மாதவிடாய் வருவது என்பது பல்வேறு பெண்களுக்கு பல்வேறு விதமாக வரும் ஒரு உயிரியல் நடைமுறை ஆகும். சில பெண்களில், மாதவிடாய் பெருந்தொந்தரவாக இருக்கும் மற்றும் துயர் தணிய மற்றும் அவற்றில் இரண்டாம் கட்ட மருத்துவ நிலை உருவாவதை தடுக்க சிகிச்சை தரவேண்டும்.

மாதவிடாய் காலத்தின் நாட்களை குறைப்பதை மருத்துவ ரீதியாக “தேராபியூட்டிக் அமெனோரியா" என்பார்கள். இது மாதவிடாய் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்க ஆரம்பகாலத்தில் செய்யப்பட்டது. இப்போதெல்லாம், இது வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி உற்பத்தியையும் பெருக்குகிறது என்று பரிந்துரைக்கப்படுவதால் அந்த அறிகுறிகள் இல்லாத பெண்களும் இதை தேர்ந்து எடுக்கிறார்கள். தங்களது மாதவிடாய்யை விரைவாக முடிக்க எண்ணும் பெண்கள் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் சில இயற்கை உணவுகள் மற்றும் வைட்டமின் பிற்சேர்ப்பிகளும் இதற்கு உதவலாம். இந்த மாத்திரைகளின் நீண்டகால பக்கவிளைவுகள் பற்றி சரியாக தகவல் இல்லை, ஆனால் உலகமெங்கும் இதை பெண்கள் பரவலாக இதை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

 1. முன்னுரை - Introduction in Tamil
 2. மாதவிடாயை விரைவில் முடிப்பதற்கான தேவைகள் மற்றும் காரணங்கள் - Conditions and reasons for ending periods soon in Tamil
 3. மாதவிடாயை விரைவாக எப்படி முடிப்பது - How to end period early naturally in Tamil
 4. மாதவிடாயை விரைவாக முடிவடைய செய்யும் மருந்துகள் - Medicines to end periods early in Tamil
 5. மாதவிடாயை நிறுத்த பயன்படும் மாத்திரையின் பக்கவிளைவுகள் - Side effects of medicines to stop periods in Tamil
 6. மாதவிடாயை விரைவாக முடிப்பதற்கு சிகிச்சை - Surgery to stop periods early in Tamil

சில வருடங்களுக்கு முன், டிஸ்மெனோரியா (மாதவிடாய் வலி), மெனோராஜியா (தீவிர இரத்தக்கசிவு), தீவிர மாதவிடாய் பிடிப்பு,  மற்றும் இந்த அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய  அடிப்படை சுகாதார நிலைகள் போன்ற தீவிர மாதவிடாய் அறிகுறிகள் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை குறைக்க புரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில், இந்த பொருட்களின் மீதுள்ள தீவிர மார்க்கெட்டிங் காரணமாக, நிறைய பெண்கள் தங்களது ரெகுலர் மாதவிடாய் காலத்தில் சில நாட்கள் குறைத்து கொள்வதற்கு சம்மதித்துள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் இந்த ஆற்றலை கொண்ட சில இயற்கை உணவுகள் மூலம் மாதவிடாயை விரைவில் முடிக்க பல்வேறு வழிகள் இந்த கட்டுரையில் விவதிக்கப்பட்டுள்ளன. அதனோடு கூடிய பக்க விளைவுகளும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

Women Health Supplements
₹719  ₹799  10% OFF
BUY NOW

“இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் வோமேன்ஸ் ஹெல்த்” படி, மாதவிடாய் தடுப்பு பரிந்துரைக்கான மிகவும் பொதுவான கரணங்கள் பின்வருமாறு:

ரிப்ரொடகிட்டிவ் சிஸ்டத்தின் நோய்கள் மற்றும் நிலைகள்

பெல்விக் மற்றும் ரிப்ரொடகிட்டிவ் உறுப்புகள் தொடர்பான, பின்வரும்  சில நிலைகள் மற்றும் நோய்களுக்கு மருத்துவர்கள் தேராபியூட்டிக் அமினோரியா பரிந்துரைக்கிறார்கள்:

 • பெல்விக் பகுதியில் நீடித்த வலி
  இந்த நிலையில் உள்ள பெண்கள் மாதவிடாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெல்விக் வலி இருக்கும். மற்றும் மாதவிடாயின் போது இன்னும் மோசமாகி விடும்.
   
