நீங்கள் உங்கள் உடலில், குறிப்பாக முகம் மற்றும் கைகளில் கரும்புள்ளிகளைக் கவனிக்கும் போது, ஒரு மாசு மருவற்ற சருமம் என்பது நெடுந்தொலைவில் இருக்கின்ற கனவு போல் தோன்றக் கூடும். உங்கள் உடலில் ஒன்று அல்லது அனைத்துப் பகுதிகளிலும் பல கரும்புள்ளிகள் தோன்றுவது, நிறமேற்றம் அல்லது உயர்நிறமேற்றம் என அறியப்படுகிறது. இது, பாலினம், வயது, மற்றும் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக் கூடும்.

சூரிய ஒளியில் நீண்ட நேரம் பாதுகாப்பு இன்றி இருப்பது, நிறமேற்றத்துக்கான மிகவும் வழக்கமான காரணம் ஆகும். இருந்தாலும், உங்கள் உடலில் நிறமேற்றம் ஏற்படக் காரணமாக, ஹார்மோன் மாறுபாடுகள், கருத்தரிப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (டெட்ராசைக்கிளின்கள்), ரோமம் நீக்குதல், ஒவ்வாமை, கருத்தடை மாத்திரைகள், மரபணு கோளாறுகள், வைட்டமின் பற்றாக்குறை (வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம்), தோல் அழற்சி, வேதியியல் அல்லது உடலியல் காயங்கள் போன்ற மற்ற பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.

நிறமேற்றத்துக்காக, நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய ஏராளமான வீட்டு மருத்துவங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உங்கள் சருமத்தில் எந்த ஒரு பரிசோதனையும், குறிப்பாக உங்கள் உடல்நிலை மோசமாக இருக்கும் பொழுது, செய்து பார்ப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அடியில் மறைந்து இருக்கும் தீவிரமான மருத்துவப் பிரச்சினைகளைக் கண்டறிய, ஒரு மருத்துவரைப் பார்ப்பது எப்போதும் அறிவுறுத்தப்பட்டாலும், நீங்கள் வீட்டிலேயே நிறமேற்றத்தைப் போக்குவதற்கான, ஒரு சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் இயற்கையானவையாக இருக்கின்றன மற்றும் இவற்றை, உங்கள் தினசரி சரும பராமரிப்பின் ஒரு பகுதியாகப் பயன்படுத்த இயலும் என்றாலும், இந்த நிவாரணம் உங்கள் சரும வகைக்குப் பொருந்துகின்றதா எனப் பார்ப்பதற்கு, உங்கள் முழங்கையின் மீது சிறிதளவு தடவி, மாதிரி சோதனை செய்து கொள்வது எப்போதும் மிக நல்லது. மாதிரி பரிசோதனையின் போது, எந்த ஒரு நிவாரணி சிவந்து போதல், அரிப்பு அல்லது எரிச்சல் உணர்வு போன்றவற்றை ஏற்படுத்துகின்றதோ, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் உங்களை அறிவுறுத்துகிறோம். ஏனென்றால் அது, அந்த நிவாரணியில் பயன்படுத்தப்படும் உட்பொருட்களுக்கு எதிரான உணர்திறன் மிக்கதாக, உங்கள் சருமம் இருப்பதைக் காட்டுகிறது.

 1. நிறமேற்றத்துக்கான வீட்டு வைத்தியங்கள் - Home remedies for pigmentation in Tamil
 2. நிறமேற்றத்துக்காகப் பழத்தினாலான முகத்திரை - Fruit masks for pigmentation in Tamil
 3. நிறமேற்றத்துக்கான மூலிகை முகத்திரைகள் - Herbal masks for pigmentation in Tamil
 4. நிறமேற்றத்திற்காக சாப்பிடும் உணவுகள் - Foods to eat for pigmentation in Tamil
 5. நிறமேற்றத்தை எவ்வாறு நீக்குவது: குறிப்புகள் - How to remove pigmentation: tips in Tamil
முகத்தில் நிறமேற்றத்தை எவ்வாறு குறைப்பது டாக்டர்கள்
 • பச்சையான உருளைக்கிழங்கு

பச்சையான உருளைக்கிழங்குகள், உங்கள் தோலில் மெலனின் உற்பத்தியைக் குறைக்கின்ற கேட்டேசோலஸ் என்ற அற்புதமான நொதியைக் கொண்டிருக்கின்றன. கூடவே அவை, சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வைட்டமின் சி-யையும் கொண்டிருக்கின்றன.

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் ஒரு உருளைக்கிழங்கை சீவி, அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து, ஒரு வட்ட வடிவ இயக்க முறையில் பாதிக்கப்பட்ட தோல் பகுதியின் மீது தேய்க்க வேண்டும். நான்கு வார காலத்துக்கு, ஒரு நாளுக்கு 2-3 முறைகள் இதை செய்து வருவது, உங்கள் நிறமேற்றம் ஏற்பட்ட தோலை வெண்மையாக்கும். 

 • ஆப்பிள் சாறு வினிகர்

கரிம அமிலங்கள் என்பவை, உயிர் வாழும் உயிரினங்களில் இருந்து, குறிப்பாகத் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் அமிலங்கள் ஆகும். தோல் பிரச்சனைகளுக்கான கரிம அமிலத்தின் பயன்பாடு குறித்த ஒரு ஆய்வு, மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஒலீயிக் அமிலம் போன்ற கரிம அமிலங்கள், தோல் நிறமேற்றத்தினைக் குறைப்பதில் உதவிகரமாக இருக்கின்றன எனத் தெரிவிக்கின்றது.  தோல் நிறமேற்றத்தினை நீக்க மிகவும் உதவிகரமாக இருக்கும் ஆப்பிள் சாறு வினிகர், அது போன்ற பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

ஒரு கோப்பை அளவு ஆப்பிள் சாறு வினிகரை அதே அளவு தண்ணீருடன் சேர்த்து, அதைக் கொண்டு நிறமேற்றம் ஏற்பட்ட தோல் பகுதியைக் கழுவவும். 10-15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். இதை நான்கு வார காலத்துக்கு, தினமும் இரண்டு முறை செய்யவும்.

