வைட்டமின் டி

வைட்டமின் D அல்லது சூரிய ஒளி வைட்டமின் ஒரு கொழுப்பை-கரையக்கூடிய வைட்டமின் மற்றும் சூரிய ஒளியின் வெளிப்பாடு காரணமாக உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன செல்களின் ஸ்டீராய்டு முன்னோடி. மாற்றாக, உங்கள் மீது போதுமான அளவு சூரிய ஒளி படுவது இல்லை அல்லது குறைவான சூரிய ஒளி இருக்கும் பகுதியில் வாழ்வதாக  இருந்தால், வைட்டமின் டி வழங்கிகளை எடுத்துக்கொள்ளலாம். பால் அல்லது முட்டை போன்ற உணவு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட வைட்டமின் D மட்டும் உங்கள் எலும்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக போதுமானதாக இருக்காது என்பதால் வைட்டமின் டி வழங்கிகளை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இப்போது, உங்களுக்கு போதுமான அளவு சூரிய ஒளி கிடைத்தாலும், உங்கள் உடல் அந்த சூரிய ஒளியை வைட்டமின் டி-யாக மாற்றிக்கொள்கிறது என்று எப்படி தெரியும்? இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கவும், மற்றும் இன்னும் பல முக்கியமான, கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கவும் தொடர்ந்து படிக்கவும்.

  1. சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி-யை எவ்வாறு பெறுவது? - How do I get Vitamin D from sunlight in Tamil?
  2. வைட்டமின் டி ஆதாரங்கள் - Sources of Vitamin D in Tamil
  3. வைட்டமின் டி நன்மைகள் - Vitamin D benefits in Tamil
  4. வைட்டமின் டி மருந்தளவு - Vitamin D dosage in Tamil
  5. வைட்டமின் D பக்க விளைவுகள் - Vitamin D side effects in Tamil
வைட்டமின் டி ஆதாரங்கள், நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் மற்றும் மருந்து அளவு டாக்டர்கள்

பூமத்திய ரேகைக்கு மிக நெருக்கமாக இந்தியா இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான இடங்களில் போதுமான அளவு சூரிய ஒளி இந்தியாவில் கிடைக்கிறது.  ஆனால் சருமத்திற்கு வைட்டமின் D ஐ தயாரிக்க தேவைப்படும் போதுமான சூரிய ஒளியின் அளவு பற்றிய, சில உண்மைகளை கவனமாக கவனிக்க வேண்டும்.

வைட்டமின் டி-யை பெற மிகவும் இயற்கையான வழி உங்கள் வெற்று தோலின் மீது சூரிய ஒளி படுவது ஆகும். துணியால் ஆடை அடுக்குகளால் மூடப்பட்டுள்ள தோல் மீது வைட்டமின் டி தொகுப்பைத் தயாரிப்பதற்கு போதுமான சூரிய ஒளி பட முடியாது. உங்கள் உடலினால் உறிஞ்சப்படக் கூடிய வைட்டமின் டி-ன் அளவு, எந்த நேரத்தில் சூரிய ஒளி தோலின் மீது படுகிறது, அது எவ்வளவு நேரம் படுகிறது, உங்கள் தோலின் நிறம், மற்றும் மிகவும் முக்கியமாக எந்த உடல் பகுதியின் மீது சூரிய வெளிச்சம் படுகிறது போன்ற பல்வேறு காரணிகளை பொருத்தது. கட்டைவிரல் விதிப்படி, உங்கள் முகம் மற்றும் கைகளுக்குப் பதிலாக, உங்கள் பின்புறம் போன்ற ஒரு பெரிய பகுதியை சூரியனுக்கு முன் அம்பலப்படுத்துவதால் அதிக சூரிய ஒளி உறிஞ்சப்பட்டு அதிகப்படியான வைட்டமின் சக்தி உருவாக்கப்படும். கவலைப்பட வேண்டாம், பல மணி நேரத்திற்கு சூரியனுக்கு அடியில் படுத்துக் கொண்டு, உங்கள் தோல் கருத்துப்போக தேவையில்லை. வெறும் 15 நிமிடங்கள் (அல்லது உங்கள் தோலின் நிறத்தை பொறுத்து, அதற்கு மேற்பட்ட நேரம்) மட்டும் போதும் அது சரியான காலை நேரமாக இருந்தால். சரியான நேரத்த்தை பற்றி பேசும்போது, பருவங்கள் மற்றும் இடங்களுக்கு ஏற்ப அது வேறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைட்டமின் D பற்றிய பல ஆராய்ச்சிகள், நீங்கள் இந்தியாவில் வாழ்தால், உங்கள் தோலை சூரியனுக்கு வெளிப்படுத்த சிறந்த நேரம் எல்லா மாதங்களிலும் 11 மணி முதல் 1 மணி வரை என்று கூறுகிறது. ஆனால் கோடைகால நாட்களில், யு.வி கதிர்கள் அதன் உச்சநிலையில் இருக்கும்போது, உங்கள் தோலை சேதத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் தோல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதும் அவசியம். எனவே, காலை 9 மணி முதல் 12 மணி வரை பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அந்த நேரம் பாதுகாப்பாக கருதப்படுகிறது. மேலும், பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக வாழ்ந்தால், சூரியன் பூமத்திய ரேகையில் சிறந்த கோணத்தில் இருப்பதால், இந்த வைட்டமின் டி-யை வருடத்தின் எல்லா காலத்திலும் நீங்களே எளிதாக பெறலாம்.

