நெல்லிக்காய், இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு வீட்டு உபயோகப் பெயர் மற்றும் பழமை வாய்ந்த ஆயுர்வேத நிவாரணிகளில் ஒன்று ஆகும். இந்த பளபளக்கும் பச்சைக் காய்களை அறிந்து இருக்காத ஒரு நபர் இந்த நாட்டில் இருக்க முடியாது, கூடவே அது இந்திய அருநெல்லிக்காய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது மற்றும் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் மூலிகை சார்ந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவராகவோ அல்லது வீட்டு நிவாரணிகளை மிகவும் விரும்புபவராகவோ இருக்கும் பட்சத்தில், இதன், நோயைக் குணமாக்குதல் போன்ற நன்மை தரும் பண்புகளில் குறைந்தபட்சம் ஒன்றின் மூலமாக, கண்டிப்பாக ஏற்கனவே நீங்கள் பயன் அடைந்து இருந்திருப்பீர்கள். இது போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஊட்டமளிக்கும் நன்மைகள், கைக்கு எட்டிய தூரத்தில் கையில் கிடைக்கின்ற பொழுது, அதனைத் தவிர்ப்பது மிகவும் கடினமானது ஆகும். ஆயுர்வேத மருத்துவர்கள், இது ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கான வளம் மிக்க ஆதாரம் எனக் கூறுகின்றனர். உள்ளபடியே பார்த்தால், "அம்மா" மற்றும் "ஆதரவு அளிக்க" எனப் பொருள்படும் அமலாகி என்ற அதன் பெயர், அதன் குணமளிக்கும் தன்மை மற்றும் ஊட்டச்சத்து தன்மைகளைக் குறிக்கிறது.

இரண்டு முக்கிய ஆயுர்வேத நூல்களான சரக சம்ஹிதா மற்றும் சுஸ்ருத சம்ஹிதா, இதனை ஒரு புத்துணர்ச்சியளிக்கும் மூலிகை எனக் குறிப்பிடுகின்றன. இது மட்டும் இல்லை, இந்தப் பழம் இந்தியாவின் புராணங்களில் ஒரு பிரத்யேகமான இடத்தைக் கொண்டிருக்கிறது. அவற்றில் இது பகவான் விஷ்ணுவின் கண்ணீர் துளிகள் என அழைக்கப்படுகிறது. மேலும் சைவ சமயத்தில் ருத்ராட்சத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக, வைணவ மார்க்கத்தில் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதனால் நெல்லி மரமும் மற்றும் பழமும் இந்தியாவில் வணங்கப்படுகின்றன. பெரும்பாலான மார்க்கங்கள் மற்றும் காரணங்கள் மூட நம்பிக்கைகளாக இருக்கின்றன, ஆனால், நெல்லிக்காயின் நன்மைகள் மற்றும் நல்ல பண்புகளைப் பார்க்கும் பொழுது, நான் மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

நெல்லிக்காயைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்:

 • தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் எம்பிலிக்கா அல்லது எம்பிலிக்கா ஆஃபீனாலிஸிஸ்
 • குடும்பம்: பைலாந்தஸ்சியயி; இஃபோரோபியாசியே
 • பொது பெயர்கள்: இந்திய அருநெல்லிக்காய், நெல்லிக்காய்
 • சமஸ்கிருதப் பெயர்கள்: தாத்ரி, அமலாகா, அமலாக்கி
 • பயன்படும் பாகங்கள்: பழம் ( புதியது மற்றும் உலர்ந்தது இரண்டும்), விதைகள், பட்டை, இலைகள், பூக்கள்.
 • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்நெல்லிக்காய் இந்தியாவுக்கு சொந்தமான ஒன்று, ஆனால் சீனா மற்றும் மலேசியாவிலும் இது வளர்க்கப்படுகிறது.
 • ஆற்றலியல்நெல்லிக்காய், கபம், பித்தம், வாதம் எனக் கூறப்படும் உடலில் உள்ள மூன்று தோஷங்கள் அனைத்தையும் சமன் செய்வதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவர்கள், அதை உட்கொள்ளும் போது வயிற்றில் ஒரு இலேசான உணர்வையும் மற்றும் உடலில் வறண்ட விளைவையும் கொடுக்கிற அது, ஒரு உறுதியான குளிர்ச்சியூட்டும் செயல்பாட்டினைக் கொண்டிருக்கிறது எனக் கூறுகின்றனர்.
 1. நெல்லிக்காயின் ஊட்டச்சத்துக்குரிய தன்மைகள் - Nutritional qualities of Amla in Tamil
 2. நெல்லிக்காயின் (இந்திய அருநெல்லிக்காய்) ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Health benefits of Amla (Indian Gooseberry) in Tamil
 3. நெல்லிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது - How to use Amla in Tamil
 4. நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளும் அளவு - Amla dosage in Tamil
 5. நெல்லிக்காயின் பக்க விளைவுகள் - Amla side effects in Tamil
 • நெல்லிக்காய் வைட்டமின் சி- க்கான ஒரு நல்ல ஆதாரமாகும். உண்மையில், இந்த வைட்டமினின் சிறப்பான இயற்கை ஆதாரங்களில் இதுவும் ஒன்று ஆகும். மேலும் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், நெல்லிக்காயில் உள்ள டான்னின்ஸ் (ஒரு வகை இயற்கை மூலக்கூறு), இந்த பழத்தை சமைத்த பிறகு அல்லது பதப்படுத்திய பிறகும் கூட, அதன் அனைத்து வைட்டமின் சி சத்துக்களையும் நிலையாக வைத்திருக்கிறது என்பது தான்.
 • நெல்லிக்கனி, ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களைப் பராமரிக்க உதவுகின்ற சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து போன்ற தாதுக்களின், நல்ல ஒரு ஆதாரமாக இருக்கிறது.
 • நெல்லிக்காயில் இருக்கின்ற கெரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கண்பார்வை மற்றும் முடி வளர்ச்சிக்கு மிக அதிக அளவு நன்மை அளிப்பதாக இருக்கின்றன.
 • மூப்பு-எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மைகளைக் கொண்ட வைட்டமின் இ மற்றும் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிக முக்கியமானதான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ஆகியவற்றையும் இது கொண்டிருக்கிறது.
 • நெல்லிக்காயின் அதிக அளவிலான நார்ச்சத்து கூறுகள், நமது இரைப்பை பாதையின் முறையான இயக்கத்துக்கு மற்றும் அது நல்ல முறையில் இருப்பதற்கான ஒரு மிக சிறந்த காரணியாக, அதனை ஆக்குகிறது.

