நீண்ட காலமாக, வெப்ப மண்டலப் பகுதிகளின் காயகல்பமாகிய தேங்காய் தண்ணீர், ஒரு விருப்பமான இயற்கை பானம் ஆகும். அது, கோஸ்டாரிகா, டொமினிக் குடியரசு, இந்தோனேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், பிரேசில், கரீபியன் தீவுகள், மெக்சிகோ மற்றும் இந்தியாவிலும் கூட, ஒரு பிரபலமான பானமாக இருக்கிறது.

தேங்காய்கள், 400 இனங்களுக்கும் மேல் கொண்ட அரிகசியயி என்ற குடும்பத்தை சேர்ந்தது ஆகும். தேங்காய் தண்ணீரின் சுவை, அது பயிரிடப்படும் மண்ணைப் பொறுத்தது ஆகும். ஒருவேளை அந்தத் தென்னை மரம் கடல் நீருக்கு அல்லது ஒரு கடற்கரைக்கு அருகில் இருந்தால், அதன் சுவையில் சிறிதளவு உப்புத்தன்மையும் இருக்கக் கூடும்.

இந்தோனேசியா, உலகத்தில் தேங்காய்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்தியாவில், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை தேங்காய்களை அதிகம் உற்பத்தி செய்பவற்றில் முதல் மாநிலங்களாக உள்ளன.

95% அளவுக்கு தண்ணீரைக் கொண்டிருக்கும் இது, ஒரு குறைந்த கலோரிகளைக் கொண்ட மற்றும் கொழுப்பை அதிகரிக்காத பானம் ஆகும். மேலும் தேங்காய் தண்ணீர், உடலுக்கு நன்மை அளிக்கின்ற பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளைக் கொண்ட ஆற்றல் மையமாக இருக்கிறது.

தேங்காய் தண்ணீரைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

 • தாவரவியல் பெயர்: தேங்காய் தண்ணீர், கோகோஸ் நுசிஃபெரா எனப்படும் தென்னை மரத்தில் இருந்து பெறப்படுகிறது
 • குடும்பம்: அரிகசியயி
 • பொதுவான பெயர்: இந்தியில் நரியல் பானி
 • சமஸ்கிருதப் பெயர்: நரிகேளஜலம்
 • பயன்படும் பாகங்கள்: தேங்காய்க்குள் காணப்படும் திரவம்
 • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: உலகம் முழுவது 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையும் தேங்காய், பெரும்பாலும் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் நடைபெறும் தென்னை விவசாயத்தில், தோராயமாக 78% வரை இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பங்களிப்பாக இருக்கிறது.
 • சுவாரஸ்யமான தகவல்: ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் 20 பில்லியனுக்கும்  அதிகமான தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன
 1. தேங்காய் தண்ணீரில் இருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள் - Coconut water nutrition facts in Tamil
 2. ஆரோக்கியத்துக்கான தேங்காய் தண்ணீரின் நன்மைகள் - Coconut water health benefits in Tamil
 3. தேங்காய் தண்ணீரின் பக்க விளைவுகள் - Coconut water side effects in Tamil
 4. முக்கிய குறிப்புக்கள் - Takeaway in Tamil

தேங்காய் தண்ணீரின் முக்கியமான மூலப்பொருள், அதன் மொத்தத் தண்ணீர் ஆகும். ஆயினும் தேங்காய் தண்ணீர், வைட்டமின் சி மற்றும் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு தாதுக்களையும் கொண்டிருக்கிறது.

