அவற்றின் தனித்துவமான சுவைக்காகவும் மற்றும் விசித்திரமான நிறத் தோற்றத்துக்கும் புகழப்படுகின்ற பிஸ்தாக்கள், உலகின் பழமையான பருப்பு வகைகளில் ஒன்றாக இருக்கின்றன. முந்திரி குடும்பத்தை சார்ந்த ஒரு உறுப்பினரான பிஸ்தா மரம், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய ஒரு சிறிய மரம் ஆகும். மத்திய கிழக்கு நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக பிஸ்தாக்கள் வளர்க்கப்படுவதாக நம்பப்படுகிறது.  பிஸ்தாக்களின் வளமான வரலாற்றை எடுத்துக் காட்டும் விதமாக, ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட உணவாக பிஸ்தாக்களைப் பற்றிய குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் காணப்படுகின்றன. 

தொல்பொருள் ஆய்வுகள், பிஸ்தா பருப்புகள் கி.மு 6750 ஆம் ஆண்டுகளிலேயே ஒரு பொதுவான உணவாக இருந்ததை வெளிப்படுத்துகின்றன. அது, இத்தாலி மற்றும் ஹிஸ்பானியா நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் வரை, சிரியாவுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மையுடையதாக இருந்தது. தொல்லியல் ஆய்வாளர்கள், அட்லாண்டிக் பகுதிகளில் பிஸ்தாக்களின் நுகர்வை சுட்டிக் காட்டுகின்ற ஆதாரங்களை, ஈராக்கின் வடகிழக்குப் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் இருந்து கண்டறிந்து இருக்கிறார்கள். நவீன பிஸ்தாவானது, சமீபத்திய உதாரணமாக உஸ்பெகிஸ்தான் இருக்கின்ற வேளையில், முதன் முதலில் பயிரிடப்பட்டது மத்திய ஆசியாவில் வெண்கல காலமாக இருக்கிறது. தற்போது, 1854 ஆம் ஆண்டு பிஸ்தாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளான, ஆஸ்திரேலியாவுடன் கூடவே, அமெரிக்காவில் புது மெக்சிகோ, மற்றும் கலிபோர்னியா மாகாணங்கள் போன்ற பகுதிகளில் வியாபார நோக்கில் பயிரிடப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் ஈரான் இரண்டு நாடுகளும் இணைந்து, உலகத்தின் மொத்த பிஸ்தா உற்பத்தியில் 76% அளவுக்கான பங்களிப்பை அளித்து, உலகின் மிகப்பெரிய பிஸ்தா உற்பத்தியாளர்களாக இருந்தனர்

ஒரு சுவையான நொறுக்குத் தீனியாக இருப்பதற்கும் மேலாக, அவற்றின் கவர்ச்சி என்பது, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உயிர்வளியேற்ற எதிர்ப்பிகள் மற்றும் ஆரோக்கியமான புரதங்கள் ஆகியவையே ஆகும். அவை இதயம் மற்றும் மூளைக்கான ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது, மேலும் பிஸ்தாக்களில் இருக்கின்ற நார்ச்சத்துக்கள், உடல் எடைக்குறைப்பில் உதவக் கூடியவை ஆகும். 

பிஸ்தாக்கள் ஒரு நொறுக்குத் தீனியாக தனியாக, பச்சையாகவோ, வறுக்கப்பட்டோ அல்லது உப்பு தூவியோ, ஒரு காய்கறி கூட்டின் மேல்பகுதியில், உலர் பழங்களுடன் கலந்து, பேக்கரி உணவுகளில், அல்லது, மீன் அல்லது இறைச்சியின் மீது ஒரு மொறுமொறுப்பான பூச்சாக சாப்பிடக் கூடியவை ஆகும். இவற்றுடன் கூடவே பிஸ்தாக்கள், பிஸ்தா ஐஸ் க்ரீம், குல்ஃபி, பக்லவா, பிஸ்தா வெண்ணெய், அல்வா மற்றும் சாக்லேட் கூட தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பிஸ்தாக்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