நெல்லிக்காய், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் சிறந்த தாவர ஆதாரங்களில் ஒன்று மற்றும் அதன் நச்சுக்களை நீக்கும் தன்மைகள், அதனை ஒரு பொருத்தமான கல்லீரல் மருந்தாக ஆக்குகின்றன. ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடர்ந்து நெல்லிக்காயை உட்கொண்டு வருவது, உடலில் இருந்து அனைத்து நச்சுக்களையும் நீக்குவதோடு மட்டும் அல்லாமல், அதன் புத்துயிர்ப்பு அளிக்கும் மற்றும் ஊட்டச்சத்துமிகு தன்மைகள், மண்ணீரல் மூலம் இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின்களை உருவாக்குவது, இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பினை வலுப்படுத்துவது உட்பட, அதிகமான உடல் உறுப்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், அதோடு மட்டும் முடிந்து விடவில்லை. நெல்லிக்காயில் இருக்கின்ற அதிகமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு வேண்டிய மிகவும் ஆற்றல் மிக்கதாக, அதனை ஆக்குகின்றன.

 • வைட்டமின் சி- யின் செறிவான ஆதாரம்: நெல்லிக்காய், வைட்டமின் சி- யின் செறிவான ஆதாரங்களில் ஒன்று ஆகும். நமது உடலால் இந்த வைட்டமினை உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால், அதனை ஒரு வெளிப்புற ஆதாரத்தில் இருந்து அடைவது மிகவும் முக்கியமானது ஆகும். போதுமான அளவு வைட்டமின் சி, கருமை அடைந்த மற்றும் இரத்தக்கசிவுடைய ஈறுகளுக்கு காரணமாகிற, ஸ்கர்வி போன்ற குறைபாட்டு நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.
 • கண் பார்வையை மேம்படுத்துகிறது: நெல்லிக்காய், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கேரோட்டீனாய்டுகளைக் கொண்டிருக்கிறது, இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும், கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்ற மற்றும் பார்வையைப் பாதுகாக்கின்ற பொறுப்பை உடையவை ஆகும். நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் சி - யும் கண்களின் தசைகளை வலிமைப்படுத்த மற்றும் முதுமை தொடர்பான கண் குறைபாடுகளை தூரமாகத் தள்ளி வைக்க உதவுகிறது.
 • எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது: நெல்லிக்காய், ஒரு மிகச் சிறப்பான எடைக் குறைப்பு ஊக்குவிப்பானாக இருக்க முடியும். இது செரிமானத் தன்மையை மற்றும் உங்கள் உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை நீக்குகிற தன்மையை மேம்படுத்துகிறது, ஒரு சிறப்பான வளர்சிதை மாற்றத்தை உறுதியளிக்கிறது. நெல்லிக்கனியின் நார்ச்சத்து, உங்களை அளவுக்கு அதிகமாக உண்பதில் இருந்து விலக்கி வைக்கிறது மற்றும் கொழுப்புகளை அழித்தலை அதிகரிக்கிறது, உங்கள் உடலில் உள்ள கொழுப்பு படிமானங்களைக் உருக்குகிறது.
 • மலம் கழித்தல் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது: நெல்லிக்காய், குடல்களில் உணவினை திரட்சியாக்குகின்ற மற்றும் மலம் கழித்தல் செயல்பாடுகளை முறைப்படுத்த உதவுகின்ற, நார்ச்சத்தினை அதிக அளவு கொண்டிருக்கிறது. கூடவே, உடலின் மீது, அதன் குளிர்ச்சியூட்டும் தன்மை, உடல் சூடு உள்ள நபர்களுக்கு அடிக்கடி வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வை நீக்குகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: நெல்லிக்காயால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது, பல்வேறு நோய் எதிர்ப்பு அமைப்பு செல்களைத் தூண்டுவதில் பயன்மிக்கதாக இருப்பதாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிற வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை ஏராளமான அளவு கொண்டிருக்கிறது. 
 • இரத்தத்தை சுத்திகரிக்கிறது: நெல்லிக்காய் ஒரு நிரூபிக்கப்பட்ட நச்சு நீக்கும் காரணி ஆகும். அது, உங்கள் இரத்த அணுக்களுக்கு ஊட்டமளித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், உங்கள் இரத்தத்தில் இருந்து அசுத்தங்களை மற்றும் அதிகப்படியான அடிப்படை மூலக்கூறு சார்ந்தவற்றை நீக்குகிறது. இந்த பண்புகள் இரண்டும் இணைந்து, மேம்படுத்தப்பட்ட ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கக் கூடிய வகையில், இரத்த அணுக்களின் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் திறனை ஆதிகரிக்கின்றன.
 • கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது: நெல்லிக்காய் உட்கொள்வது, உடலில் கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது மற்றும் கல்லீரலின் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது, அதன் மூலம் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. கூடவே அது, இரத்தக் குழாய்களில் படிவுகள் சேர்வதை தடுக்கின்ற மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கக் கூடிய, குரோமியம் தாதுவையும் கொண்டிருக்கிறது.
 • முதுமையடைவதை எதிர்த்து போராடுகிறது: நெல்லிக்காய், முன்கூட்டியே ஏற்படும் முதுமைத் தோற்றத்துக்கான முதன்மையான காரணங்களில் ஒன்றான, செல்களின் சேதத்தை எதிர்த்துப் போராட, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ராணுவத்தை கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக நெல்லிக்காய் சாறு அருந்துவது, முதுமையடையும் செயல்முறையைத் தாமதப்படுத்துகிறது மற்றும் சுருக்கங்கள், கோடுகளை ரொம்ப தூரத்துக்குத் தள்ளி வைக்கிறது எனக் கூறப்படுகிறது.
 • நீண்ட பளபளப்பான கேசத்தை வழங்குகிறது: ஆயுர்வேத மருத்துவர்கள், நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தடவுவது உங்கள் முடிக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வைத் தடுக்கிறது மற்றும் நெல்லிக்காயின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் இளநரை ஏற்படுவதைத் தடுக்கின்றது எனத் தெரிவிக்கின்றனர். மேலும், நெல்லிக்காயில் இருக்கின்ற 5 ஆல்ஃபா ரிடக்டேஸ், ஆண்களுக்கு முடி உதிர்வு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுப்பது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.
 • எலும்புகள் மற்றும் பற்களை பாதுகாக்கிறது: நெல்லிக்காய் உங்கள் எலும்புகளுக்கு இரட்டை நன்மைகளைக் கொண்டு இருக்கிறது. அது உங்களுக்கு, எலும்புத் திசுக்களை அழிக்கும் செயல்முறையைத் தடுப்பதன் மூலம் எலும்புகளின் இழப்பைத் தடுக்கின்ற அதே நேரத்தில், எலும்புகளின் கட்டமைப்பைப் பராமரிக்க அவசியமான சுண்ணாம்பு சத்தை உங்கள் எலும்புகளுக்கு அளிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
 • தொண்டை வலிக்கு இதமளிக்கிறது: நெல்லிக்காய், இஞ்சியுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது, தொண்டை வலிக்கு ஒரு நிவாரணமாக பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, இந்தப் பழத்தின், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட மற்றும் தொண்டை தசைகளை வலுப்படுத்த உதவுகின்ற, நோய் எதிர்ப்பைத் தூண்டும் மற்றும் ஊட்டமளிக்கும் தன்மைகளின் காரணத்தால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. நோய்க் கிருமிகளை வெளியேற்றி, விரைவாக நிவாரணம் பெற உதவுகிறது.

