வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு. சர்க்கரையின் ஒரு ஆரோக்கியமான மாற்று என்று கருதப்படுகிறது ஏனெனில் அது தூய்மையாக்கப்படாத ஒன்றாக உள்ளது. சர்க்கரை மற்றும் வெல்லம் கிட்டத்தட்ட அதே அளவு கலோரிகளைக் கொண்டிருந்தாலும், உடலிற்கு தேவையான பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் இருக்கிறது என்பதால், வெல்லம் உடலுக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

வெல்லம் பொதுவாக மூன்று வடிவங்களில் கிடைக்கும் - திட, திரவ மற்றும் சிறுமணி. மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளிலும் திரவ வெல்லம் மிகவும் பிரபலமாக உள்ளது, அதே நேரத்தில் கிராமப்புற மக்களிடையே சிறுமணி வெல்லம் பொதுவானது. வெல்லம் பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருக்கிறது,  அந்த வண்ணங்கள் தங்க பழுப்பு நிறத்தில் இருந்து கரும் பழுப்பு வரை வேறுபடுகிறது. கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று என்னவென்றால் அந்த நன்றாக கருப்பாக உள்ள வெல்லத்தின் சுவை, அதிக இனிப்பு மற்றும் ஆழ்ந்த சுவை கொண்டதாக இருக்கும். 

தென்னக மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வெல்லம் உட்கொள்ளப்படுகிறது. நேபாளம், பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா பொன்ற நாடுகளில் உள்ளூர் உணவு வகைகளில் வெல்லம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சாம்பார் மற்றும் ரசத்தில் அதன் சுவையை அதிகரிக்க ஒரு சிட்டிகை வெல்லம் சேர்க்கபடுகிறது. பெரியவர்கள் மற்றும் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமான கடலை மிட்டாய் நிலக்கடலை மற்றும் வெல்லம் இரண்டும் கலந்து தயாரிக்கப்படுகிது. இனிப்பு பதார்தங்கள், மது பானங்கள், சாக்லேட், மிட்டாய்கள், டோனிக்ஸ், சிரப்-கள், சார்பெட்-கள், கேக்குகள், முதலியவற்றை தயாரிப்பதற்கு கூட வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா உலகில் மிக அதிக வெல்லம்  தயாரிக்கும் இடமாக திகழ்கிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் வெல்லம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கரும்பு வெல்லம், கருப்பட்டி, பனைமர வெல்லம், சாம்பல் பனை வெல்லம் ஆகியவை வெல்லத்தின் வகைகளில் அடங்கும்.

வெல்லத்திற்கு பல உடல்நல நன்மைகள் உள்ளன. இது ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தில் உள்ளது. இதில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. மிளகுகுடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடும் போது உங்கள் பசியை அதிகரிக்க முடியும்.  ஆயுர்வேத கூற்றுப்படி, வெல்லத்தை வழக்கமான சாப்பிடுவதால் உங்கள் பார்வையை மேம்படுத்த முடியும். வெல்லம் என்பது முகப்பருவிற்கு சிகிச்சையளிக்கவும், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும் உதவிவதாக அறியப்படுகிறது. கல் உப்புடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடுவதால், புளித்த ஏப்பம் வரும் தொல்லையை குணப்படுத்த முடியும்.

