உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதிலும் அதிகரிப்பதிலும் உணவுகள் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்டிஆக்சிடென்ஸ் நிறைந்த ஃப்ரஷ் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சில உணவுகள் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க காவலாளர்களாக செயல்படுகின்றன. ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த உணவு வகைகளின் பட்டியலையும் சேர்த்து பல்வேறு ஊட்ட ஊட்டச்சத்துக்களின் உணவுகளின் நன்மைகளை இந்த கட்டுரை விளக்குகிறது. சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வாழ்க்கை முறையைப் பெறுவதற்கு மற்ற குறிப்புகள் மற்றும் தீர்வுகளை இது உங்களுக்கு வழங்குகிறது.

  1. நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன - What is immunity in Tamil
  2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் - Foods to increase immunity in Tamil
  3. நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது - What to Eat to Increase Immunity in Tamil
நோயெதிர்ப்பு எப்படி அதிகரிப்பது: உணவுகள் மற்றும் வைத்தியம் டாக்டர்கள்

நுண்ணுயிரிகளை ஏற்படுத்தும் நோய்க்கு எதிராக செயல்படுவதன் மூலம் தொற்றுநோயை எதிர்ப்பதற்கு ஒரு உயிரினத்தின் ஆற்றலை நோய் எதிர்ப்பு சக்தி குறிக்கிறது. நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் (பாக்டீரியா, வைரஸ், போன்ற நோய்கள் விளைவிக்கும் உயிரினங்களுக்கு எதிரான) நடவடிக்கைகள் அல்லது உடலில் ஒரு தொற்றுக்கு எதிராக போராட உயரும் வெள்ளை இரத்த அணுக்களின் உணர்திறன் (WBC க்கள்) மூலம் இது இயக்கப்படுது.

நோய் எதிர்ப்பு சக்தி வந்து பல வகைகள் உள்ளன. இது பிறப்பிலிருந்து (உடற்கூறியல் நோய் எதிர்ப்பு சக்தி) அல்லது ஒரு நோய்க்கு வெளிப்பாட்டின் பின்னர் வாழ்க்கையின் பிற்பகுதியில் கட்டியெழுப்பப்பட்ட அல்லது ஆன்டிபாடிகளின் நேரடி நிர்வாகத்தில் (நோய் எதிர்ப்பு சக்தி பெற்றது) இருந்திருக்கும். இது இயற்கையானதாக இருக்கலாம் (நோயைக் குணப்படுத்தும் முகவருக்கு வெளிப்பாடு மூலம் அடைவது) அல்லது செயற்கை (ஒரு நோய்க்கு எதிராக தடுப்பூசி மூலம் அடைவது). இது செயலில் அல்லது செயலற்ற வகையாகவும் வகைப்படுத்தப்படுகிறது. முன்பே சொன்னதில், தடுப்பூசி தனிநபருக்கு வழங்கப்படுவதும் பிந்தையது வந்து நேரடியாக ஆன்டிபாடிகள் ஊசி போடுவதாகும்.

ஒருமுறை தொற்று ஏற்பட்டால் நோயுற்றவர்களின் உடமைகளால் நேரடி தொடர்பு அல்லது மறைமுக தொடர்பு மூலம் எளிதாக அது நபருக்கு நபர் பரவுகிறது. காற்று, தண்ணீர் துளிகள் மற்றும் பிற மீடியங்கள் மூலம் தொற்று பரவுகிறது.

குழு அல்லது சமூக நோய் எதிர்ப்பு சக்தி பிரகாரம் நோய்களுக்கு எதிராக ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு நபர் தன்னை தானே பாதுகாத்துக் கொள்வதோடு இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாக்கிறார்.

நோய்களுக்கு எதிராக தடுப்பூசியும் உயிரினங்களை ஏற்படுத்தும் நோய்களுடன் ஒரு நேரடியான சந்திப்பும் தவிர உங்கள் உணவுமுறையை சரியாக மேற்கொள்வதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், 'நோய் எதிர்ப்பு சக்தி-அதிகரிக்கும் உணவுகளை' அதிக அளவில் சேர்த்தல் என்பது சிறந்தது.

Immunity Booster
₹288  ₹320  10% OFF
BUY NOW

உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களின் பட்டியல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. இந்த உணவுகளின் விளைவுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அது எப்படி உதவுது என்பவை எல்லாம் பின்வருவனவற்றில் விவாதிக்கப்படுகின்றன.