நெல்லிக்காய், வைட்டமின் சி- க்கான ஒரு செறிவான ஆதாரம் - Amla is a rich source of Vitamin C in Tamil

நெல்லிக்காய், வைட்டமின் சி- கான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகும், உண்மையில், அது, ஆரஞ்சு பழங்களை விட 20-30 மடங்கு அதிக வைட்டமின் சி- யைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது. சுயமாக வைட்டமின் சி- யை உற்பத்தி செய்ய இயலாத மனித உடலுக்கு அதனைக் கொடுப்பது என்பது, உடலில் இந்த வைட்டமினுக்காக ஏற்படும் தேவையைப் பூர்த்தி செய்ய, அவசியமான ஒரு பிற்சேர்க்கை உணவு ஆகும். ஸ்கர்வி எனப்படும், உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைபாட்டுடன் தொடர்புடைய, கருமையான மற்றும் இரத்தக் கசிவுடன் கூடிய ஈறுகளால் அடையாளம் காணப்படும் ஒரு பிரச்சினை, தொடர்ச்சியாக நெல்லிக்காய் உட்கொண்டு வருவது மூலம் தீர்க்கப்படுகிறது.

நெல்லிக்காய் கண் பார்வையை மேம்படுத்துகிறது - Amla improves eyesight in Tamil

உங்கள் மங்கலான பார்வை மற்றும் படிக்கப் பயன்படுத்தும், கனமான கண்ணாடிகளால், நீங்கள் சோர்வடைந்து இருக்கிறீர்களா? உங்கள் நண்பர்கள், விழித்திரை லென்ஸ்கள் மற்றும் லேசர் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பது உங்களைக் கொஞ்சம் பயமுறுத்துகின்றனவா? நெல்லிக்காய், நல்ல தெளிவான கண் பார்வைக்குப் பொறுப்பான இரண்டு முக்கிய காரணிகளான, கெரோடெனோய்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் ஒரு சிறந்த ஆதாரமாக இருப்பதாக அறியப்படுகிறது. கூடுதலாக, நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் சி, நமது கண்களில் இருக்கின்ற விழித்திரை செல்களின் மீது ஒரு தூண்டுதல் விளைவைக் கொண்டிருக்கிறது. அதனால், மோசமான கண்பார்வைக்கு சிகிச்சையளிக்க மற்றும் கண் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மிக முக்கியமான நிவாரணிகளில் ஒன்றாக, நெல்லிக்காய் இருப்பது ஒரு ஆச்சரியமாக இருக்கப் போவது இல்லை. ஒரு நாளுக்கு இரண்டு முறை நெல்லிக்காய் சாறு அருந்துவது, கண் பார்வையை மேம்படுத்துவதில் ஒரு நன்மை பயக்கும் விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