வெல்லத்தை பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

 • தாவரவியல் பெயர்: வெல்லம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது, சச்சாரும் அஃப்பிசினரும்
 • குடும்பம்: பொயேசே (கரும்புற்கு)
 • பொது பெயர்: குட்
 • சமஸ்கிருத பெயர்: गुडः (குட்) / शर्करा (சர்க்கரை)
 • சொந்தமான பகுதி மற்றும் புவியியல் பரப்பு: சிலர் வெல்லம் என்பது கிழக்கு இந்தியாவில் தோற்றம் பெற்றதாக சிலர் நம்புகின்றனர், மற்றவர்கள் போர்த்துகீசிஸ் மக்களே இந்தியாவிற்கு வெல்லத்தை அறிமுகப்படுத்தியதாக நம்புகின்றனர். இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை உலகின் மிகப்பெரிய வெல்ல உற்பத்தியாளர்களாக உள்ளன.
 • சுவாரசியமான உண்மை: வெல்லம் பெரும்பாலும் "சூப்பர்ஃபுட் ஸ்வீட்னர்" என குறிப்பிடப்படுகிறது. 
 1. வெல்லம் பற்றிய ஊட்டச்சத்து தகவல்கள் - Jaggery nutrition facts in Tamil
 2. வெல்லம் சுகாதார நன்மைகள் - Jaggery health benefits in Tamil
 3. வெல்லம் பக்க விளைவுகள் - Jaggery side effects in Tamil
 4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

வெல்லம் வேதியியல் முறையில் தயாரிக்கப்படுவது இல்லை. எனவே, சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை சக்கரையை போல் அல்லாமல், வெல்லத்தில் உடலுக்கு ஏற்ற கனிமங்கள் மிகுதியாக இருக்கிறது.

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து தரவுத்தளத்தின் படி, 100 கிராம் வெல்ல சதுரங்கள் பின்வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன:

ஊட்டக்கூறுகள் 100 கிராமுக்கான மதிப்பு
ஆற்றல் 375 கி.கே.
கார்போஹைட்ரேட் 92.86 கிராம்
சர்க்கரை 85.71 கிராம்
கனிமங்கள்  
கால்சியம் 29 மிகி
இரும்பு 2.57 மிகி
சோடியம் 36 மிகி

வெல்லம் என்பது நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் ஒரு சிறந்த இனிப்பூட்டி ஆகும். ஆதார அடிப்படையிலான வெல்லத்தின் உடல்நல நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

 • உயர் கனிம உள்ளடக்கம்: இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சுகாதாரத்தை மேம்படுத்தும் கனிமங்கள் வெல்லத்தில் இருக்கிறது. இது ஊட்டச்சத்து குறைபாடு உடைய மக்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மாற்று ஆகும்.
 • ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது: வெல்லம் என்பது இரும்பு சத்தின் ஒரு வளமான ஆதாரமாக இருக்கிறது, இதனால் இரத்த சோகை உள்ள நபர்களுக்கு ஹீமோகுளோபின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த உணவு ஆதாரம் இது ஆகும். பெண்கள் மற்றும் இளம்பெண்களில் அனீமியாவை தடுப்பதற்கு வழக்கமான வெல்லத்தின் நுகர்வு பரிந்துரைக்கப்படுகிறது.
 • இரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது: உடலில் வெல்லம் ஒரு நொதித்தல் விளைவைக் கொண்டுள்ளது. இது உடல் நச்சுகளை நீக்கவும் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
 • மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது: மூளையின் சமிக்ஞைகளை பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பொறுப்புள்ள ஒரு கனிமமான மாங்கனீஸ்களை வெல்லம்  வழங்குகிறது. வெல்லத்தை சப்பிடுவது உங்கள் நினைவகம் மற்றும் அறிவாற்றல் திறன்களை வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அது நரம்பு சிதைவையும் தடுக்கும்.
 • எடை இழக்க உதவுகிறது: உங்கள் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால், வெல்லம் சர்க்கரைக்கு பதிலான ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். சர்க்கரை போல இல்லாமல், வெல்லத்தில் உள்ள கலோரிகள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றால் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் வெல்லம், எடை இழப்புக்கு ஊக்கமளிக்கும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 • பெண்களுக்கு நன்மைகள்: வெல்லம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைப்பதாகவும் அறியப்படுகிறது. இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்த ஆதாரமாக இருப்பதால், எலும்புகளை பாதுகாப்பதற்கும் இரத்த சோகையை தடுக்கவும் இது உதவியாக இருக்கும்.