  • புரோபயாடிக்ஸ் ஆன
    • பால் சார்ந்த பொருட்கள்- பால், சீஸ், தயிர், பால் பவுடர்
    • சோயா பால் மற்றும் அதன் தயாரிப்புகள்
    • புரோபயாடிக்குகள் நிறைந்த தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து பார்கள்
       
  • வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகள்
    • பாதாம்வேர்கடலை, ஹேசல் நட்ஸ் போன்ற நட்ஸ்சுகள்
    • சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகள்
    • கோதுமை விதை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் போன்ற வெஜிடெபில் எண்ணெய்கள்
    • வலுவான தானியவகை காலை உணவு
       
  • ஸிங்க அதிகம் அடங்கியுள்ள உணவுகள்
    • சிப்பிகள்
    • கிலாம்ஸ்
    • நட்ஸ் மற்றும் விதைகள்
    • நண்டுகள் மற்றும் இரால் போன்ற கடல் உணவுகள்
    • சிவப்பு இறைச்சி
    • முட்டைகள் மற்றும் இறைச்சி
       
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆன
    • சால்மன், சூரை, கவலை, ஹெர்ரிங், அயலா மற்றும் பிற இனங்கள் போன்ற மீன்கள்
    • மீன் எண்ணெய்
    • சியா விதை, ஆளி விதைகள் மற்றும் வால் நட்ஸ்கள் போன்ற நட்ஸ்கள் மற்றும் விதைகள்  
    • ஆளி விதை எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய்
    • தானியங்கள், பழச்சாறுகள், பால் மற்றும் சோயாப் பானங்கள் போன்ற வலுவான உணவுகள்
       
  • வைட்டமின் ஏ அதிகம் அடங்கியுள்ள உணவுகள் ஆன
    • கேரட், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு பெல் மிளகுத்தூள், ஸ்குவாஷ் போன்ற நிறமிகளைக் கொண்ட காய்கறிகள்
    • மாம்பழங்கள் மற்றும் ஆப்ரிகோட்கள் போன்ற பழங்கள்
    • சீஸ், தயிர், போன்றவை அடங்குகிற பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற பால் பொருட்கள்
       
  • இரும்புச்சத்து அதிகம் அடங்கியுள்ள உணவுகள் ஆன
    • லீன் இறைச்சி
    • லீன் கோழி இறைச்சி
    • பசலைக் கீரை, ப்ரோக்கோலி, ஸ்குவாஷ், கீரை போன்ற பச்சை காய்கள்
    • தானியங்கள்
    • பீன்ஸ், பட்டாணி, முளைகள் போன்ற பயிறு வகைகள்
    • முழு தானியங்கள்
       
  • செலினியம் அதிகம் அடங்கியுள்ள உணவுகள் ஆன
    • டுனா, இறால், வான்கோழி, கோழி
    • வாழைப்பழங்கள்
    • அரிசி
    • ரோட்டி, ரொட்டி போன்ற முழு கோதுமை பொருட்கள்
    • உருளைக்கிழங்கு

உங்கள் உணவில் இந்த உணவுகள் உள்ளிட்டவை தவிர, உங்கள் தினசரி தேவைகள் பூர்த்தி செய்ய, ஒவ்வொரு நாளும் போதுமான கலோரி கொண்ட ஒரு சீரான உணவை உட்கொள்வதை பரிந்துரைக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்ப்பதோடு நோயெதிர்ப்பு செயல்பாட்டை பராமரிப்பதற்கும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு புரோபயாடிக்ஸ் - Probiotics for immunity in Tamil

ஒரு ஆரோக்கியமான உடல் வந்து குடலில் இருந்து தொடங்குகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கான திறனை உணவுகள் கொண்டிருக்கின்றன என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடும்போது நோயெதிர்ப்பு சக்திகள் அல்லது ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றுநோய்களுக்கும் நோய்களுக்கும் அதிகமாக பாதிப்படைகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உணவுமுறை ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது, ஏனென்றால் அது உங்கள் குடல் நுண்ணுயிரிகளை நேரடியாக பாதிக்கிறது (வயிற்றில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொகை). நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக வயிற்றுப் தோல் மேல்புறச் செல் பாதுகாப்பு அளிக்க உதவுகிறது. எனவே, இந்த புறணி பாதிக்கப்பட்டால், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. புரோபயாடிக்குகள் போன்ற சில உணவுகள் வயிற்றில் இந்த பாக்டீரியா வளர்ச்சியின் மீது நேரடியான விளைவைக் கொண்டுள்ளன. ஆனால், இது புரோபயாடிக் உட்கொண்ட வகையையும் அதன் செறிவு வகைகளையும் சார்ந்துள்ளது.