 • எண்டோமெட்ரியாசிஸ்
  ஓவரிஸ், கருமுட்டை குழாய், மற்றும் அடிவயிறு போன்ற கருப்பை அல்லாத மற்ற இடங்கள் மற்றும் உறுப்புக்களில் எண்டோமேட்ரியத்தின்(கருப்பையின் உட்புச்சு) வளர்ச்சியை எண்டோமெட்ரியாசிஸ் என்பார்கள். எண்டோமெட்ரியாசிசால் அவதிப்படும் பெண் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது, எண்டோமெட்ரியம் சிந்துவதால் கருப்பை மற்றும் அசாதாரண எண்டோமெட்ரியல் வளர்ச்சி உள்ள இடத்தில் இரத்தக்கசிவு நடக்கும். அதனால் மாதவிடாய் காலம் மிகவும் வலி உள்ளதாக இருக்கும். அசாதாரண எண்டோமெட்ரியல் வளர்ச்சியால் மாதவிடாய் இல்லாமலும் வலி இருக்கும்.
   
 • டிஸ்மெனோரியா
  மாதவிடாயின் தொடக்கத்தில் சில பெண்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை வலி இருக்கக்கூடும். ஆனால், சில பெண்கள் இடத்தில், இந்த வலி மிகவும் தீவிரமாக இருப்பதுடன் பலவினமாக்கவும் செய்யும். இதனை டிஸ்மெனோரியா என்பார்கள்.
   
 • மெனோரெஜியா(மாதவிடாய் மிகைப்பு)
  என்ஹெச்எஸ் கூற்று படி, மாதவிடாயின் கால அளவு 2 முதல் 7 நாட்கள். ஆனால், சில பெண்களுக்கு தீவிர ப்ளீடிங் இருக்கும் மற்றும் அவர்களுக்கு மாதவிடாய் காலம் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும். இதனை மெனோரெஜியா என்பார்கள்.
   
 • ஒழுங்கற்ற மாதவிடாய் ப்ளீடிங்
  PCOS (பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ரோம்) போன்ற சில ரிப்ரோடக்ட்டிவ் நோய்களினால் முறையாக ஓவும்(முட்டை) வெளிவராது. இதனால் ஒழுங்கற்ற ப்ளீடிங் மற்றும் ஹார்மோனல் இம்பாலன்ஸ் ஏற்படும். அந்த பெண்களின் ஓவரிக்கள் செயலிழந்து இருக்கும் மற்றும் மாதவிடாய் காலம் மாறிக்கொண்டு இருக்கும்.
   
 • தீவிர மாதவிடாய் அறிகுறிகள்
  நிறைய பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் தீவிர அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தீவிர வலி மட்டும் இருப்பது இல்லை, ஆனால் அதனோடு தொடர்புடைய குமட்டல், வாந்திதலைவலி, தீவிர தசை பிடிப்புமார்பு வலி மற்றும் தீவிர ப்ளீடிங் உட்பட மற்ற அறிகுறிகள் இருக்கும்
   
 • இரத்தம்-தொடர்பான கோளாறுகள்
  • கிலாட்டிங் (உறைதல்) பிரச்சனை: இரத்தம் வழக்கமான கிலாட்டிங் இடைவேளைக்குள் கிலாட் ஆகவில்லை என்றால், அதை  கிளட்டிங் டிஸார்டர் என்பார்கள். உறைதல் காரணியின் குறைப்பட்டினால் இந்த பிரச்சனையை சந்திக்கும் பெண்கள் நீடித்த மாதவிடாயாலும் அவதிப்படுகின்றனர். எண்டோமெட்ரியம் சிந்த ஆரம்பித்த பிறகு கிலாட் ஆவதற்கு நிறைய நேரம் ஆவதால் நிறைய இரத்த இழப்பு நேரிடுகிறது.
  • இரத்த சோகை மற்றும் ப்ளீடிங் பிரச்சனைகள்இரத்தசோகை அல்லது மற்ற ப்ளீடிங் பிரச்சனைகளான சிக்கில் செல் டிசீஸ், வோன் வில்பிராண்ட் நோய், ஹேமோபிலியா (இரத்த உரையாமை), மற்றும் மற்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள் நீடித்த ப்ளீடிங்கை மாதவிடாயின் போது அனுபவிக்கிறார்கள். கூடுதல் இரத்த இழப்பால் இரத்தசோகை இன்னும் மோசமகிறது.
  • குறைவான குறுதிச்சிறுதட்டுகுறுதிகிதட்டு குறை  போன்ற  குறுதிச்சிறுதட்டு குறைபாடுகள் உடலினால் போதுமான குறுதிச்சிறுதட்டை உற்பத்தி செய்யமுடிவது இல்லை.அதனால் ப்ளீடிங் நேரம் கூடுகிறது. குறைபாடுள்ள குறுதிச்சிறுதட்டால் வழக்கமான ப்ளீடிங்கை நிறுத்தமுடிவது இல்லை அதனால், இந்த நோயினால் வாடும் பெண்களுக்கு நீடித்த மாதவிடாய் காலம் இருக்கும்.
    