 • சிவப்பு வெங்காயம்

சிவப்பு வெங்காயத்தில் இருக்கின்ற தோல்-வெண்மையாக்கும் காரணிகள் பற்றிய ஒரு ஆய்வில், அது, டைரோசினஸ் நொதியைத் தடை செய்யம் திறனையும் மற்றும் மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் திறனையும் கொண்டிருக்கிறது என கண்டறியப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அது நிறமேற்றத்தைக் குறைக்க உதவுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் ஒரு வெங்காயத்தை உரித்து, அதை நிறமேற்றம் ஏற்பட்ட பகுதியில் தடவலாம் அல்லது வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றினை வெளியே எடுக்கலாம். அந்த சாறை தினமும் ஒருமுறை நிறமேற்றம் ஏற்பட்ட தோலில் தடவி, 10 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடவும். வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். பாதிக்கப்பட்ட சருமத்தில் மாற்றங்களைக் காணும் வரை, இதைத் தொடர்ந்து செய்யவும். வெங்காயத்தைப் பயன்படுத்திய பிறகு உங்கள் கைகளைக் கழுவுவதை உறுதி செய்து கொள்ளவும். ஏனென்றால், தவறுதலாக உங்கள் கண்களுக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். 

 • பாதாம் பருப்பு

பாதாம் பருப்புகள், நமது தோலின் மீது ஒரு மாயாஜாலம் போல வேலை செய்யும் வைட்டமின் இ மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளின், செறிவான ஒரு ஆதாரமாக இருப்பதால் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. அவை, தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயன்படுத்தப்படும் மிகவும் பழமை வாய்ந்த முறைகளில் ஒன்று ஆகும். ஆரோக்கியத்தின் மீதான பாதாம் பருப்புகளின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்துக்கணிப்பு, அவை அழற்சிக்கு உள்ளான தோலை, அதே போல் தழும்புகளை, புத்துணர்ச்சியூட்டக் கூடிய மற்றும் இதமளிக்கக் கூடிய பண்புகளைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகிறது.  

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் இரவு முழுவது 5-6 பாதாம் பருப்புகளை நீரில் ஊற வைத்து, காலையில் அவற்றின் தோலை உரித்து விடவும். அம்மிக் கல்லின் உதவியுடன் அவற்றை நன்றாக நொறுக்கி, ஒரு பசை போன்ற தன்மை கிடைக்கும் கிடைக்கும் வரை, அதனுடன் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளவும். சுத்தமான கைகளால் இந்த பசையை எடுத்து, அதை பாதிக்கப்பட்ட தோலின் மீது தடவி, 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரினால் கழுவவும். இதை அடுத்த 3-4 வாரங்களுக்கு செய்யவும்.

 • சிவப்பு பருப்புகள்

சிவப்பு பருப்புகளும் வெண்மையாக்கும் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் அவை உங்கள் நிறமேற்றம் ஏற்பட்ட தோலை வெண்மையாக்குவதில் திறன்மிக்கவையாக இருக்கின்றன.

எவ்வாறு பயன்படுத்துவது?

இரவு முழுவதும், ஒரு கிண்ணம் நிறைய சிவப்பு பருப்புகளை ஊற வைக்கவும். காலையில், அவற்றை பசை போன்று வருமாறு நன்கு அரைத்து, அத்துடன் இரண்டு கரண்டிகள் பால், அரை தேக்கரண்டி தேன், சிறிதளவு மஞ்சள் ஆகியவற்றை சேர்க்கவும். உங்கள் முகத்தில் இந்தப் பசையைத் தடவிக் கொண்டு, அரை மணி நேரத்துக்கு அப்படியே வைத்திருக்கவும். பின்னர் அதனைக் கழுவி விடவும். வெளிப்படையாக பலன்கள் தெரிவதற்கு, ஒரு மாதத்துக்கு இந்த முறையைப் பயன்படுத்தவும்.

 • தயிர்

2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட, "தோலின் மீதான நொதிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களின் விளைவுகள்" என்ற ஒரு ஆய்வு, தயிர் உட்கொள்ளும் போது, அது ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது மற்றும் கூடவே தோலின் மீது தடவும் போதும் பயன்மிக்கது எனத் தெரிவிக்கிறது. இதனால், இந்த முகத்திரை, உங்கள் சருமத்துக்கு பல்வேறு வழிகளில் நன்மை அளிக்கும். தயிர் சருமத்துக்கு இதமளித்து வெண்மையாக்குகிறது மற்றும் எலுமிச்சை, வெண்மையாக்குதல் மற்றும், கரும்புள்ளிகளைக் குறைப்பதில் உதவுகின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

இரண்டு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர் அல்லது இன்தயிர், அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துண்டு மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அதனை சேர்த்து கலக்கி ஒரு பசையை உருவாக்கி, அதை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை விட்டு விடவும். உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். இந்த முகத்திரையை நான்கு வாரங்களுக்குப் பயன்படுத்தவும்.

