ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ், பொதுவாக அறியப்பட்ட நெருஞ்சில் உலகம் எங்கும் ஆண்டு முழுவதும் காணப்படும் ஒரு மூலிகை ஆகும். கோக்ஷூரா என்பது ஒரு சமஸ்கிருத பெயர் மற்றும் அதற்கு "பசு மாட்டின் குளம்பு" என்று பொருள். மேய்ந்து கொண்டிருக்கும் மிருகங்களின் குளம்பில்  சிக்கிய இந்த பழங்களில் உள்ள சிறிய முட்களின் காரணமாக இந்த பெயர் வந்திருக்க கூடும். நெருஞ்சில் தாவரத்தால் மிகவும் தீவிரமான நிலைமைகளை கூட தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும் மற்றும் பிற தாவரங்கள் உயிர்வாழ முடியாத வறண்ட காலநிலங்களில் கூட இதனால் வளர இயலும். 

நெருஞ்சில் ஒரு சக்திவாய்ந்த மருத்துவ மூலிகை. இதனால் இது பல்வேறு சிகிச்சை பயன்பாடுகளுக்காக உபயோகிக்கப்படுகிறது. இந்த மூலிகைகளின் பழங்கள் மற்றும் வேர்கள் இந்திய ஆயுர்வேதத்திலும் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெருஞ்சில் பழங்கள் டையூரிடிக் (சிறுநீரிறக்கிகள்), பாலுணர்வு தூண்டல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இந்த மூலிகைகளின் வேர்கள் ஆஸ்துமா, இருமல், இரத்த சோகை, மற்றும் உள் உறுப்புக்களின் அழற்சி ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த தாவரத்தின் சாம்பல்  முடக்கு வாத சிகிச்சைக்காக பயன்படுத்தப்படலாம்.

இந்திய மருத்துவத்தைன் தந்தை சரகா,  இந்த மூலிகையை ஒரு பாலுணர்வை தூண்டும் மருந்தாக அங்கீகாரம் செய்தார், இந்த மூலிகை பாலியல் ஆசையை உண்டாக்குகிறது. மேலும் சிறு நீர் வெளியேறுவதை அதிகரிக்கிறது, இதனால் சிறுநீர் மூலம் நச்சுகள் மற்றும் கழிவு பொருட்களை வெளியேற்ற இந்த மூலிகை உதவுகிறது.

நெருஞ்சில்  பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

 • தாவரவியல் பெயர்: ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ்

 • குடும்பம்: ஸிகோஃபில்லாசீஸ்

 • பொது பெயர்: கோக்ரு, கோக்ஷுரா, சோடகோக்ரு 

 • பயன்படுத்தப்படும் பகுதிகள்: வேர் மற்றும் பழங்கள் மருந்தில் பயன்படுத்தப்படுகின்றன.

 • சொந்தமான பகுதி மற்றும் புவியியல் பரப்பு: இந்த மருத்துவ மூலிகை இந்தியாவில் உருவானது. இது இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதிக அளவில் பரவலாக காணப்படுகிறது, ஆனால் ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பகுதிகளிலும் காணப்படுகிறது.

 1. நெருஞ்சிலின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Gokshura nutrition facts in Tamil
 2. நெருஞ்சிலின் ஆரோக்கிய நலன்கள் - Gokshura health benefits in Tamil
 3. நெருஞ்சிலின் பக்க விளைவுகள் - Gokshura side effects in Tamil
 4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

நெருஞ்சில் தாவரத்தின் அனைத்து வெவ்வேறு பகுதிகள் முழுவதிலும் குணப்படுத்தக்கூடிய மற்றும் ஊட்டசத்து அளிக்கக்கூடிய மதிப்புகளைக் கொண்ட பல இரசாயனக் கூறுகள் இருக்கின்றன.

இலைகளில் கால்சியம் கார்பனேட், இரும்பு, புரதம், முதலியன இருக்கிறது, அவை எலும்புகளை வலுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். நெருஞ்சில்  தாவர விதைகளில் கொழுப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்திருக்கிறது. மேலும் கோக்ஷூரா பழங்கள் ஒலிக் அமிலம், ஸ்டீரியிக் அமிலம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றுக்கு நல்ல ஆதாரமாக இருக்கின்றன.

