சோற்றுக்கற்றாழை  என்பது பெரும் ஆற்றல் உடைய தாவரம் என்பதையும்  , 'ரிக்' வேத பக்கங்களில் இருந்து  வந்தது என்பதையும்  நீங்கள் அறிவீர்கள்.

உலக அளவில், எல்லா வீட்டிலும் இதற்க்கென்று ஒரு இடத்தை பிடித்திவிட்டதற்கு காரணம், இது ஒரு மகத்தான உணவு, பல பேருக்கு இது அழகின் ரகசியம் மற்றும் இது ஒரு "மர்ம தாவரம் ". இது இந்தியா வில் பிரபலமாக ‘க்ரித்குமாரி’ என்று அழைக்க படுகிறது. ஆயுர்வேத ஆராய்ச்சியாளர்களை பொறுத்த வரை, இது சமஸ்க்ரிதத்தில்  "குமாரி"  என்று அழைக்க படுவதற்கு காரணம், இதன் சில குறிப்பிட்ட  குணாதிசியங்கள் ஆகும். பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்வது மட்டுமல்லாமல், இந்த தாவரம் என்றைக்குமே முதிர்ச்சி அடையாமல் இருப்பது மற்றும் களங்கமற்ற சரும்மத்தை பரிசா கொடுக்கும் -என்பதை குறிப்பிடுகிறது. ஆயுர்வேதமோ அல்லது மேற்க்கத்திய மருந்துகளோ, எந்த பாரம்பரிய மருத்துவ அமைப்பாக இருந்தாலும், இந்த தாவரத்திற்க்கு அதில் பிரத்தியேக இடம் உண்டு

சோற்றுக்கற்றாழை ஒரு சதைப்பற்றான தாவரம் ஆகும் (மென்மையான, சாறு நிறைந்தது). அதன் தடிமனான சதை பற்றுள்ள இலைகள் மற்றும் தண்டுகளில் தண்ணீர் சேமித்து வைத்து கொள்கின்றன.  ஆயுர்வேதத்தில், சோற்றுக்கற்றாழையால்   உண்டாகும் குடல் மற்றும் கல்லீரலின் நம்மையை பற்றி பெரிதாக குறிப்பிட்டுள்ளது. புகழ்பெற்ற இயற்கையியலாளர் மற்றும் எழுத்தாளர் பிளினி தி எல்டரை பொறுத்தவரை, சோற்றுக்கற்றாழையை தொழுநோய் புண்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.ஆய்வாளர்களை பொருத்தகவரை, இந்த மூலிகை இந்திய உபகண்டத்தில் மட்டும் பிரபலமடய வில்லை, பண்டைய எகிப்திய ஆவணங்களில் கூட இதை குறித்து விரிவான விளக்கம் உளது. உண்மையில், எகிப்தியர்கள் இதை "அமரத்துவம் குடுக்கும் தாவரம்" என்று அழைத்தனர். புகழ்பெற்ற எகிப்திய ராணி கிளியோபாட்ரா தனது அழகு பராமரிப்பில் இதைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது!

உங்களுக்கு தெரியுமா?

அலோ வேரா என்ற பெயர், அரேபியா வார்த்தை "அல்லோஏஹ்" என்பதிலிருந்து வந்துள்ளது, அதன் அர்த்தம் "பளபளக்கும் கசப்பான பொருள்" மற்றும் "வேரா " என்பது லத்தின் வார்த்தை; அதன் அர்த்தம் "உண்மையான"

சோற்றுக்கற்றாழை பற்றிய சில அடிப்படை குறிப்புகள்:

  • தாவரவியல் பெயர்: அலோ பார்படன்சிஸ்  மில்லர்
  • தாவரவியல் குடும்பம்: அஸ்போலடேசியே (லிலீசியே)
  • பொது பெயர்: அலோ வேரா, பர்ன் பிளான்ட், கீ குமாரி, குமாரி.
  • சமஸ்கிருத பெயர்: கிரித்குமாரி
  • பயனளிக்கும்  பகுதிகள்: இலைகள்
  • அன்னை மண்டலம் மற்றும் புவியியல் பரப்பு அமைப்பு : சோற்றுக்கற்றாழை பிறந்த பகுதி ஆப்பிரிக்கா ஆகும், ஆனால் காலப்போக்கில் அதன் சொந்த நிலைத்திருந்து தாவி, மத்திய கிழக்கு பகுதி மற்றும், இந்தியா உட்பட உலகின் உலர்ந்த பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது . இந்தியாவில், இது ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் காணப்படுகிறது.
  • ஆற்றல்: குளிர்ச்சி
  1. சோற்றுக்கற்றாழை தரும் உடல் நல பயன்கள் - Health benefits of Aloe Vera in Tamil
  2. சோற்றுக்கற்றாழை செடி மற்றும் அதை பயன் படுத்தும் முறை - Aloe vera plant and how it is used in Tamil
  3. சோற்றுக்கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு - Aloe vera dosage in Tamil
  4. சோற்றுக்கற்றாழையின் பக்க விளைவுகள் - Side effects of aloe vera in Tamil

பொதுவாக தீ காயங்கள் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு, சோற்றுக்கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. சோற்றுக்கற்றாழை இயலுமையில் ஒரு "சிறிய அற்புதம்" என்று நீங்கள் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். சோற்றுக்கற்றாழையின் சில பயன்கள் மற்றும் செயல்களை ஆய்வு செய்யலாம்.

