தாமரை விதை அல்லது கோர்கோன் விதை எனவும் அறியப்படும் தாமரை விதை, நீர் அல்லி குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்படும், ஒரு பூ பூக்கும் தாவரம் ஆகும்.  கிழக்கு ஆசியாவை சொந்த பிராந்தியமாக கொண்ட இது, தண்ணீரில் வளர்கிறது மற்றும் பிரகாசமான கருஞ்சிவப்பு நிற பூக்களைப் பூக்கிறது. தாமரை விதைகள், இந்திய உணவு தயாரிப்பு முறைக்களில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, மற்றும் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஈவுர்யாளியின் உண்ணத்தக்க விதைகள், சீன மருத்துவத்திலும் கூட பயன்படுத்தப்படுகிறது

 பொதுவாக இந்த நீர் அல்லிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் குளங்களில் உள்ள தண்ணீரில் வளர்கின்றன மற்றும், அவற்றின் அனுகூலமான வளர்ச்சிக்கு ஒரு வளமான மண் தேவையாக இருக்கிறது. இந்தத் தாவரத்தின் வேர்கள், தண்ணீருக்குள் 5 மீட்டர்கள் ஆழம் வரை நீண்டு செல்லக் கூடியவை. மஹானா எனப் பிரபலமாக அறியப்படும் இந்த பூ பூக்கும் தாவரம், மணிப்பூர் லோக்டாக் ஏரி மற்றும் பீகார் போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.

தாமரை விதை செடி பெரும்பாலும், அதன் உண்ணத்தக்க பழங்களுக்காகவும் மற்றும் மாவுச்சத்துடைய வெள்ளை விதைகளுக்காகவும் பயிரிடப்படுகிறது. இந்த செடியின் பழங்கள் சதைப்பற்றுடையவை மற்றும் மிருதுவானவை, ஒரு சிறிய ஆரஞ்சு பழத்தின் அளவில் இருப்பவை, மற்றும் சீனாவில் ஒரு குளிர்ச்சியூட்டும் சத்து மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்தப் பழத்தின் விதைகள் பச்சையாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிட ஏற்றவை ஆகும். ஒவ்வொரு பழமும் 8 முதல் 15 விதைகள் வரை கொண்டிருக்கின்றன மற்றும் அவை, ஒரு பட்டாணியின் அளவில் இருக்கின்றன. தாமரை விதைகள், உட்கொள்ளப்படும் முன்னர் வறுக்கப்படுகின்றன.

தாமரை விதையைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

 • தாவரவியல் பெயர்: ஈவுர்யாளி ஃபெராக்ஸ்
 • குடும்பம்: நிம்ஃபயிசியயி
 • பொதுவான பெயர்: மஹானா   
 • பயன்படும் பாகங்கள்: பழம், சீனாவில் ஒரு குளிர்ச்சியூட்டும் சத்து மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் இதன் உண்ணத்தக்க விதைகள், சீனர்களால் சோப்புகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
 • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: இந்தத் தாவரம், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னர்,  சீனாவில் முதன் முதலில் பயிரிடப்பட்டது. மேலும் இது, இந்தியாவின் சில பகுதிகள், ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது.
 • சுவாரஸ்யமான தகவல்: இந்தியாவில், மஹானா எனவும் அறியப்படும் தாமரை விதை, மதரீதியான பண்டிகைகளில் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அது நவராத்திரியின் பொழுது உண்ணப்படும் ஒரு பிரபலமான உணவு ஆகும்.
 1. தாமரை விதையின் ஊட்டச்சத்து விவரங்கள் - Fox nuts nutrition facts in Tamil in Tamil
 2. தாமரை விதையின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Fox nuts health benefits in Tamil
 3. தாமரை விதைகளின் பக்க விளைவுகள் - Fox nuts side effects in Tamil
 4. முக்கிய குறிப்புகள் - Takeaway in Tamil

பூஜ்ஜியம் கொழுப்புச்சத்து மற்றும் பூஜ்ஜியம் கொழுப்புகள் ஆகியவை, தாமரை விதையின் ஊட்டச்சத்து சிறப்பம்சங்களில் சிலவாகும். இது அதனை, இதயப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஒரு பொருத்தமான உணவாக ஆக்குகிறது. தாமரை விதை, உடலில் உறுதியான தசை திசுக்களை உருவாக்க உதவும் புரத உட்பொருட்களை, அதிக அளவில் கொண்டிருக்கிறது. அதிக அளவிலான பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம், இரத்த அழுத்தத்தை, குறிப்பாக மிகை இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன.   