உடல் எடைக் குறைப்புக்காக நெல்லிக்காய் - Amla for weight loss in Tamil

உடல் எடை அதிகரிப்பதற்கான மிகவும் வழக்கமான காரணங்களில் ஒன்று, செரிமான அமைப்பின் ஒழுங்கில்லாத செயல்பாடு ஆகும். அது அதிகப்படியான உணவை வெளியே தள்ள இயலாமையோ அல்லது போதுமான ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்க இயலாமல் இருப்பதோ, எதுவாயினும், உடலில் தேவையற்ற அதிக எடை சேருவதற்கு தான் வழிகோலுகிறது. உங்கள் உடலின் அதிகப்படியான எடையைக் குறைக்கவும் மற்றும் உங்களை லேசாக மற்றும் கனமற்று உணருமாறு செய்யவும், நெல்லிக்காய் உங்களுக்கு உதவக்கூடிய பல வழிகள் உண்டு. முதலில், இது ஒரு சிறுநீர் பிரிப்பு ஊக்கி, அதாவது இது, அதிகப்படியான எடையுடன் உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியான, உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் மற்றும் உப்புக்களை நீக்குவதற்கு உதவுகிறது. அடுத்ததாக, நெல்லிக்காய், நார்ச்சத்தின் ஒரு செறிவான ஆதாரம் ஆகும், அது உங்களை வயிறு நிரம்பியது போன்று உணரச் செய்து குறைவாக சாப்பிட வைக்கிறது. அதன் மூலம், ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளப்படும் உணவின் அளவை குறைக்கிறது மற்றும் உணவு உண்பதற்கான இடைவெளி நேரத்தை அதிகரிக்கிறது. இறுதியாக, இது உங்கள் வயிற்றுக்கு உணவை எளிதாக செரிமானம் செய்யவும், மேலும் அதிக ஊட்டச்சத்துக்களை இரத்தத்துக்கு கடத்தவும் உதவுகிறது, இதனால், உங்கள் உடலின் தினசரி செயல்பாடுகளுக்கான அதிக ஊட்டச்சத்துக்களை அதற்கு வழங்குகிறது. ஆக, எதற்காக காத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? இந்தப் பழத்தை உங்கள் உணவுப் பழக்கத்தில் சேருங்கள் மற்றும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமலே, உங்கள் அதிகப்படியான அனைத்து எடையையும் அழித்து நீக்குங்கள்.

(மேலும் படிக்க: உடல் எடைக் குறைப்பு அட்டவணை)

நோய் எதிர்ப்பு சக்திக்காக நெல்லிக்காய் - Amla for immunity in Tamil

நெல்லிக்காயின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மைகள், அதனை ஒரு மிகச் சிறந்த நோயெதிர்ப்பு அமைப்பானாக (நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்துதல்) ஆக்குகிறது. தொடர்ந்து நெல்லிக்காய் உட்கொண்டு வருவது, உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் (உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரிகளைக் கொல்கின்ற பொறுப்பை உடையவை) எண்ணிக்கையை அதிகரிக்கிறது மற்றும் ஒரு விரைவான மற்றும் மிகவும் திறன் வாய்ந்த நோய் எதிர்ப்பு பதிலடியைத் தர வழிவகுக்கிறது.

(மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது)

இரத்த சுத்திகரிப்புக்காக நெல்லிக்காய் - Amla for blood purification in Tamil

இரத்தம், உடலில் எந்த ஒன்றையும் பரிமாற்றம் மற்றும் சுழற்சியில் ஈடுபடுத்தும் அடிப்படையான ஊடகம் ஆகும். அது, உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவது மற்றும் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை நீக்குவது ஆகியவற்றுக்குப் பொறுப்புடையதாகும். வாழ்க்கைமுறை, மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் போன்ற காரணிகள், நமது இரத்தத்தின் தூய்மையைப்  பராமரிப்பதில் ஒரு வலுவான பாதிப்பைக் கொண்டிருக்கின்றன மற்றும் அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவு, மன அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற நோய்கள், இரத்தத்தின் தூய்மையில் ஒரு தீர்க்கமான பாதிப்பைக் கொண்டிருக்கலாம்.இந்த அனைத்துப் பிரச்சினைகளும், இரத்தத்தின் உள்ளார்ந்த சுத்தம் செய்யும் நடைமுறையின் வேகத்தைக் குறைத்து தாமதப்படுத்தி, அதனை நச்சுக்கள் நிரம்பியதாக இருக்கச் செய்து, முகப்பரு, தோலில் கறைகள் அல்லது முன்கூட்டியே முதுமைத் தோற்றம் போன்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இரத்தத்தில் உள்ள அதிக அளவிலான நச்சுப் பொருட்கள், உடலின் அனைத்து உறுப்புகளின் இயல்பான நடவடிக்கைகளிலும் கூட தலையீடு செய்யக் கூடும். இது உங்களை நோய்த்தொற்றுகளுக்கு மேலும் எளிதான இலக்காக மாற்றி விடும். நெல்லிக்காய் ஒரு மிகச் சிறந்த நச்சு நீக்கி, அதற்கு அர்த்தம், அது இரத்தத்தில் இருக்கின்ற அசுத்தங்களை சுத்தப்படுத்துவதற்கான ஒரு மிக சிறந்த காரணி என்பதாகும். ஒரு சிறுநீர் பிரிப்பு ஊக்கியாக, அது உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான உப்புக்களை சுத்தம் செய்து, உங்கள் இரத்தத்தை சுத்தமானதாக வைக்கிறது. மேலும், அதன் ஊட்டமளிக்கும் பண்புகள், உடல் முழுவதும் ஒரு சிறப்பான ஆக்சிஜன் சுழற்சிக்கு நன்மை பயக்கின்ற வகையில், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிப்பதற்கு வழிகோலுகிறது. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவாறு, இரத்தத்தில் அதிக அளவிலான ஆக்சிஜன் என்பது, உடலில் குறைந்த அளவு அசுத்தங்கள் என்பதாகும்.