 • புற்றுநோய்
  ஒரு பெண்ணுக்கு  புற்றுநோய் இருந்தால்,அவர் கீமோதெரபி எடுத்துக்கொள்ளவேண்டும். புற்றுநோய்க்கு தரும் மருந்துகள் உடலின் இயல்பான செயல்பாட்டை இடையூறு செய்து அதன் வலுவை இழக்க வைக்கிறது. உடல் வலு குறைவதால், மாதவிடாய் அறிகுறிகளை தாங்கும் தன்மை பெண்ணிடத்தில் குறைகிறது. இதனால் தீவிர வலி, ப்ளீடிங், குமட்டல், வாந்தி, மற்றும் மற்ற மாதவிடாய் அறிகுறிகள் அதிகரிப்பு நடக்கலாம்.

மனநிலை தொடர்பான பிரச்சனைகள்

 பதட்டம்மனஅழுத்தம்மனச்சோர்வு மற்றும் இருமுனை கோளாறு போன்ற மனநல கோளாறினால் ரிபரோடகிட்டிவ் ஹெல்த் மிகவும் பாதிக்கப்படுகிறது. அந்த பெண்களில் இயக்குநீர் மாற்றங்கள் மற்றும் முட்டை வெளியீட்டு பிரச்சனையால், தீவிர மாதவிடாய் அறிகுறிகளை சந்திக்க வாய்ப்புள்ளது .

நரம்பு தொடர்பான நோய்கள்

ஒற்றைத்தலைவலி மற்றும் சீசர்ஸ் போன்ற நரம்பியல் நோய்கள் பெண்ணின் வலியின் தொடக்க நிலையை குறைத்து அவளது பிடிப்புக்களின் தீவிரத்தை அதிகரித்துவிடலாம். அதனால், அந்த பெண்கள் மாதவிடாய் பிரச்சனையை தாங்குவதில் சிரமப்படுகிறார்கள்.

மாதவிடாய் பெருக்கத்துடன் தொடர்புடைய மற்ற நோய்கள்

மாதவிடாய் அனுபவத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் சில நோய்கள் உள்ளன. இந்த நோய்கள் அந்த பெண்களிடம் மாதவிடாய் அறிகுறிகளை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை:

தொழில் சார்ந்த காரணங்கள்

சில நேரங்களில் தொழிலில் தங்கள் செயல்பாட்டை கூட்ட பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சி காலத்தை குறைக்கவேண்டி இருக்கும். அதாவது, சிறந்த முடிவுகளை தர கூர்மையான கண்ணும் நல்ல கவனமும் தேவை. அதில் சில தொழில்கள் பின்வருமாறு:

 • இராணுவம் மற்றும் பாதுகாப்பை படைகள்
 • தடகளம்
 • பைலட், விண்வெளி வீரர்கள், மற்றும் அதன் கேபின் குழுவினர் போன்ற விமானம் மற்றும் விண்வெளி வேலைகள்.