 • பசுமை தேநீர்

"தோலின் மீதான பசுமை தேநீர் பாலிஃபினல்களின் பாதுகாப்பு செயல்முறைகள்" மீதான நச்சுத்தன்மை ஆய்வு மற்றும் செல்களின் வாழ்நாள் பற்றிய ஒரு கட்டுரை, பசுமை தேநீர், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஃபுளோவோனாய்ட்களை கொண்டிருக்கிறது எனது தெரிவிக்கிறது. இந்த கேட்டசின்கள், டைரோசின் நொதியின் செயல்பாட்டைத் தடை செய்கிறது மற்றும் மெலனின் உருவாவதைத் தடுக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு பசுமை தேநீர் பையை போடவும். இதற்காக நீங்கள் பசுமை தேயிலைகளையும் பயன்படுத்தலாம். 1-2 நிமிடங்கள் தேநீர் கொதித்த பிறகு, தேநீர் பையை எடுத்து விடவும் அல்லது இலைகளை வடிகட்டி விடவும். ஒரு மாத கால அளவுக்கு, பசுமைத் தேநீரை தினமும் குடிக்கவும் மற்றும் பயன்படுத்தப்பட்ட தேநீர் பையைக் கொண்டு, உங்கள் தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும். தண்ணீரைக் கொண்டு கழுவி விடவும்.

 • சோயா பீன்ஸ்

நிறமேற்றத்தை எதிர்ப்பதன் மீதான, சோயா பால் மற்றும் சோயா பீன்ஸ் சாற்றின் விளைவைப் பற்றிய ஒரு ஆய்வு, இந்த பொருட்களை உட்கொள்வது அல்லது சோயா பீன்ஸ் சாறை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவிக் கொள்வது, நிறமேற்றத்துக்கு இயற்கையான ஒரு மாற்று நிவாரணமாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

தினந்தோறும் ஒரு டம்ளர் சோயா பால் அருந்தவும் அல்லது தோலில் நிறமேற்றம் ஏற்பட்டு இருக்கும் பகுதியில் சோயா பீன்ஸ் சாறை தினந்தோறும் தடவவும். சோயா பீன்ஸ் சாறு வழக்கமாக, மருந்துக்கடைகளில், அழகு சாதன பொருட்கள் கடைகளில் மற்றும் இணையதள விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றது. தயாரிப்பாளரால் கூறப்பட்டுள்ள படி, அந்தப் பொருளை பயன்படுத்தவும். பயன்படுத்தும் விதங்கள் பற்றிய விவரம், தடவும் முறை மற்றும் கால அளவு ஆகியவை, வழக்கமாக அந்த பொருளுடனே வழங்கப்பட்டுள்ள படி, பயன்படுத்தப்பட வேண்டும்.

 • எலுமிச்சை

ஒரு சில ஆய்வு கட்டுரைகள், எடுத்துக்காட்டுக்கு " மனித நோய்களில் இயற்கை தேனின் பாரம்பரிய மற்றும் நவீன பயன்கள்" மற்றும் "செயல்திறன் மிக்க, இயற்கையான வளர்சிதை மாற்ற பண்புகளின் புதையலைக் கொண்ட, மனித ஆரோக்கியத்துக்கு நன்மைகளைத் திறம்பட அளிக்கின்ற சிட்ரஸ் பழங்கள்" போன்ற கட்டுரைகள், அவற்றின் சருமத்துக்கான நன்மைகளைப் பற்றிய ஒரு குறிப்பினைக் கொடுக்கின்றன. இந்த ஆய்வுகள், எலுமிச்சை மற்றும் தேன் இரண்டும், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, உரிந்து விடுதல், மெலனோஜெனிசிஸ் எதிர்ப்பு (மெலனின் உருவாவதைத் தடுத்தல்), மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன. அவை நிறமேற்றத்தைப் போக்க, அழற்சியைக் குறைக்க மற்றும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக, பொலிவாக மற்றும் பளபளப்பாக ஆக்க உதவுகின்றன.

எவ்வாறு பயன்படுத்துவது?

ஒரு தேக்கரண்டி அளவுக்கு தேன் மற்றும் அதே அளவு எலுமிச்சை சாறு இரண்டையும் நீங்கள் பயன்படுத்தி, அவற்றை நன்கு கலந்து, அதனை ஒரு பருத்தி பஞ்சில் ஒற்றிக் கொள்ளுங்கள். இதற்கு பிறகு, இந்த பஞ்சினைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில், வட்டமான இயக்கத்தில் மென்மையாக கைகளால் ஒத்தடம் கொடுங்கள், பிறகு அதே இடத்தில், அதை 15-20 நிமிடங்கள் வரை வைத்து இருங்கள். நீங்கள் இதை 3-4 வாரங்கள் கால அளவுக்கு, ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். நீங்கள் இதனை ஒரு தினசரி நடைமுறை அடிப்படையிலும் பயன்படுத்த முடியும். ஏனென்றால், இதில் பயன்படுத்தப்படும் உட்பொருட்கள் இயற்கையானவை ஆகும்.

 • வெள்ளரி

வெள்ளரி, வைட்டமின் ஏ மற்றும் சி, மற்றும் கேரோட்டேன்கள் ஆகியவை தோன்றக் காரணமாகிற, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மைகளைக் கொண்டிருக்கிறது. வெள்ளரியில் உள்ள ஸியாஸ்க்ஸன்தின் மற்றும் லுட்டெய்ன் ஆகியவை, சருமத் துளைகளை சிறிதாக்கவும், சருமத்துக்கு ஒளியூட்டவும் மற்றும் இறந்த சரும செல்களை நீக்குவதற்கும் உதவுகின்றன.

எவ்வாறு பயன்படுத்துவது?