யு.எஸ்.டி.ஏ, ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி, 100 மி.லி தேங்காய் தண்ணீர், பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
ஆற்றல் 29 கி.கலோரி
புரதம் 0.30 கி
கார்போஹைட்ரேட்டுகள் 6.97 கி
சர்க்கரைகள் 6.36 கி
தாதுக்கள்  
சுண்ணாம்புச்சத்து 6 மி.கி
மெக்னீஷியம் 2 மி.கி
பாஸ்பரஸ் 6 மி.கி
பொட்டாசியம் 176 மி.கி
சோடியம் 12 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் சி 5.5 மி.கி

தேங்காய் தண்ணீர், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி மூலக்கூறுகளின், ஒரு செறிவான  ஆதாரம் ஆகும். அது, உங்கள் சருமம் மற்றும் உடலுக்கு நீர்ச்சத்தினை அளித்து, எலக்ட்ரோலைட்டுகளின் ஒரு மிகச் சிறந்த ஆதாரத்தை வழங்குகிறது. தேங்காய் தண்ணீரின் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆரோக்கியமளிக்கும் நன்மைகளை நாம் இப்பொழுது காணலாம்.

 • உடலுக்கு மறு நீர்ச்சத்தினை வழங்குகிறது: தேங்காய் தண்ணீர், உடற்பயிற்சிக்குப் பின்னர் அருந்தப்படும் மறு நீர்ச்சத்து பானமாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது உடற்பயிற்சியின் பொழுது இழக்கப்படும் நீர் மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளை, மறுபடியும் நிறைவு செய்து சோர்வினைத் தடுக்கிறது.
 • சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது: தேங்காய் தண்ணீர், உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, மற்றும் சிறுநீரகங்களில் நச்சுத்தன்மை குவிய விடாமல் பார்த்துக் கொள்கிறது. அது, சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுப்பதிலும், மற்றும் சிறுநீரகக் கற்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவுகிறது.
 • சருமத்துக்கான நன்மைகள்:  அழற்சி மற்றும் யு.வி. பாதிப்பு என வரும் பொழுது, தேங்காய் தண்ணீர் உங்கள் சருமத்துக்கு சிறந்த நண்பனாக இருக்கக் கூடும். ஒரு இயற்கையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியாக இருப்பதால் அது, சரும நோய்த்தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது, மற்றும் முதுமை அடைவதற்கான முதற்கட்ட அறிகுறிகளைக் குறைக்கிறது.
 • கொழுப்பு அளவைக் குறைக்கிறது: தேங்காய் தண்ணீர், ஆரோக்கியமான கொழுப்பு அளவுக்களைப் பராமரிப்பதில், திறன்மிக்கதாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அது, கெட்ட கொழுப்பின் அளவுகளைக் குறைத்து, எச்.டி.எல் அல்லது நல்ல கொழுப்பு அளவுகளை அதிகரிக்கிறது. அதன் மூலம், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
 • பற்சிதைவுகள் ஏற்படாமல் தடுக்கிறது: தேங்காய் தண்ணீர், திறன்மிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாக குறிப்பிடப்படுகிற. ஒரு வகை கொழுப்பு அமிலமான, லாரிக் அமிலத்தைக் கொண்டிருக்கிறது. அது, நமது வாயில் பற்சிதைவுக்குக் காரணமான நுண்ணுயிரியின் வளர்ச்சியைத் தடுத்து, பற்சிதைவில் இருந்து பாதுகாக்கிறது.

தேங்காய் தண்ணீரின் மறு நீர்ச்சத்து அளிக்கும் நன்மைகள் - Coconut water rehydration benefits in Tamil

தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளை செறிவாகக் கொண்டிருக்கும் தேங்காய் தண்ணீர், உடல் இழந்த தாதுக்கள் மற்றும் திரவங்களைத் திறம்பட மறு நிரப்பு செய்கிறது. இது, உடற்பயிற்சிக்குப் பின்னர் அருந்தும் பானங்களுக்கு ஒரு இயற்கை மாற்றாகப் பயன்படுத்தப்படுவது, அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேங்காய் தண்ணீர், மற்றும் கார்போஹைட்ரேட் -எலெக்ட்ரோலைட்டுகள் மற்றும் சுத்தமான தண்ணீரின்  கலவையைக் கொண்ட ஒரு குளிர்பானம், இரண்டையும் ஒப்பிட மற்றும் அவற்றின் செயல்திறனைக் கண்டறிய, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், அந்த குளிர்பானத்தை விட, தேங்காய் தண்ணீர் சுவை மிகுந்ததாக, மற்றும் அருந்திய பின் குமட்டல் ஏற்படுத்தாமல் இருந்தது வெளிப்பட்டது. மேலும் அது, வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்ததோடு வயிற்றுத் தொந்தரவு எதையும் ஏற்படுத்தவில்லை. அந்த ஆய்வு மூலம், உடற்பயிற்சிக்குப் பின்னர், தேங்காய் தண்ணீரை மறு நீர்ச்சத்துக்கான, ஒரு நல்ல ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வரப்பட்டது.