சர்வதேச வீட்டு அறிவியல் இதழின் படி, நெருஞ்சில் பொடி பின்வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது:

 

ஊட்டக்கூறு 100 கிராமுக்கான மதிப்பு
ஆற்றல் 73.48 கி.கே.
கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) 15.9 கிராம்
புரதம் 1.3 கிராம்
கொழுப்புகள் 0.25 கிராம்
ஃப்ளேவோநாய்டுகள் 19,92
வைட்டமின்கள்  
விட்டமின் சி 14.2 மிகி
கனிமங்கள்  
கால்சியம் 59 மி.கி.

உயர் மருத்துவ மதிப்பு காரணமாக, இந்த தாவரங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நெருஞ்சிலின் சாத்தியமான ஆரோக்கிய நலன்கள் பின்வருமாறு:

 • உடல் உறுப்புகளுக்காக: நெருஞ்சில் தசை வலிமை மற்றும் உடல் அமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது மேலும் இது ஸ்டீராய்டுகளுக்கு ஒரு இயற்கை மாற்றா இருக்க முடியும்.
 • மனநல கோளாறுகளுக்கு: நெருஞ்சிலில் உள்ள சப்பைனின்களின் இருப்பு காரணமாக, மனத் தளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆன்க்ஸியோலிடிக் விளைவுகளை கொண்டுள்ளன, இதனால் இந்த மூலிகையை பதட்டம் மற்றும் மனச்சோர்வு மேலாண்மைக்கு பயன்படுத்தலாம்.
 • இதயத்திற்கு: நெருஞ்சில் ஆண்டிஆக்சிடண்ட்டிகளால் நிறைந்து காணப்படுகிறது, இது கார்டியோ பாதுகாப்பு செயல்களுக்கு பொறுப்பானதாகும். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது மேலும் இதனால் இந்த மூலிகை அதிரோஸ்கிளிரோஸ் மற்றும் பிற இதய கோளாறுகளை தடுக்க உதவுகிறது.
 • சிறுநீரகங்களுக்கு: நெருஞ்சிலை உட்கொள்வதால், அதன் அதிகப்படியான சிறு நீர் வெளியேற்றும் செயல்களால் உடலில் இருக்கும் அதிகப்படியான தாதுக்களை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
 • பெண்களுக்காக: நெருஞ்சில் பல ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருப்பதால் பெண்களுக்கு பல நன்மைகள் செய்கிறது. இந்த மூலிகையை தினசரி சாப்பிடுவது லிபிடோ மற்றும் பாலியல் ஆசைகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் PCOS (பாலிசிஸ்டிக் கருப்பை குறைபாடு) மற்றும் UTIs (சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்) ஆகியவற்றிற்கு எதிராக போராடுகிறது.
 • மற்ற நன்மைகள்: முகப்பரு, எக்ஸிமா, அரிப்பு மற்றும் தோல் எரிச்சல் போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு எதிராக நெருஞ்சில் செயல்படுகிறது. இது முடி மற்றும் தோலை பொறுத்த வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது மற்றும் ஒற்றை தலை வலி, மூல நோய் மற்றும் ஃபிஸ்துலாக்களை நிவாரணம் செய்ய பயனுள்ளதாக இருக்கிறது.

சிறுநீரக பாதை நோய்த்தொற்றுகளுக்கு (UTIs) நெருஞ்சில் - Gokshura for urinary tract infections (UTIs) in Tamil

ஆராய்ச்சியின் படி, எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் சிறுநீர் பாதை நோய்த்தொற்றை தடுக்க நெருஞ்சிலை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும். அதன் டையூரிடிக் பண்பு காரணமாக, இந்த மருத்துவ தாவரம் சிறுநீரகத்தின் ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் இருக்கும் நோய்க்கிருமி பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.