ஆரோக்கியமான நபர்களில் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நன்மையளிக்கும் 'நல்ல பாக்டீரியா'வின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக புரோபயாடிக்குகள் அறியப்படுகிறது. புரோபயாடிக்குகளை எடுத்துக்கொள்வது மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு ஆஸ்துமா போன்ற மேல் சுவாசக் குழாய் நோய்கள் மற்றும் அட்டோபிக் தோலழற்சி போன்ற ஒவ்வாமைகளை குறைப்பதில் உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

தோல் நுண்ணுயிரியலை மேம்படுத்துவதாகவும் புரோபயாடிக்குகள் அறியப்படுகின்றன. இது தோல் பாதுகாப்பு முறைமையை அதிகரிக்க உதவுகிறது. எனவே, உங்கள் உணவில் புரோபயாடிக் உணவுகளை சேர்ப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கக்கூடும். இயற்கை உணவுகளில் (இது ஏற்கனவே உங்கள் உணவில் ஒரு பகுதியாக இருக்கலாம்) அவை உள்ளன. அவை சப்லிமெண்ட் ஆகவும் கிடைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் - Vitamins and minerals for immunity in Tamil

புரோபயாடிக்குகள் தவிர, பல வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் வந்து உடலின் நோயெதிர்ப்பு மறு பதில், குறிப்பாக வைட்டமின் ஈ மற்றும் ஸிங்க்கினை மேம்படுத்துகின்றன என அறியப்படுது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி-அதிகரிக்கும் வழிமுறைகளின் உயிரணு சவ்வுகளை பாதுகாப்பதன் மூலம் இந்த வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் செயல்படுகின்றன என்று ஆராய்ச்சி சான்றுகள் கூறுகின்றன.

ஒரு நோயெதிர்ப்பு மறு பதில் தரும் பல்வேறு உணவுகள் உட்கொள்ளும் வழிமுறையை தீர்மானிக்க சுதந்திரமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. புரோபயாடிக்குகள் போன்ற லாக்டிக் அமிலம் பாக்டீரியா கொண்ட உணவுகள் வந்து நோயெதிர்ப்புக்கு எதிரான நோய் எதிர்ப்புத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் செயல்படுகிறது என்று முடிவு செய்யப்பட்டது. மறுபுறம், நோய் எதிர்ப்பு சக்தி பெற்ற நபரில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்களை செயல்படுத்துகிறது.

இதை தவிர, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்களை அதிக அளவில் நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளில் தொற்று எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இந்த வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் சுயாதீன நடவடிக்கைகளை கீழே விவாதிக்கப்பட்டுள்ளது:

வைட்டமின் ஏ, குறிப்பாக பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் வந்து உடலில் உள்ள ஹ்யூமரல் மற்றும் செல்-மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியை (நோயெதிர்ப்புக்கு எதிரான நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்த உடல் உறுப்புகள் செயல்படுத்துதல்) பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ இன் குறைந்த சீரம் செறிவு வந்து நோய்கள் ஏற்படுத்துகிற உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடு பாதிப்புடன் தொடர்புடையது. இந்த செயல்பாட்டில் பீட்டா-கரோட்டின் குறிப்பிட்ட பாத்திரம் நன்கு புரிந்து கொள்ளவில்லை.