நெல்லிக்காய் கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது - Amla reduces cholesterol in Tamil

பச்சை நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொள்வது, உடலின் கொழுப்பு அளவுகளின் மீது ஒரு தீவிரமான தடுப்பு விளைவைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இது தொடர்பான மற்றொரு ஆய்வில், உடலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டு இருப்பது, கல்லீரல் மீதான அழுத்தத்தைக் குறைக்க மற்றும் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கக் காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியமும், இரத்தக் குழாய்களில் ஏற்படும் படிமங்களை (கொழுப்பு சேருதல்) நீக்குவதற்கு மற்றும் இரத்தக் குழாய் அடைப்பின் காரணமாக ஏற்படும் மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க உதவுகிறது.

(மேலும் படிக்க: உயர் கொழுப்புக்கான சிகிச்சை)

நீரிழிவு நோய்க்காக நெல்லிக்காய் - Amla for diabetes in Tamil

தொடர்ந்து நெல்லிக்காய் சாறு உட்கொள்வது, உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை, அதிக இன்சுலின் சுரப்பதற்கு தூண்டுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஹார்மோன், பதிலுக்கு, இரத்தத்தில் இருந்து சர்க்கரையை எடுத்துக் கொண்டு, அதை கல்லீரலில் சேமிக்கிறது. இதனால் ஒட்டு மொத்த இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்க வழிவகுக்கிறது. தினசரி நெல்லிக்காய் பொடியை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை ஆராய சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைப்பதில் அது மிகவும் நன்மை அளிப்பது மற்றும் அது மிகவும் வழக்கமான நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

முதுமையை எதிர்க்க நெல்லிக்காய் - Amla for anti-aging in Tamil

இந்த உலகத்தில், மெதுவாக முதுமையடைவதை யார் தான் விரும்ப மாட்டார்கள். எப்பொழுதும் இளைமையாகத் தோற்றம் அளிப்பது, அநேகமாக எல்லோரது விருப்பப் பட்டியலிலும் இருக்கிறது. ஒரு இளமையான தோற்றமளிக்கும் சருமத்தை அடைவது என்பது, நீங்கள் கனவு காண்பது போன்ற, அதே அளவுக்கு எளிதானது என்றால் அது மிகவும் சௌகரியமானது இல்லையா? மூலக்கூறு சார்ந்த சேதமே, நமது உடலில் ஏற்படும், பெரும்பாலான முதுமையடையும் செயல்பாடுகளின் மிகப் பெரிய காரணமாக இருக்கிறது, மேலும் துரதிர்ஷ்டவசமாக, அது தடுக்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், உடலின் வழக்கமான வளர்சிதை மாற்ற நிகழ்வுகளால் அது ஏற்படுகிறது. தினசரி வாழ்வின் அழுத்தம் மற்றும் நவீனமான வாழ்க்கைமுறை, இந்தப் பிரச்சினையோடு சேர்ந்தது மட்டும் அல்லாமல், கிட்டத்தட்ட இதனைக் கையாள சாத்தியமற்ற நிலைக்கு கொண்டு செல்வது வரை மோசமாக்குகின்றன. மூலக்கூறு சேதத்தை எதிர்த்துப் போராட ஒரே வழி, போதுமான அளவுக்கு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை எடுத்துக் கொள்வதாகும் மற்றும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அது கையிலேயே இருக்கிறது. நெல்லிக்காய், ஒரு ஊட்டச்சத்து மிக்க மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் கொண்ட பழம் என்ற வகையில், ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைப்பது மட்டும் அல்லாமல், கூடவே, அதில் இருக்கின்ற வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சருமத்துக்கு புத்துணர்வு அளித்து, அதற்கு ஊட்டமளிக்கிறது. அதன் மூலம் அதை அதிக ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோன்ற செய்கிறது.

முடிகளுக்காக நெல்லிக்காய் - Amla for hair in Tamil

நெல்லிக்காய், யாருக்கும் நினைவு இருக்கும் காலத்துக்கும் முன்பாகவே, இந்திய மக்களிடையே பயன்பாட்டில் இருந்து இருக்கிறது. மிகவும் கருமையான மற்றும் பளபளப்பான முடியைப் பெறுவதில், நெல்லிக்காயின் நன்மைகள் பெரும்பாலான மக்களிடம் இருந்து மறைக்கப்படவில்லை. ஆயுர்வேத மருத்துவர்கள், முடி உதிர்வுக்கு நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஒரு கலவையைப் பரிந்துரைக்கிறார்கள்.