இந்தியாவிற்குள், வடக்கு பகுதியில் யூ.வி. கதிர்கள் மிக அதிக அளவிலும்,  வடகிழக்கு பிராந்தியத்தில் குறைந்த அளவிலும் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் விளைவாக வடகிழக்கு பிராந்தியங்களில் வைட்டமின் டி அதிகப்படியாக தயாரிக்கப்படுவதற்காக, அதிகப்படியான நேரம் தேவைப்படுகிறது. சூரிய ஒளி தோலில் படும் நேரம் உங்கள் தோலின் நிறத்தைச் சார்ந்து இருக்கும். ஃபைர்ரர் தோல் வகைகள் கருமையான தோல் வகையை விட அதிகமாக சூரிய ஒளியை உறிஞ்சுகின்றன. இருண்ட தோல் வகைகளுக்கு, 10,000 முதல் 25,000 IU வைட்டமின் D யை தயாரிக்க, 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை வேண்டும். ஆனால் மிகவும் வெள்ளையான தோல் வகைகளுக்கு, 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தாலே போதும். தீக்காயங்கள் மற்றும் பிற ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சூரியனில் உங்கள் தோலை காட்டும்போது கவனமாக இருங்கள்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.

சூரிய ஒளி, குறிப்பாக UV-B கதிர்கள், வைட்டமின் D யின் இன்றி அமையாத இயற்கை ஆதாரம் ஆகும். போதுமான அளவு சூரிய ஒளி படும்போது, உங்கள் சரும செல்கள் (எபிடெர்மிஸ்) சூரிய ஒளியை, ஒளிச்சேர்க்கை முறை மூலம் வைட்டமின் D3 ஆக மாற்றுகிறது. ப்ரிவிட்டமின் D3         பின்னர் வைட்டமின் D ஆக மாற்றப்படுகிறது, அது உடலின் செல்கள் மற்றும் கல்லீரலுக்கு சேமிப்புக்கான கடத்தப்படுகிறது.

வைட்டமின் D இன் மற்ற ஆதாரங்கள்:

  • முட்டை மஞ்சள் கரு
  • டூனா, ஹெர்ரிங் மற்றும் சால்மன் போன்ற மீன்கள்
  • பாலாடைக்கட்டி
  • மாட்டின் கல்லீரல்
  • மீன் எண்ணெய்
  • ஆளி - மீன்
  • இறால்
  • பால், சோயா பால் மற்றும் அவற்றின் தயாரிப்புகள்.
  • தானியங்கள் மற்றும் ஓட்மீல்கள் போன்ற சில தொகுக்கப்பட்ட உணவுகள்.
  • வைட்டமின் டி வழங்கிகள் மற்றும் மாத்திரைகள்.