இரத்த சோகைக்கு வெல்லம் - Jaggery for anaemia in Tamil

உடலில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு மிகக் குறைவாக இருக்கும் நிலை அனீமியா அல்லது ரத்த சோகை என அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக, ஆக்ஸிஜன் ஒழுங்காக திசுக்களுக்கு எடுத்திச் செல்லபடுவது இல்லை. இதனால் மன அழுத்தம் மற்றும் சோர்வு போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படக் கூடும். வெல்லம் இரும்புச் சத்து நிறைந்ததாக இருக்கிறது. இதனால் இரத்த சோகையை அது தடுக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

இரும்புச் சத்து குறைபாட்டினால் பாதிக்கபட்ட அனீமியா நோயாளிகளாக இருக்கும் இளம் பருவ பெண்களைக் கொண்டு வெல்லம் மற்றும் இன்னும் சில இயற்கை மூலப்பொருட்களுடன் சேர்த்து செய்யப்பட்ட  மூலிகை சாறின் விளைவுகளையும் தீர்மானிக்க ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெல்லம் சாப்பிடுவது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது, இதனால்  இரத்த சோகை தடுக்கப்படுகிறது என்று அந்த ஆய்வு உறுதி செய்தது.

வெல்லம் இரத்தத்தை சுத்திகரிக்கிறது - Jaggery purifies blood in Tamil

உடலில் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பிற ஹார்மோன்களைச் சுமந்து செல்வதற்கு இரத்தமே பொறுப்பு. அதே போல நமது இரத்தம் கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றவும் பொறுப்பேற்கிறது, ஆனால் வாழ்க்கை மற்றும் உணவுத் தேர்வு போன்ற காரணிகள் இரத்தத்தில் உள்ள நச்சுகளின் அளவு அதிகரிக்க வழிவகுக்கலாம். அதிகப்படியான நச்சுகள் சாதாரண உடல் செயல்பாட்டை மோசமாக மாற்றும். கல்லீரலும் சிறுநீரகமும் உடலில் இருந்து கழிவுகள் அகற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது, இதனால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆனால் ரத்தத்தை இயற்கையாகவே சுத்தமாக வைத்திருக்கும் சில உணவுகள் உட்பட சில உணவு மாற்றங்களை நமது உணவுப் பழக்கத்தில் செய்யலாம்.

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் திறனைக் கொண்டிருக்கும் ஒரு பொருளாக வெல்லம் இருக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அளவான வெல்லத்தின் வழக்கமான நுகர்வு உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற உதவும். பண்டைய மருத்துவ நூல்  சுஷ்ரதா சமிதா கூட வெல்லத்தின் இரத்த சுத்திகரிப்பு திறனை பற்றி குறிப்பிடுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்படுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை ஆரோக்கியமானதாக மாறுகிறது, இது வெல்லத்தை நச்சு நீக்கும் நன்மைகளின் பயனில் சேர்க்கிறது.

வெல்லத்தில் இருக்கும் கனிமங்கள் - Jaggery mineral content in Tamil

இரும்பு, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் வெல்லத்தில் உள்ளது. இதில் கால்சியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் அடங்கி இருக்கிறது. வெல்லம் பதப்படுத்தப்படாததால், அதில் அனைத்து கனிமங்களும், வைட்டமின்களும் அப்படியே உள்ளன, இதனால் வெள்ளை சர்க்கரைக்கு ஒரு ஆரோக்கியமான மாற்று வெல்லம் ஆகும். அனைத்து முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் வெல்லம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இனிப்பு பயன்பாட்டிற்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது.