  • வயது சுருக்கங்களை   தாமதம் செய்யும்: சோற்றுக்கற்றாழை களிம்பு பொதுவாக வயதாவதனால் வரும் தோல் முதிர்ச்சியை குறைக்கும். கிரீம்கள் மற்றும் பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தோலை ஈர பசையுடன் வைக்கிறது மற்றும் வயதாவதனால் வரும் முதல் அறிகுறிகள் ஆகிய, சுருக்கங்கள் மற்றும் நன்னீர் கோடுகள் போன்ற குறைக்கிறது மற்றும் தோலின் மீளுருவாக்கம் ஊக்குவிக்கிறது.
  • காயத்தை குணப்படுத்துவதற்கான ஊக்குவிப்பு:  சோற்றுக்கற்றாழை அனைத்து வகையான காயங்களுக்கு சிறந்த மருந்தாகும். தொடர் ஆய்வுகளின் படி, தோல் பராமரிப்பு; வெட்டுக்கள், தீக்காயங்கள், வேணீர் கட்டி, உறைவு மற்றும் கதிர்வீச்சு எரிதல் ஆகியவற்றில் சிகிச்சைமுறைகளை இது அதிக பயனுள்ளதாக ஆக்கும்.
  • வயிற்றுப் பிரச்சினைகளுக்கான நிவாரணம்: GERD, அழற்சி குடல் நோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை சரி செய்வதற்கு சோற்றுக்கற்றாழை களிம்பு மற்றும் மர பால் பயன் படுத்தப்படுகின்றன .இது ரத்தப் புற்றுநோய்கள் சிகிச்சய்க்கும் பயன்படுகின்றன. இருப்பினும், மேற்பார்வை இல்லாமல் இதை பயன் படுத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
  • வாய் ஆரோக்கியத்திற்கான பயன்கள்: சோற்றுக்கற்றாழை களிம்பு வாய் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது, இது பிளேக்-விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொன்று ஜினீய்டிடிஸ் தடுக்கும். சோற்றுக்கற்றாழை களிம்பு பயன் படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்காமல் வாயு புண்களை தவிர்த்த்து, சரி செய்ய பயன் உள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இயற்கையான ஆக்ஸிஜனேற்றி மற்றும் நுண்ணுயிர்-எதிர்ப்பி: சோற்றுக்கற்றாழை, நுண்ணுயிர் தொற்று காரணமாக ஏற்படும் சேதம் மற்றும் பொதுவாக ஏற்படும்   தீவிர சேதத்தை குறைக்கிறது. இது வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், உறுப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
  • இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது: சோற்றுக்கற்றாழை களிம்பை ஒரு இரத்தச் சர்க்கரைக் குறை பொருளாக (இரத்த சர்க்கரையை குறைக்கிறது) பயன்படுத்த அதிகமாக ஆய்வுகள் செயல் பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆய்வுகள் நீரிழிவு நோயை குறைப்பதில் இதன் பங்கை   உறுதிப்படுத்துகின்றன. இறுதி கட்ட ஆய்வுகள் தற்போது சிகிச்சை பயன்பாட்டிற்கான அளவையும், பாதுகாப்பையும் தீர்மானிக்கும் நிலையில் உள்ளன.
  • நீண்ட மற்றும் பளபளப்பான முடி வழங்குகிறது: சோற்றுக்கற்றாழையில் இருக்கும் ஈரப்பசை உங்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் முடியை பராமரிக்க உதவுகிறது மற்றும் உச்சந்தலையில் உள்ள pH ஐ சமப்படுத்துகிறது. இந்த எல்லா குணங்களும் சேர்ந்து முடி வளர்ச்சிக்கு உதவி, முடி கொட்டுவதை தடுக்கின்றன மற்றும் முடி நரைப்பதை குறைக்கின்றன.
  • கொழுப்பை குறைக்கிறது: ஜௌர்னல் ஒப் நியூட்ரிஷனல் சயின்ஸ் அண்ட் விட்டமினாலஜி யின் இதழின் சமீபத்தில் வெளி வந்த ஆய்வின் படி, கல்லீரலில் கொழுப்பு உற்பத்தியை சோற்றுக்கற்றாழை 30% குறைக்கிறது. இது பிளேக் உருவாக்கம் மற்றும் ஆத்தெரோசிகிளீரோசிஸின் வரக்கூடிய ஆபத்தை குறைக்கிறது
  • புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது: வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளால் சோற்றுக்கற்றாழை நிறைந்திருக்கிறது, இது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை அதிகரிக்க விடடாமல் தடுப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது கட்டி உருவாவதை தடுக்கிறது. இந்த தாவரத்தின் புற்றுநோய் எதிர்ப்பு குணநலன்களை  புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சருமத்திற்கு சோற்றுக்கற்றாழை களிம்பின் நன்மைகள் - Aloe vera gel benefits for skin in Tamil