100 கி தாமரை விதை, பின்வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

 

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
ஆற்றல் 350 கி.கலோரி
கொழுப்பு 0.1 கி
புரதம் 9.7 கி
கார்போஹைட்ரேட்டுகள் 77 கி
நார்ச்சத்து 7.6 கி

 

தாதுக்கள் 100 கிராமில் உள்ள அளவு
சோடியம் 210 மி.கி
பொட்டாசியம் 500 மி.கி
சுண்ணாம்புச்சத்து 60 மி.கி

தாமரை விதை, நீடித்த வயிற்றுப் போக்கு, மண்ணீரல் தொடர்பான பிரச்சினைகள், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க, கீழை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தாமரை விதையின் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளைப் பற்றி, நாம் இபோது காணலாம்:

ஒரு புரதச்சத்து ஆதாரமாக: தாமரை விதை, பொருத்தமான தசை நிறையை உறுதி செய்யவும் மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டினைப் பராமரிக்கவும் அவசியமான புரதங்களை, அதிக அளவில் கொண்டிருக்கிறது.

 • நீரிழிவுக்காக: தாமரை விதையில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து உட்பொருள், உணவுக்குப் பிறகு உடனடியாக இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதைத் தடுக்கிறது. அதன் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மூலப்பொருள், நீரிழிவினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கின்றன.
 • இதயத்துக்காக: தாமரை விதை, அதன் அதிக அளவிலான பொட்டாசியத்தின் காரணமாக, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் உதவுகிறது. அது குறைவான அளவு கொழுப்புக்களைக் கொண்டிருக்கும் காரணத்தால், உங்கள் கொழுப்பு அளவுகள் அதிகரிக்காமல் இருப்பதை  உறுதி செய்கிறது. தாமரை விதை, உங்களுக்கு ஆரித்மியா, மயோகார்டியல் ஐசீமியா மற்றும் பிற இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
 • எலும்புகளுக்காக: தாமரை விதைகள், சுண்ணாம்புச்சத்தின் செறிவான ஆதாரங்கள் ஆகும், அதன் மூலம், எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் அதே வேளையில், எலும்பு முறிவுகள் மற்றும் வலி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.
 • சிறுநீரகக் கோளாறுகளுக்காக: இந்த விதைகள், சிறுநீர் கட்டுப்படுத்த இயலாமை, சிறுநீரக செயலிழப்பு அல்லது மிகை சிறுநீர் போக்கு போன்ற பல சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வதற்கு, பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் அவை, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் கூட உதவுகின்றன. ஆனால், ஒருவேளை நீங்கள் ஏதேனும் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தால், தாமரை விதையைப் பயன்படுத்தும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதை உறுதி செய்து கொள்வதில் கவனமாக இருங்கள்.
 • மலட்டுத்தன்மைக்காக: தாமரை விதைகள், பாலுணர்வு தூண்டியாகக் கருதப்படுகிறது மற்றும் சில ஆதாரங்கள் அவை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கருத்தரித்தல் செயல்பாட்டை மேம்படுத்தவும் கூட உதவுகிறது எனக் காட்டுகின்றன.

நீரிழிவுக்காக தாமரை விதைகள் - Fox nuts for diabetes in Tamil

நீரிழிவு நோய் என்பது, உங்கள் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளால் முறையாக இன்சுலினைக் கிரகிக்க, அல்லது உற்பத்தி செய்ய இயலாமல் போவதால், அவற்றில் ஏற்படும் ஒரு குறைபாடு ஆகும். வழக்கமாக நீரிழிவு நோயாளிகள், தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளைப் பராமரிப்பதை மிகவும் கடினமானதாக எண்ணுவார்கள். தாமரை விதைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு பொருத்தமான சிற்றுண்டியாக அவற்றை ஆக்குகிற நார்ச்சத்து நிறைவாகவும், மற்றும் கொழுப்பு பொருட்களைக் குறைவாகவும் கொண்டிருக்கின்றன. தாமரை விதைகளில் உள்ள நார்ச்சத்து, குடலுக்குள் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக விடுவிக்க உதவுவதன் மூலம், உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவுகள் திடீரென்று அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது

மேலும், தாமரை விதைகள், உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளை நீக்குவதன் மூலம், உடலை நீரிழிவினால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து பாதுகாக்கின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின், ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

இதயத்துக்காக தாமரை விதைகள் - Fox nuts for heart in Tamil

ஒரு சமீபத்திய ஆய்வு, தாமரை விதைகள் குளுக்கோசைட்டுகளை அதிக அளவில் கொண்டிருக்கிறது, அவை இந்த உண்ணக்கூடிய விதைகளுக்கு ஆக்சிஜனேற்ற பண்புகளை வழங்குகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் அந்த ஆய்வு, தாமரை விதைகளை தொடர்ந்து உட்கொள்வது, மையோகார்டியல் ஐசீமியா போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கக் கூடும் எனவும் காட்டுகிறது.