நுரையீரலுளுக்கான வெல்லத்தின் நன்மைகள் - Jaggery benefits for lungs in Tamil

நுரையீரல் தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் தூசி துகள்கள் மற்றும் மாசுபாடுகளுக்கு ஆட்படுத்தப்படுகிறது. நம் நுரையீரல்கள் இந்த தூசி துகள்களைத் தானாக அகற்றுவதற்கு பாதுகாப்புக் கருவிகளைக் கொண்டிருப்பினும், தூசிக்கு நீண்டகாலமாக ஆட்படுத்தப்படுவதால் நுரையீரல் நோய்களுக்கு வழிவகுக்கும். கட்டுமானப் பணியாளர்கள், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சில இரசாயன தொழில்களில் பணியாற்றும் மக்கள் போன்ற மாசுபட்ட சுற்றுச்சூழல்களில் வேலை செய்யும் மக்களில் நுரையீரல் நோய்கள் பொதுவாகக் காணப்படுகிறது. முன் மருத்துவ ஆராய்ச்சிகள் நுரையீரலில் இருந்து தூசி துகள்களை அகற்றுவதில் வெல்லத்தின் ஆற்றலைப் பரிந்துரைக்கின்றன. நிலக்கரி மண்ணால் ஏற்பட்ட நுரையீரல் காயங்களைக் குறைப்பதில் வெல்லம் பயனுள்ளதாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மற்றொரு ஆய்வில், வெல்லத்தில் உள்ள நுட்பமான ஊட்டசத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், இதன் விளைவாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதாகவும் காட்டபட்டது.

வெல்லம்த்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன - Jaggery has antioxidant properties in Tamil

இலவச ராடிகல்களால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக உடலால் எதிர்த்து போரிட இயலாத போது (எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள்) நச்சுத்தன்மை அழுத்தம் ஏற்படலாம். புற்றுநோய், கீல்வாதம் மற்றும் இதய நோய்கள் போன்ற நோய்களில் இது ஒரு ஆபத்தான காரணியாக இருக்கலாம். இந்த தீங்கு விளைவிக்கும் இலவச ராடிகல்களை செயல்படாமல் தடுக்க ஆக்ஸிஜனேற்றிகள் பொறுப்பேற்றுக் கொள்கின்றன, இதனால் இலவச ராடிகல்களால் நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. ஆராய்ச்சியின் படி, வெல்லத்தில் மெக்னீசியம் நிறைந்திருக்கிறது, மேலும் இது செலினியமுடன் சேரும் போது இலவச ரடிகல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது, இதன்மூலம் பல்வேறு நோய்களுக்கு எதிராக உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மற்றொரு ஆய்வு, வெல்லத்தில் உள்ள அத்தியாவசிய பினோலிக் அமிலங்கள், ஆக்ஸிஜனேற்ற சேதத்திற்கு எதிராக 97% பாதுகாப்பு வழங்கியதைக் காட்டியது.

(மேலும் வாசிக்க: ஆக்சிஜனேற்றிகள் அதிகம் உள்ள உணவுகள்)

மூளைக்கு வெல்லத்தின் நன்மைகள் - Jaggery benefits for brain in Tamil

வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவது உங்களை புத்திசாலியாக்கும் உங்களுக்கு தெரியுமா?

நரம்பு மண்டலம் ஒரு குழுவான நரம்புகள் மற்றும் செல்களால் ஆனது, அது மூளை, தண்டு வடம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செய்திகளை அனுப்புவதிலும் அந்த பகுதிகளில் இருந்து வரும் சமிக்கைகளை மூளை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது. நரம்பு மண்டலத்தில் ஏதாவது சமநிலை மாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டால் வலிப்பு, நினைவக இழப்பு, அல்சீமர் நோய் போன்ற பல்வேறு நரம்பியல் கோளாறுகள் ஏற்படலாம்.