சுத்தமான வெள்ளரி சாறு எடுத்துக் கொண்டு, அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சருமத்தில் தடவுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து, பின்னர் கழுவி விட்டு, சருமத்தை உலருமாறு துடைத்து விடுங்கள். பாதிக்கப்பட்ட சருமத்தில் மாற்றங்களை தெளிவாகக் காணும் வரை, தினமும் ஒரு முறை இவ்வாறு செய்து வாருங்கள்.

 • தக்காளி

தக்காளிகள், லைக்கோபென் உற்பத்திக்குப் பொறுப்பாகின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. லைக்கோபென், சூரிய ஒளியின் காரணமாக உங்கள் தோலில் ஏற்படும் நிறமேற்றத்தைக் குறைப்பதில் உதவுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் தக்காளியை கலவையாக அடித்துக் கொள்ளவோ அல்லது தக்காளியை கூழாக்கியோ, அதை ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து கொள்ள வேண்டும். நிறமேறிய தோலின் மீது இந்த பசையைத் தடவிக் கொள்க. நீங்கள் அதை, 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டியிருக்கும். பின்பு அதை மிதமான சூடு உள்ள வெந்நீரில் கழுவி விட வேண்டும். 2-3 வாரங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண ஆரம்பிப்பீர்கள்.

 • அவகாடோ

யு.வி கதிர்களில் இருந்து மூலிகைகள் மூலம் சருமத்தைப் பாதுகாப்பது குறித்த ஒரு நாளேடு, அவகோடாக்கள், யு.வி கதிர்களுக்கு எதிராக சருமத்துக்குப் பாதுகாப்பு அளிக்கின்ற மற்றும் தோல் நிறமேற்றத்தைக் குறைக்கின்ற, வைட்டமின் சி, இ மற்றும் ஓலெய்க் அமிலத்தை அதிக அளவில் கொண்டிருக்கின்றன எனக் கூறுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

அவகோடாவில் இருந்து ஒரு துண்டு சீவி, அதிலிருந்து ஒரு வழவழப்பான பசையை உருவாக்கி, அதை ஒரு மாத காலத்துக்கு தினமும், கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவவும். நீங்கள், சிறிதளவு தேன் மற்றும் பாலையும் கூட, அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம், பிறகு அது தோலின் மீது காய்கின்ற வரையில் அப்படியே வைத்திருக்கவும். அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.இதை ஒரு மாதத்துக்கு தினமும் ஒருமுறை செய்யவும். 

 • பப்பாளி

பப்பாளி மற்றும் அதன் விதைகளின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2014 ஆம் வருடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு பச்சையான பப்பாளி, இறந்த தோல் செல்களை நீக்குவதில், தோல் சேதத்தைத் தடுப்பதில் உதவுகின்ற, உரிந்து விழுகின்ற மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறது. இதனால், அது உங்கள் தோல் நிறமேற்றம் அடைவதைக் குறைப்பதில் உதவுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் ஒரு மூன்று அங்குல பப்பாளி பழத் துண்டினை எடுத்துக் கொண்டு, அதனுடன் அரைத் தேக்கரண்டி தேன், ஒரு துண்டு மஞ்சள், ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நீங்கள் அதனை ஒரு பசை போன்று செய்வதற்காக கலக்க வேண்டியிருக்கும். பின்னர் அதை நிறமேற்றம் ஏற்பட்ட பகுதியில், தினமும் இரு முறை தடவி வர வேண்டும். 20 நிமிடங்களுக்கு அந்தப் பசை தோலில் இருக்குமாறு அப்படியே வைத்திருக்க வேண்டும் மற்றும் இறுதியாக, அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு இதை செய்ய வேண்டும்.

 • வாழைப்பழம்

"முசா சப்பியென்டம் பழத்தினுடைய சாறுகளின், அழற்சி - எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற செயல்பாடுகள்" என்ற ஆய்வில், வாழைப்பழம் இயற்கையான, நல்ல ஒரு, உதிர்ந்து விழுதல் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி எனக் கண்டறியப்பட்டு உள்ளது. அது இறந்த தோல் செல்களை நீக்க உதவுகிறது. அதன் மூலம் நிறமேற்றம் ஏற்பட்ட செல்களை மென்மையாக நீக்குவதற்கும் கூட, அது உதவுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் ஒரு வாழைப்பழத்தில் (பழுக்காதது) பாதி, ஒரு தேக்கரண்டி தேன், மற்றும் ஒரு தேக்கரண்டி பால் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உங்கள் தோலுக்காக ஒரு க்ரீம் போன்ற பசையை தயாரிக்க முடியும். அதில் கட்டிகள் சேராமல் இருக்க, அவற்றை கலக்கி அல்லது ஒன்றுடன் ஒன்று சேர்த்து அரைக்கவும். பாதிக்கப்பட்ட சருமப் பகுதியில் இதைத் தடவும் முன்பு உங்கள் கைகளைக் கழுவிக் கொள்ளவும். இந்த பசையை ஒரு சமமான அடுக்கில் தடவி, அதை 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். பலன்களைக் காண்பதற்கு, இந்தப் பசையை ஒரு மாதத்துக்கு பயன்படுத்த வேண்டும். அதை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு மென்மையாக கழுவி, பின்னர் உங்கள் சருமத்தை நன்கு உலருமாறு துடைக்கவும்.