நெருஞ்சில் புத்துணர்ச்சி அளிக்கின்ற பண்புகளை பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. நெருஞ்சிலை உட்கொள்வதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன மற்றும் சிறுநீர் பாதை மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுகளுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. இது பாதுகாப்பாகக் கருதப்படுவதால், நெருஞ்சில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு சிறந்த மாற்றாக இருக்க முடியும். 

PCOS க்கான நெருஞ்சில் - Gokshura for PCOS in Tamil

சமீபத்திய ஆண்டுகளில் PCOS அனைத்து வயதினரிடையேயும் குறிப்பாக வயது வந்த இளம் வயது பெண்களினரிடையே மிகவும் பரவலாக உள்ளது. இந்த உடல்நலக் குறைபாடு முகப்பரு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள், முடி உதிர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், PCOS கர்ப்பம் தரிக்கும் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதன் மூலமாக ஒரு பெண்ணின் கருத்தரிப்பை பாதிக்கலாம் மற்றும் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை எழுப்புகிறது.

நெருஞ்சில் கர்பப்பையில் இருக்கும் கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் நெருஞ்சிலால் பயனடைவார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

மற்றொரு ஆய்வில், நெருஞ்சிலின் வழக்கமான நுகர்வு உடலில் உள்ள ஃபோலிகில் தூண்டுதல் ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது, இந்த ஹார்மோன் கருப்பையில் கரு முட்டையின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். யுனானி மருத்துவத்தில், பிஎஸ்ஓஎஸ் அறிகுறிகளை ஒழிப்பதற்காக அஷ்வகந்தா மற்றும் நெருஞ்சிலின் கலவை பயன்படுத்தப்படுகிறது.

இது  பி.சி.ஓ.எஸ் நிலையால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவையற்ற எடை அதிகரிப்பை சமாளிக்க உதவும்.

சிறுநீரக கற்களுக்கு நெருஞ்சில் - Gokshura for kidney stones in Tamil

சிறுநீரக கற்கள் பல காரணங்களால் பல நாடுகளில் அதிகரித்து வரும் ஒரு பிரச்சினை ஆகிவிட்டது. ஒரு ஆய்வில், உலகில் 12% மக்கள் சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மீண்டும் சிறுநீரக கற்கள் வரக் கூடிய விகிதம் 50% மற்றும் 80% க்கு இடையில் உள்ளது. நெருஞ்சில் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தை பல வழிகளில் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது இரத்தத்தில் கால்சியம் அளவுகளை குறைக்க உதவுகிறது இதனால் உங்கள் சிறுநீரகத்தில் கால்சியம் படிவது தவிர்க்கப்படுகிறது.

ஒரு சிறுநீர் தூண்டியாக, இது நம் சிறுநீரகங்களுக்கு உள்ளே படிவதற்கு முன்பு இரத்தத்தில் இருக்கும் அதிகமான தாதுக்களை வெளியேற்ற உதவுகிறது.

நெருஞ்சிலின் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க உதவுவதோடு, சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.

பெண்களுக்கு குறைந்த லிபிடோவுக்கு நெருஞ்சில் - Gokshura for low libido in women in Tamil

நெருஞ்சில் பாரம்பரியமாக ஒரு பாலுணர்ச்சி தூண்டி என அறியப்படுகிறது. பெண்களுக்கு லிபிடோவை மேம்படுத்துவதில் நெருஞ்சிலின் விளைவுகளை மதிப்பிடுவதற்கு விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. 7.5 மி.கி. நெருஞ்சில் சாற்றின் நுகர்வு 4 வாரங்களுக்குள் பாலியல் செயலிழப்பு கொண்ட பெண்களுக்கு பாலியல் ஆசையை அதிகரித்தது என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் நெருஞ்சிலின் வழக்கமான நிர்வாகம் மேனோபாஸ் நிலையில் முன் காலத்தில் மற்றும் மாதவிடாய் நின்ற பின்பு பெண்களுக்கு பாலியல் திருப்தி மற்றும் தூண்டுதலை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிப்பதே இதற்கு காரணம் ஆகும்.

