பைல்லம் உமி என்பது ப்லாண்டகோ ஒவட்டா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை நார் ஆகும். பெயரில் உள்ளது போல பைல்லம் உமி தாவரத்தின் விதைகளின் உமியிலிருந்து  வருகிறது. இந்தியா உலகில் பைல்லம் உமி யின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இந்தியாவில், இது பிரதானமாக குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. உலகின் மொத்த பைல்லம் உமி உற்பத்தியில் 35% குஜராத்திலிருந்து வருகிறது

 “பைல்லம்” என்ற பெயர் முழு தாவரத்திற்கும், மேலோடு மற்றும் விதைகளுக்கு சூடப்பட்டுள்ளது  . பைல்லம் உமி பொதுவாக இசபெல் என்றும் அழைக்கப்படுகிறது. மரபுவழி ஈரானிய மருந்தானது வயதுவந்தவர்களுக்கு பைல்லம் பயன்படுத்துகிறது.

மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பைல்லம் உமி பல நலன்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. உயர் நார்சத்து உள்ளடக்கத்தின் காரணமாக, பைல்லம் உமி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இது இதயத்திற்கு நன்மைக்கும் நீரிழிவு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க உதவுகிறது.

 பைல்லம் உமியை நிறைய வழிகளில் எடுத்துகொள்ளலாம். சிலருக்கு தூய பைல்லம் உமியின் சுவை விரும்பத்தகாதாக இருப்பதனால் அதை குக்கீகளிலும், பிஸ்கட் மற்றும் பிற மிட்டாய் தயாரிப்புகளிலும் செர்கபடுகிறது. பைல்லம் உமிக்கு எந்த இந்நிப்போ அல்லது சுவையோ இல்லை. எனவே இது வழக்கமாக தண்ணீர் அல்லது சாறுடேன் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

பைல்லம் உமியின் சில அடிப்படை தகவல்கள்

 • தாவரவியல் பெயர்: ப்லாண்டகோ ஒவட ஹச்க்
 • குடும்பம்: ப்லாண்டஜினசே
 • பொதுவான பெயர்கள்: பைல்லம் உமி /இசப்கோல்
 • சமஸ்கிருதம் பெயர்: சத் இசப்கோல்
 • பயன்படுத்திய பாகங்கள்: பைல்லம் என்பது பைல்லம் செடியின் விதைகளின் உமி இலிருந்து எடுக்கப்பட்ட நார் ஆகும். செடியின் பாகம் உமியாக பயன்படுத்தப்படுகிறது.
 • பூர்வீக பிராந்தியம் மற்றும் புவியியல் பரவல்: ஆசியா, மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் வட ஆபிரிக்கா ஆகியவற்றை பூர்விகமாக கொண்ட இது வணிகரீதியாக இந்தியாவில் வளர்க்கபடுகிறது  இந்தியாவில், முக்கியமாக குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றில் இது பயிரிடப்படுகிறது.
 1. பைல்லம் உமியின் ஊட்டசத்து தகவல்கள் - Psyllium husk nutrition facts in Tamil
 2. பைல்லாம் உமியின் உடல் நல பயன்கள் - Psyllium husk health benefits in Tamil
 3. பைல்லம் உமி யின் பக்க விளைவுகள் - Psyllium husk side effects in Tamil
 4. எடுதுசெல்வதர்க்கு - Takeaway in Tamil

பைல்லம் உமி அதிக நார்ச்சத்து நிறைந்ததாக உள்ளது. ஆனால் உடலில் நன்மை பயக்கும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் இதில் உள்ளது. பைல்லம் உமியில்  பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது.

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து தகவல்கள் படி, கீழே உள்ள அட்டவணை 100 கிராம் பைல்லம் உமியிலுள்ள  ஊட்டச்சத்து மதிப்புகளை காட்டுகிறது.