வெவ்வேறு விதமான சருமத்திற்கு, பல விதமான சோற்றுக்கற்றாழை பூச்சுக்கள் மற்றும் வயதினால் வரும் பாதிப்புக்களை தடுக்க லோஷன்கள் எல்லாம் சந்தையில் கிடைக்கின்றன, அவைகள் எவ்வளவு நம்பக தன்மை உடையவை மற்றும் இயற்கையானவை என்பதை சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு எளிதான மற்றும் நம்பக தன்மை உள்ள ஒரு தீர்வை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அதை அதன் இயற்கையான வடிவத்திலேயே சோற்றுக்கற்றாழை களிம்பாக உபயோகிப்பது மிகவும் நல்லது. இயற்கையாக கிடைக்கும் சோற்றுக்கற்றாழை களிம்பு மற்ற விலை உயர்ந்த கிரீம்கள் அனைத்தையும் விட பயன் தர கூடியதாக உள்ளது, மற்றும் இதற்க்கு குறிப்பிடும் படி எந்த பக்க விளைவுகள் இல்லை. ஆய்வுகளின் படி,   சோற்றுக்கற்றாழையை உணவில் ஒரு பாகமாக சேர்த்து கொண்டால்    சரும சுருக்கத்தை குறைக்கவும் வேகமாக முதுமை அடைய கூடிய அறிகுறிகளை குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் இதை பயன்படுத்தும் போது, ​​சோற்றுக்கற்றாழை இயற்க்கையாகவே ஈரப்பசை தக்கவைத்துக்கொள்ள உதவிகிறது, மற்றும் சருமத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குகிறது. சோற்றுக்கற்றாழை முதன்மையாக முக்கியமாக உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது, ஈரப்பதம் உள்ள சருமம் பளிச்சென்று இருக்கும்; இது அனைவரும் விரும்ப கூடிய ஆரோகியமான சருமம். தொடர்ந்து சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் ஈரப்பசை காப்பதோடு மட்டுமில்லாமல் சருமத்தின் திசுக்களை விரைவாக வளர செய்து, அது ஒன்றோடு ஒன்று சேர்ந்து சரும நெகிழ்ச்சி அதிகரிக்கிறது.

வயதாகம் எதிர்ப்பு செயல்கள் மட்டும் அல்ல, இதை தவிர,  சோற்றுக்கற்றாழை களிம்பு சருமத்திற்கு பல பயன்கள் அளிக்கின்றன 