தேங்காய் தண்ணீரின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு நன்மைகள் - Coconut water antioxidant benefits in Tamil

மூலக்கூறு சேதாரக் கூறுகள் என்பவை, நமது உடலின் இயற்கையான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற, நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். ஆனால், இந்த மறுவிளைவு ஆக்சிஜன் இனங்களின் அளவுக்கு அதிகமான உற்பத்தி, உடலின் செல்களை சேதப்படுத்தி, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையை அதிகரிக்கக் கூடும். அதிகமான ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் கொண்ட ஒரு உடலானது, புற்றுநோய், தமனித் தடிப்பு மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு, எளிதில் இலக்காகக் கூடியதாக இருக்கிறது. ஆக,  எவ்வாறு உங்களால் மூலக்கூறு சேதாரக் கூறுகள் அதிகமாவதைத் தடுக்க முடியும்?

ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் என்பவை, நமது உடலில் மூலக்கூறு சேதாரக் கூறுகள் உருவாவவைத் தடுக்கின்ற மூலப் பொருட்கள் ஆகும். தேங்காய் தண்ணீர், ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைத் தடுக்க உதவுகின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை, அதிக அளவில் கொண்டிருக்கிறது. தேங்காய் தண்ணீர், இந்த மூலக்கூறு சேதாரக் கூறுளை அழித்து ஒழிக்கும் பொறுப்பை உடைய, பல்வேறு வகை ஃபெனோலிக் மூலக்கூறுகள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம், காஃபீயிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஒரு முன் மருத்துவ ஆய்வு, தேங்காய் தண்ணீரில் உள்ள ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், உடலில் உள்ள இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, ட்ரைக்ளிசரைட் அளவு மற்றும் கொழுப்பு அமில அளவுகளைத் திறம்படக் குறைக்கின்ற அதே வேளையில், இயற்கையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாடும் கணிசமாக அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டு உள்ளது.

(மேலும் படிக்க: ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் செறிவான உணவுகள்)

சிறுநீரகக் கற்களுக்காகத் தேங்காய் தண்ணீர் - Coconut water for kidney stones in Tamil

sசிறுநீரகக் கற்கள் என்பவை, சிறுநீரகங்களில் உருவாகின்ற கெட்டியான படிமங்கள் ஆகும். மேலும் அது, சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் கடுமையான வயிற்று வலி மற்றும் எரிச்சல் உணர்வைக்  கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. அது, சிறுநீரக அமைப்பின் சுவர்களில் சிறுநீரகக் கற்கள் உரசுவதன் காரணமாக வழக்கமாக ஏற்படுகின்ற, இரத்த சிறுநீர் (சிறுநீரில் இரத்தம்) பிரச்சினையுடன் இணைந்ததாகவும் இருக்கலாம். ஏழு வார கால அளவுக்கு விலங்கு மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, தேங்காய் தண்ணீர் அருந்துவது, சிறுநீரக கற்கள் உருவாவதைக் குறைக்கிறது மற்றும் சிறுநீரில் உருவாகியுள்ள கற்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் கூட உதவுகிறது என்பதை வெளிப்படுத்தியது. இந்த ஆய்வு, சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை அளிக்க, தேங்காய் தண்ணீரை ஒரு இயற்கையான காரணியாகப் பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