ஊட்டசத்து

100 கிராமிற்கு

  அளவு

சக்தி

375 கி கால்

புரதம்

5 கி

கொழுப்பு

6.25 கி

மாவுசத்து

75 கி

நார்சத்து

10 கி

சர்க்கரை

30 கி

கனிமங்கள்

 

இரும்பு

50 மி.கி

கால்சியம்

1.8 மி.கி

பொட்டாசியம்

262 மி.கி

சோடியம்

288 மி.கி

கொழுப்புகள் /கொழுப்பு அமிலங்கள்

 

செறிவூட்டப்பட்ட கொழுப்புகள்

2.5 கி

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW
 • மலச்சிக்கலுக்கு: பைல்லம்  உமி நார் இழைகளின் மிகச் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும், மேலும் மலச்சிக்கலின் மேலாண்மைக்கு உதவுகிறது. மலமிளக்கியுடனான தன்மைகள் தவிர வேறு, இது மலத்தின் நீர்த்னமையை அதிகரித்து எளிதில் மலத்தை வெளியேற்ற உதவுகிறது .
 • பிற செரிமான சிக்கல்களுக்கு: பைல்லம் உமி குடல் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலம், வயிற்றுப்போக்கு, அமீபிக் வயிற்றுப்போக்கு மற்றும் அல்செரடிவ் பெருங்குடல் அழற்சி போன்ற நிலைகளில்  உதவியாக இருக்கும்.
 • பசியின் கட்டுப்பாடுக்காக: நார் இழைகள் அதிகமாக இருப்பதனால், பைல்லாம் உமி வயிறு நிறைவை அதிகரித்து பசியை கட்டுபடுத்துகிறது, மேலும் உணவுக்கு பிறகு வயிற்றை காலி செய்வதன் நேரத்தையும்   அதிகரிக்கிறது.
 • நீரிழிவு நோய்க்காக: டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் உதவுவதன் மூலம் பைல்லாம் உமி நீரிழிவை கட்டுப்படுதிகிறது
 • உயர் கொழுப்புக்கு: பைல்லம்  உமி எடுத்துகொள்ளும் பொது  மொத்த கொழுப்பு மற்றும்  குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் குறைக்க உதவுகிறது, நல்ல வகை கொழுப்பான அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. இது உடல், கொழுபை  உருஞ்சுவதை குறைக்கிறது.
 • உயர் இரத்த அழுத்தம்: மருத்துவப் ஆய்வின் படி, உணவு நார்ச்சத்துக்கு ஆதாரமாக இருக்கும் பைல்லம் உமி ஒரு குறைந்த இரத்த அழுத்ததிற்கு உதவுகிறது, இது  இரத்த அழுத்தத்தில் 55 மி.மி. எச்.ஜி அளவிற்கு குறைக்கிறது

மலசிக்கலுக்கு பைல்லம் உமி - Psyllium husk for constipation in Tamil

மலச்சிக்கல்  என்ற ஒரு நிலையில் குடல் இயக்கம் ஒழுங்கற்றவையாக இருக்கும் , அல்லது மலம் கழிப்பது கடினமாகும். இந்த நிலை பெரும்பாலும் வயிற்று வலி, வயிறு வீக்கம் மற்றும் பசியின்மை ஆகியவற்றால் ஏற்படுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்துவதற்கு பைல்லம் உமி பயன்படுத்தப்படலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட மலச்சிக்கல் அனுபவிக்கும் 170 நபர்களுடன் நடத்திய ஒரு மருத்துவ ஆய்வில் படி பைல்லம் உமி எடுதுகொண்டதனால் மலத்தில் தண்ணீரின் அடக்கம் அதிகரித்து, குடல் இயக்கத்தை எளிதாக்கியது. பைல்லம் உமியை பீட்ரைன் மற்றும் செல்லுலோஸ் போன்ற நார் சேர்மங்களைப் பயன்படுத்தி அதன் மலமிளக்கி தன்மையை மேம்படுத்த முடியும் என்று ஒரு பழைய ஆய்வு கூறுகிறது இந்த இரண்டு இழைகளும் பெர்ரி மற்றும் ஆப்பிள்களைப் போன்ற பழங்களில் பொதுவாக காணப்படுகின்றன. பெக்டின் அல்லது செல்லுலோஸைச் பைல்லம் உமியுடன்  சேர்ப்பதனால் பைல்லம் உமியின் ஒரு மதமான சுவையை அகற்ற உதவும். மற்றொரு ஆய்வு பைல்லம் உமியிலுள்ள பாலிசாக்கரைடுகள் மற்றும் அதன் ஜெல்-உருவாக்கும் திறன்கள் மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.