  • தாவரவியல் பெயர்: பிஸ்தாசியா வேர
  • குடும்பப் பெயர்: முந்திரி குடும்பம் (அனகார்டியாசியயி).
  • பொதுவான பெயர்கள்: பிஸ்தா, பிஸ்தா
  • பயன்படும் பாகங்கள்: உண்மையில் நாம் சாப்பிடுபவை மற்றும் பயன்படுத்துபவை, பிஸ்தா பழத்தின் விதைகள் ஆகும்.
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஈரான், துருக்கி, சீனா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், மற்றும் சிரியா
  • சுவாரஸ்யமூட்டும் உண்மை: கி.மு. 700 ஆம் ஆண்டு காலத்தின் பொழுது பாபிலோனின் தொங்கும் தோட்டங்கள், பிஸ்தா மரங்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு இருக்கிறது.
  1. பிஸ்தாவின் ஊட்டச்சத்து விவரங்கள் - Pistachio nutrition facts in Tamil
  2. பிஸ்தாவின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Pistachio health benefits in Tamil
  3. பிஸ்தா வின் பக்க விளைவுகள் - Pistachios side effects in Tamil
  4. முக்கிய குறிப்புகள் - Takeaway in Tamil

மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே பிஸ்தாக்கள் நல்வாழ்வு, மற்றும் சிறப்பான ஆரோக்கியம் ஆகியவற்றின் அறிகுறியாக, மற்றும் மிகவும் நேசத்துக்கு உரியதாகக் கருதப்பட்டு வருகின்றன. பிஸ்தா பருப்புகள், சிறப்பான ஆரோக்கியத்துக்கு அவசியமான எண்ணற்ற ஆரோக்கியம் அளிக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. பிஸ்தாக்கள், வைட்டமின்- E, ஆற்றல், கெரோட்டின் மற்றும் அதிகமான B -காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பு தாவரம்சார் வேதியியல் பொருட்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரங்கள் ஆகும். மேலும் அவை, தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களையும் செறிவாகக் கொண்டிருக்கின்றன.

USDA தரவுதளத்தின் படி, 100 கி பிஸ்தாக்கள் பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன:

ஊட்டச்சத்துக்கள்

100 கிராமில் உள்ள அளவு

ஆற்றல்

560 கலோரிகள்

தண்ணீர்

4.37 கி

கார்போஹைட்ரேட்

27.17 கி

புரதம்

20.16 கி

கொழுப்பு

45.32 கி

உணவுசார் நார்ச்சத்து

10.6 கி

சர்க்கரை

7.66 கி

தாதுக்கள்

 

கால்சியம்

105 மி.கி

இரும்புச்சத்து

3.92 மி.கி

மெக்னீஷியம்

121 மி.கி

பாஸ்பரஸ்

490 மி.கி

பொட்டாசியம்

1025 மி.கி

துத்தநாகம்

2.20 மி.கி

தாமிரம்

1.30 மி.கி

மாங்கனீஸ்

1.2 மி.கி

வைட்டமின்

 

வைட்டமின் B9

51 µ.கி

வைட்டமின் B3

1.3 மி.கி

வைட்டமின் B2

0.16 மி.கி

வைட்டமின் B1

0.87 மி.கி

 வைட்டமின் A

26 µ.கி

வைட்டமின் B-6

1.7 மி.கி

வைட்டமின் E

2.86 மி.கி

கொழுப்புகள்/கொழுப்பு அமிலங்கள்

 

செறிவுற்றவை

5.907 கி

ஒற்றை செறிவற்றவை    

23.257 கி

பன்மை செறிவற்றவை    

14.380 கி

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long time capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

பிஸ்தாக்கள், உங்கள் உணவுமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான பருப்பு வகைகளில் ஒன்று ஆகும். அவை அதிகமான ஆற்றல், செறிவான நார்ச்சத்து மற்றும், ஆரோக்கியம் மற்றும் இளமையைப் பராமரிப்பதில் திறன் மிக்கவையான ஆரோக்கியமான கொழுப்புகளையும் நல்ல அளவில் கொண்டிருக்கின்றன. பிஸ்தாவின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளில் சிலவற்றை நாம் இப்பொழுது காணலாம்.

  • கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது: அனைத்துப் பருப்பு வகைகளின் மத்தியில் பிஸ்தாக்கள் மிகவும் குறைவான அளவுகளில் கொழுப்பைக் கொண்டிருக்கின்றன, மேலும் அந்தக் கொழுப்பானது செறிவுறாத கொழுப்பு அமிலங்களின் வடிவத்தில் இருக்கின்றன. பிஸ்தா உட்கொள்வது கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவுகிறது. அதன் விளைவாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: பிஸ்தாக்களின் பச்சை மற்றும் ஊதா நிற பருப்புகள், அறிவாற்றலை (சிந்தித்தல் மற்றும் புரிந்து கொள்ளுதல்) மேம்படுத்துவதில் மிகவும் திறனுள்ள லுடெயின், மற்றும் அந்தோசியானின்கள் போன்ற நிறமிகளைக் கொண்டிருக்கின்றன.
  • எடையைக் குறைக்க உதவுகிறது: பிஸ்தாக்கள் மற்றும் பருப்புகள், பொதுவில் வழக்கமாக கொழுப்பை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், அவை உங்களை நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பி இருப்பது போன்று உணர வைக்கும் உணவுசார் நார்ச்சத்துக்களைப் போதுமான அளவிலும், ஆரோக்கியமான கொழுப்புகளையும் கொண்டிருக்கின்றன.
  • நீரிழிவு-எதிர்ப்பு: பிஸ்தா, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட, மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ள நபர்களுக்கு, ஒரு மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பது மருத்துவரீதியான ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதல், மற்றும் உணவுக்கு முந்தைய இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைப்பதன் மூலமாக, நீரிழிவை சமாளிக்க உதவுகிறது.
  • சருமத்துக்கான நன்மைகள்: பிஸ்தா, முதுமைக்கான அறிகுறிகள் தோன்றுவதைத் தாமதிக்க உதவுவது மட்டும் அல்லாமல், கூடவே சருமத்தின் மீதான UV கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைக்கின்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களின் செறிவான ஒரு ஆதாரம் ஆகும். பிஸ்தா எண்ணெய், சருமத்தின் மீது ஈரப்பதமளிக்கும் ஒரு விளைவைக் கொண்டிருப்பதன் மூலம், அதனை மிருதுவாக மற்றும் மென்மையாக வைத்திருக்கிறது.

கொழுப்பு அளவுகளுக்காக பிஸ்தா - Pistachio for cholesterol in Tamil

USDA  ஊட்டச்சத்து அட்டவணையின் படி, ஒரு கோப்பை நிறைய பிஸ்தாக்கள் (தோராயமாக 28 கிராம்கள்), 13 கிராம் கொழுப்பை மட்டுமே அளிக்கிறது - அது அனைத்து பருப்புகளும் அளிக்கின்ற கொழுப்புகளில் குறைவான அளவுகளில் ஒன்றாகும். அந்த 13 கிராம் கொழுப்புகளில், 11 கிராம்கள் ஆரோக்கியமான ஒற்றை செறிவுறாத கொழுப்புகளாக அல்லது பன்மை செறிவுறாத கொழுப்புகளாகவும், 2 கிராம்கள் மட்டுமே செறிவுற்ற கொழுப்புகளாகவும் இருக்கின்றன. பிஸ்தா, ஒரு இதய-ஆரோக்கிய கொழுப்பு அமிலத் தொகுதியையும், அதே போன்று புரதச்சத்து, உணவுசார் நார்ச்சத்து, மெக்னீஷியம், வைட்டமின் K, பொட்டாசியம், γ-டோக்கோபெரால், மற்றும் ஒரு சில தாவரம்சார் வேதிப்பொருட்களையும் கொண்டிருக்கின்ற ஒரு ஊட்டச்சத்து செறிந்த பருப்பு ஆகும்.

பிஸ்தாக்கள் இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் இரத்தக் கொழுப்புத் தொகுதிகளைக் கொண்டிருப்பதனை ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. பிஸ்தாக்களை உட்கொள்வது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை (LDL) குறைக்க, மற்றும் நல்ல கொழுப்புக்களை (HDL) அதிகரிக்க உதவுகிறது.

சுவாரஸ்யமூட்டும் விதமாக, HDL உட்பொருட்கள் இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதோடு நேரடியாகத் தொடர்புடையவையாக இருக்கின்றன..