தொடர்ந்து நெல்லிக்காய் உட்கொண்டு வருவதால் அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தடவி வருவதால், அதன் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் முடி சேதமடைவதன் அறிகுறிகளை நீக்கி, முடி உதிர்வை நிறுத்துவதில் உதவுகின்ற அதே வேளையில், அது முடியின் வேர்க் கால்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடிகள் வளர்வதையும் ஊக்குவிக்கிறது என அறியப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை தலை பிரச்சினைக்கு, நெல்லிக்காய் எண்ணெய் ஒரு நிரூபிக்கப்பட்ட நிவாரணமாக இருக்கிறது. ஒரு சமீபத்திய ஆய்வு, நெல்லிக்காய் எண்ணெய், ஆண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான 5 ஆல்பா ரெடக்டஸ்-க்கு எதிரான திறன்மிகுந்த தடுப்பியாக இருக்கிறது எனக் கூறுகிறது.

எலும்புகள் மற்றும் பற்களுக்காக நெல்லிக்காய் - Amla for bones and teeth in Tamil

நெல்லிக்காய், எலும்புத் திசு அழிப்பு அணுக்கள் எனப்படும், நமது உடலில் உள்ள எலும்புகளை பலவீனப்படுத்தும் செயல்களுக்கான செல்களுக்கு எதிரான ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருக்கிறது என அறியப்படுகிறது. நெல்லிக்காய் சாறு அல்லது பொடியை உட்கொள்வது, இந்த செல்களின் செயல்பாட்டை தாமதப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதனால், எலும்புகள் நீண்ட காலத்துக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கின்றன. மேலும், நெல்லிக்காய், நமது உடலில் சுண்ணாம்பு சத்து உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது, இந்த சுண்ணாம்பு சத்தானது நமது எலும்புகள் மற்றும் பற்கள் இரண்டுக்குமே அதிக அடர்த்தி மற்றும் வலிமையை வழங்குகிற தாதுவாகும். ஆகவே, நெல்லிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு முறிவுகளைத் தடுக்க உதவுவது மட்டும் அல்லாமல், கூடவே அவற்றை வலுவாக்கவும் உதவுகிறது.

தொண்டை வலிக்காக நெல்லிக்காய் - Amla for sore throat in Tamil

நெல்லிக்காய் ஒரு புளிப்பான மூலிகை பொருள். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆயுர்வேத மருத்துவர்கள், தொண்டை வலியைக் குணப்படுத்த, நெல்லிக்காய் சாற்றை இஞ்சியுடன் கலந்த ஒரு கலவையை உட்கொள்வதைப் பரிந்துரைக்கிறார்கள். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ஒரு மிகச் சிறந்த ஆக்சிஜனேற்றி எதிர்ப்பியாகும். அதன் ஊட்டமளிக்கும் தன்மைகள் தொண்டையின் தசைகளை வலுப்படுத்த உதவுகிற வேளையில் வைட்டமின் சி, தொண்டை வலிக்குக் காரணமான பெரும்பாலான கிருமிகளை கொல்வதற்கான, நமது உடலின் திறனை மேம்படுத்துகிறது.

மலம் கழித்தலை ஒழுங்குபடுத்துவதற்காக நெல்லிக்காய் - Amla for regulating bowel movement in Tamil

நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து மூலக்கூறு, உணவுக்கு ஒரு திரட்சியைக் கொடுக்கின்றது. போதுமான அளவு தண்ணீருடன் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, மலத்தை இளக்குவதற்கு மற்றும் மலம் கழித்தலை ஒழுங்குபடுத்துவதற்கு, இது உதவுகிறது. அதற்கும் மேல், நெல்லிக்காய் ஒரு இயல்பான குளிரூட்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது, எனவே, உங்கள் வயிற்றில் அவ்வப்போது ஏற்படும் எரிச்சல் உணர்வில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது உடல் சூடு உடைய நபர்களுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது ஆகும்.

நெல்லி மரம் இலையுதிர் காலத்தில் பழங்களை உற்பத்தி செய்கிறது. பழுக்காத காய்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன, அவை பழுக்கும் பொழுது ஒரு தனித்துவமான சற்றே பழுப்பு கலந்த தங்க நிறத்துக்கு மாறுகிறது. இந்தப் பழத்தை பச்சையாக உட்கொள்ள முடியும், ஆனால் காய்கள் புளிப்பு சுவையுடையதாக இருக்கும் மற்றும் அனைவரது சுவை அரும்புகளாலும் விரும்பப்படுவதாக இருப்பதில்லை. அதிர்ஷ்டவசமாக, சந்தையில் வணிக ரீதியிலான பல்வேறு விதமான நெல்லிக்காய் பொருட்கள் கிடைக்கின்றன, ஆனால் அவற்றில் சில பொருட்கள் உங்களுக்கு நன்மை விளைவிப்பதை விட அதிக தீமைகளை விளைவிக்கும் வகையில், அதிக அளவிலான செயற்கை சர்க்கரைகள் மற்றும் சுவைகள் சேர்க்கப்பட்டவையாக இருப்பதால், நீங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளின் தரத்தையும் பரிசோதித்து வாங்குமாறு நீங்கள் மிகவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் மிகவும் வழக்கமாக வாங்கக் கூடிய நெல்லிக்காயின் வடிவங்களில், புதிய மற்றும் உலர்ந்த பழம், நெல்லிக்காய் முறப்பா, மிட்டாய்கள், பொடி, மாத்திரைகள் மற்றும் குழாய் மாத்திரைகள், நெல்லிக்காய் சாறு, சட்னி, ஜாம், மற்றும் எண்ணெய்கள் ஆகியவை அடங்கும். இது, திரிபலா மற்றும் சவன்பிராஷ் (மிகவும் வழக்கமான இரண்டு ஆயுர்வேத தயாரிப்புகள்) ஆகியவற்றின் முக்கியமான பாகங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இருப்பினும், நீங்கள் சமையலில் ஆர்வமும் மற்றும் இயற்கையான வீட்டு நிவாரணிகளை விரும்புபவராகவும் இருந்தால், வீட்டிலேயே புதுமையான சில சமையல் குறிப்புகளை செய்து பார்க்கலாம். இது பொருத்தமானது இல்லையா!