வைட்டமின் சி நிறைந்த உணவுகளின் நேரடி நோய் எதிர்ப்பு பாதுகாப்பு விளைவுகள் அல்லது அஸ்கார்பிக் அமிலத்துடன் உள்ள சப்லிமெண்ட்டுகள் அல்லது வைட்டமின் சி தெளிவாக இல்லை, ஆனால் அதன் ஆண்டி-ஆக்ஸிடண்ட் பண்புகள் இந்த விஷயத்தில் உதவியாக இருக்கும். வைட்டமின் சி ஃப்ரீ ரேடியல்களின் விளைவால் உடல் செல்கள் மற்றும் திசுக்களுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க உதவுகிறது. அவை தோலுக்கு சேதம் உருவாக்குவதிலிருந்து தடுக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி உத்தரவாதத்துக்கு இந்த உறுப்புகளையும் திசுக்களையும் உகந்த செயல்பாட்டை பராமரிப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

செல்-மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியை செலினியம் ஊக்குவிப்பதோடு நோய்க்கு எதிராக உடலின் எதிர்வினைகளை மேம்படுத்துகிறது. அப்புறம் விஷத்தன்மை அழுத்தம் தரும் நோய்களுக்கு  குளுட்டமைன் (அமினோ அமிலம்) தடுக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு சமச்சீரான உணவு - Balanced diet for immunity in Tamil

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஒரு நீண்ட நேரம் செல்ல ஒரு சமச்சீரான உணவுமுறையால் தான் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். ஏனெனில் இது 'பாதுகாப்பு உணவுகள்' பெரும்பாலானவற்றில் நிறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி குறைபாடுகளையும் தடுக்கிறது. அதனால் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளிட்ட சமச்சீரான உணவை பரிந்துரைக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு கொழுப்புகள் - Fats for immunity in Tamil

உங்கள் உடலில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ இன் உறிஞ்சுதலுக்கு உதவும் கொழுப்புகள் வந்து உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாடுகளில் மறைமுக பாதிப்பைக் கொண்டுள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புரோபயாடிக்குகளின் செயல்திறனை அதிகரிக்கின்றன. அவை உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. கொழுப்பு அமிலங்கள் வந்து எதிர்ப்பு அழற்சி  (அழற்சி, அதாவது, சிவத்தல் மற்றும் வீக்கத்துக்கு எதிராக பாதுகாப்பு) எனவும் அறியப்படுது. எனவே, உங்கள் உணவில் உள்ள கொழுப்புகளின் சரியான வகை மற்றும் அளவு ஆகியவற்றை கொண்டுள்ளதாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கு உட்படுத்துவதற்கு நல்லது. இந்த தேவைகளுக்கு உங்கள் டயட்டீசியனுடன் கலந்து ஆலோசனை பெறுங்க.

நோய் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து - Iron for immunity in Tamil

நோய் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து ஒரு நல்ல பங்கு உள்ளது. ஏனெனில் அதன் குறைபாடு பொதுவாக ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நிலைமையுடன் தொடர்புடையது. இரும்புச் சத்து குறைபாடு வந்து செல்-பதப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மீது விளைவைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நாக்கில் ஏற்படும் அழற்சி  (நாக்கு அழற்சி), வாய்வழி கேண்டிடியாஸிஸ், வாய்வழி அல்சர் போன்ற வாய்வழி காவிட்டி தொடர்புடைய தொற்றுநோய்களுக்கு ஏற்புத்தன்மையை அதிகரிக்கிறது.

ஒவ்வொரு நாளும், நீங்கள் காற்று, நீர், மண், தூசு மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து எண்ணற்ற நோய்க்காரணிகளுக்கு உங்களை வெளிப்படுத்தியும் நீங்கள் வியாதிஸ்த்தர் ஆவதில்லை. இது வந்து உங்கள் சருமத்தின் மேற்புறத்தில் உள்ள எப்பிதேலியத்தில்  (மேற்புறத்தில் உள்ள லேயர்) உடல் பாதுகாப்பு வழிமுறையும் உங்கள் குடலின் புறணி ஆகியவை உங்களை பாதுகாக்க கடினமாக உழைக்கின்றது. பின்வரும் வழிகளில் உங்கள் உணவைத் தவிர வேறு காரணிகளால் இந்த வழிமுறைகளின் செயல்பாடு அதிகரிக்கப்படலாம்:

புகைத்தல் நிறுத்தப்படுதல் - Cessation of smoking in Tamil

சிகரெட்டுகளில் நிகோடின் இருக்கின்றன. இதில் நோயெதிர்ப்பு செயல்களை குறைக்கும் பொருள் உள்ளது. அதாவது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. ஆகையால் அது உங்களை நோய்களுக்கும் தொற்றுகளுக்கும் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குகிறது. இது உங்கள் எப்பிதேலியல் காயத்தால் ஏற்படுகிறது. உங்கள் எப்பிதேலியல் நோயெதிர்ப்பு மறு பதில் அளிப்பதை உடைப்பதிலிருந்து ஏற்படுகிறது.