தோலுக்கான தேங்காய் தண்ணீரின் நன்மைகள் - Coconut water benefits for skin in Tamil

தோல், பொதுவான நோய்த்தொற்றுக்கள், மாசுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் யு.வி. கதிர்களுக்கு எதிரான முதல் வரிசை பாதுகாப்பு அமைப்பாக இருக்கின்றது மற்றும் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக இருக்கிறது. போதுமான அளவு உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அதனை, தோல் வியாதிகள், நிறமேற்றம் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்மூலக்கூறு சேதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானது ஆகும். மேலும், ஒரு கச்சிதமான பளபளப்பான, ஆரோக்கியமான மற்றும் மாசு மருவற்ற சருமத்தை யார் தான் வேண்டாம் எனக் கூறுவார்கள்? தோல் நிறமேற்றத்தைக் குறைக்க தேங்காய் தண்ணீரைப் பயன்படுத்த இயலும் என ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. தேங்காய் தண்ணீர், ஒரு பயன்மிகுந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியான வைட்டமின் சி -யை செறிவாகக் கொண்டிருக்கிறது. 

ஆய்வுகள், தேங்காய் தண்ணீரில் இருக்கின்ற வைட்டமின் சி -யை, நிறமேற்றத்தைத் தடுப்பதில் மற்றும் யு.வி கதிர்கள் படுவதால் ஏற்படும் சரும முதிர்ச்சி, சருமத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் நோய்த்தொற்று ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்த இயலும் எனத் தெரிவிக்கின்றன.

மற்றொரு ஆய்வு தேங்காய் தண்ணீர், பொதுவான நுண்ணுயிர் நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கக் கூடிய, எண்ணற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளால் நிரம்பி இருக்கிறது என்று சுட்டிக் காட்டியது.

முடிக்கான தேங்காய் தண்ணீரின் நன்மைகள் - Coconut water benefits for hair in Tamil

தேங்காய் தண்ணீர், முடிகளுக்கான பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை செறிவாகக் கொண்டிருப்பதால் அது, முடி இழப்பு மற்றும் இளநரை ஆகியவற்றைத் தடுக்கிறது. முடிக்கு தேங்காய் தண்ணீரைத் தடவுவது, முடிக்கு ஊட்டமளித்து பொலிவை வழங்குகிறது என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், தேங்காய் தண்ணீரில் காணப்படும் கேப்ரிலிக் அமிலம், பொடுகு ஏற்படுவதைத் தடுப்பதில் உதவிகரமாக இருக்கக் கூடிய பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது, எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது.

தேங்காய் தண்ணீர் உயர் கொழுப்புக்கு நன்மை அளிக்கிறது - Coconut water is good for high cholesterol in Tamil

இரத்தத்தில் உயர் கொழுப்பு என்பது, இரத்தத்தில் இருக்கக் கூடிய அதிகப்படியான கொழுப்பின் மூலம் குறிப்பிடப்படுகிற ஒரு பிரச்சினை ஆகும். அது, இதய நோய்கள், பக்க வாதம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். ஆய்வுகள், தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள கொழுப்பு அளவுகளைக் குறைக்க உதவுகிறது என்று தெரிவிக்கின்றன. தேங்காய் தண்ணீரில் இருக்கின்ற கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் எல்-ஆர்ஜினைன் போன்ற மூலப்பொருட்கள், கொழுப்பு அளவுகள் மீது ஒரு சாதகமான விளைவைக் கொண்டிருக்கின்றன.

ஒரு முன் மருத்துவ ஆய்வு, தேங்காய் தண்ணீர், மொத்த கொழுப்பின் அளவுகள் (டி.சி), கெட்ட கொழுப்பின்  அளவுகள் ஆகியவற்றைக் குறைக்க மற்றும் நல்ல கொழுப்பு அளவை (எச்.டி எல்) அதிகரிக்க உதவுவதை வெளிப்படுத்தியது.