  • விரைவாக காயம் குணமாகுதல்: நாட்டுப்புற மருத்துவத்தில், காயத்தை குணப்படுத்துவதில், சோற்றுக்கற்றாழை மிக உத்தமமான தாவரம் என்று கருதப்படுகிறது. உலக அளவில் விரிவான ஆய்வு செய்து இந்தச் களிம்பின் பின்னணியைப் புரிந்து கொண்டுள்ளார்கள். இது களிம்பின் சில பொருட்கள் (வளர்ச்சிக்கான ஹார்மோன்) உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது, இது ஃபைப்ரோப்ளாஸ்ட்ஸ் (புதிய தோல் மற்றும் மீண்டும் குணப்படுத்துவதற்கான காயம் ஆகியவற்றில் உதவும் சரும திசுக்கள்) உடன் இணைந்து காயம் கொண்ட சரும டிஸ்ஸுக்களை சுற்றி வளர உதவுகிறது. இதன் சிகிச்சைமுறை-  வாய்வழி மற்றும் மேற்பூச்சாக உபயோகிப்பது ஆகும்     , இரண்டிலுமே சரும்மத்திற்கு சமமாக பயனளிக்கும்  என  கண்டறியப்பட்டுள்ளது.
  • தீக்காயங்களை குணப்படுத்தும் திறன்: சோற்றுக்கற்றாழையின் களிம்பு; முதல் மற்றும் இரண்டாம் நிலை தீ காயங்களின்  சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக, களிம்பு பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஆய்வு, சோற்றுக்கற்றாழை வாசலின  துணியை விட தீ  காயங்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறுகிறது. சோற்றுக்கற்றாழை காயம் குணப்படுத்துவதற்க்கு எடுத்துக்கொள்ளும் சராசரியாக  நேரம்: சுமார் 12 நாட்கள்  என்று  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாசலின் துணி ,18-20 நாட்கள் எடுத்துக் கொண்டது.
  • வெங்குருவின் நிவாரணம்: சோற்றுக்கற்றாழை, கருத்துப்போன சருமத்திர்ற்கு எளிதான மற்றும் சிரமம் கொடுக்காத; ஒரு நிவாரணம் என்பதை அறிவீர்களா? கருத்துப்போன சருமத்திலிருந்த நிவாரணம் பெற, சோற்றுக்கற்றாழை என்பது முதலாவதாக நினைவ்வுக்கு வரும் ஒரு வீட்டு வைத்தியம் ஆகும் .சருமத்தை குணப்படுதுவத்தை தவிர, சோற்றுக்கற்றாழையின் களிம்பை பூசினால் ஒரு ஒரு இதமான அனுபவத்தை கொடுக்கின்றது. வெங்குருவால் பாத்திக்கப்பட்ட இடத்தில் இதை தடவும் பொது, இதற்க்கு எந்த பக்கவிளைவுகள் இருக்காது. அடுத்த முறை உங்களுக்கு வெய்யிலில் வேலை இருந்ததனால், வெங்குருவால் பாதிக்கப்பட்டு சருமம் சிவந்து போனால் சோற்றுக்கற்றாழையின் களிம்பை தடவி உடனடி நிவாரணம் பெறவும்.
  • கதிர்வீச்சின் பக்க விளைவுகளை குறைக்கிறது: நோயாளிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலான சான்றுகள் பொறுத்தவரை கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட கீமோதெரபி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சோற்றுக்கற்றாழையை திறம்பட பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. மேலும் கற்றாழை கொண்டு செய்யப்பட்ட க்ரீம்களை விட சிகிச்சையில் கற்றாழை களிம்பு மிகவும் பயனுள்ளதாகவும், வேகமாக நிவாரணம் அளிக்க கூடியதாக இருப்பதாகவும் மேலும் ஆராய்ச்சி கூறுகிறது.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

வயிறு நோய்த்தொற்று மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்த சோற்றுக்கற்றாழை - Aloe vera for stomach infections and constipation in Tamil

வயிற்றுப் பிரச்சனைகளை எவ்வளவு தொடர்ந்து எதிர்கொள்கிறீர்கள்? நீங்கள் நெஞ்சு எரிச்சலினால்  பாதிக்கப்படுகிறீர்களா? இது வீக்கமடைந்த வயிறு அல்லது ஜி..இ.ஆர்.டி (கெஸ்ட்ரோசோபாகல் ரிஃப்ளக்ஸ் நோய்) தொற்றுநோய்களின் அறிகுறிகள் ஆகும். அழற்சி குடல் நோய் (ஐபிஎஸ்) சிகிச்சைக்காக சோற்றுக்கற்றாழையின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஒரு சமீபத்திய ஆய்வு செய்யப்பட்டது; அதில் சோற்றுக்கற்றாழை வீக்கமடைந்து வயிற்றுக்கு சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. தவிர, மலச்சிக்கலைக் குணப்படுத்த கற்றாழை பரிந்துரைக்க-ப்படுகிறது, ஏனன்றால் அது ஒரு மெல்ல மலமிளக்கி. ஆயினும், சோற்றுக்கற்றாழையை பாணமாகவோ அல்லது சாறாகவோ பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது,  ஏனெனில் தேவைக்கு சோற்றுக்கற்றாழையை  பருகியதனால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஆனது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் பற்களுக்கு சோற்றுக்கற்றாழை தரும் நன்மையைகள் - Aloe vera for healthy gums and teeth in Tamil

நாம் எல்லோரும் நல்ல ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் திடமான பற்களை பெற விரும்புவோம், ஏனென்றால் ஆரோக்கியமான பளபளக்கும் சரும்மம் எந்த அளவிற்ற்கு முக்கியமோ அதே போல் வாய் ஆரோக்கியமும் அவசியம். ஆண்டிபயாடிக் நோய்கள் அதிகரித்துக்கொண்டே வருவதனால், இது ஒரு இயற்கையான மாற்று மருந்து. வாய் ஆரோக்கியத்தை பேணிப்பதற்கு இது மிகவும் அவசியமாகிறத  .ஆயுர்வேதத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் , சோற்றுக்கற்றாழையின் களிம்பு, பல் சொத்தை மற்றும் ஜிஞ்சிவிட்டீஸ் குறைக்க ஒரு பக்கவிளைவு இல்லாத தீர்வு என உறுதி அளிக்கிறது. இது வாயில் ஏற்படும் பிரச்சனைகளின் பின்னணியில் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கிறது. இதை தவிர வாயில் ஏற்படும் வாய்ப்புன்களை; சோற்றுக்கற்றாழையின் களிம்பு எளிதில் திறம்பட குணமடைய செய்கிறது

சோற்றுக்கற்றாழையின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி தன்மை - Aloe vera as an antioxidant and antibacterial in Tamil

ஒரு சமீபத்திய ஆராய்ச்சியின் படி சோற்றுக்கற்றாழையின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி தன்மையால் சருமத்தில் வரும் நுண்ணுயிர் சரும தொற்றை எதிர்க்கிறது. பாரம்பரியமாக, இது முகப்பரு, தலை பொடுகு மற்றும் பிற பொதுவான நுண்ணுயிர் தோல் நோய்த்தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இப்பொழுது இந்த துறையில் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. எனவே, எந்தவிதமான தோல் வகைக்கும், சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதற்கு முன் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகுவது நல்லது.