வைட்டமின் D உங்களுக்கு உகந்ததாக இருப்பது ஏன், உங்கள் உடல் செயல்பாடுகளில் அது எவ்வாறு உதவுகிறது என்பவற்றை விவாதிக்கலாம்.

  • எலும்புகளை வலுவூட்டுகிறது: உடலில் பாஸ்பரஸில் உள்ள கால்சியம் உறிஞ்சப்பட வைட்டமின் D அவசியமானது, எலும்புகளின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் இரண்டு தாதுக்கள் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகும். வைட்டமின் டி குறைபாடு எலும்பு முறிவுகளுக்குக் காரணமாக இருக்கும் பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கும்.
  • குழந்தைகளுக்கான நன்மைகள்: வைட்டமின் டி பச்சிளம் குழந்தைகளின் மற்றும் சிறார்களின் சரியான எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். இந்த வைட்டமின் குறைபாட்டால் குழந்தைகளுக்கு எலும்பு நோய் ஏற்படுகிறது. தினசரி 2000 IU அளவு வைட்டமின் டி சேர்த்துக்கொள்வது, குழந்தைகளுக்கு ஸ்டெராய்டு எதிர்ப்பு ஆஸ்துமாவை நிர்வகிப்பதில் உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கான நன்மைகள்: மாதவிடாய் நிற்கும் பருவத்து அறிகுறிகளை மேம்படுத்த மற்றும் குறிப்பாக மாதவிடாய்க்கு பிறகு, பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை ஆபத்தை குறைக்க, வைட்டமின் டி வழங்கிகள் பரிந்துரைக்கப்படுகிறது.
  • பற்களை வலுவூட்டுகிறது: வைட்டமின் டி வழங்கிகள்  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் ஏற்படக்கூடிய பல் நரம்புகளின் ஆபத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சி ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது பற்களின் மறுமதிப்பீடு மற்றும் பல் சிதைவை தடுக்க உதவுகிறது.
  • தசை வலிமையை அதிகரிக்கிறது: உடலில் கால்சியம் அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம், தசை வலிமை மற்றும் தசை வெகுஜனத்தை மேம்படுத்துவதில் வைட்டமின் டி உதவுகிறது. இது உடல் வலிமையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • எடை இழப்பை ஊக்குவிக்கிறது: வைட்டமின் டி நிறைந்த உணவுகள் பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். இது உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் சோர்வை குறைகிறது, இதனால் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

எலும்புகளுக்கு வைட்டமின் டி - Vitamin D for bones in Tamil

உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் D மிகவும் நன்கு அறியப்பட்ட விளைவுகள் மற்றும் நன்மைகளை செய்கிறது. வைட்டமின் டி உணவு மூலங்கள் மற்றும் வைட்டமின் டி வழங்கிகளின் உதவியால், உங்கள் உடல் கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை உறிஞ்சுகிறது. இப்போது, நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்தது போலவே, ஆரோக்கியமான எலும்பு அமைப்பு உருவாவதற்கு மிக அவசியமான ஒன்று கால்சியம். இதனால் வைட்டமின் டி உங்கள் உடலில் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சியை ஒழுங்குபடுத்தி ஊக்குவிக்கிறது, மேலும் உங்கள் எலும்புகளை வலுவாக்கி சரியான வடிவத்தையும் அளிக்கின்றன.

வைட்டமின் D இன் குறைபாடு காரணமாக இந்த அமைப்பு பாதிக்கப்படலாம். இது மென்மையான அல்லது தவறான எலும்பு அமைப்புகள் உருவாக வழிவகுக்கலாம். இதனால், எலும்பு நோய் (குழந்தைகளில்) அல்லது எலும்பு முறிவு (பெரியவர்களில்) ஆபத்து அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, அடிக்கடி வைட்டமின் D வழங்கிகள்  பெரும்பாலும் எலும்பு வலிமையை அதிகரிக்க எலும்பு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது குறிப்பாக நீங்கள் எலும்பு வலியை அனுபவிக்கிறீர்கள் என்றால்.