(மேலும் படிக்க: உயர் கொழுப்புஅறிகுறிகள்)

ஆரோக்கியமான மூளைக்காக பிஸ்தா - Pistachio for healthy brain in Tamil

பிஸ்தா ஊட்டச்சத்துக்களின் ஒரு களஞ்சியம் ஆகும். மேலே குறிப்பிடப்பட்டவாறு, பிஸ்தா இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற ஒன்றாகும். இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் ஒரு உணவுக்கும், ஒரு ஆரோக்கியமான மூளைக்கும் இடையே ஒரு வலிமையான தொடர்பு இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஒரு ஆரோக்கியமான இதயம், சரியான ஊட்டச்சத்துக்களையும் மற்றும் ஆக்சிஜனையும் மூளைக்கு செலுத்தும்.

அந்த உணவுகள் அறிவாற்றலுக்கான நன்மைகளையும் கூட கொண்டிருக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிஸ்தாவின் தனித்துவமான பச்சை மற்றும் ஊதா பருப்பு வண்ணம், அதன் லுடெய்ன் மற்றும் அந்தோசியானின் மூலப்பொருட்களின் ஒரு விளைவாக இருக்கிறது.

லுடெய்ன் நினைவாற்றல் செயல்பாட்டினை அதிகரிப்பதற்காக அறியப்படுகிறது.

எடைக்குறைப்புக்காக பிஸ்தா - Pistachio for weight loss in Tamil

பருப்புகள் ஆற்றல் நிறைந்த உணவுகள் ஆகும். அவை கொழுப்புகளை அதிக அளவில் கொண்டிருக்கின்றன.  எடை அதிகரிப்பது, பருப்புகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதில் உள்ள முக்கியமான கவலைகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. பிஸ்தாவின் மொறுமொறுப்பான சுவை அதனை மெல்வதற்கு எளிதானதாக ஆக்குகிறது. ஆனால் அதை உட்கொள்பவர்கள், தங்களது உடல் எடையினை கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

USDA -வின் படி, ஒரு கோப்பை பிஸ்தாக்கள் 170 கலோரிகளை அளிக்கிறது. இருப்பினும், இன்றைய தேதிக்கு, பருப்பு அல்லது பிஸ்தா உட்கொள்வது, மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் இடையே உள்ள எந்த ஒரு தொடர்பையும் வெளிப்படுத்துகின்ற ஆய்வுகள் எதுவும் இல்லை. மாறாக, வழக்கமான உணவுமுறையில் பருப்புகளை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதாகத் தற்போது கருதப்படுகிறது. ஆராய்ச்சிகள், பிஸ்தாக்களின் ஆற்றல் அடர்த்தி: அவற்றின் நார்ச்சத்து, புரதச்சத்து, மற்றும் செறிவுறாத கொழுப்பு அமிலங்கள்; மற்றும் அவற்றின் மொறுமொறுப்பு தன்மை ஆகியன, தெவிட்டிப் போகும் நிலையினை ஏற்படுத்தி, அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தடுக்கக் கூடும்.

(மேலும் படிக்க: உடல் பருமன் சிகிச்சை)

இதய ஆரோக்கியத்துக்காக பிஸ்தாக்கள் - Pistachios for heart health in Tamil

பிஸ்தாக்களை உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான உணவு, பல்வேறு இதயநாள நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் நன்மைகரமாக இருக்கின்ற வகையில், கெட்ட கொழுப்புகளின் (LDL) அளவுகளைக் குறைப்பதில், மற்றும் நல்ல கொழுப்புகளின் (HDL) அளவுகளை அதிகரிப்பதில் பங்கு வகிக்கிறது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஊட்டசத்து அறிவியலாளர்களின் ஒரு குழுவின் கருத்துப் படி, பிஸ்தா, லுடெயின், பீட்டா-கெரோட்டின், மற்றும் காமா-டோகோபெரோல் உள்ளிட்ட ஏராளமான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களைக் கொண்டிருக்கிறது. பீட்டா-கெரோட்டின் வைட்டமின் A -வின் ஒரு முன்னோடியாகும், மற்றும் காமா-டோகோபெரோல், வைட்டமின் E -யின் ஒரு வடிவம் ஆகும். ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக பிஸ்தா பருப்புகளை உட்கொள்வது, இரத்தத் தமனிகளில் கொழுப்பு படிமானங்கள், மற்றும் தமனித்தடிப்பு ஏற்பட காரணமாக இருக்கின்ற,LDL உயிர்வளியேற்றத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்ற இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களின் அளவை அதிகரிக்கக் கூடியது ஆகும். 