இதய நோய்கள், நீரிழிவு மற்றும் நரம்பியல் சம்பத்தப்பட்ட நோய்களின் அறிகுறிகளைக் கையாளுவதில், அல்லது குறைப்பதில் சோற்றுக்கற்றாழையின் பைட்டோகெமிக்கல் கலவை பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

நீரிழிவு குறைப்பதில் சோற்றுக்கற்றாழையின் பங்கு - Aloe vera for diabetes in Tamil

மூன்று வெவ்வேறு ஆய்வுகளில் சோற்றுக்கற்றாழையின் நீரிழுவு தன்மையை பற்றி சோதித்து பார்த்த பொது, சோற்றுக்கற்றாழையின் சாறை பருகினால் இரத்தத்தில் சக்கரை அளவை குறைப்பதற்கு அது பெரிதும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு பயனுள்ள, தொடரும் சிகிச்சையாக இதை பயன்படுத்த வேண்டி, அதன் பாதுகாப்பு மற்றும் அளவை சோதிக்க இறுதி ஆய்வுகள் நடத்தி கொண்டிருக்கின்றன.

(மேலும் படிக்க: நீரிழுவு)

சோற்றுக்கற்றாழை தலைமுடிக்கு தரும் நன்மைகள் - Aloe vera benefits for hair in Tamil

சோற்றுக்கற்றாழையின் ஈரப்பசை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையால் சருமத்துக்கு மட்டும் இன்றி உச்சந்தலை மற்றும் தலைமுடிக்கும் நன்மை அளிக்கிறது. இதை மென்மையாக்கும் பொருளாக பயன்படுத்தும் பொழுது தலைமுடி ஆரோக்கியத்தை பராமரித்து உச்சந்தலையின் pH சமப்படுத்தி, தலைமுடி உதிர்வதை குறைத்து, தலைமுடியை ஒளிர்வடைய செய்கிறது. ஆய்வுகளின் படி சோற்றுக்கற்றாழையின் களிம்பு, வைட்டமின் மற்றும் என்சாயிமின் ஆதார பொருள் ஆகும், இது முடி வேர்களை ஊட்டம் அளிப்பது   மட்டுமல்லாமல், முடி விரைவில் வளர உதவி செய்கிறது 

புற்றுநோய் கட்டியை எதிர்ப்பதில் சோற்றுக்கற்றாழையின் பங்கு - Aloe vera as an anti-tumor agent in Tamil

சோற்றுக்கற்றாழை களிம்பு மற்றும் சாறு இரண்டும் புற்றுநோய் கட்டியின் அணுக்கள் உருவாகாமல் எதிர்க்கும் பண்புடையவை என்றும்; வாய்-வழி மற்றும் மேற்பூச்சு இரண்டிலும் புற்றுநோய் கட்டியின் அணுக்களின்  வளர்ச்சியை தாமத படுத்தும் திறன் உடையது என்பதை, ஒரு குழு ஆராய்ச்சியில் சோத்தித்து கண்டுபிடுத்துள்ளனர். இந்த ஆய்வுகள் ஒன்றில், சோற்றுக்கற்றாழை செடியின் இத கீமோப்ரோடெக்ட்டிவ் பண்பு மற்றும் திறன் அதன் ஆக்ஸிஜனேற்ற முகவர்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் தவிர செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சில கனிமங்கலினால் உண்டாகுது என்பதை கண்டறிந்துள்ளனர். ஆய்வாளர்கள் இப்பொழுது இந்த செடியை இன்னும் பயனுள்ளதாக வளர்ப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையை கண்டுபிடிப்பதில் முன்னேறி வருகின்றனர், அது நடந்தால் இது புற்றுநோய்க்கு சிறந்த மற்றும் மலிவான மருந்தாக மாற்று மருந்தாகிவிடும்

சோற்றுக்கற்றாழையின் உபயோகித்து கொழுப்பை குறைப்பது - Aloe vera for lowering cholesterol in Tamil