இதய ஆரோக்கியத்திற்காக நெருஞ்சில் - Gokshura for heart health in Tamil

ஆராய்ச்சி படி, ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ் அல்லது நெருஞ்சில் அதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் காரணமாக இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய பண்புகளை பெற்றுள்ளன. இது பாதிக்கப்பட்ட பகுதிக்கு போதுமான இரத்த விநியோகம் இல்லாதபோது நடக்கும் ஒரு செயலான இன்ஃபார்க்ட் இன் அளவை (இரத்த இழப்பு ஏற்படும் காரணத்தினால் உடலில் இருக்கும் இறந்த திசு பகுதி) குறைக்க உதவ முடியும். நெருஞ்சில் இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மேலும் உடலில் உள்ள ATP அளவுகளை அதிகரித்து இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஒரு மருத்துவ ஆய்வு இந்த மருத்துவ மூலிகையின் வழக்கமான நுகர்வு எந்த பக்க விளைவும் இல்லாமல் குறிப்பிடத்தக்க உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது என்று காட்டியது. உண்மையில், ஆய்வுகள் லேசானது முதல் மிதமான அளவு வரை  உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நெருஞ்சில் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த பாதுகாப்பானது என்பதைக் காட்டுகிறது.

இந்த தாவரம் LDL அல்லது கெட்ட கொழுப்பு அளவை குறைப்பதன் மூலம் உடலில் கொழுப்பு அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இது லிப்பிட் பெராக்ஸிடேஷனை தடுக்கிறது, இது பலவகையில் அடைப்பு மற்றும்  அதிரோஸ்கிளிரோஸ்  ஏற்பட காரணங்கள் ஆகும். 

பதட்டம் மற்றும் மன அழுத்தத்திற்கு நெருஞ்சில் - Gokshura for anxiety and depression in Tamil

மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகள் இந்த நாட்களில் மிகவும் அதிகமாக உள்ளது. இவை ஆண் பெண் என்னும் பாரபட்சம் இல்லாமல் எல்லா வயதினரையும் பாதிக்கலாம். நெருஞ்சில் குறைந்தபட்ச பக்க விளைவுகளைக் கொண்ட ஒரு சிறந்த  பதட்டம் மற்றும் மன அழுத்த தடுப்பான் மருந்தாக இருக்க முடியும் என்று முன் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன..

மேலும் ஆய்வுகளில், நெருஞ்சிலின் இந்த மனத் தளர்ச்சி எதிர்ப்பு விளைவுகள், அதில் உள்ள சப்போனின் என்னும் பொருளின் காரணமாக சீரம் கார்டிசோல் அளவுகளை குறைப்பதால் ஏற்படுகின்றன கூறப்படுகிறது.

உடல் உறுப்புகளுக்காக நெருஞ்சில் - Gokshura for bodybuilding in Tamil

இந்த மூலிகை தசை வலிமை மற்றும் உடலமைப்பை மேம்படுத்த முடியும் என்பதால் நெருஞ்சில் சமீபத்தில் உடல் கட்டமைப்பு செய்பவர்களுக்கு மத்தியில் புகழ் பெற்றுள்ளது. நெருஞ்சிலை அதிக காலம் உட்கொள்வதால் உடல் வலிமை மற்றும் தசைகளை அதிகரிக்க உதவுகிறது. ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ் நைட்ரிக் ஆக்சைடை வெளியிடுவதன் மூலம் குறைந்த சக்தி (லீன் மாஸ்) மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகியவற்றை அதிகரிக்கிறது, இது இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் ஒரு வாயு, இதனால் தசைகளுக்கு ஆக்சிசன் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. ஆண்கள், இந்த நாட்களில் தசைகளை வலிமையாக்க ஸ்டீராய்டு ஊசிகளுக்கு மாறி வருகின்றனர். இதை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நெருஞ்சில், ஒரு இயற்கை மூலிகை இந்த ஸ்டெராய்டுகளுக்கு ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான மாற்று ஆகும். இருப்பினும், அதிகமான ஆய்வுகள், எந்தவொரு ஆரோக்கிய கவலைகளும் இல்லாமல், நீண்டகால பயன்பாட்டில் இந்த மூலிகைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவைப்படுகிறது.