நீரிழிவுக்காக பிஸ்தா - Pistachio for diabetes in Tamil

நீரழிவு என்பது, ஒரு நபரின் வாழ்க்கைமுறை, உணவு தேர்வுகள் மற்றும் மரபணு அமைப்பு உள்ளிட்ட, பல்வேறு உடலியல் மற்றும் உளவியல் காரணிகளின் காரணமாக ஏற்படுகின்ற ஒரு பலவீனப்படுத்தும் கோளாறு ஆகும். கண்டறியாமல் விடப்பட்டால், அது சிறுநீரக சேதம், மற்றும் பார்வை இழப்பு உள்ளிட்ட மற்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடியது ஆகும்.  எனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், மற்றும் சிகிச்சை அளித்தல் நீரிழிவு நோயை சமாளிக்க மிகவும் முக்கியமானவை ஆகும். நீரிழிவுக்கு சிகிச்சைஅளிக்கப் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எல்லா மருந்துகளையும் போன்று, அவையும் அவற்றுக்கு சொந்தமான பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. அதனால், நவீன மருத்துவம், இயற்கையான, மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறைகளுக்கு விரைவாக மாறிக் கொண்டு இருக்கிறது.

பிஸ்தாக்கள், அவற்றின் நீரிழிவு எதிர்ப்பு திறனுக்கான பலவித உணவு ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

ஒரு மருத்துவ ஆய்வு, பிஸ்தாக்களைத் தொடர்ந்து உட்கொள்வது, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைப்பதில் பயன்மிக்கதாக இருக்கிறது என்று தெரிவிக்கிறது.

அமெரிக்க நீரிழிவு நோயாளிகள் சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில், பிஸ்தாக்கள் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு (உயர் இரத்த சர்க்கரை அளவுகளைக் கொண்டவர்கள்), ஒரு மிகச் சிறந்த உணவுசார் பிற்சேர்க்கை பொருளாக இருக்கின்றன. பிஸ்தாக்களைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, ஒரு அதிகரித்த இன்சுலின் உணர்திறன், மற்றும் சாப்பாட்டுக்கு முந்தைய இரத்த சர்க்கரை அளவுகள் குறைந்த ஒரு நிலை, ஆகியவற்றோடு தொடர்புடையதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிஸ்தாக்கள் - Pistachios boost immunity in Tamil

பிஸ்தா, பல்வேறு வைட்டமின்களின் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அவற்றில் உள்ள வைட்டமின் B6, உடலுக்காக ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்க, மிகவும் அத்தியாவசியமானதாகும். பல்வேறு முன் மருத்துவ, மற்றும் மருத்துவ ஆய்வுகள், வைட்டமின் B6, ஒரு வலிமையான நோய் எதிர்ப்பு செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானவையான, உடலில் உள்ள எதிர்மங்கள் மற்றும் லிம்போசைட்டுகளின் (ஒரு வகை இரத்த வெள்ளை அணு) பெருக்கத்தை அதிகரிக்கின்றது என்று தெரிவிக்கின்றன. கூடுதலாக, அது முறையான இரத்தத்தையும், மற்றும் உடல் முழுவதும் முறையான இரத்த ஓட்டத்தையம் உறுதி செய்கிறது. ஒரு சிறப்பான இரத்த ஓட்டம், காயம்பட்ட, அல்லது நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்திற்கு எதிர்மங்கள் செல்லும் செயல்பாட்டினை எளிதாக்குகிறது. 

இருப்பினும், பிஸ்தாவின் நோய் எதிர்ப்பினைத் தூண்டும் (நோய் எதிர்ப்பு அமைப்பினைத் தூண்டுகிறது) விளைவுகள் மீதான நேரடியான ஆய்வுகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

பிஸ்தா அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது - Pistachio has anti-inflammatory properties in Tamil

பிஸ்தாக்கள், வைட்டமின் A மற்றும் வைட்டமின் E ஆகியவற்றை செறிவாகக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு வைட்டமின்களும், திறன்மிக்க அழற்சி எதிர்ப்பு பண்புகளோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. அவை, சருமம் மற்றும் உணவுக்குழாயின் செல் சவ்வுகளின் ஒருங்கிணைப்பைப் பராமரிக்க உதவுவதன் மூலம், அழற்சியைக் குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் அவை, அழற்சி ஏற்படுவதற்கான வழக்கமான காரணங்களில் ஒன்றான, தீங்கு விளைவிக்கும் உயிர்வளியேற்ற- மூலக்கூறு சேதாரக் கூறுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் செய்கின்றன.