வெல்லம் என்பது மாங்கனீசுக்கு நல்ல ஆதாரமாக உள்ளது, இது மத்திய நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான மிக முக்கியமான கனிமமாகும். மூளையில் நரம்பியக்கடத்திகளின் செயல்பாட்டை மாங்கனீசு ஒழுங்குபடுத்துகிறது. இதனால் உணர்வுசார் சமிக்ஞைகள் உடலின் வழியாக விரைவாக மூளைக்கு செல்கின்றன என்பது உறுதிப்படுத்தப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்னீசியம் நரம்பியல் பாதுகாப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது, மேலும் அது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

ஆஸ்துமாவுக்கு வெல்லம் - Jaggery for asthma in Tamil

ஆஸ்துமா என்பது நுரையீரலின் காற்று பாதைகளில் அலற்சி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு நீண்ட கால வியாதி ஆகும். ஆஸ்துமா எல்லா வயதினருக்கும் மிகவும் பொதுவானது. வெல்லம் சுத்தப்படுத்தும் மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், நுரையீரல் மற்றும் நாசி சைனஸை சுத்தப்படுத்துகிறது. இதனால் மூச்சுத் திணறல், இருமல் மற்றும் ஜலதோஷம் போன்ற ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது குறிப்பாக தூசி மற்றும் பிற மாசுபடுதல்களால் ஒவ்வாமை கொண்டவர்களுக்கு உதவியாக இருக்கும். பல ஆயுர்வேத மருந்துகள் மற்றும் டானிக்குகளில், அதன் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளின் காரணமாக வெல்லம் ஒரு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

மாதவிடாயின் போது வெல்லத்தின் பயன்கள் - Jaggery benefits in menstruation in Tamil

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இவை வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்புகள் (மாதவிடாய் கால வயிற்று வலி), மனநிலை நிலையின்மை, தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு. இந்த பிரச்சனைகளுக்கு வெல்லம் ஒரு வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. ஆய்வுகளின் படி, மாதவிடாயின் போது வெல்லம் சாப்பிடுவதால் தடையற்ற இரத்த ஓட்டம் கிடைக்கிறது. வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால், பெண்களுக்கு அவர்களது மாதவிடாய் காலங்களில் இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.

எடை இழப்புக்கான வெல்லம் - Jaggery for weight loss in Tamil

இன்றைய உலகில் எல்லோரும் எடை இழப்புக்கு விரைவான மற்றும் எளிதான தீர்வை தேடுகிறார்கள். வெல்லத்தில் அதிக சர்க்கரையின் உள்ளடக்கம் இருந்தாலும், அது எடை இழக்க உதவுகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 

சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டும் ஒரே அளவு கலோரிகளையே கொண்டுள்ளன. ஆனால் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், சர்க்கரை வெற்று கலோரிகளைக் கொண்டுள்ளது, ஆனால் வெல்லம் பல கனிமங்களையும், வைட்டமின்களையும் உடலுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. வெல்லம் எடையை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. வெல்லத்தில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அது உடலில் சோடியம் அளவுகளை சமநிலைப்படுத்துவதன் மூலமும் உடலில் நீர் வற்றிப்போகாமல் தக்க வைத்துக் கொள்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் தூண்டப்படுகிறது. வளர் சிதை மாற்றம் என்பது நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளை நம் உடல் எவ்வளவு வேகமாக எரிக்கிறது என்பதே ஆகும். அந்த கூடுதல் கலோரிகளை பற்றி சிந்திக்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு முக்கிய காரணியாகும். வெல்லம் சாப்பிடுவது, நம் வளர் சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

(மேலும் வாசிக்க: உடல் பருமன் சிகிச்சை)