சில இயற்கை உணவுகள் மற்றும் விட்டமின் சப்ப்ளிமெண்ட் நீண்டகாலம் எடுத்துக்கொண்டால் மாதவிடாய் நாட்களை குறைக்கலாம். மெனோரெஜியாவின் பயோமெடிக்கல் லிட்டரெச்சரின் விரிவான ஆய்வின் படி, ப்ளீடிங்கை குறைத்து உங்களது மாதவிடாயை விரைவில் முடிக்க உதவும் உணவு சப்பிலிமெண்ட் மற்றும் மூலிகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

வைட்டமின்

வைட்டமின் ஏ சப்பிலிமெண்ட்  எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் நாட்கள் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு வைட்டமின் ஏ அதிகப்படியான டோஸ் 3000 எம்சிஜி. மாதவிடாயை விரைவில் முடிக்க அதிக டோஸ் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மருத்துவரை ஆலோசித்து மறுத்து அளவை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து குறைப்பட்டினால் அதிக மாதவிடாய் ப்ளீடிங் ஏற்படும் என்பது உங்களில் பலருக்கு தெரியாது. அதனோடு சிலசமயம் உங்கள் மாதவிடாய் நாட்களையும் கூட்டி விடுகிறது. ஆகவே, உங்களது உணவில் பிளாக்ஸ்ட்ராப் சர்க்கரைப்பாகு, திராட்சை, வடிப்போனொதி (Brewer’s yeast), கீரைகள், முட்டைகள், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதால் உங்களது மாதவிடாய் நாட்களை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு குறைக்கலாம்.

வைட்டமின் பி காம்ப்லெஸ்

உடலில் வைட்டமின் பி காம்ப்லெஸ் குறைபாடு ஏற்படும் போது, கல்லீரலின் செயலப்பாடு குறைகிறது. அதனால், மாதவிடாய்க்கு காரணமான எஸ்ட்ரோஜென் ஹார்மோனை கல்லீரலால் செயல் இழக்க முடிவதில்லை. அதனால், ஒவ்வொரு நாளும் வைட்டமின் பி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் நாட்களை குறைக்க உதவும்.

வைட்டமின் சி மற்றும் பயோபிளேவொணாயிட்ஸ்

வைட்டமின் சி மற்றும் பயோபிளேவொணாயிட்ஸ் அதிக ப்ளீடிங்கை குறைப்பது மட்டுமில்லாமல் உணவில் இருந்து இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. இவை காப்பில்லரி வால்ஸ் உடைவதை குறைக்க உதவுகிறது. ஆகவே, உணவில் வைட்டமின் சி மற்றும் பயோபிளேவொணாயிட்ஸ் நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், டோமாட்டோ, மற்றும் பல) மற்றும் காய்கறிகள் (ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு , காலிஃப்ளவர், கீரைகள், மற்றும் மற்ற பச்சை காய்கறிகள்) சேர்த்துக்கொள்வதால் உங்களது மாதவிடாய் நாட்களை விரைவில் முடிக்க உதவும். நீங்கள் வைட்டமின் சி சாப்ளிமெண்ட்டை தினமும் எடுத்துக்கொள்ளலாம். வயது வந்த பெண்களுக்கு தினசரி வைட்டமின் சி மருந்தளவு 75 எம்ஜி மற்றும் பருவபெண்களுக்கு 65 எம்ஜி.

வைட்டமின் கே   

இரத்த உறைதலில் வைட்டமின் கே முக்கிய ஊட்டச்சத்து ஆகும். பெரும்பாலான பெண்களுக்கு சாதாரண ப்ளீடிங் மற்றும் உறையும் நேரம் இருந்தாலும், லேசான உறையும் (கிலாட்டிங்) பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு வைட்டமின் கே பயன்படுத்துவது உதவிகரமாக இருக்கும். பருவபெண்களுக்கு தினசரி மருந்தளவு 75 எம்சிஜி மற்றும் வயது வந்த பெண்களுக்கு 90 எம்சிஜி. ஆனால் மாதவிடாயை முடிக்க, உங்களது ஹெல்த், எடை, உயரம் மற்றும் மற்ற மருத்துவ நிலைகளை பொறுத்து உங்களது மருத்துவர் இந்த மருந்தளவுகளை அதிகரிக்கக்கூடும் .