ஒரு ஆய்வு, பிஸ்தாக்களில் இருக்கும் ஒலியோரெசின், இரைப்பைக்கு எந்த ஒரு சேதத்தையும் ஏற்படுத்தாமல், எலிகளுக்கு எதிரான ஒரு வலிமையான அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டினைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

சரும ஆரோக்கியம் மற்றும் முதுமை எதிர்ப்புக்காக பிஸ்தாக்கள் - Pistachios for skin health and anti ageing in Tamil

புற ஊதா (UV) கதிர்கள் படுகின்ற வேளையில் உருவாகின்ற எதிர்விளைவு உயிர்வளியேற்ற இனங்கள் (ROS), சரும சேதம் மற்றும் மூப்புக்குக் காரணமாகக் கூடும். உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் ROS -க்கு எதிரான சிறப்பான எதிர்வினையூக்கிகள் ஆகும். உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள், உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளை நீக்குவதன் மூலமாக, சருமத்துக்கு ஏற்படுகின்ற உயிர்வளியேற்ற சேதத்தில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றன.

பிஸ்தாவிலுள்ள உயிரி செயல்கூறுகளைப் பயன்படுத்தி, ஒரு 3-பரிமாண (3D) மனித தோலுக்கு நிகரான (HSE) திசு மாதிரியின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் முடிவுகள், பிஸ்தாவில் உள்ள லுடெயின் மற்றும் γ-டோக்கோபெரால் போன்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள், ஒட்டுமொத்த தடிமன் மற்றும் ஒருங்கிணைப்பைப் பாதுகாப்பதன் மூலம், UVA வின் காரணமாக ஏற்படுகின்ற சேதத்தில் இருந்து HSE -யைப் பாதுகாக்கும் திறன் உடையவை என்பதை வெளிப்படுத்தின.

பிஸ்தாக்களில் இருக்கின்ற வைட்டமின் E, சருமத்தின் மூப்படையும் செயல்பாட்டை எதிர்த்துப் போராடவும், மற்றும் சருமத்துக்கு ஒரு இளமையான தோற்றத்தை அளிக்கவும் உதவுகிறது.

பிஸ்தா எண்ணெய் எமோலியென்ட் பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதாவது அது ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு, சருமத்தை மென்மையாக, மிருதுவாக மற்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. மேலும் அது ஒரு மருத்துவ மசாஜ் எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முடிகளுக்கான பிஸ்தாவின் நன்மைகள் - Pistachios benefits for hair in Tamil

பிஸ்தாக்களில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள், வலிமையான மற்றும் ஆரோக்கியமான நீண்ட முடிகளின் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றன. முடி உதிர்வுக்கான முக்கியமான காரணி பயோட்டின் பற்றாக்குறை ஆகும். பிஸ்தாக்கள் பயோட்டினின் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கின்றன மற்றும் அவற்றை நமது தினசரி உணவுமுறையில் சேர்த்துக் கொள்வது, முடி உதிர்வை நிறுத்தக் கூடும்.

பிஸ்தாக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு முடி கவசமானது, சொறசொறப்பான முடி, பிளந்த நுனிகள், வறண்ட, மற்றும் நிறம் பாதிக்கப்பட்ட முடி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருப்பதை நிரூபிக்கிறது. இந்த கவசம் முடிகளுக்கு ஆழமாக ஊட்டமளித்து, நெகிழ்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் இது முடிகள் மற்றும் உச்சந்தலைக்கு ஈரப்பதம் அளிக்கிறது.