அதிக இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு அளவு ஆகிய இரண்டும் இதயநாள நோய்களை ஏற்படுத்தும் முக்கியமான அபாய காரணிகள் ஆகும்.

இந்த நீர் அல்லிகளின் விதைகள், ஏறத்தாழ போதுமான அளவு கொழுப்பைக் கொண்டிருக்கின்றன. அதாவது, உங்கள் இரத்த கொழுப்பு அளவுகளை அதிகரிக்காமலே, உட்கொள்ளக் கூடிய சிற்றுண்டியாக அவை இருக்கின்றன. 

தாமரை விதைகள் அதிக அளவிலான பொட்டாசியம் மற்றும் ஓரளவுக்கு குறைந்த சோடியம் உட்பொருட்களைக் கொண்டிருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்கு என்ன அர்த்தம் என்றால், உயர் இரத்த அழுத்தம் அல்லது மிகை இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, அவை நன்மை அளிக்கக் கூடியது என்பதாகும். பொட்டாசியத்தின் நல்ல ஒரு ஆதாரமாக இருப்பதால் தாமரை விதைகள் , உங்கள் இரத்த அழுத்த அளவுகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கின்றன. மேலும், பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் சரியான விகிதம், ஆர்த்மியா ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.

எனவே, அடுத்த முறை நீங்கள் பசியாக உணரும் பொழுது, உங்கள் இதயத்தைப் பற்றிக் கவலை ஏதும் இன்றி, இந்த வறுக்கப்பட்ட, மாவுச்சத்தைக் கொண்ட வெள்ளை விதைகளை, ஒரு கை நிறைய அள்ளி சாப்பிடுங்கள்.

மலட்டுத்தன்மைக்காக தாமரை விதைகள் - Fox nuts for infertility in Tamil

ஆயுர்வேதத்தில் தாமரை விதைகள், ஒரு பாலுணர்வு தூண்டியாகக் கருதப்படுகிறது. இந்த விதைகள் இயற்கையான ஹைட்ரண்டுகள், எனவே அவை உடலில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கின்றன என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஹைட்ரண்டுகளை எடுத்துக் கொள்வது, உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது என நம்பப்படுகிறது. இது, படிப்படியாக இனப்பெருக்க அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் ஆண்களின் விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்க உதவுகிறது. கூடவே இது, ஆண்மையின்மைக்கு மற்றும் பெண்களின் கருவுறும் தன்மையை அதிகரிக்க ஒரு பயன்மிக்க நிவாரணியாகவும் இருக்கிறது

ஆகையால், உங்கள் தினசரி உணவில் தாமரை விதைகளை சேர்த்துக் கொள்வது, பாலுறவு பிரச்சினைகள் மற்றும் மலட்டுத்தன்மையை எதிர்த்துப் போரிட உங்களுக்கு உதவக் கூடும்.

எலும்புகளுக்கான தாமரை விதைகளின் நன்மைகள் - Fox nuts benefits for bones in Tamil

தாமரை விதை செடியின் வெடித்த விதைகள், சுண்ணாம்புச்சத்துக்கான ஒரு நல்ல ஆதாரம் ஆகும். அது, ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களைப் பராமரிக்க அவசியமான, மற்றும் அதில் பற்றாக்குறை ஏற்பட்டால் எலும்பு முறிவுகள் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிற, ஒரு தாதுவாகும். ஆகவே, உங்கள் தினசரி உணவில் தாமரை விதைகளை சேர்த்துக் கொள்வது, உங்களுக்கு தினசரி தேவைப்படும் என அறிவுறுத்தப்பட்ட அளவு சுண்ணாம்புச்சத்தினைப் பெற, உங்களுக்கு உதவக் கூடியது ஆகும். அது, உங்கள் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க, உங்கள் எலும்புகள் காயமடையும் வாய்ப்புக்களைக் குறைப்பது மட்டும் அல்லாமல், கூடவே அது, எலும்புப்புரை நோய் போன்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராடவும், குறிப்பாகப் பெண்களுக்கு, உதவுகிறது.