புகைப்பிடித்தல் பொதுவாக மேல் சுவாசக் குழாய் நோய்த்தொற்றுகளின் ஆபத்துடன் தொடர்புடையது. குறிப்பாக ஆண்களில் நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணி எனவும் அது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயானது நோயெதிர்ப்பினை அடக்குவது என அறியப்படுவதொன்று. அது தனிநபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிப்பதுடன் நோய்த்தொற்றுகளின் சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.

 (மேலும் வாசிக்க: ஆஸ்துமா அறிகுறிகள்)

உடற்பயிற்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி - Exercise and immunity in Tamil

உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சியானது நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. உடல்ரீதியாக செயலில் உள்ள நபர்கள் மற்றும் சிறந்த வாழ்க்கைத்திறன் உள்ளவர்கள் நோயுற்றவர்களாக இருக்கும் காரணமே இதன் உண்மைதான். ஆனால், நோய்களிலிருந்து அவர்களை என்ன வழிமுறைகள் பாதுகாக்கிறது?

உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி அளவு அதிகரிப்பு வந்து சுழலும் ஆண்டிபாடிகள் மற்றும் WBcs இன் அதிகரித்த அளவை மேம்படுத்துகிறது என ஆராய்ச்சி ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இது உங்கள் உடலில் ஒரு பாதுகாப்பு செயல்பாடாக விளங்குகுறது. இது தொற்று முகவர் ஆரம்ப அறிகுறிக்கும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு செயல்பாடுக்கும் உதவுகிறது.

மேலும், உடலின் செயல்பாடு, உடலில் உள்ள வெப்பநிலைகளை மெதுவாக ஏற்றுகிறது. அது நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு சாதகமற்றதாக இருக்கலாம். இதனால் தொற்றுநோயைக் குறைக்கும் வாய்ப்பும் உள்ளது. உற்சாகமான உடற்பயிற்சிகள் வந்து உங்கள் உடலிலுள்ள காற்று மற்றும் நுரையீரல்களால் பாக்டீரியாவை வெளியேற்றுவதற்கும் அனுமதிக்கக்கூடும். இதனால் சுவாச பாதிப்பு மற்றும் பிற நோய்களின் வாய்ப்புகளை குறைக்கின்றன. கார்டிசோல் அல்லது நெருக்கமாக தொடர்புடைய நோயெதிர்ப்பு செயல்பாடு குறிக்கும் மன அழுத்தம் ஹார்மோன் அளவுகளை குறைக்க உடற்பயிற்சி உதவுகிறது என மற்றொரு கோட்பாடு அறிவுறுத்துகிறது.

உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க உங்கள் தினசரி உடற்பயிற்சிகளில் உடல் செயல்பாடுகளை எவ்வாறு சேர்க்கலாம் என்பதை இங்கே காணலாம்:

  • ஒரு 30 நிமிட சுறுசுறுப்பான நடை அல்லது ஓடுதல்
  • சைக்கிள் ஓட்டுதல் அல்லது மலையேற்றம் செய்தல்
  • குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது
  • பயிற்றுவிப்பாளரின் உதவியுடன் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி அமர்வுகளை பயிற்சி செய்தல்
  • ஏரோபிக்ஸ் அல்லது ஜம்பா
  • நடனம்
  • யோகாசனம்
  • குறுகிய தூரத்திற்கு நடைபயிற்சி மற்றும் எலிவேட்டரை பயன்படுத்தாமல் மாடிப்படிகளைப் பயன்படுத்துதல்

ஆரோக்கியமான நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதில் இந்த பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும். நோயெதிர்ப்பு சமரசம் அல்லது நீடித்த நோய்கள் அல்லது தொற்று நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், எந்தவொரு உடல்ரீதியான செயல்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது என்பது பரிந்துரைக்கப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சிகளையும் கடுமையான பயிற்சிகளையும் எல்லா நேரங்களிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் முடிவுகள் வந்து எதிர்நோக்குவதாக இருக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன அழுத்தம் - Immunity and stress in Tamil