நெல்லிக்காயை பயன்படுத்தும் மூன்று எளிய மற்றும் பயன்மிக்க வழிகளைப் பற்றி நாம் காணலாம்:

 • நெல்லிக்காய் சாறு - 
  நெல்லிக்காய் சாறு தயாரிக்க, சில நெல்லிக்காய்களில் இருந்து விதைகளை பிரித்து எடுத்து விட்டு, ஒரு நேர்த்தியான கூழ் போன்று வருமாறு, ஒரு மிக்ஸியில் அரைக்கவும். மிக்ஸியில் மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து (உங்களது சுவை மற்றும் தேவைப்படும் அடர்த்தியைப் பொறுத்து), மீண்டும் அரைக்கவும். அதனை வடிகட்டி ஒரு ஜாடியில் ஊற்றவும். சுவைக்காக, கருப்பு மிளகு, இஞ்சி அல்லது கொத்தமல்லியை கூட நீங்கள் அதில் சேர்க்கலாம். சமையல்கலை நிபுணர்கள், நெல்லிக்காய் சாறு எந்தவித பதப்படுத்திகளும் சேர்க்காமல், குளிர்சாதன பெட்டியில், ஒரு வார கால அளவுக்கு கெடாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் புதியதா என உறுதி செய்ய, சுவை அல்லது ஏதேனும் மெல்லிய வளர்ச்சி உள்ளதா என சோதிக்குமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒரு மாதம் வரை சாறை பாதுகாப்பாகப் பதப்படுத்துவதற்கு, சோடியம் லாக்டேட், நன்கு அறியப்பட்ட ஒரு பதப்படுத்தி ஆகும்.
   
 • நெல்லிக்காய் சட்னி -
  நெல்லிக்காய் சட்னி செய்வது, நெல்லிக்காய் சாறு செய்வதை மிகவும் ஒத்த செயல்முறையாகும். காய்களில் இருந்து கொட்டைகளை நீங்கள் நீக்கிய பிறகு, அவற்றை மிக்ஸியில் போட்டு, சுவைக்காக அதனுடன் இஞ்சி, உப்பு மற்றும் கொத்தமல்லியை சேருங்கள். ஒரு கூழ் போன்று வருமாறு அதை அரைத்து, பின்னர் அதை ஒரு ஜாடியில் வையுங்கள். அது கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது சிறிது எண்ணையை ஊற்றி, ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள். நெல்லிக்காய் சட்னி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மாத காலம் வரை கெடாமல் இருக்கிறது.
   
 • நெல்லிக்காய் எண்ணெய் -

முழு நெல்லிக்காய்களை, தேங்காய் எண்ணெய் நிரம்பிய ஒரு டப்பா/ஜாடியில் போட்டு, பிறகு அதை சூரிய வெப்பத்தில் ஒரு வார காலம் வரை வைப்பதன் மூலம், நெல்லிக்காய் எண்ணெய்யை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்க முடியும். எண்ணெய், அதன் விளிம்பு வரை நிரம்புகிற பொழுது, அது ஏறத்தாழ ஜாடியை நிரப்பும் அளவுக்கு போதுமான நெல்லிக்காய்களை போடுங்கள். 4-5 நாட்களுக்குப் பிறகு ஜாடியை நன்கு குலுக்கி, ஏதேனும் மெல்லிய அல்லது பூஞ்சை வளர்ச்சி இருக்கிறதா என சோதியுங்கள்.எண்ணையை ஜாடியில் ஊற்றுவதற்கு முன்னர், ஜாடியை நன்கு கழுவி காய வைக்கவும். அதே போல், நெல்லிக்காய்களும், அவற்றின் மேல் ஒட்டியிருக்கும் ஏதேனும் தூசு அல்லது நுண்ணுயிர்களை நீக்குவதற்காக, நன்கு முறையாக கழுவி காய வைக்கப்பட வேண்டும். நெல்லிக்காய் பொடி மற்றும் உலர்ந்த நெல்லிக்காய், இவை இரண்டையும் கூட எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்த முடியும். தேவையான அளவு நேரத்துக்குப் பிறகு, நெல்லிக்காயைப் பிரித்து எடுக்க, எண்ணையை நீங்கள் வடிகட்டிக் கொள்ளலாம் அல்லது அவற்றை வைத்துக் கொண்டே, எண்ணையை மேலேயிருந்து பயன்படுத்தலாம். நெல்லிக்காய் தனது ஊட்டச்சத்துக்கள் மற்றும் எண்ணெய்களை, இந்த எண்ணெய்யில் வெளியிட்டுக் கொண்டு இருக்கும் வரை, எண்ணெய்யின் சக்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இதற்கு மாற்றாக, நீங்கள் நெல்லிக்காய் சாற்றை, தேங்காய் எண்ணையில் கலந்து, இரண்டு திரவங்களும் கலப்பதற்காக, அதைக் குறைந்த வெப்பத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு சூடுபடுத்த வேண்டும். ஒரு நிமிடம் அல்லது சில நிமிடங்களுக்குப் பிறகு, அதனை சூட்டிலிருந்து எடுத்து, அதை நேரடியாக சருமம் அல்லது உச்சந்தலையில் தடவிக் கொள்ளுங்கள்.