மேலும் தாமரை விதைகள், மூட்டழற்சிக்கான பாரம்பரிய நிவாரணிகளில் ஒன்றாக, ஏற்கனவே உலகம் முழுவதும் அதிக மக்களால் உட்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்தக் கூற்றுக்களை உறுதி செய்ய மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றாலும், பாரம்பரியமான பயன்பாட்டை மறுக்க இயலாது.

சிறுநீரகங்களுக்காக தாமரை விதைகள் - Fox nut for kidneys in Tamil

தாமரை விதைகள், சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க, பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிறுநீரகத்தின் முறையான செயல்பாடானது, அவற்றில் பாயும் இரத்த அழுத்தத்தின் மூலம் முறைப்படுத்தப்படுகிறது. தாமரை விதைகள் இரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுவதால், அது சிறுநீரகங்களுக்குப் போதுமான இரத்தம் பாய்வதை உறுதி செய்து, அவற்றை ஆரோக்கியமாக வைக்கிறது. இந்த விதைகளைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாமை, மிகை சிறுநீர் போக்கு, மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் கூட உதவுகிறது.

ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ஒரு நல்ல ஆதாரமாக இருப்பதால் இது, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைப்பதன் மூலம், உடல் உறுப்புகளின் உகந்த செயல்பாடுகளை  ஊக்குவிக்கிறது.

பொட்டாசியம் செறிவுள்ள விதைகள், வழக்கமாக சிறுநீரக நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்பட மாட்டாது. எனவே, நீங்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால், தாமரை விதைகளை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியமானது ஆகும்.

(மேலும் படிக்க: கடுமையான சிறுநீரக செயலிழப்பு)

தாமரை விதையின் புரதச்சத்து ஆதாரம் - Fox nut protein source in Tamil

இந்த வெள்ளை விதைகள், 100 கிராம்களுக்கு சுமார் 9.7 கி வரை அளவுக்கு தாவரம்-சார்ந்த புரதங்களை,  ஏராளமான அளவில் கொண்டிருக்கின்றன. இந்த விதைகளில் இருக்கக் கூடிய புரதச்சத்து உட்பொருள், மற்ற சமைக்கப்பட்ட தானியங்களில் இருப்பதோடு ஒப்பிடும் பொழுது, மிகவும் அதிகம் ஆகும். புரதங்கள் என்பவை, தசைகளின் அமைப்போடு ஒருங்கிணைந்த ஒன்றாகும். அவை, உங்கள் தசை திசுக்களை உருவாக்க உதவுகின்றன மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் ஒரு ஒருங்கிணைந்த பங்கினை வகிக்கின்றன. இந்த புரதச்சத்து நிறைந்த விதைகளைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, உங்கள் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது. இருந்தாலும், இந்த விதைகளை அளவுக்கு மீறி உண்ணாமல், ஒரு மிதமான அளவுகளில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

(மேலும் படிக்க: சீரான உணவு)

 • தாமரை விதைகள், இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன, அதனால் அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும்,இந்த மாவுச்சத்து உள்ள வெண்மையான விதைகள்,  சில நபர்களுக்கு ஒரு சில ஒவ்வாமை செயல்பாடுகளைத் தூண்டி விடக் கூடியவை ஆகும். அதனால், இந்த விதைகளை உட்கொண்ட உடனே, நீங்கள் ஏதேனும் ஒவ்வாமை எதிர்விளைவுகள் அல்லது அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடும் படிஅறிவுறுத்தப்படுகிறது.
 • நீங்கள் ஜலதோஷம், காய்ச்சல், மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது, தாமரை விதைகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். 
 • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், இந்த விதைகளை எடுத்துக் கொள்ளும் முன்னர், அவை குழந்தையின் மீது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், தங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த விதைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சில நபர்களுக்கு வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப் பொருமல் ஏற்படவும் கூட காரணமாகக்  கூடும்.
 • மேலும், உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் மருத்துவப் பிரச்சினைகள் இருக்கின்றன, மற்றும் நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலுக்குள் மருந்துகள் கிரகிக்கப்படுவதை இந்த விதைகள் தடுக்கலாம், அல்லது அந்த மருந்துகளுடன் ஒரு எதிர்மறை மறுவிளைவை வெளிப்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