மன அழுத்தம்  வந்து நோய் எதிர்ப்பு செயலிழப்பு ஏற்படுத்தலாம். இது அழுத்தத்தின் வகை  (மன அழுத்தம் காரணமாகும் வகை) மற்றும் வெளிப்பாட்டின் காலம் படி வேறுபடுகிறது. இது சில நபர்களில் ஒரு நோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். எனவே, தியானம், ஓய்வு மற்றும் யோகா உதவியுடன் உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பது வந்து உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு தூங்குதல் - Sleep for immunity in Tamil

போதுமான இரவில் தூக்கத்தின் நன்மைகள் வந்து நல்ல உடல் செயல்பாடுகளுக்கும் சோர்வு குறைப்பதற்கு உதவுகிறது என அறியப்படுகிறது. நோய் எதிர்ப்பு செயல்பாட்டுடன் அதன் உறவை பற்றி ஆராய்ச்சி ஆதாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. சரியான தூக்கம் நோயெதிர்ப்பு நினைவகத்தை செயல்படுத்துவதில் பயனளிக்கும். அதற்கு எதிரான நோய் தடுப்பு உருவாகும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு மீண்டும் மீண்டும் வெளிப்பாட்டின் மீது பொருத்தமான நோயெதிர்ப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாகும். குறைந்த நேர தூக்கம் மற்றும் சர்க்காடியன் ரிதத்தின்  (தூக்கத்திற்கான பொறுப்புள்ள உயிரியல் கடிகாரங்கள்) அசாதாரணம் வந்து நோய் எதிர்ப்பு குறைபாடினை ஏற்படுத்தலாம். எனவே, நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த 7 முதல் 10 மணிநேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

 (மேலும் வாசிக்க: தூக்கமின்மை சிகிச்சை)

நோய் எதிர்ப்பு சக்திக்கு யோகா - Yoga for immunity in Tamil

யோகா வந்து பல்வேறு உடல் செயல்பாடுகளில் நன்மைகள் பயக்கும் காரணமாக, யோகா வந்து இந்தியாவில் பண்டைய காலங்களில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமானம், சுவாசம், தோற்றத்தை ஒழுங்குபடுத்துவதுடன் ஒரு வலிமையான மன அழுத்தம் போக்கக்கூடிய ஒன்றாகும். நோயெதிர்ப்பு செயல்களை குறைக்கக்கூடிய மன அழுத்தமானது அனுலோம் விலோம் போன்ற யோகா நுட்பங்களை தினமும் பயிற்சி செய்யும் போது மன அழுத்தத்தை எளிதாக கையாளலாம். அனுலோம் விலோம் வந்து ஒரு எளிய மாற்று மூச்சு நுட்பமானது. இது உடலில் ஆற்றல் அல்லது பிராணா ஓட்டத்திற்கு பொறுப்பானது. இந்த நுட்பத்தால் அடையப்படும் மன அழுத்த குறைப்பு வந்து ஆரோக்கியமான நபர்களில் நோயெதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்த உதவலாம்.

Dr. Dhanamjaya D

Dr. Dhanamjaya D

Nutritionist
15 Years of Experience

Dt. Surbhi Upadhyay

Dt. Surbhi Upadhyay

Nutritionist
3 Years of Experience

Dt. Manjari Purwar

Dt. Manjari Purwar

Nutritionist
11 Years of Experience

Dt. Akanksha Mishra

Dt. Akanksha Mishra

Nutritionist
8 Years of Experience

மேற்கோள்கள்

  1. Alberts B, Johnson A, Lewis J, et al. Molecular Biology of the Cell. 4th edition. New York: Garland Science; 2002. Innate Immunity.
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Immunity Types
  3. Maria Kechagia et al. Health Benefits of Probiotics: A Review. ISRN Nutr. 2013; 2013: 481651. PMID: 24959545
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vitamin E
  5. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Zinc.
  6. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Omega-3 Fatty Acids.
  7. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Vitamin A.
  8. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Selenium.
  9. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Immune system explained
  10. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Exercise and immunity
  11. Jennifer N. Morey, Ian A. Boggero, April B. Scott, Suzanne C. Segerstrom. Current Directions in Stress and Human Immune Function. Curr Opin Psychol. 2015 Oct 1; 5: 13–17. PMID: 26086030
  12. Luciana Besedovsky, Tanja Lange, Jan Born.Sleep and immune function. Pflugers Arch. 2012 Jan; 463(1): 121–137. PMID: 22071480
Read on app