கருவிழி சிதைவுக்காக பிஸ்தாக்கள் - Pistachios for macular degeneration in Tamil

கருவிழி சிதைவு என்பது ஒரு முதுமை தொடர்பான கண் நோய் ஆகும். அது பெரியவர்களுக்கு படிப்படியாக பார்வைத்திறனை குறைத்துக் கொண்டே வருகிறது, மற்றும் படிப்பது மற்றும் வேலை செய்வதில் சிரமம் ஏற்படக் காரணமாகிறது. கருவிழி சிதைவின் முதன்மையான பங்களிக்கும் கூறுகளாக, உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள் இருக்கின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரண்டு கேரோடினாய்டுகள், லுடெயின் மற்றும் ஜியாக்ஸ்ன்தின் ஆகியவை விழித்திரையின் மிகவும் முக்கியமான அம்சங்கள், மற்றும் நமது பார்வைத்திறனின் முக்கியமான பகுதிக்குப் பொறுப்பானவை ஆகும். அவை, முதுமை தொடர்பான கருவிழி சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில், மற்றும் அதன் அதிகரிப்பதை தாமதிப்பதிலும் கூட, ஒரு முக்கியமான பங்கு வகிப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

கீரைகள் மற்றும் பசலைக்கீரை போன்ற அடர் பச்சை நிற இலை காய்கறிகளில் காணப்படுகின்ற லுடெயின் மற்றும் ஜியாக்ஸ்ன்தின் ஆகியவை பிஸ்தாக்களிலும் காணப்படுகின்றன. உங்கள் உணவுமுறையில் மாற்றம் செய்து இந்த உணவுகளை உங்கள் உணவுமுறைக்குள் சேர்த்துக் கொள்வது, கருவிழி சிதைவை நிறுத்தவும், மற்றும் நல்ல கண் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் உதவக் கூடும் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

  • ஒவ்வாமை: ஒருவருக்கு பிஸ்தா மீதான ஒவ்வாமை உள்ளது என்றால், அது அவர்கள் வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் வெளிப்படையாகத் தெரிய வந்து, அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. அரிப்புகள், வாந்தி, இருமல், இரைப்பை பிரச்சினைகள், மற்றும் தோல் அரிப்பு ஆகியவை பிஸ்தா ஒவ்வாமையின் மிகவும் வழக்கமான அறிகுறிகள் ஆகும். மற்ற அறிகுறிகளில் தும்மல், இருமல், கண்களில் நீர் வடிதல் மற்றும் அரிப்பு ஆகியவை அடங்கும். பிஸ்தா பருப்பு மீதான ஒவ்வாமையைக் கொண்ட சிலருக்கு, மற்ற மர பருப்புகளின் மீதும் ஒரு அதீத உணர்திறன் உண்டாகிறது.
  • எடை அதிகரிப்பு: பிஸ்தா பொறுப்புகளில் உள்ள அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து மூலக்கூறுகள், அவற்றை ஒரு வசதியான மற்றும் பிரபலமான நொறுக்குத் தீனியாக ஆக்குகின்றன. இருந்தாலும், எதுவுமே அளவுக்கு மீறும் பொழுது கெடுதலாகக் கூடியதாகும். ஒரு கோப்பை நிறைய பிஸ்தா பருப்புகள் 689 கலோரிகளை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
  • பூசண வகை நச்சினை உருவாக்குதல்: பூசண வகை நச்சுக்கள் என்பவை முறையாக சேமிக்கப்படாத உணவுகளில் காணப்படும் நச்சுத்தன்மை மிக்க, மற்றும் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் ஆகும். பிஸ்தா பருப்புகள் முதிர்வு நிலையில் இருந்து பூசண நச்சுக்களைத் தோற்றுவிக்கும் தன்மை உடையவை என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. பிஸ்தா பருப்புகள் இயற்கையாகவே பிளந்து கொள்வதால், பூசண வகை நச்சுகள் உருவாகக் காரணமான பூச்சிகள், மற்றும் பூசணங்கள் எளிதாக உள்ளே நுழையக் கூடிய வகையில், மோசமான பாதுகாப்பை உடையவையாக இருக்கின்றன.
  • இரைப்பை பிரச்சினைகள்: ஃபுருக்ட்டான்களுக்கு ஒவ்வாமையைக் கொண்டிருப்பவர்கள் பிஸ்தா பருப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஃபுருக்ட்டான்கள் என்பவை பல்வேறு உணவுகளில் காணப்படும் இயற்கையாக இருக்கின்ற கார்போஹைட்ரேட்கள் ஆகும். அவை ஃபுருக்ட்டான்களுக்கு ஒவ்வாமையைக் கொண்டவர்களுக்கு, வயிறு வீங்குதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அடிவயிற்று வலி ஆகியவை ஏற்படக் காரணமாகக் கூடும். அவை எளிதாகக் கிரகிக்கப்படக் கூடியவையாக இல்லாமல் இருக்கின்றன, மற்றும் முறையான பெருங்குடலின் நொதித்தல், வாயு உற்பத்தி, மற்றும் விரிதல் ஆகிய செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன.
  • சிறுநீரகக் கல் ஆபத்து: பிஸ்தாக்கள், ஆக்சலேட்டுகள் மற்றும் மெத்தியோனின்களை ஒரு கணிசமான அளவில் கொண்டிருக்கின்றன. பிஸ்தாக்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால், கால்சியம் ஆக்சலேட் மற்றும் சிஸ்டைன் சிறுநீரக கற்கள் ஏற்படுகின்ற அபாயத்துக்கு, உங்களை நீங்கள் உட்படுத்திக் கொள்ள நேரலாம்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj hair oil
₹425  ₹850  50% OFF
BUY NOW