(மேலும் படிக்க: உயர் கொழுப்பு சிகிச்சை)

நீரிழிவுக்காக தேங்காய் தண்ணீர் - Coconut water for diabetes in Tamil

நீரிழிவு என்பது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த, உடலினால் இயலாத ஒரு நிலையினால் ஏற்படும், நீடித்த சர்க்கரை மிகை (இரத்தத்தில் உள்ள சர்க்கரைகள் அதிகரித்த ஒரு நிலை) என்ற ஒரு பிரச்சினையினைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. பல்வேறு ஆய்வுகள், தேங்காய் தண்ணீரின் சர்க்கரைக் குறைப்புத் திறனைப் பற்றி தெரிவிக்கின்றன. விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தேங்காய் தண்ணீர், இரத்த சர்க்கரை மற்றும், ஒரு நபரின் சராசரி இரத்த சர்க்கரை அளவின் அளவையான கிளைக்கோஸைலேட்டட் ஹீமோகுளோபின், ஆகியவற்றைக் குறைக்க உதவியதை வெளிப்படுத்தியது.

(மேலும் படிக்க: நீரிழிவு சிகிச்சை)

பற்சிதைவுகளுக்கு எதிரான தேங்காய் தண்ணீரின் நன்மைகள் - Coconut water benefits in dental caries in Tamil

பல் சொத்தை எனவும் அறியப்படும் பற்சிதைவுகள் முக்கியமாக, எஸ்.மியூட்டன்ஸ் என அழைக்கப்படும் ஒரு வகை நுண்ணுயிரியினால் ஏற்படுகிறது. ஆய்வுகள் தேங்காய் தண்ணீர், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. வழக்கமாக இந்தப் பண்புகள், தேங்காய் தண்ணீரில் இருக்கின்ற லாரிக் அமிலத்துடன் இணைந்து இருக்கிறது.

தேங்காய் தண்ணீரின் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவானது, வாய் புண்கள் போன்ற குறிப்பிட்ட வாய் பிரச்சினைகளைத் தடுப்பதில் உதவக் கூடியது ஆகும். ஆய்வுகள், தேங்காய் தண்ணீரில் இருக்கின்ற ஒற்றை செறிவு சர்கோஸ்  மற்றும் கிளைக்கோலிப்பிட் ஆகியவை, எஸ்.மியூட்டன்ஸ் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம், பற்சிதைவுகள் ஏற்படுவதைத் தடுக்கின்றன எனத் தெரிவிக்கின்றன.

தேங்காய் தண்ணீர் கொழுப்புகள் அற்றது, ஆனால்  மகிழ்ச்சி அற்றது அல்ல. அது, உடலைக் கச்சிதமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு மந்திர மருந்து என நம்பப்படுகிறது. இருந்தாலும், எந்த ஒன்றையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது கெடுதலானது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் தண்ணீர் ஏராளமான ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அது கெட்ட விளைவுகளையும் மற்றும் குறைகளையும் கொண்டிருக்கிறது.

 • ஹைப்பர்கலீமியா ஏற்படக் காரணமாகக் கூடும் 
  உயர் பொட்டாசியம் அளவுகள், ஹைப்பர்கலீமியா எனப்படும் ஒரு பிரச்சினை ஏற்படக் காரணமாகக் கூடும். ஆரோக்கியமாக இயங்குகின்ற இதயம் மற்றும் தசைகளுக்கு, உடலில் பொட்டாசியம் அளவின் சரியான சமநிலையைப் பராமரிப்பது அவசியமாகிறது. அளவுக்கு அதிகமாகத் தேங்காய் தண்ணீர் எடுத்துக் கொள்வது, இதயத்தின் துடிப்பில் மிகவும் அபாயகரமான மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களுக்கு வழிவகுக்கின்ற வகையில், பொட்டாசியம் அளவுகளில் ஒரு பெரிய அதிகரிப்புக்கு காரணமாகக் கூடும். ஒருவேளை இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால், அது மரணத்துக்குக் கூட வழிவகுக்கக் கூடும்.
 • இரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடும்
  ஒரு அழுத்தக் குறைப்பு காரணியான  ( இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது) தேங்காய் தண்ணீர், உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இருந்தாலும், ஏற்கனவே குறை இரத்த அழுத்த பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தேங்காய் தண்ணீர் மேலும் இரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம் என்பதால், அவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். (மேலும் படிக்க: குறை இரத்த அழுத்த சிகிச்சை)