நெல்லிக்கனியை பச்சையாகவே உண்ண முடியும் பொழுது, நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள மிகவும் வழக்கமான மற்றும் மிக எளிதான வழியாக, நெல்லிக்காய் பொடி இருக்கிறது. பொதுவாக, வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சில ஆயுர்வேத மருத்துவர்கள், இதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை உணவு அருந்திய பிறகும் நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். உணவுக்குப் பிறகு நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது, உணவை மேலும் நன்கு செரிமானம் செய்ய உதவுவதாகக் கூறப்படுகிறது. தொண்டை வலிக்கு இதமளிக்க, நெல்லிக்காயை தேனுடன் கலந்து அல்லது இஞ்சியுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காய் எண்ணெய், முடி வளர்ச்சிக்கும் மற்றும் இளநரை ஏற்படுவதைத் தடுப்பதற்கும் மிகவும் நல்லது.  நெல்லிக்காய் எண்ணெயை முடிகளுக்கு மேலும் நன்மை அளிப்பதற்காக, சிகைக்காய் அல்லது பாதம் எண்ணையுடன் கலந்து பயன்படுத்தலாம்.

இருந்தாலும், நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளும் சரியான அளவானது, ஒரு தனிநபரின் வயது, பாலினம் மற்றும் உடல்நல பிரச்சினைகளைப் பொறுத்து வேறுபடுகிறது. இந்தப் பழத்தை எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் எடுத்துக் கொள்வதில், சுற்றுச்சூழல் காரணிகளும் ஒரு பங்கு வகிக்கிறது. எனவே, ஒரு நிவாரணமாக நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக, ஒரு ஆயுர்வேத மருத்துவரை கலந்து ஆலோசிப்பது விரும்பத்தக்கது.

 • நெல்லிக்காயை அதிக அளவில் எடுத்துக் கொள்வது, மலச்சிக்கலை நீக்க உதவுவதற்கு பதிலாக, அதனை அதிகரிக்க வைக்கக் கூடும். மேலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் உட்கொள்வது, வயிற்றின் ஆரோக்கியத்தின் மீது மேலும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்தைக் கடினமானதாக்கி, குடல்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
 • நீங்கள் ஏற்கனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளுக்கு ஒரு ஒவ்வாமையைக் கொண்டிருந்தால், நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது உங்களுக்கு அறிவுறுத்தத்தக்கது அல்ல.
 • நீங்கள், பொதுவாகவே குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளைக் கொண்டவராகவோ அல்லது நீரிழிவுக்காக மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு எடுத்துக் கொள்பவராகவோ இருந்தால், நெல்லிக்காய், ஒரு இயற்கையான இரத்த சர்க்கரை குறைப்பானாக இருப்பதால் (இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது) மற்றும் அந்த மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்யக் கூடும் என்பதால், அதை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்வதற்கு முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் நல்லது.
 • நெல்லிக்காயை, இயல்பான அளவை விடக் குறைவான தண்ணீரோடு எடுத்துக் கொள்வது, நெல்லிக்காய் ஒரு இயற்கையான சிறுநீர் பெருக்கி, அதாவது, உங்கள் உடல் அதிரடியாக நீரை இழக்க செய்யக் கூடியது என்பதால், உங்கள் உடல்நலத்தை மிகத் தீவிரமாகப் பாதிக்கக் கூடும். எனவே, நீங்கள் உங்கள் உணவில் நெல்லிக்காயை சேர்த்துக் கொண்டால், உங்கள் உடலைப் போதுமான நீர்ச்சத்தோடு வைத்திருப்பது விரும்பத்தக்கது.
 • கர்ப்பிணி பெண்களுக்கு நெல்லிக்காயின் பாதிப்புகளைப் பற்றிய எந்த ஒரு ஆதாரமும் இதுவரை இல்லை. அதனால், நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் தினசரி நடைமுறையில் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அறிவுறுத்தப்படுகிறது.
 • நெல்லிக்காயின் இயற்கையான குளிர்ச்சியூட்டும் தன்மை, ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, அதனை உட்கொள்ள பொருத்தமற்றதாக ஆக்குகிறது.

उत्पाद या दवाइयाँ जिनमें Amla है

மேற்கோள்கள்

 1. UAB Department of Anthropology [Internet] Amla Fruit in India
 2. Manayath Damodaran, Kesavapillai Ramakrishnan Nair. A tannin from the Indian gooseberry (Phyllanthus emblica) with a protective action on ascorbic acid. Biochem J. 1936 Jun; 30(6): 1014–1020. PMID: 16746112
 3. Guy Drouin, Jean-Rémi Godin, Benoît Pagé. The Genetics of Vitamin C Loss in Vertebrates. Curr Genomics. 2011 Aug; 12(5): 371–378. PMID: 22294879
 4. Krishnaveni M1, Mirunalini S. Therapeutic potential of Phyllanthus emblica (amla): the ayurvedic wonder.. J Basic Clin Physiol Pharmacol. 2010;21(1):93-105. PMID: 20506691
 5. National Health Portal [Internet] India; Amla
ऐप पर पढ़ें