைக்க முடியும்.  

சந்தையில் கிடைக்கக்கூடிய பெருங்காயம் பெரும்பாலும் தூள் அல்லது மாத்திரை வடிவங்களில் காணப்படுகிறது. பெருங்காய தூள் தயாரிப்பதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இரண்டு வகைகள் லால் ஹிங் (சிவப்பு அசாபோடிடா) மற்றும் கபுலி ஸஃபெட் ஹிங் (வெள்ளை அசாபோடிடா). வெள்ளை அசாபோடிடா தண்ணீரில் கரையக்கூடியது, அதேசமயம் சிவப்பு அசாபோடிடா எண்ணெயில் கரையக்கூடியது.

சல்ஃபர் கலவைகள் இருப்பதன் காரணமாக, பெருங்காயம் வலுவான காரமான மணம் கொண்டது, மேலும் இது கசப்பு மற்றும் அமில சுவை கொண்டது. மக்கள் அதன் வலுவான வாசனை காரணமாக தூய பெருங்காயத்தை அப்படியே உபயோகிக்க விரும்பவில்லை, எனவே பெருங்காய பொடி பிசின் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றுடன் கலக்கபட்டு பயன்படுத்தபடுகிறது.

இந்தியாவில் தூள் வடிவத்தில் பெருங்காயம் மிகவும் சுலபமாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது. பெருங்காயத்தின் பரிந்துரைக்கப்படும் பயன்பாட்டு அளவு வழக்கமாக 125-500 மிகி ஆகும். இருப்பினும், உண்மையான பயன்பாட்டு அளவு ஒரு நபரின் எடை, வயது மற்றும் உடலியல் ஆகியவற்றை சார்ந்து மாறுபடும். ஆகையால், பெருங்காயத்தை மருத்துவ ரீதியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம்.

வழக்கமாக உணவுகளில் காணப்படும் அளவுகளில் உட்கொள்ளும் போது பெருங்காயம்  பொதுவாக பாதுகாப்பானது. இருப்பினும், பெருங்காயத்தின் மருத்துவ பயன்பாடு சில மக்களில் சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். உட்கொள்ளல் விளைவாக ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.

 • பெருங்காயத்தை அதிகபடியாக பயன்படுத்துவதால் சில நபர்களில் உதடுகளின் வீக்கம் ஏற்படலாம். இந்த விளைவு பொதுவாக நீண்ட நேரம் நீடிக்காது மற்றும் சில மணி நேரம் கழித்து மறைந்துவிடும். இருப்பினும், இந்த நிலை தொடர்ந்தால், சீக்கிரமே ஒரு மருத்துவரை அணுகுவது முக்கியம்.
 • பெருங்காயம் ஒரு பிளாட்லண்ட் ஆக (வாயு வெளியேற்ற காரணியாக) பயன்படுத்தப்படுகிறது என்றாலும், சிலருக்கு உணவில் அதிகப்படியாக பெருங்காயம்  உபயோகத்தி சமைத்த பொருட்களை உட்கொண்டால் இரைப்பைச் சிக்கல்கள் அதிகரிக்கும் மற்றும் வயிறு எரியும் உணர்வு அல்லது குமட்டல் உணர்வு ஏற்படலாம். ஆகவே, அதிகபடியாக பெருங்காயம் சேர்த்த எந்த ஒரு உணவையும் சாப்பிடுவதற்கு முன் ஒரு சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தபடுகிறது.
 •  தோல் தடிப்பு மற்றும் சில மக்களுக்கு வீக்கம் ஏற்படுதல் பெருங்காயம் சாப்பிடுவதன் காரணமாக ஏற்படும் மற்றொரு பக்க விளைவு ஆகும். வீக்கம் அல்லது தடிப்பு நீடித்தால், உடனே உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
 • அதிகப்படியான பெருங்காயத்தின் நுகர்வு சிலருக்கு தலைச்சுற்றல் அல்லது தலைவலி ஏற்பட வழிவகுக்கும்.
 • பெருங்காயம் என்பது ஒரு ஹைபோடென்சிவ் (இரத்த அழுத்த குறைப்பான்) மற்றும் இரத்தத் இலக்கி முகவராகும். இந்த விளைவு காரணமாக இரத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்த உறைதலில் தாமதம் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் மக்கள் எப்பொழுதும் மருத்துவ பயன்பாடுக்காக பெருங்காயம் பயன்படுத்தும் முன் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
 • கருச்சிதைவு ஏற்படலாம் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் பெருங்காயம் சேர்த்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தாய்ப்பால் மூலம் பெருங்காயம் குழந்தையை அடைந்து இரத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் பெருங்காயத்தை தவிர்க்க வேண்டும்.
 • மத்திய நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உடையவர்கள் அல்லது உடல் செயலிழந்து பிழைத்தவர்கள் பெருங்காயத்தை தவிர்க்க வேண்டும். அத்தகைய மக்கள் பெருங்காயம் எடுத்து கொண்டால், அது பறிமுதல் (சிசுர்) வாய்ப்புகளை தூண்டலாம்.

उत्पाद या दवाइयाँ जिनमें Hing है

மேற்கோள்கள்

 1. Augustine Amalraj, Sreeraj Gopi. Biological activities and medicinal properties of Asafoetida: A review. J Tradit Complement Med. 2017 Jul; 7(3): 347–359. PMID: 28725631
 2. Leila Safaeian et al. The effect of hydroalcoholic extract of Ferula foetida stems on blood pressure and oxidative stress in dexamethasone-induced hypertensive rats. Res Pharm Sci. 2015 Jul-Aug; 10(4): 326–334. PMID: 26600859
 3. Poonam Mahendra, Shradha Bisht. Ferula asafoetida: Traditional uses and pharmacological activity. Pharmacogn Rev. 2012 Jul-Dec; 6(12): 141–146. PMID: 23055640
 4. Liju Vijayasteltar et al. Beyond the flavor: A green formulation of Ferula asafoetida oleo-gum-resin with fenugreek dietary fibre and its gut health potential. Toxicol Rep. 2017; 4: 382–390. PMID: 28959663
 5. Davide Gottardi, Danka Bukvicki, Sahdeo Prasad, Amit K. Tyagi. Beneficial Effects of Spices in Food Preservation and Safety. Front Microbiol. 2016; 7: 1394. PMID: 27708620
ऐप पर पढ़ें