சோற்றுக்கற்றாழை களிம்பு எடுத்துகொள்ளவதனால் உடலில் உள்ள "கெட்ட" அல்லது குறைந்த அடர்த்தி கொழுப்பு (எல்டிஎல்) குறைந்து உடலில் இருக்கும் "நல்ல" அல்லது உயர் அடர்த்தி கொழுப்பு (எச்டிஎல் ) அதிகரிக்கும்  என்று, இதனை பற்றி  விரிவான ஆய்வு நடத்தி கண்டறியப்பட்டுள்ளது . கெட்ட கொலஸ்டிரால் அகற்றுவதன் மூலம் ஆத்தெரோக்ளெரோசிஸ் (தமனிகளில் கொழுப்பு வைப்பு) போன்ற நோய்களின் பாதிப்பு குறைகிறது, இதனால் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க முடியும். கூடுதலாக, எல்டிஎல் கொழுப்பின் அளவு குறைந்தால்   உடல் எடையை குறைப்பது சுலபமாகுகிறது. நியூட்ரிஷனல் சயின்ஸ் மற்றும் விடமினாலஜி யின் ஜௌர்னலின்  இதழில், வெளிவந்த ஒரு ஆராய்ச்சியில், சோற்றுக்கற்றாழை  எடுத்துக்கொண்டால், கல்லீரலின் கொழுப்பு உற்பத்தி 25-30 சதவிகிதம் குறைவதகக கூறப்பட்டுள்ளது .

(மேலும் படிக்க: உயர் கொழுப்பின் சிகிசிச்சை)

சோற்றுக்கற்றாழை மிகவும் பரவலாக பயன் படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் மிக முக்கியமாக தோல் மற்றும் குடலின் நன்மைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

சோற்றுக்கற்றாழையிலிருந்து பெறப்பட்ட இரண்டு முக்கிய விஷயங்கள் இவை:

  • களிம்பு: இலையின் உள் பகுதியில் இருந்து பெறப்பட்ட தெளிவான மற்றும் மணமற்ற பொருள்.
  • மரப் பால் அல்லது சாறு: இலையின் வெளிப்புறத்தில் இருந்து பெறப் பட்ட மஞ்சள் பொருள்.

சாறு ஒரு மலமிளக்கியாக (குடல் இயக்கத்தை எளிமையாக்குவதற்கு) பயன்படுத்தப்படுகிறது, எனவே அதை தொடர்ந்து பருகுவது பரிந்துரைக்கப்படாது, ஆனால் களிம்பை அடிக்கடி பருகலாம். இலையின் இந்த பகுதி, அதிக பயன்கள் மற்றும் ஆரோக்கிய நலன்களைக் கொண்ட பகுதியாகும்.

இலைகளில் ஒரு கீறல் செய்வதன் மூலம் சோற்றுக்கற்றாழையின் களிம்பை நேரடியாக பெறலாம். ஆனாலும், பச்சை மரப் பாலோ அல்லது முழு இலையோ பருகுவது பரிந்துரைக்கப்படாது, ஏனென்றால் அது உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் ஆற்றல் கொண்டது.

சோற்றுக்கற்றாழையின் களிம்பு மற்றும் சாறு சந்தையில் செறிவூட்டப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன (நீங்கள் சந்தையில் ஒரு தரமான களிம்பை தேடுகிறீர்களானால், ‘பிளாஷ் பாஸ்சுரைசேஷன்' என்ற பெயரை லேபிள் வார்த்தையில் சரிபார்த்த பிறகே வாங்கவும், என் என்றால் இந்த வகையில்தான் அதன் மருத்துவ நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன)

களிம்பு மற்றும் சாறு போன்றவை நேரடியாகவே பயன் படுத்தப்பட்டாலும், பானமும், அழகு சாதன தொழிலிலும் அது உபயோக படுத்த படுகின்றது. பால், தேநீர், பாலேடு, மிட்டாய் தொழில், பொடிகள் (ஐஸ் கிரீம்ஸ், தயிர் மற்றும் லஸ்ஸி), முகம் கழுவும் திரவம், முக பூச்சு மற்றும் பிற தோல் பராமரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் வடிவில் இது வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. சோற்றுக்கற்றாழையின் மென்மையான களிம்பின் கூட்டு மாத்திரைகள் பருகுவதற்க்கும், சரும பயன்பாட்டிற்கும்; சந்தையில் கிடைக்கின்றன.

சோற்றுக்கற்றாழை ஒரு நல்ல காற்று சுத்திகரிப்பு பொருள் என்று நீங்கள் அறிவீர்களா? நாசாவின் ஆய்வுப்படி, இது காற்றை சுத்தமாக வைத்திருந்து, அதன் அருகில் உள்ள இடங்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்க்கு உதவும் தாவரங்களில் ஒன்றாகும்.