 • முசுக்கொட்டை பழம்

மிகை நிறமேற்றத்தின் மீது இயற்கையான உட்பொருட்களின் செயல்திறன் மீதான, மருத்துவ மற்றும் அழகியல் தோல் சிகிச்சையின் ஒரு குறிப்பேடு, முசுக்கொட்டை பழம், டைரோசின்னின் செயல்பாட்டினைத் தடுப்பதோடு மட்டும் அல்லாமல் கூடவே, சரும சேதத்துக்கு காரணமான ஆக்சிஜனேற்ற மூலக்கூறு சேதாரத்தை நீக்குவதிலும் உதவக் கூடிய, ஒரு திறன்மிக்க உட்பொருளைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

முசுக்கொட்டை சாறுகள், மற்ற அத்தியாவசிய எண்ணெய்களுடன் சேர்த்து, ஒரு தோல் ஊன் நீராக கிடைக்கின்றன. இந்தப் பொருளைப் பயன்படுத்தும் சரியான வழியை அறிந்து கொள்ள, நீங்கள் மேலே சுற்றி இருக்கும் பையின் மீது பார்க்கலாம்.

 • ஸ்ட்ராபெர்ரிகள்

தோல் நோய் சிகைச்சைக்கான இந்திய நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, ஸ்ட்ராபெர்ரி, மெலனின் சேர்க்கையை மிகவும் திறனுடன் தடுக்கும் ஃபுளோவோனாய்டுகளைக் கொண்டிருக்கின்றது எனக் கூறுகிறது. இதனால் அவை ஸ்ட்ராபெர்ரியை, தோல் நிறமேற்றத்துக்கு சிகிச்சையளிக்க ஒரு மாற்று முறையாக ஆக்குகின்றன

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் 2-3 புதிய ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை ஒரு பசை போன்று வருமாறு செய்ய நன்கு அரைக்கவும். இதில், நீங்கள் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அதனை நன்கு கலக்கவும். இந்த பசையை சுத்தமான கைகளால் எடுத்து, பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் தடவவும். 2-3 நிமிடங்கள் வரை, ஒரு வட்ட வடிவ இயக்கத்தில் தோலை, மென்மையாகத் தடவிக் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் தோலில் அது நன்கு பொருந்திக் கொள்ளுமாறு, 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அதைத் தொடர்ந்து, தோலில் உள்ள துளைகளை மூடுவதற்கு, உங்கள் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவும். பலன்களைக் காண்பதற்கு, குறைந்த பட்சம் ஒரு மாத காலம் இந்த முறையைப் பயன்படுத்தவும்.

 • மஞ்சள் 

மஞ்சள், பலவித தோல் வியாதிகளுக்கு நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு நிவாரணி ஆகும். அது சருமத்துக்கு நிவாரணம் அளிக்கும் திறனையும், அதே போன்று சருமத்தை பளபளப்பாக்கும் திறனையும் கொண்டிருக்கிறது. சரும ஆரோக்கியத்தின் மீது மஞ்சளின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வின் படி மஞ்சள், பல்வேறு தோல் வியாதிகளில் உதவக்கூடிய, அழற்சி - எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு,  நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு தன்மைகளைக் கொண்டிருக்கிறது என வெளிப்படுத்தி இருக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

மஞ்சள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மஞ்சளை, தயிர் முகத்திரை, எலுமிச்சை சாறு, தேன், பால், ஃபுல்லரின் பூமி முகத்திரை, இன்ன பிறவற்றிலும் சேர்த்து பயன்படுத்தலாம். உங்கள் நிறமேற்றம் ஏற்பட்ட தோல் பகுதியில் மாற்றங்களை நீங்கள் காண ஆரம்பிக்கும் வரை, தினமும் இந்த முகத்திரைகளில் ஏதேனும் ஒன்றை, சிறிதளவு மஞ்சள் கலந்து பயன்படுத்துங்கள்.

 • சோற்றுக்கற்றாழை

2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட, நிறமேற்றத்துக்கு சிகிச்சை அளிப்பதில் சோற்றுக் கற்றாழையின் திறன் தொடர்பான ஒரு ஆய்வு, சோற்றுக்கற்றாழை நிறமேற்றத்தைக் குறைப்பதில் உதவிகரமாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது. அது, ஒன்றிணைப்பதில் உதவிகரமாக இருந்து, அதன் மூலம் அது தடவப்படும் பகுதியில் உள்ள நிறமேற்றத்தைக் குறைக்க உதவும், அலோன் எனப்படும் திறன்மிக்க ஒரு உட்பொருளைக் கொண்டிருக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் சந்தையில் இருந்து சோற்றுக் கற்றாழை சாறினை வாங்கவோ அல்லது உங்கள் தோட்டத்தில் இருந்து ஒரு சோற்றுக் கற்றாழை இலையைப் பறிக்கவோ செய்யலாம். அதனை உரித்து சோற்றுக் கற்றாழை கூழ்மத்தை வெளியே எடுத்து, அதை இரண்டு தேக்கரண்டிகள் அளவும், தேன் ஒரு தேக்கரண்டி அளவும் சேர்த்துக் கலக்கவும். 10 நிமிடங்கள் அதை தனியே வைத்து விடவும்.இந்த கலவையை ஒரு நாளுக்கு இரண்டு முறை, பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் தடவி, 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பிறகு அதை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி விடவும். இந்த நடைமுறையை குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்குப் பின்பற்றவும்.

 • சந்தனம்

சந்தன எண்ணெய்யின் மீதான ஒரு ஆய்வு, சந்தனம், டைரோசின் நொதியைத் (டைரோசின்னை மெலனின் ஆக மாற்றுகின்ற ஒரு நொதி. மெலனின் என்பது நமது தோலினால் உற்பத்தி செய்யப்படும் நிறமேற்றி) தடை செய்வதில் திறன்மிக்கதாக இருக்கிறது மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவதில் உதவுகிறது எனத் தெரிவிக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

உங்கள் நிறமேற்றத்துக்கு சிகிச்சை அளிக்க, நீங்கள் சந்தனப் பொடியையோ அல்லது சந்தன எண்ணெய்யையோ பயன்படுத்தலாம் .