 • வெல்லம் ஒரு இனிப்பூட்டி, எனவே அதுநீரிழிவு ஆபத்தை அதிகரிக்கும் 
  எந்த இனிப்பூட்டியையும் அதிகமான சாபிட்டால் பக்க விளைவுகள் உண்டு.  நீரிழிவு கொண்ட மக்களுக்கு அல்லது நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்தில் உள்ள ஒருவருக்கு, வெல்லம் நிறைய சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவது இல்லை . பல ஆரோக்கிய நலன்களுக்காக வெல்லத்தை பரிந்துரைக்கும் ஆயுர்வேதம்கூட, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெல்லம் சாப்பிட அறிவுறுத்துவது இல்லை.
 • தொற்று ஏற்படலாம் 
  சாப்பிடுவதற்கு முன் வெல்லத்தை தூய்மைபடுத்துதல் அவசியம். வெல்லத்தை ஒழுங்காக சுத்தப்படுத்தாவிட்டால், அது உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அசுத்தமான சூழல்களில் தயாரிக்கப்படும் போது, வெல்லம் நோய்-வர காரணமாக இருக்கும் நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கலாம். வெல்லத்தை கவர்ச்சிகரமானதாக காட்டும் பொருட்டு இரசாயனங்கள் சேர்க்கப்பட்டு வெல்லத்தில் கலப்படம் செய்வதுகூட இப்போது வழக்கமாகிவிட்டது. எனவே, பதப்படுத்தப்படாத வெல்லத்தை விற்கும் ஒரு உண்மையான இடத்தில் இருந்து வெல்லத்தை வாங்குவது அவசியம்.
 • எடையை அதிகரிக்கும்
  சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் நல்லது. ஆனால் அதிக அளவு வெல்லம் சாப்பிடுவதால் கலோரி அதிகரிக்கும், இதையொட்டி எடை அதிகரிக்கும்.
 • பிற பக்க விளைவுகள் 
  ஏராளமான வெல்லம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது. மேலும் சிரங்கு, குமட்டல், மற்றும் காய்ச்சல் போன்ற அலர்ஜி ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.

வெல்லம் என்பது சுத்திகரிக்கபடாத கரும்பு சர்க்கரை ஆகும். பழங்களை போலவே வெல்லமும் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை தக்கவைத்துக் கொள்கிறது. வெல்லம் எடை இழப்புக்கு உதவுகிறது, மாதவிடாய் அறிகுறிகளைத் தடுக்க இது உதவுகிறது, இது நரம்பு அறிகுறிகளின் முறையான செயல்பாட்டை செயல்படுத்துகிறது மற்றும் இது ஆஸ்துமா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டிருக்கிறது. இருப்பினும், மிக அதிக வெல்லம் மலச்சிக்கல் மற்றும் எடையை அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்புக்கான ஒரு சிறந்த தேர்வு அல்ல. பதப்படுத்தப்படாத வெல்லத்தை விற்கும் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து வெல்லம் வாங்குவதே எப்போதும் நல்லது. வெல்லத்தின் அனைத்து சுகாதார நலன்களின் காரணமாக, இது வெள்ளை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்று என கருதப்படுகிறது.


उत्पाद या दवाइयाँ जिनमें Jaggery है

மேற்கோள்கள்

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Full Report (All Nutrients): 45218052, JAGGERY BALL, UNREFINED CANE SUGAR. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. Resmi.S, Fathima Latheef, R.Vijayaraghavan. Effectiveness of Herbal Extract in Enhancing the Level of HB among Adolescent Girls with Iron Deficiency Anemia at Selected Higher Secondary Schools at Bangalore. International Journal of Health Sciences and Research, Vol.6; Issue: 10; October 2016
 3. Priyanka Shrivastav, Abhay Kumar Verma, Ramanpreet Walia, Rehana Parveen, Arun Kumar Singh. JAGGERY: A REVOLUTION IN THE FIELD OF NATURAL SWEETENERS. ejpmr, 2016,3(3), 198-202
 4. A P Sahu, A K Saxena. Enhanced translocation of particles from lungs by jaggery. Environ Health Perspect. 1994 Oct; 102(Suppl 5): 211–214. PMID: 7882934
 5. Health Harvard Publishing, Updated: April 3, 2019. Harvard Medical School [Internet]. Potassium and sodium out of balance. Harvard University, Cambridge, Massachusetts.
 6. Yogesh Shankar Kumbhar. STUDY ON GUR (JAGGERY) INDUSTRY IN KOLHAPUR. International Research Journal of Engineering and Technology Volume: 03 Issue: 02 | Feb-2016