தாமரை விதைகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்த விதைகள், இந்தியாவில் நடைபெறும் பல்வேறு மதரீதியான பண்டிகைகளில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கின்றன, மற்றும் இவை நவராத்திரியன்று சாப்பிடப்படுகின்றன. கடந்த 3000 ஆண்டுகளாக இந்த விதைகள், பாரம்பரிய சீன மருத்துவத்திலும் மற்றும் ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த விதைகள், மனிதர்களிடைய ஏற்படும் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்கப் பயனுள்ளவையாக இருக்கின்றன. பொட்டாசியத்தை அதிக அளவில் கொண்டிருப்பதால் அவை, இரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகின்றன. படிப்படியாக அது, சிறுநீரகத்துக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது. ஏனென்றால் இந்த விதைகள் கொழுப்புகளைக் குறைவாகவும் புரதங்களை அதிகமாகவும் கொண்டிருக்கிறது. அது, இவற்றை மாலை நேரத்தில் மெல்லும், ஒரு பொருத்தமான சிற்றுண்டியாக ஆக்குகிறது. இது, குறைந்த அளவுகளில் உண்ணப்படும் பொழுது, உங்களை கச்சிதமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் கூட நம்பப்படுகிறது.

அதிகமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் கூட, இவை ஒவ்வாமை, வயிறு வீங்குதல் மற்றும் வயிற்றுப் பொருமல் போன்ற, சில பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கலாம். உங்கள் உணவுப் பழக்கத்தில் இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

 1. Mesko ME, Hutton B, Skupien JA, Sarkis-Onofre R, Moher D, Pereira-Cenci T. Therapies for bruxism: a systematic review and network meta-analysis (protocol). Syst Rev. 2017 Jan 13;6(1):4. PMID: 28086992
 2. Khoury S, Carra MC, Huynh N, Montplaisir J, Lavigne GJ.Sleep Bruxism-Tooth Grinding Prevalence, Characteristics and Familial Aggregation: A Large Cross-Sectional Survey and Polysomnographic Validation. 2016 Nov 1;39(11):2049-2056. PMID: 27568807
 3. Lal SJ, Weber KK. Bruxism Management. [Updated 2019 Mar 13]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan
 4. Reddy SV, Kumar MP, Sravanthi D, Mohsin AH, Anuhya V.Bruxism: A Literature Review. J Int Oral Health. 2014 Nov-Dec;6(6):105-9. PubMed PMID: 25628497.
 5. Guaita M, Högl B. Current Treatments of Bruxism. 2016;18(2):10. PMID: 26897026
 6. Yap AU, Chua AP.Sleep bruxism: Current knowledge and contemporary management. 2016 Sep-Oct;19(5):383-9. PMID: 27656052
 7. Wieckiewicz M, Paradowska-Stolarz A, Wieckiewicz W. Psychosocial Aspects of Bruxism: The Most Paramount Factor Influencing Teeth Grinding. 2014;2014:469187. PMID: 25101282
 8. Motta LJ, Guedes CC, De Santis TO, Fernandes KP, Mesquita-Ferrari RA, Bussadori SK. Association between parafunctional habits and signs and symptoms of temporomandibular dysfunction among adolescents.. 2013;11(1):3-7. PMID: 23507675
 9. Bertazzo-Silveira E, Stuginski-Barbosa J, Porporatti AL, Dick B, Flores-Mir C, Manfredini D, De Luca Canto G. Association between signs and symptoms of bruxism and presence of tori: a systematic review.. 2017 Dec;21(9):2789-2799. PMID: 28213765
 10. Wieckiewicz M, Paradowska-Stolarz A, Wieckiewicz W.Psychosocial Aspects of Bruxism: The Most Paramount Factor Influencing Teeth Grinding . 2014;2014:469187. PMID: 25101282
 11. Guaita M, Högl B. Current Treatments of Bruxism.. 2016 Feb;18(2):10. PMID: 26897026
 12. Ommerborn MA, Giraki M, Schneider C, Fuck LM, Handschel J, Franz M, Hans-Michael Raab W, Schäfer R.Effects of sleep bruxism on functional and occlusal parameters: a prospective controlled investigation. 2012 Sep;4(3):141-5. PMID: 22935746
 13. Shetty S, Pitti V, Satish Babu CL, Surendra Kumar GP, Deepthi BC. Bruxism: A Literature Review. 2010 Sep;10(3):141-8. PMID: 21886404