நெருஞ்சிலின் மற்ற ஆரோக்கிய நன்மைகள் - Other potential health benefits of Gokshura in Tamil

 • நெருஞ்சில் இளைஞர்களிடையே மிகவும் பரவலான பிரச்சினையான  முகப்பருவை   எதிர்த்துப் போராடுவதாக நம்பப்படுகிறது. அரிப்பு, தோல் எரிச்சல், தோல் வெடிப்புகள், எக்ஸிமா முதலிய பல்வேறு தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கூட நெருஞ்சில்  பயனுள்ளதாக இருக்கும்.
 • இந்த மூலிகையை வழக்கமாக உட்கொள்வதால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது, மேலும் நம்மை இளமையாக இருக்கவும் செய்யும். இது தோலில் ஏற்படும் சுருக்கங்கள், உடல் கொழுப்பு உள்ளடக்கம் மற்றும் போர் தசைநார்சீர்கேடு ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.
 • மேலும், நெருஞ்சில் விதைகள் ஒரு பசை வடிவில் பயன்படுத்தும்போது, முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது.
 • இந்த ஆயுர்வேத மூலிகைகள் தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிப்பதாக  நம்பப்படுகிறது.
 • அழற்சி எதிர்ப்பு குணங்கள் காரணமாக, இது  மூல நோய் மற்றும் ஃபிஸ்துலா சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
 • நீண்ட காலமாக, கண் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நெருஞ்சிலை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
 • நெருஞ்சிலின் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள்  நீரிழிவு அறிகுறிகள் மற்றும் நீரிழிவு தொடர்பான சிக்கல்களை தவிர்க்கவும் அதன் மேலாண்மைக்கும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆய்வுகள் நெருஞ்சில் நுகர்வு பாதுகாப்பானது மேலும் இது எந்த தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதைக் காட்டுகின்றன. நெருஞ்சில் வயிறு கோளறுகளை ஏற்படுத்தலாம், இதனால் ஆண்களுக்கு புரோஸ்டேட் அளவு அதிகரிக்கக்கூடும். உங்கள் தினசரி உணவில் நெருஞ்சிலை  சேர்த்து கொள்வதற்கு முன்பு உங்கள் சுகாதார பயிற்சியாளரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது 

 • கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள்: கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நம்பப்படுவதால் நெருஞ்சிலை உட்கொள்வது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது அல்ல.
 • ஒவ்வாமை விளைவுகள்: சிலர் வயிற்றுப்போக்கு, வடுக்கள் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளால் பாதிக்கப்படலாம்.
 • பெரிய மருத்துவ அறுவை சிகிச்சையின் வரலாறு: ஏதாவது மருத்துவ அறுவை சிகிச்சைகள் அல்லது நிலைமைகள் உங்களுக்கு செய்யப்பட்டு இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட மருந்து அளவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். 
 • நடப்பு நோய்: சில தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே நீங்கள் மருந்து சாப்பிட்டு கொண்டு இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், கருப்பை அல்லது மார்பக புற்றுநோய்களின் வரலாற்றைக் கொண்ட பெண்கள் நெருஞ்சிலை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். புரோஸ்டேட் புற்றுநோய் வரலாற்றைக் கொண்ட ஆண்கள், நெருஞ்சிலை தவிர்க்க வேண்டும்.
 • நீரிழிவு: நெருஞ்சில் இரத்தக் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் அதை ஒழுங்குபடுத்துகிறது. நீங்கள் ஒரு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நீரிழிவு நோயாளி என்றால் உங்களுக்கு தேவைப்படும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் அளவை தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
 • உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகள்: நெருஞ்சில் ஒரு நிரூபிக்கப்பட்ட இரத்த அழுத்த குறைப்புமுகவர் என்பதால், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நெருஞ்சிலை மருத்துவ மேற்பார்வைக்கு கீழ் மட்டுமே சாப்பிட வேண்டும். 
 • குழந்தைகள்: பிள்ளைகளுக்கு எளிதில் பாதிக்கப்படலாம் என்பதால் டாக்டரைக் கலந்து ஆலோசிக்காமல் இந்த மருந்துகள் கொடுக்கப்படக் கூடாது.