நீரிழிவுக்கு பைல்லம் உமி - Psyllium husk for diabetes in Tamil

நம் உடலில் குளுக்கோசின் வளர்சிதைமாற்றத்தை நடத்த முடியாமல் எண்டோக்ரின் கோளாறு உண்டாகும் பொது இரத்தத்தில் இந்த சர்க்கரை குவிந்து நீரிழிவு ஏற்படுகிறது. நீரிழிவை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்றாலும், உணவில் எளிய மாற்றங்கள் மூலம் அதை நிர்வகிக்க முடியும். அமெரிக்கன் நீரிழிவு சங்கத்தின் படி, நார் நிறைந்த ஒரு உணவு நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

2 வகை நீரிழிவு நோய் மற்றும் அதிக அளவு கொழுப்பால் பாதிக்கப்பட்ட 34 ஆண்களில் கொண்டு 2 வாரங்களுக்கு எடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, இரத்தத்தில் க்ளுகோசின் அளவு கணிசமாக குறைந்திருப்பதை சுட்டி கட்டியது. 2 வகை நீரிழிவு நோயாளிகள் பைல்லம் உமி எடுத்துகொள்வது பாதுகாப்பானது என்பதை இது குறிக்கிறது.

பசியை கட்டுபடுத்த பைல்லம் உமி - Psyllium husk for appetite control in Tamil

உணவிற்க்கு இடையிலான  பசியை நாம் அடிக்கடி உணர்கிறோம். இந்த சமயத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை  சிற்றுண்டுவதற்கு நாம் தூண்டபடுகிரோம் வயிற்றுப்போக்கு மற்றும் பசி ,இரண்டுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ஒரு உணவிற்குப்பின் வயிற்றுப் காளிசெய்வதர்காக எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தை பைல்லம் உமி கணிசமாக அதிகரித்துள்ளது என்று அறிய வந்துள்ளது. நார்ச்சத்து நிறைந்த நிலையில், பைல்லம் உமி நிறைவான ஒரு உணர்வை அதிகரிக்கிறது, இதன் மூலம் உணவிற்கான பசி தாக்கம்  குறைக்கிறது.

(மேலும் படிக்க: சரிவிகித உணவு பட்டியல்)

கொழுப்பை குறைக்க பைல்லம் உமி - Psyllium husk lowers cholesterol in Tamil

இரத்தத்தில் உள்ள உயர் கொழுப்பு இதய நோய்களைப் பெறுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். அதிக அளவு கொழுப்பு உள்ள மக்கள் எளிதில் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கபடுவார்கள். உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கு பைல்லம் உமி உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 125 நீரிழிவு நோயாளிகளுக்கு வாரத்திற்கு மூன்று முறை என ஆறு வாரங்களுக்கு பைல்லம் உமி யை சாப்பிட கொடுக்கப்பட்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் விளைவாக மொத்த கொழுப்பின் அளவு (டிசி), ட்ரைகிளிசரைடு நிலை மற்றும் கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) அளவில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. நல்ல கொலஸ்ட்ரால் (எச்டிஎல் ) அளவும் அதிகரித்தது.

15 முதல் 16 வயதிற்குட்பட்ட 47 பருமனான ஆண்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நார்ச்சத்து நிறைந்த பைல்லம் உமி எடுதுகொல்வதனால்  மோசமான கொழுப்பு அளவு (எல்டிஎல்) அளவுக்கு 8% குறைகிறது என்று காட்டியது.

மற்றொரு மருத்துவ ஆய்வில், அதிக அளவு கொழுப்புடன் கூடிய 20 நபர்களில், பைல்லம் உமி கெட்ட கொலஸ்டிரால் (எல்டிஎல்) அளவை குறைக்க உதவுகிறது என்றும்  பித்த அமிலத்தின் தொகுப்பை தூண்டுவதன் மூலம் இரத்தத்தில் கொழுப்பு உறிஞ்சுதலை குறைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது .

(மேலும் படிக்க : அதிக கொழுப்பின் சிகிச்சை)

வயிற்ருபோக்குகிர்க்கு பைல்லம் உமி - Psyllium husk for diarrhoea in Tamil

அசாதாரணமாக அடிக்கடி நீர் போன்ற மலம் கழிக்கும் நிலை வயிற்றுப்போக்கு எனபடுகிறது.  பைல்லம் உமி வயிற்றுப்போக்கை தடுக்க உதவும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 8 நபர்களில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, பைல்லம் உமி, உணவு உட்கொண்ட பிறகு உணவின் சீர் இசைவை அதிகபடுத்தி , உணவு பெருங்குடலை அடைவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைப்பதாக சுட்டிக் காட்டியது. எரிச்சலூட்டும் குடல் நோய் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இது மிகவும் பயனளிக்கிறது. 

புற்றுநோய் நோயாளிகளில் கதிர்வீச்சு சிகிச்சையின் மிகவும் பொதுவான ஒரு  பக்க விளைவு வயிற்றுப்போக்கு ஆகும் ஒன்றாகும் கதிரியக்க சிகிச்சைக்கு பிறகு புற்றுநோய் நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கின் எண்ணிக்கை மற்றும் தீவிரத்தன்மை தடுக்க பைல்லம் உமி உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமிபிக் வயிற்றுப்போக்கிற்கு பைல்லம் உமி - Psyllium husk for amoebic dysentery in Tamil

அமிபியாசிஸ் அல்லது அமிபிக் வயிற்றுப்போக்கு என்டமோபே ஹிஸ்டோலிடிகா எனப்படும் குடல் ஒட்டுண்ணியின் காரணமாக ஏற்படுகிறது. இதன் பொதுவான அறிகுறி அறிகுறிகள் வயிறு பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும் . பாரம்பரியமாக, பைல்லம் உமி வானது அம்மோபிக் வயிற்றுப்போக்குக்கு ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஆராய்ச்சியில் எண்டமோபே ஹிஸ்டோலிடிகா மற்றும் இ. டயபர் ஆகியோருக்கு எதிராக பைல்லம் உமி உள்ள சில உயிர்ப்புள்ள கலவைகள் தடுப்பு விளைவுகளைக் கொண்டிருக்கின்றன எனக் கண்டறிந்தது.மேலும்  பைல்லம்மின்  1 முதல் 10 மி.கி. செறிவுள்ள சாறு அமீப அமிலத்தன்மை கொண்டது, இதனால் அம்மோபிக் வயிற்றுப்போக்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்சரேடிவ் பெருங்குடல் அழற்சி சிகிச்சைக்கு பைல்லாம் உமி - Psyllium husk to treat ulcerative colitis in Tamil

அல்சரேடிவ் பெருங்குடல் அழற்சி என்பது பெருங்குடல் அல்லது பெரிய குடல் பாதிக்கும் ஒரு நிலையாகும் , இது பொதுவாக வீக்கம் மற்றும் எரிச்சலால் அடையாளம் காணபடுகிறது .இதற்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது பெருங்குடல் புற்றுநோயிற்கு வழிவகுக்கும். மேசலாமின் லூட்டும் அல்சரேடிவ் பெருங்குடல் அழற்சி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற மருந்துகள் ஒன்றாகும்

அல்சரேடிவ் பெருங்குடல் அழற்சி கொண்ட 150 நோயாளிகளுடன் ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், பைல்லம் உமி வாய்வழி கூடுபோருளாக கொடுக்கப்பட்டது ,இது மேசலாமின் போலவே பெருங்குடல் அழற்சி சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கிறது.

உயர் இரத்த அழ்ததிர்க்கு பைல்லம் உமி - Psyllium husk for high blood pressure in Tamil

இரத்த அழுத்தம் என்பது உடல் வழியாக இரத்தத்தை பம்ப் செய்ய பயன்படுத்தும் சக்தியாகும். பொதுவாக உயர் இரத்த அழுத்ததிற்கு  எந்த உடனடி அறிகுறிகளும் இருக்காது. ஆனால் இதற்க்கு  சிகிச்சை அளிக்காமல் இருந்தால், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவு அதிக இரத்த அழுத்தம் தொடர்புடையதாக இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. பைல்லம் உமி நார் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஆதாரமாக உள்ளது.