தேங்காய் தண்ணீர், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு இயற்கையான, மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் ஆகும். அது, உடற்பயிற்சிக்குப் பின்னர் உடலுக்கு மறு நீர்ச்சத்து அளிக்க உதவுகிறது, அது சருமம் மற்றும் முடிகளைப் பாதுகாக்கிறது, அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பற்சிதைவுகள் ஏற்படாமல் தடுக்கிறது, அது, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவக் கூடியது மற்றும் நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் கூட உதவுகிறது. இருப்பினும், தேங்காய் தண்ணீரில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம், சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால் மிகவும் ஆபத்தானது எனக் கருதப்படுகிற ஹைப்பர்கலீமியா எனப்படும் ஒரு பிரச்சினைக்கு வழிவகுக்கக் கூடும். தேங்காய் தண்ணீரில் உள்ள அனைத்து ஆரோக்கியமளிக்கும் நன்மைகளால், தேங்காய் தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் ஊட்டச்சத்து பானங்களுக்கு, உறுதியாக ஒரு சிறந்த மாற்றாக இருக்கிறது.


उत्पाद या दवाइयाँ जिनमें Coconut Water है

மேற்கோள்கள்

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Full Report (All Nutrients): 45222490, PURE COCONUT WATER, UPC: 898999000695. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. Saat M, Singh R, Sirisinghe RG, Nawawi M. Rehydration after exercise with fresh young coconut water, carbohydrate-electrolyte beverage and plain water. J Physiol Anthropol Appl Human Sci. 2002 Mar;21(2):93-104. PMID: 12056182
 3. Bhagya D, Prema L, Rajamohan T. Therapeutic effects of tender coconut water on oxidative stress in fructose fed insulin resistant hypertensive rats. Asian Pac J Trop Med. 2012 Apr;5(4):270-6. PMID: 22449517
 4. Gandhi M, Aggarwal M, Puri S, Singla SK. Prophylactic effect of coconut water (Cocos nucifera L.) on ethylene glycol induced nephrocalcinosis in male wistar rat. Int Braz J Urol. 2013 Jan-Feb;39(1):108-17. PMID: 23489503
 5. Pumori Saokar Telang. Vitamin C in dermatology. Indian Dermatol Online J. 2013 Apr-Jun; 4(2): 143–146. PMID: 23741676
 6. DebMandal M, Mandal S. Coconut (Cocos nucifera L.: Arecaceae): in health promotion and disease prevention. Asian Pac J Trop Med. 2011 Mar;4(3):241-7. PMID: 21771462
 7. Sandhya VG, Rajamohan T. Comparative evaluation of the hypolipidemic effects of coconut water and lovastatin in rats fed fat-cholesterol enriched diet. Food Chem Toxicol. 2008 Dec;46(12):3586-92. PMID: 18809454
 8. Pinto IF et al. Study of Antiglycation, Hypoglycemic, and Nephroprotective Activities of the Green Dwarf Variety Coconut Water (Cocos nucifera L.) in Alloxan-Induced Diabetic Rats. J Med Food. 2015 Jul;18(7):802-9. PMID: 25651375
 9. J. N. Rukmini et al. Antibacterial Efficacy of Tender Coconut Water (Cocos nucifera L) on Streptococcus mutans: An In-Vitro Study. J Int Soc Prev Community Dent. 2017 Mar-Apr; 7(2): 130–134. PMID: 28462183