பிஸ்தாக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் ஆரோக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாக இருப்பது உண்மை தான். பிஸ்தாக்களை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும் என்ற விஷயம் அவற்றை மேலும் பிரபலம் ஆக்குகிறது. இருப்பினும், மாம்பழங்கள் மற்றும் முந்திரிப்பருப்புகள் போன்ற முந்திரிக் குடுமபத்தை சார்ந்த மற்ற பொருட்களுக்கு ஒவ்வாமையை கொண்டிருப்பவர்கள், அல்லது அதிகமான உணர்திறனைக் கொண்டிருப்பவர்கள் என அறியப்பட்டவர்கள், பிஸ்தா பருப்புகளை உட்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அவை பல்வேறு திறன்களைக் கொண்டவை, மற்றும் சாப்பிட மிகவும் சுவையானவை ஆகும். அவற்றை உங்கள் உணவுமுறையில் சேர்த்துக் கொள்வது, உங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்த உதவும்.


Medicines / Products that contain Pistachios

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 12151, Nuts, pistachio nuts, raw. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Dreher ML. Pistachio nuts: composition and potential health benefits. Nutr Rev. 2012 Apr;70(4):234-40. PMID: 22458696
  3. Pablo Hernández-Alonso, Mònica Bulló, Jordi Salas-Salvadó. Pistachios for Health. Nutr Today. 2016 May; 51(3): 133–138. PMID: 27340302
  4. Orhan I, Küpeli E, Aslan M, Kartal M, Yesilada E. Bioassay-guided evaluation of anti-inflammatory and antinociceptive activities of pistachio, Pistacia vera L. J Ethnopharmacol. 2006 Apr 21;105(1-2):235-40. Epub 2005 Dec 6. PMID: 16337351
  5. Tomaino A et al. Antioxidant activity and phenolic profile of pistachio (Pistacia vera L., variety Bronte) seeds and skins. Biochimie. 2010 Sep;92(9):1115-22. PMID: 20388531
  6. Chen CO et al. Photoprotection by pistachio bioactives in a 3-dimensional human skin equivalent tissue model. Int J Food Sci Nutr. 2017 Sep;68(6):712-718. PMID: 28122479
  7. Chen CO et al. Photoprotection by pistachio bioactives in a 3-dimensional human skin equivalent tissue model. Int J Food Sci Nutr. 2017 Sep;68(6):712-718. PMID: 28122479
  8. Alireza Ostadrahimi et al. Aflatoxin in Raw and Salt-Roasted Nuts (Pistachios, Peanuts and Walnuts) Sold in Markets of Tabriz, Iran. Jundishapur J Microbiol. 2014 Jan; 7(1): e8674. PMID: 25147653
  9. Bernadette Capili, Joyce K. Anastasi, DrNP, FAAN, Michelle Chang. Addressing the Role of Food in Irritable Bowel Syndrome Symptom Management. J Nurse Pract. 2016 May; 12(5): 324–329. PMID: 27429601
Read on app