சந்தனப் பொடியை இரண்டு கரண்டிகள் எடுத்துக் கொள்ளவும், அதனுடன் ஒரு துண்டு மஞ்சள், ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் மற்றும் பன்னீர்/ பால் ஆகியவற்றை சேர்க்கவும். அதை ஒரு பசையாக ஆக்கி, பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் அதனைத் தடவவும். அதை 10-15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, அதனைக் கழுவவும். உங்களுக்கு நிறமேற்றம் ஏற்பட்ட தோல் பகுதியில் ஏதேனும் மாற்றங்களைக் காணும் வரை, தினமும் இரண்டு முறை இதை செய்து வரவும்.

 • அதிமதுரம்

நிறமேற்றத்தின் மீது அதிமதுர சாற்றின் விளைவுகளை எடுத்துக் காட்ட நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அதிமதுர சாறு, டைரோசின் செயல்பாடுகளைத் தடை செய்வதிலும் மற்றும் நிறமேற்றத்தைத் தடுப்பதிலும் திறன்மிக்கதாக கண்டறியப்பட்டுள்ள, கிளாபிரிடின் எனப்படும் ஒரு சக்தி வாய்ந்த உட்பொருளைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கிறது. இதன் நிறமேற்றத்தைக் குறைக்கும் செயலினைத் தவிர்த்து இது, தோல் செல்களில் ஏற்படும் அழற்சியைக் (வீக்கம்) குறைப்பதிலும் கூட உதவிகரமாக இருக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

அதிமதுரம், க்ரீம்கள், களிம்புகள் மற்றும் ஊன் நீர் வடிவங்களில் சநதையில் கிடைக்கிறது. அவற்றின் மேலுறையில் குறிப்பிட்டுள்ள படி அவற்றைப் பயன்படுத்துங்கள். நீங்கள், அதிமதுர வேர்களை பொடியாக்கி கூட, அதனை ஒரு பசையாக செய்வதற்கு பன்னீருடன் கலந்து பயன்படுத்தலாம். சுத்தமான கைகளால், பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தடவி விட்டு, 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். அதன் பிறகு, அதை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி விடவும். இந்த நடைமுறையை, குறைந்தபட்சம் ஒரு மாதங்களுக்குப் பின்பற்றவும்.

 • குங்குமப்பூ

குங்குமப்பூ, தோலை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் பழமையான ஒரு மூலப்பொருள் ஆகும். "ஆயுர்வேத வர்னியா மூலிகைகள் மற்றும் அவற்றின் டைரோசினஸ் தடுப்பு விளைவு" எனப்படும் ஒரு கட்டுரை, குங்குமப்பூ, மெலனின் உற்பத்தியைக் குறைப்பதில் திறன்மிக்கதாக இருக்கிறது மற்றும் நிறமேற்றத்தைக் குறைப்பதில் உதவுகிறது எனக் கூறுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?
மேலே குறிப்பிடப்பட்ட எந்த ஒரு முகத்திரையுடனும், 3-4 துண்டுகள் குங்குமப்பூவை சேர்த்து, ஏற்கனவே நாங்கள் விவரித்துள்ளவாறு, பாதிக்கப்பட்ட பகுதியில் அதை நீங்கள் தடவலாம்.

நமது சருமம், நாம் உண்ணும் உணவை பிரதிபலிக்கிறது. 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட "நீங்கள் உண்பதே நீங்களாக இருக்கிறது: சரும நிற மாற்ற நன்மைகளை அளிக்கின்ற, பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளலை அதிகரிக்கின்ற விஷயம்" எனப்படும் ஒரு ஆய்வு, நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கூடிய ஆரோக்கியமான உணவை உண்பது, நமது சரும நிறம் மற்றும் பொலிவின் மீது ஒரு நேரடியான பாதிப்பினைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கிறது. மிகைநிறமேற்றத்தைக் குறைக்க உங்கள் உணவுப்பழக்கத்தில் நீங்கள் சேர்த்துக் கொள்ளக் கூடிய விஷயங்களின் பட்டியல் பின்வருமாறு:

 • பழங்கள்
   எலுமிச்சை பழம், ஆரஞ்சு பழம், ஸ்ட்ராபெர்ரி, அவகோடா பழம், பப்பாளி பழம், எலுமிச்சை பழம், வாழைப்பழம், திராட்சை பழம், செர்ரி பழம், மாம்பழம், தக்காளி போன்ற குறிப்பிட்ட பழங்கள், சருமத்துக்கு மிகவும் நல்லதான வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளை செறிவாகக் கொண்டிருக்கிறன்றன. இந்த பல்வேறு வகை பழங்களை கொண்டு ஒரு சிறந்த பழக்கூட்டினை நீங்கள் செய்து, தினமும் சாப்பிடுங்கள்.
   
 • காய்கறிகள்
   கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபுளோவோனாய்டுகள் ஆகியவற்றை அதிக அளவில் கொண்டிருக்கும் காய்கறிகள், தோல் நிறமேற்றத்தைக் குறைப்பதில் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. அவற்றுள் வெள்ளரிக்காய், கேரட்கள், பசலைக்கீரை, சிவப்பு மற்றும் மஞ்சள் மணி மிளகுகள், முட்டைகோசு ஆகியவை அடங்கும். உங்கள் சருமத்துக்கு உள்ளிருந்து நிவாரணம் அளிக்க, இவற்றை உங்கள் உணவுகள் மற்றும் சூப்புகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
   
 • சோற்றுக் கற்றாழை சாறு
   சோற்றுக் கற்றாழை சாறு, அதன் சருமத்துக்கு நனமையளிக்கும் மருத்துவப் பண்புகளால், நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. தினமும் சோற்றுக் கற்றாழை சாற்றினை தனியாகவோ, அல்லது ஒரு சிறந்த சுவைக்காக மற்ற சாறுகளுடன் கலந்தோ குடிக்கவும். ஒரு நாளுக்கு இரண்டு முறை 10-15 மில்லி சோற்றுக் கற்றாழை சாறை எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் வேண்டாம் என உங்களை அறிவுறுத்துகிறோம்.
   