36 உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பைல்லம் உமி எடுத்துகொள்வது  உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. முடிவில் 5.9 மிமீ hg (5.9 மில்லிமீட்டர் பாதரசம்) அளவிற்கு இரத்த அழுத்தம் குறைவு உண்டாயிற்று என்று தெரியவந்தது. பைல்லம்  உமி (இரத்த அழுத்தம் குறைப்பு) தன்மை  பாலினம், வயது அல்லது எடையால் பாதிக்காது என்று மேலும் தெரியவந்துள்ளது .

மொத்தத்தில் பைல்லம் உமிக்கு வெகு சில பக்க விளைவுகளே உள்ளன .

 • பைல்லம் உமி ஒவ்வாமை மற்றும்  மூச்சுச் சீரின்மை உண்டாக்கலாம்
  பொதுவாக இல்லை என்றாலும் , தடிப்புகள், நமைச்சல் மற்றும் சுவாச சிக்கல் போன்ற சில ஒவ்வாமை எதிர்வினைகள் பைல்லம்  உமி எடுதுகொல்வதனால் ஏற்படலாம். சில மனிதர்களில் மூச்சுகுழாயில் இது துயரத்தை ஏற்படுத்துகிறது  உண்டாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • பைல்லம் உமி வயிறு வீக்கத்தை உண்டாக்கலாம்
  . பைல்லம்  உமியில் நார் மிகவும் அதிகமாக உள்ளது ற்றும் எனவே மலச்சிக்கல் மற்றும் பிற இரைப்பைக் கோளாறுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நார்ச்சத்து அதிகமாக எடுத்துகொள்வது வாயு வெளியேற்றத்தை பாதிக்கிறது  இதனால் வாயுத் தாகி விடுகிறது  மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
 • பைல்லம் உமி திடீர் மூச்சடைப்பை உண்டாக்கலாம்
  மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக பைல்லம் உமியுள்ள  ஒரு முழு டம்ளர் தண்ணீரை தினமும் குறைந்தபட்சம் 6 முதல் 8 முறை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் பைல்லம் பொடியோ அல்லது உமியோ விழுங்கினால் மூச்சடைப்பு வரலாம். இப்போதெல்லாம் பைல்லம் உமியை குக்கீகள், ரொட்டிகள்  மற்றும் அதுபோன்ற  தயாரிப்புகளில் சேர்க்கப்படுகின்றன.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

. பைல்லம் உமி என்பது ப்லாண்டகோ ஒவாடா செடியின் விதைகளில் இருந்து பெறப்பட்ட ஒரு வகை நார் ஆகும். அதன் உயர் நார் சத்து  உள்ளடக்கம் காரணமாக, இது பொதுவாக மலச்சிக்கல் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பிற கனிமங்களிலும் அதிகமாக உள்ளது. பைல்லம் உமி  ஆரோக்கிய நன்மைகள் சில - இது வயிற்றுப்போக்கு தடுக்கிறது, இது குறைந்த இரத்த அழுத்தம் உதவுகிறது, இது கொழுப்பு அளவுகளை குறைகிறது மற்றும் நீரிழிவை கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவும் உதவுகிறது .மூச்சுத் திணறலைத் தவிர்ப்பதற்காக நிறைய தண்ணீர் கொண்டு பைல்லம்  உமி உட்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது. பைல்லம் உமி எந்த சுவை அல்லது மனம் இல்லை என்பதால், மக்கள் இந்த உணவு நார் கொண்டிருக்கும்.பிஸ்கட் அல்லது குக்கீகளை எடுதுகொள்கின்றனர்