மற்ற வழிமுறைகள்

உடற்பயிற்சி, மசாஜ், ஹீட் தெரபி, மன கிளர்ச்சி அடைதல், நிறைய தண்ணீர் குடித்தல் போன்றவை மாதவிடாய் நாட்களை திறம்பட குறைக்கும் சில வழிமுறைகள். அவை உங்களது மாதவிடாய் நாட்களை குறைக்க பயனுள்ளதாக இருக்கலாம், ஏனென்றால்:

 • உடற்பயிற்சி மூலம் எண்டோமெட்ரியல் உட்சுவர் விரைவாக விழுவதால், மாதவிடாய் நாட்கள் குறைகிறது.
 • உங்களது பெல்விக் பகுதியில் ஹீட் தெரபி மற்றும் மசாஜ் தருவதன் மூலம் உங்கள் கருப்பை தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு இரத்த ஓட்டத்தை பெருக்குகிறது. அவை உங்களது மாதவிடாய் வலி நிவாரணியாக உதவினாலும், அது மாதவிடாய் நாட்களை குறைக்க உதவுவதில்லை.
 • மாதவிடாயின் போது மன கிளர்ச்சி வைத்துக்கொள்வதால் எண்டோமெட்ரியல் உட்சுவர் விரைவாக விழுவதோடு உங்களது பெல்விக் வலியையும் தணிக்கிறது.
Pushyanug Churna
₹450  ₹499  9% OFF
BUY NOW

பெண்களின் விருப்பங்கள் மற்றும் அவர்களது உடல்நலத்தை பொறுத்து பல்வேறு சிகிச்சைகளை தேர்ந்து எடுக்கலாம் என்று ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ஒமேன்ஸ் ஹெல்த்" கூறுகிறது:

தொடர்ந்து காம்பைன்ட் ஓரல் காண்ட்ராசெப்டிவ் பில்ஸ்

இயக்குநீரின் பல்வேறு தயரிப்புக்களான இந்த கருத்தடை மாத்திரைகளை ஒவ்வொரு நாளும் பிளாசிபோ மாத்திரைகள் இல்லாமல் (நீடிக்கப்பட்ட சுழற்சி என்றும் சொல்லலாம்) உட்கொள்ள வேண்டும்.

வெஜினல் கருத்தடை ரிங்

ஒரு வெஜினல் கருத்தடை ரிங் என்பது இயக்குநீரின் இணைப்பு ஆகும். ஒரு மாத காலத்துக்கு மெதுவாக இயக்குநீரை வெளியிட இது வெஜினாவில் வைக்கப்படுகிறது. இதற்கு மாதாந்திர அடிப்படையில் மாற்றப்படும்.

டிரான்டர்மமால் கலப்பு கருத்தடை

டிரான்டர்மமால் கலப்பு கருத்தடை என்பது அடித்தோலுக்கு (தோலுக்கு அடியில் இருப்பது) கீழே வைக்கப்படும் ஒரு தோல்திட்டுக்கள். அவை கீழே இருக்கும் திசுக்களுக்கு மெல்ல இயக்குநீரை வெளியிடுகிறது, இரத்த ஓட்டம் அவற்றை பிறகு உறிஞ்சுவிடுகிறது. இவற்றை ஒவ்வொரு வாரமும் தோலுக்குள் வைக்கவேண்டும்.

ப்ரோஜெஸ்டின்ஸ்

இவை வாய்வழி கருத்தடை மாத்திரைகள் மற்றும் இதில் குறிப்பாக ப்ரோஜெஸ்டின் இயக்குநீர் இருக்கும். சிறந்த பலனுக்கு, இந்த மாத்திரையை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

டிஎம்பிஏ(டிப்போ மெட்ராக்சிப்ரொஜெஸ்டரோன் அசிடேட்)

டிஎம்பிஏ-வில் ப்ரொஜெஸ்டரோன் உள்ளது. இது நமது உடல் உற்பத்தி செய்யும் இயற்கை இயக்குநீரை போலவே இருக்கும். இது ஒவ்வொரு பன்னிரண்டு வாரத்துக்கும் ஊசி மூலமாக தரப்படும்.

டானாஜோல்

டானாஜோல் ஒரு ஸ்டெராய்டு மாத்திரை. இது பிட்யூட்டரி சுரப்பி மற்றும் முட்டைகளை குறிவைத்து செக்ஸ் இயக்குநீர்கள் வெளியாவதை தடுக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. அவற்றை ஒவ்வொரு நாளும் வாய்வழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ப்ரொஜெஸ்டின் - கருப்பையுள் அமைப்பு கொண்டது

லெவோனோர்ஜெஸ்ட்ரெல்லை வெளியிட இவை கருப்பையினுள் வைக்கப்படுகிறது. இந்த கருவிகள் கருப்பையினுள் ஐந்து வருடத்திற்கு வைக்கப்படுகிறது. அதன்பிறகு அவை மாற்றப்படுகிறது.