வீட்டில் சோற்றுக்கற்றாழை செடி வளர்ப்பது எப்படி 

சோற்றுக்கற்றாழை ஒரு கடும் தாவரம் ஆகும் (கடுமையான பருவநிலையில் சமாளித்து தன்னை தக்கவைத்துக்க கூடியது). இது வீட்டினுள் மற்றும் வெளிப்புறத்திலும் வளரும் (வெளிப்புற செடிகளை விட உட்புற செடிகள் மெதுவாக வளரும்).இதற்க்கு சரியான தண்ணி வடிகால் அமைத்து விட்டால் போதும், அதிக பராமரிப்பு தேவையில்லை, தானே வளரும். இது 12-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள வெப்ப மண்டல இடங்கள், மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் வளரும்.

நீங்கள் வசிக்கும் இடம் குளிர்ச்சியான பகுதி என்றால், நாள் முழுவதும் நேரடியாக சூரியனுக்கு கீழே வைத்து விட்டு அதை மாலையில் வீட்டினுள் கொண்டு வருவது சிறந்தது.

சோற்றுக்கற்றாழை இலையை வெட்டி துண்டுகளால் அல்லது வெட்டிய   கிளைகள் (தாய் தாவரத்தில் இருந்து வளரும் சிறிய தாவரங்கள்) மூலம் வளர்க்க முடியும். இருப்பினும், தோட்டக்காரர்கள் வெட்டிய கிளைகளில் இருந்து வளரச் செய்வது எளிது என்று கருதுகின்றனர், ஏனெனில் இலை வெட்டுக்கள் பயன்படுத்தி வளர வைப்பதில் அதிக சூட்சமம் உள்ளது.

நடவு:

  • வெட்ட வேண்டிய கிளையின் அடியில் இருந்து சிறிது மண்ணை நீக்கி விட்டு, வேர்கள் எங்கு உள்ளது என்று சரிப்பார்க்கவும்.
  • ஒரு சுத்தமான கத்தி கொண்டு, முக்கிய செடியில் இருந்து சிறிய செடியை பிரிக்கவும், அதில் வேர்கள் இருப்பதாய் உறுதி செய்யவும்.
  • இந்த புதிய செடியை ஒரு புதிய பூந்தொட்டி எடுத்து, மண்ணில் நன்கு வடிகால் அமைத்து நடவு செய்யவும்

சோற்றுக்கற்றாழை வளர வைப்பது மற்றும் பராமரிப்பது எளிது என்றாலும் அதற்க்கு வடிகால் என்பது மிகவும் முக்கியம், சரியான வடிகால் இல்லையென்றால் செடி அழிந்து விடும்.

வீட்டில் சோற்றுக்கற்றாழை களிம்பு செய்வது எப்படி?

இதில் ஒரு நல்ல விஷயம் என்பது என்றால், சோற்றுக்கற்றாழை களிம்பு மிகவும் எளிதாக சிக்கல் இல்லாமல் வீட்டிலேயே செய்ய முடியும். நீங்களே சொந்தமாக சோற்றுக்கற்றாழை களிம்பு பெற, சோற்றுக்கற்றாழை செடியின் ஒரு இலையை வெட்டி,வெட்ட பட்ட பகுதி  கீழே வரும் படி  ஒரு கிண்ணத்தில் அவற்றை வைக்கவும். அந்த இலையில் இருந்து அதன் மஞ்சள் திரவத்தைத் கசியும். அது வடிவது நின்ற பிறகு இலைகளை கழுவுங்கள். ஒரு கத்தி கொண்டு ஒரு வெட்டு இட்டு வெளி தோலை மெதுவாக குறிக்கவும். இந்த தோலை உரித்து எடுத்த பின்னர் உங்களுக்கு ஒரு தெளிவான, கண்ணாடி போன்ற களிமம் கிடைக்கும். நீங்கள் அதை உடனடியாக பயன்படுத்தலாம் அல்லது எதிர்கால பயன்பாட்டிற்காக குளிர் சாதன பெட்டியில் அதை பாதுகாக்கலாம். களிம்பை உறைவித்து ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.

சோற்றுக்கற்றாழை களிம்பை சருமத்தின் மீது எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் பூசலாம் (இயற்கையாகவே இந்த செடிக்கு ஒவ்வாமை இருக்கும் நபர்களை தவிர்த்து). தோல் கிரீம்கள், லோஷன்கள், பானங்கள் ஆகியவற்றின் அளவு, அந்த பொருளில் எவ்வளவு சோற்றுக்கற்றாழை இறக்கும் என்பதை பொறுத்தது தினசரி வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் அல்லது இரண்டு  தேக்கரண்டி கற்றாழை சாப்பிட்டு வருவது பாதுகாப்பாக கருதப்படுகிறது. அனால் வயது, பாலினம் மற்றும் அறிகுறிகள் போன்ற காரணங்களால் மருந்தின் செயல்திறன் மாறும். எனவே, உணவில் அல்லது தோல் பராமரிப்பு பழக்கத்தில் சோற்றுக்கற்றாழையை ஒரு அங்கமாக சேர்க்கும் முன் ஒரு நல்ல ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW
  • சோற்றுக்கற்றாழையின் மரப்பாலை தினசரி பருகி வருவதனால் இரைப்பை குடல் பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்புண்டு.
  • சில நபர்களு சோற்றுக்கற்றாழை உபயோகிப்பதனால் கூர்-உணர்வை  ஏற்படுத்தும் என்பதால்  எந்தவொரு வடிவத்திலும் சோற்றுக்கற்றாழை உட்கொள்வதற்கு முன்பு  மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது  சிறந்தது.
  • 12 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கற்றாழையின் களிம்பை கொடுக்கக்கூடாது, அது வயிற்று வழி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும்
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல, ஏனென்றால் கருச்சிதைவுகள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் போன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளன.
  • வெயிலில் வெளியே போகும் முன் சோற்றுக்கற்றாழையை  பயன்படுத்தினால் வெயினால் தோல் கருக்கலாம்.
  • ஏற்கனவே சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் இருந்தால், உங்கள் உணவில் சோற்றுக்கற்றாழையை சேர்க்கும் முன், பதிவு பெற்ற  ஒரு மருத்துவரிடம்  ஆலோசனை பெறவும் , இது மருந்துகளின் விளைவுகளை தடுக்கும்.