 • பசுமை தேநீர்
   பசுமை தேநீர், மெலனின் உற்பத்தியாகும் அளவைக் குறைக்கிற கேட்டசின் போன்ற ஃபுளோவோனாய்டுகளை செறிவாகக் கொண்டிருக்கிறது. மிகைநிறமேற்றத்திற்கு நிவாரணம் பெற, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை பசுமை தேநீர் அருந்துவது நல்லது.
   
 • இளநீர்
   இளநீர், உங்கள் உடலுக்கு நீர்ச்சத்து அளிப்பதிலும், கூடவே தேவையான தாதுக்களை அளிப்பதிலும் மிகவும் நன்மைகரமானது. உங்கள் உடல் மறுநீர்ச்சத்து பெறுவதால், சரும செல்கள் புத்துணர்வு பெறுகின்றன மற்றும் புதிய செல்களும் கூட உருவாக்கப்படுகின்றன. அது, இறந்த சரும செல்களை சரியான நேரத்தில் உதிர்க்கவும் கூட உதவி புரிகிறது.
   
 • தண்ணீர்
   தினமும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்றி, உங்கள் சருமத்துக்கு ஒரு அழகான பொலிவைத் தருகிறது. கூடவே அது, வியர்ப்பதன் மூலம், தோலின் இயற்கையான தூய்மைப்படுத்தும் பணியை அதிகரிக்கிறது மற்றும் சீபம் சுரப்பதைக் குறைக்கிறது. 
 • அத்தியாவசிய எண்ணெய்கள்

அத்தியாவசிய எண்ணெய்கள் பற்றி, அதன் மனிதர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளுக்காக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. "சில தாவர எண்ணெய்களின் மேற்பூச்சாக தடவுதலின், அழற்சி எதிர்ப்பு மற்றும் தோல் தடுப்பு சரிசெய்தல் விளைவுகள்" என்ற ஒரு சமீபத்திய ஆய்வு, சில அத்தியாவசிய எண்ணெய்களை நிறமேற்றத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த இயலும் எனக் காட்டுகிறது. அவற்றுள், ஆர்கன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், ரோஸிப் எண்ணெய், எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை அடங்கும். இந்த எண்ணெய்களை தடவுவதற்காக தனியாக, அல்லது ஒரு கலவையில் பயன்படுத்த இயலும்.  

எவ்வாறு பயன்படுத்துவது?

மேலே குறிப்பிடப்பட்ட அத்தியாவசிய எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும். அதை, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் இரண்டும் சம அளவில் இருக்குமாறு கலக்கவும். நீங்கள் தினசரி சருமத்துக்கு பயன்படுத்தும் களிம்பு அல்லது க்ரீமுடன் கூட, அத்தியாவசிய எண்ணெய்யை சேர்த்துக் கொள்ள முடியும். இந்த எண்ணெய்கள், இரவு தூங்கப் போகும் பொழுது சருமத்தில் தடவப்பட்டு, இரவு முழுவதும் அப்படியே விடப்பட வேண்டும். உங்கள் தோலின் மீது இந்த எண்ணெய் கரைசலைத் தடவிக் கொண்டு சூரிய ஒளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது, ஒரு ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்துக்காக, ஏராளமான மக்களால் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும், இரவு நேர சரும கவனிப்பு முறையாக இருக்கிறது.

 • சூரியனிடம் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சூரியஒளி தடுப்பிகள் என்பவை, சூரிய ஒளியில் இருக்கும் யூ.வி கதிர்களால் ஏற்படும் தீங்கான விளைவுகளில் இருந்து, சருமத்தைப் பாதுகாக்கிற க்ரீம்கள் மற்றும் களிம்புகள் ஆகும். அதிக அளவு எஸ்.பி.எஃப் கொண்ட சூரிய ஒளி தடுப்பு மருந்தினைப் பயன்படுத்துவது, யூ.வி கதிர்களின் காரணமாக ஏற்படுகிற கருத்துப் போதல் மற்றும் நிறமேற்றத்தைத் தடுக்கிறது. வழக்கமாக இதற்கு, 30 அளவு எஸ்.பி.எஃப் கொண்ட சூரியஒளி தடுப்பி க்ரீம் பரிந்துரைக்கப்படுகிறது. சூரிய ஒளியில் வெளியே செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர், சூரியஒளி தடுப்பி க்ரீமைத் தடவவும்.