ஜிஎன்ஆர்ஹெச் அனலாக்ஸ்

ஜிஎன்ஆர்ஹெச் அனலாக்ஸ் என்பது இயற்கையான கோனாடோட்ரோபின்-வெளியிடும் இயக்குநீரைப் போன்ற ஒரு ஹார்மோன் ஆகும். இயக்குநீரை ஒரு கால கட்டத்துக்கு மெல்ல வெளியிடும் இவற்றை வாய்வழியாகவோ, ஊசி மூலமாகவோ அல்லது இம்ப்ளாண்ட் போல உட்பதிய விடலாம். எப்படி இதை எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து, இதை தினசரி அல்லது பன்னிரண்டு வாரத்துக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

மற்ற மருந்துகள்

மருந்து சீட்டு தேவையில்லாத வலி நிவாரணி மற்றும் ஆன்டி-இன்பிளமமேட்டோரி மருந்துகள் குறிப்பாக இபுப்ரோஃபென், பாராசெட்மோல், நாப்ராக்ஸன் போன்ற NSAIDs (நான்-ஸ்டெராய்டல் ஆன்டி-இன்பிளமமேட்டோரி மருந்துகள்) மாதவிடாய் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் மற்ற மாத்திரைகள். இவை வீக்கத்தை குறைக்க உதவுவதால் இவற்றை மாதவிடாய் விரைவில் முடிவடைய செய்யவும் எடுத்துக்கொள்ளலாம். நீரழிவு நோய், ஆஸ்துமா, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி  போன்ற அடிப்படை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மாத்திரைகள் அல்லது ஊசிகள் இதற்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

முன்னர் குறிப்பிடப்பட்ட பெரும்பாலான மாத்திரைகளுக்கு ஒரே மாதிரியான பக்க விளைவுகள் இருக்கும். அவை:

 • வீனஸ் த்ராம்போஎம்பாலிசத்தின் ஆபத்து(நரம்புகளில் உறைகட்டி உருவாவது), குறிப்பக தொடர்ந்து கம்பைன்ட் ஓரல் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் வரும்.
 • தோலின் எதிர்வினைகள்.
 • எடை கூடுதல்.
 • எலும்பின் அடர்த்தி குறைதல்.
 • ஒழுங்கற்ற மாதவிடாய் ப்ளீடிங்.
 • பல நாட்களுக்கு நிற்காத தொடர்ந்து மாதவிடாய் ப்ளீடிங்.
 • குமட்டல்.
 • வாந்தி.
 • மார்பு வலி
Ashokarishta
₹360  ₹400  10% OFF
BUY NOW

இனப்பெருக்க அமைப்பின் நோய்களான எண்டோமேட்ரியோசிஸ்,  பைபிராய்ட்ஸ், பாலிப்ஸ், மற்றும் ஏனைய வளர்ச்சிகளினால் அவதிப்படும் பெண்கள், இந்த நோய்களுக்கு ட்ரீட்மெண்ட் செய்ய சிகிச்சை செய்து தங்கள் மாதவிடாய் அறிகுறிகளை இம்ப்ரூவ் செய்துகொள்ள வேண்டும். மிகவும் மோசமான தருணங்களில் சில பெண்கள் தங்களது கருப்பையை நீக்கிவேண்டும். இதனால் நிரந்தரமாக மாதவிடாய் நின்றுவிடும்.

மேற்கோள்கள்

 1. Paula Adams Hillard. Menstrual suppression: current perspectives. Int J Womens Health. 2014; 6: 631–637. PMID: 25018654
 2. Anna B. Livdans-Forret, DC, Phyllis J. Harvey, M.Ln, Susan M. Larkin-Thier. Menorrhagia: A synopsis of management focusing on herbal and nutritional supplements, and chiropractic. J Can Chiropr Assoc. 2007 Dec; 51(4): 235–246. PMID: 18060009
 3. Powell-Dunford NC et al. Menstrual suppression for combat operations: advantages of oral contraceptive pills. Womens Health Issues. 2011 Jan-Feb;21(1):86-91. PMID: 21185993
 4. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Menstrual Cycle.
 5. National Women's Health Network. Using Birth Control to Regulate or Skip Your Period. [Internet]
Read on app