Medicines / Products that contain Aloe vera

மேற்கோள்கள்

  1. Amar Surjushe, Resham Vasani, and D G Saple. ALOE VERA: A SHORT REVIEW. Indian J Dermatol. 2008; 53(4): 163–166. PMID: 19882025
  2. Kulveer Singh Ahlawat and Bhupender Singh Khatkar. Processing, food applications and safety of aloe vera products: a review. J Food Sci Technol. 2011 Oct; 48(5): 525–533. PMID: 23572784
  3. Visuthikosol V et al. Effect of aloe vera gel to healing of burn wound a clinical and histologic study.. J Med Assoc Thai. 1995 Aug;78(8):403-9. PMID: 7561562
  4. Vinay K. Gupta, Seema Malhotra. Pharmacological attribute of Aloe vera: Revalidation through experimental and clinical studies. Ayu. 2012 Apr-Jun; 33(2): 193–196. PMID: 23559789
  5. Langmead L1, Makins RJ, Rampton DS. Anti-inflammatory effects of aloe vera gel in human colorectal mucosa in vitro. Aliment Pharmacol Ther. 2004 Mar 1;19(5):521-7. PMID: 14987320
  6. Soyun Cho et al. Dietary Aloe Vera Supplementation Improves Facial Wrinkles and Elasticity and It Increases the Type I Procollagen Gene Expression in Human Skin in vivo. Ann Dermatol. 2009 Feb; 21(1): 6–11. PMID: 20548848
  7. Fatemeh Nejatzadeh-Barandozi. Antibacterial activities and antioxidant capacity of Aloe vera. Org Med Chem Lett. 2013; 3: 5. PMID: 23870710
  8. Rajendra Kumar Gupta et al. Preliminary Antiplaque Efficacy of Aloe Vera Mouthwash on 4 Day Plaque Re-Growth Model: Randomized Control Trial. Ethiop J Health Sci. 2014 Apr; 24(2): 139–144. PMID: 24795515
  9. G Sujatha, G Senthil Kumar, J Muruganandan, T Srinivasa Prasad. Aloe Vera in Dentistry. J Clin Diagn Res. 2014 Oct; 8(10): ZI01–ZI02. PMID: 25478478
  10. Neda Babaee, Ebrahim Zabihi, Saman Mohseni, Ali Akbar Moghadamnia. Evaluation of the therapeutic effects of Aloe vera gel on minor recurrent aphthous stomatitis. Dent Res J (Isfahan). 2012 Jul-Aug; 9(4): 381–385. PMID: 23162576
  11. Yongchaiyudha S1, Rungpitarangsi V, Bunyapraphatsara N, Chokechaijaroenporn O. Antidiabetic activity of Aloe vera L. juice. I. Clinical trial in new cases of diabetes mellitus.. Phytomedicine. 1996 Nov;3(3):241-3. PMID: 23195077
  12. Ghannam N, Kingston M, Al-Meshaal IA, Tariq M, Parman NS, Woodhouse N. The antidiabetic activity of aloes: preliminary clinical and experimental observations.. Horm Res. 1986;24(4):288-94. PMID: 3096865
  13. El-Shemy HA1, Aboul-Soud MA, Nassr-Allah AA, Aboul-Enein KM, Kabash A, Yagi A. Antitumor properties and modulation of antioxidant enzymes' activity by Aloe vera leaf active principles isolated via supercritical carbon dioxide extraction. Curr Med Chem. 2010;17(2):129-38. PMID: 19941474
  14. Saini M1, Goyal PK, Chaudhary G. Anti-tumor activity of Aloe vera against DMBA/croton oil-induced skin papillomagenesis in Swiss albino mice.. J Environ Pathol Toxicol Oncol. 2010;29(2):127-35. PMID: 20932247
Read on app