 • சிறந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

நீங்கள், தினமும் உங்கள் சருமத்தை சுத்தம் செய்து, கழுவி மற்றும் அதற்கு ஊட்டமளிக்கும் ஒரு நடைமுறையைக் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது. குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம். தூய்மைப்படுத்தல், மட்டுப்படுத்தல் மற்றும் உரித்து விடுதல் ஆகியவை, உங்கள் சரும பராமரிப்பு நடைமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டியவற்றுள் அடங்கும். உரித்து விடுதல், வாரத்துக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும். முகப்பரு உள்ள நபர்கள், அவர்களின் சரும வகைக்கு ஏற்ற சரும பராமரிப்பு நடைமுறையை அறிய, ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

Dr. Afroz Alam

Dr. Afroz Alam

Dermatology
4 वर्षों का अनुभव

Dr. Pranjal Praveen

Dr. Pranjal Praveen

Dermatology
5 वर्षों का अनुभव

Dr. Nihal Yadav

Dr. Nihal Yadav

Dermatology
5 वर्षों का अनुभव

Dr. Ravichandran G

Dr. Ravichandran G

Dermatology
23 वर्षों का अनुभव

மேற்கோள்கள்

 1. Rashmi Sarkar, Pooja Arora, K Vijay Garg. Cosmeceuticals for Hyperpigmentation: What is Available?. J Cutan Aesthet Surg. 2013 Jan-Mar; 6(1): 4–11. PMID: 23723597
 2. Misra BB, Dey S. TLC-bioautographic evaluation of in vitro anti-tyrosinase and anti-cholinesterase potentials of sandalwood oil. Nat Prod Commun. 2013 Feb;8(2):253-6. PMID: 23513742
 3. Vaughn AR, Sivamani RK. Effects of Fermented Dairy Products on Skin: A Systematic Review. J Altern Complement Med. 2015 Jul;21(7):380-5. PMID: 26061422
 4. Mukherjee PK, Nema NK, Maity N, Sarkar BK. Phytochemical and therapeutic potential of cucumber. Fitoterapia. 2013 Jan;84:227-36. PMID: 23098877
 5. Pumori Saokar Telang. Vitamin C in dermatology. Indian Dermatol Online J. 2013 Apr-Jun; 4(2): 143–146. PMID: 23741676
 6. Tzu-Kai Lin, Lily Zhong,2, Juan Luis Santiago. Anti-Inflammatory and Skin Barrier Repair Effects of Topical Application of Some Plant Oils. Int J Mol Sci. 2018 Jan; 19(1): 70. PMID: 29280987
 7. Tahereh Eteraf-Oskouei, Moslem Najafi. Traditional and Modern Uses of Natural Honey in Human Diseases: A Review Iran J Basic Med Sci. 2013 Jun; 16(6): 731–742. PMID: 23997898
 8. Burlando B, Cornara L. Honey in dermatology and skin care: a review. J Cosmet Dermatol. 2013 Dec;12(4):306-13. PMID: 24305429
 9. Ahmad Z. The uses and properties of almond oil. Complement Ther Clin Pract. 2010 Feb;16(1):10-2. PMID: 20129403
 10. Kapuścińska A, Nowak I. [Use of organic acids in acne and skin discolorations therapy]. Postepy Hig Med Dosw (Online). 2015 Mar 22;69:374-83. PMID: 25811473
 11. Vaughn AR, Branum A, Sivamani RK. Effects of Turmeric (Curcuma longa) on Skin Health: A Systematic Review of the Clinical Evidence.. Phytother Res. 2016 Aug;30(8):1243-64. PMID: 27213821
 12. Rashmi Sarkar, Pooja Arora, K Vijay Garg. Cosmeceuticals for Hyperpigmentation: What is Available?. J Cutan Aesthet Surg. 2013 Jan-Mar; 6(1): 4–11. PMID: 23723597
 13. Elisa Panzarini, Majdi Dwikat, Stefania Mariano, Cristian Vergallo, Luciana Dini. Administration Dependent Antioxidant Effect of Carica papaya Seeds Water Extract. Evid Based Complement Alternat Med. 2014; 2014: 281508. PMID: 24795765
 14. Patricia OyetakinWhite, Heather Tribout, Elma Baron. Protective Mechanisms of Green Tea Polyphenols in Skin. Oxid Med Cell Longev. 2012; 2012: 560682. Oxid Med Cell Longev. 2012; 2012: 560682.
 15. Radava R. Korać, Kapil M. Khambholja. Potential of herbs in skin protection from ultraviolet radiation. Pharmacogn Rev. 2011 Jul-Dec; 5(10): 164–173. PMID: 22279374
 16. Paine C, Sharlow E, Liebel F, Eisinger M, Shapiro S, Seiberg M. An alternative approach to depigmentation by soybean extracts via inhibition of the PAR-2 pathway. J Invest Dermatol. 2001 Apr;116(4):587-95. PMID: 11286627
 17. Jasmine C. Hollinger, MD, Kunal Angra, MD, and Rebat M. Halder. Are Natural Ingredients Effective in the Management of Hyperpigmentation? A Systematic Review. J Clin Aesthet Dermatol. 2018 Feb; 11(2): 28–37. PMID: 29552273
 18. Yokota T, Nishio H, Kubota Y, Mizoguchi M. The inhibitory effect of glabridin from licorice extracts on melanogenesis and inflammation. Pigment Cell Res. 1998 Dec;11(6):355-61. PMID: 9870547
 19. Debabrata Bandyopadhyay. TOPICAL TREATMENT OF MELASMA. Indian J Dermatol. 2009 Oct-Dec; 54(4): 303–309. PMID: 20101327
 20. Khemchand Sharma, Namrata Joshi, Chinky Goyal. Critical review of Ayurvedic Varṇya herbs and their tyrosinase inhibition effect. Anc Sci Life. 2015 Jul-Sep; 35(1): 18–25. PMID: 26600663
 21. Ross D. Whitehead, Daniel Re, Dengke Xiao, Gozde Ozakinci, David I. Perrett. You Are What You Eat: Within-Subject Increases in Fruit and Vegetable Consumption Confer Beneficial Skin-Color Changes. PLoS One. 2012; 7(3): e32988. PMID: 22412966
ऐप पर पढ़ें