Medicines / Products that contain Isabgol

மேற்கோள்கள்

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Full Report (All Nutrients): 45195403, 100% NATURAL PSYLLIUM HUSK. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. Watanabe T et al. Constipation, laxative use and risk of colorectal cancer: The Miyagi Cohort Study. Eur J Cancer. 2004 Sep;40(14):2109-15. PMID: 15341986
 3. Marteau P et al. Digestibility and bulking effect of ispaghula husks in healthy humans. Gut. 1994 Dec;35(12):1747-52. PMID: 7829013
 4. McRorie JW et al. Psyllium is superior to docusate sodium for treatment of chronic constipation. Aliment Pharmacol Ther. 1998 May;12(5):491-7. PMID: 9663731
 5. Spiller GA, Shipley EA, Chernoff MC, Cooper WC. Bulk laxative efficacy of a psyllium seed hydrocolloid and of a mixture of cellulose and pectin. J Clin Pharmacol. 1979 May-Jun;19(5-6):313-20. PMID: 469025
 6. Singh B. Psyllium as therapeutic and drug delivery agent. Int J Pharm. 2007 Apr 4;334(1-2):1-14. Epub 2007 Jan 21. PMID: 17329047
 7. Washington N, Harris M, Mussellwhite A, Spiller RC. Moderation of lactulose-induced diarrhea by psyllium: effects on motility and fermentation. Am J Clin Nutr. 1998 Feb;67(2):317-21. PMID: 9459381
 8. Murphy J, Stacey D, Crook J, Thompson B, Panetta D. Testing control of radiation-induced diarrhea with a psyllium bulking agent: a pilot study.. Can Oncol Nurs J. 2000 Summer;10(3):96-100. PMID: 11894282
 9. Robert E. Post, Arch G. Mainous, Dana E. King, Kit N. Simpson. Dietary Fiber for the Treatment of Type 2 Diabetes Mellitus: A Meta-Analysis. The Journal of the American Board of Family Medicine January 2012, 25 (1) 16-23
 10. Anderson JW, Allgood LD, Turner J, Oeltgen PR, Daggy BP. Effects of psyllium on glucose and serum lipid responses in men with type 2 diabetes and hypercholesterolemia. Am J Clin Nutr. 1999 Oct;70(4):466-73. PMID: 10500014
 11. Rodríguez-Morán M, Guerrero-Romero F, Lazcano-Burciaga G. Lipid- and glucose-lowering efficacy of Plantago Psyllium in type II diabetes. J Diabetes Complications. 1998 Sep-Oct;12(5):273-8. PMID: 9747644
 12. Everson GT, Daggy BP, McKinley C, Story JA. Effects of psyllium hydrophilic mucilloid on LDL-cholesterol and bile acid synthesis in hypercholesterolemic men. J Lipid Res. 1992 Aug;33(8):1183-92. PMID: 1431597
 13. Burke V. et al. Dietary protein and soluble fiber reduce ambulatory blood pressure in treated hypertensives. Hypertension. 2001 Oct;38(4):821-6. PMID: 11641293
 14. Zaman V et al. The presence of antiamoebic constituents in psyllium husk. Phytother Res. 2002 Feb;16(1):78-9. PMID: 11807972
 15. Hall M, Flinkman T. Do fiber and psyllium fiber improve diabetic metabolism? Consult Pharm. 2012 Jul;27(7):513-6. PMID: 22910133
 16. Ayman S. Abutair, Ihab A. Naser, and Amin T. Hamed. Soluble fibers from psyllium improve glycemic response and body weight among diabetes type 2 patients (randomized control trial) . Nutr J. 2016; 15: 86. PMID: 27733151
 17. Bajorek SA, Morello . Effects of dietary fiber and low glycemic index diet on glucose control in subjects with type 2 diabetes mellitus.. Ann Pharmacother. 2010 Nov;44(11):1786-92. PMID: 20959501
 18. Marc P. McRae. Dietary Fiber Is Beneficial for the Prevention of Cardiovascular Disease: An Umbrella Review of Meta-analyses J Chiropr Med. 2017 Dec; 16(4): 289–299. PMID: 29276461
 19. Cummings JH, Macfarlane GT. Gastrointestinal effects of prebiotics. Br J Nutr. 2002 May;87 Suppl 2:S145-51. PMID: 12088511
 20. Mehmood MH, Aziz N, Ghayur MN, Gilani AH. Pharmacological basis for the medicinal use of psyllium husk (Ispaghula) in constipation and diarrhea. Dig Dis Sci. 2011 May;56(5):1460-71. PMID: 21082352
 21. Roberts-Andersen J, Mehta T, Wilson RB. Reduction of DMH-induced colon tumors in rats fed psyllium husk or cellulose. Nutr Cancer. 1987;10(3):129-36. PMID: 2819829
 22. Cartier A, Malo JL, Dolovich J. Occupational asthma in nurses handling psyllium. Clin Allergy. 1987 Jan;17(1):1-6. PMID: 3829366
 23. Richard Lea, Peter J. Whorwell. Expert Commentary – Bloating, Distension, and the Irritable Bowel Syndrome. MedGenMed. 2005; 7(1): 18. PMID: 16369323
Read on app