நெருஞ்சில் அல்லது ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ் ஒரு சிறிய இலை தாவரமாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்த அளவே பக்க விளைவுகள் கொண்ட சுகாதார நலன்களின் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. நீரிழிவு, உயர் கொழுப்பு, மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது மற்றும் லிபிடோவை  அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் எந்த ஊட்டசத்து வழங்கி மருந்துகளையும் எடுத்துக் கொள்ள தொடங்கும் முன், எப்போதும் அதில் இருக்கும் சுகாதார நலன்கள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது மேலும் அது  ட்ரிபுலஸ் டெர்ரஸ்டிரிஸ்  விஷயத்தில் உண்மையும் கூட.


उत्पाद या दवाइयाँ जिनमें Gokshura है

மேற்கோள்கள்

 1. Saurabh Chhatre et al. Phytopharmacological overview of Tribulus terrestris. Pharmacogn Rev. 2014 Jan-Jun; 8(15): 45–51. PMID: 24600195
 2. R Jain, S Kosta, A Tiwari. Ayurveda and Urinary Tract Infections. J Young Pharm. 2010 Jul-Sep; 2(3): 337. PMID: 21042497
 3. Susan Arentz, Jason Anthony Abbott, Caroline Anne Smith, Alan Bensoussan. Herbal medicine for the management of polycystic ovary syndrome (PCOS) and associated oligo/amenorrhoea and hyperandrogenism; a review of the laboratory evidence for effects with corroborative clinical findings. BMC Complement Altern Med. 2014; 14: 511. PMID: 25524718
 4. Amol L. Shirfule, Venkatesh Racharla, S. S. Y. H. Qadri, Arjun L. Khandare. Exploring Antiurolithic Effects of Gokshuradi Polyherbal Ayurvedic Formulation in Ethylene-Glycol-Induced Urolithic Rats. Evid Based Complement Alternat Med. 2013; 2013: 763720. PMID: 23554833
 5. Elham Akhtari et al. Tribulus terrestris for treatment of sexual dysfunction in women: randomized double-blind placebo - controlled study. Daru. 2014; 22(1): 40. PMID: 24773615
 6. Shashi Alok, Sanjay Kumar Jain, Amita Verma, Mayank Kumar, Monika Sabharwal. Pathophysiology of kidney, gallbladder and urinary stones treatment with herbal and allopathic medicine: A review. Asian Pac J Trop Dis. 2013 Dec; 3(6): 496–504. PMC4027340
 7. MURTHY A.R et al. Anti-hypertensive effect of Gokshura (Tribulus terrestris Linn.) A clinical study . Ancient Science of Life Vol. No XIX (3&4) January, February, March, April 2000
 8. Amin A, Lotfy M, Shafiullah M, Adeghate E. The protective effect of Tribulus terrestris in diabetes Ann N Y Acad Sci. 2006 Nov;1084:391-401. PMID: 17151317
 9. Seok Yong Kang et al. Effects of the Fruit Extract of Tribulus terrestris on Skin Inflammation in Mice with Oxazolone-Induced Atopic Dermatitis through Regulation of Calcium Channels, Orai-1 and TRPV3, and Mast Cell Activation. Evid Based Complement Alternat Med. 2017; 2017: 8312946. PMID: 29348776
 10. Mitra Tadayon et al.The effect of hydro-alcohol extract of Tribulus terrestris on sexual satisfaction in postmenopause women: A double-blind randomized placebo-controlled trial. J Family Med Prim Care. 2018 Sep-Oct; 7(5): 888–892. PMID: 30598928
 11. Wang Z, Zhang D, Hui S, Zhang Y, Hu S. Effect of tribulus terrestris saponins on behavior and neuroendocrine in chronic mild stress depression rats J Tradit Chin Med. 2013 Apr;33(2):228-32. PMID: 23789222