குழந்தைகளுக்கான வைட்டமின் டி - Vitamin D for children in Tamil

எலும்பு ஆரோக்கியம் குறித்த அதன் அதிர்ச்சியூட்டும் விளைவுகள் காரணமாக, பச்சிளம் குழந்தைகளுக்கும் மற்றும் சிறார்களுக்கும், எலும்பு வளர்ச்சி மற்றும் உருவாக்கம் ஆகியவற்றின் போது வைட்டமின் D அவசியமாகிறது. வலுவான எலும்புகளை ஊக்குவிப்பதற்கும், ஒரு தனிநபரின் வளரும் கட்டத்தில் உருவாகிற, எலும்பு நோய்கள் (ரிக்கெட்ஸ்) ஏற்படும் சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கும் வைட்டமின் D வழங்கி பொருள்களை குழந்தைகளுக்கு மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர்.

வைட்டமின் டி உங்கள் பச்சிளம் குழந்தை / சிறாரின் ஆரோக்கியத்திற்கு மற்ற எதிர்பாராத நன்மைகளையும் கொண்டுள்ளன. வைட்டமின் டி வழங்கிகள், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து  எக்ஸிமாஅடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற குழந்தை பருவ நோய்களின் நிகழ்வுகளை குறைக்கிறது என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன. தினமும் 2000 IU கொண்ட வைட்டமின் டி வழங்கிகளை எடுத்துக்கொள்ளுதல், ஸ்டீராய்டு எதிர்ப்பு ஆஸ்துமா மேலாண்மையில் உதவுவதாக அறியப்படுகிறது.

(மேலும் வாசிக்க: ஆஸ்துமா சிகிச்சை)

வயதானவர்களுக்கு வைட்டமின் டி - Vitamin D for elderly in Tamil

ஊட்டச்சத்து, மரபியல், வாழ்க்கை முறை மற்றும் உடல் காரணிகள் ஆகியவற்றின் மூலம் மூன்றாவது தசாப்தத்தின் மூலம் உச்ச எலும்பு வெகுஜனம் அடையப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நான்காவது தசாப்தத்தில் எலும்பு இழப்பு அல்லது எலும்பு வெகுஜன அடர்த்தி குறைவு ஏற்படுகிறது. இந்த கட்டங்களில் வைட்டமின் D போதுமான அளவு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால் எலும்பு கனிமப்படுதல் மற்றும் எலும்பு இழப்பு செயல்கள் துரிதப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதனால், வைட்டமின் டி வழங்கிகள் பெரும்பாலும் பெரிய எலும்பு இழப்புக்களை தடுக்க வயது முன்னேறும் போது பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் டி எலும்பு முறிவுகளை குறைகிறது - Vitamin D reduces fractures in Tamil

மேலே விவாதிக்கப்பட்டுள்ளபடி, எலும்பு வெகுஜன அடர்த்தி குறைபாடு, வயது முதிற்சி காரணமாகவே ஏற்படுகிறது. இதனாலேயே எலும்புகள் பலவீனமாதல் மற்றும் எலும்பு முறிவு ஆகியவை ஏற்படுகிறது. வைட்டமின் டி குறைபாடு கால்சியம் உறிஞ்சப்படும் அளவு குறைவதற்க்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் எலும்புகளில் இருந்து கால்சியம் அயனிகள் வெளியேறி, இரத்தத்தில் கால்சியத்தின் சாதாரண செறிவுகளை பராமரிக்க வைக்கிறது. எலும்பு வெகுஜன அடர்த்தி குறைவு மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு நேரடி உறவை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.  வைட்டமின் D யை உணவு ஆதாரங்களிலிருந்து அல்லது உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால், வைட்டமின் டி வழங்கிகளிலிருந்து போதுமான அளவுகளில் பெருவதால் இத்தகைய ஆபத்துகளில் இருந்து உடலை தடுக்கலாம்.

(மேலும் வாசிக்க: எலும்பு முறிவு சிகிச்சை)

பெண்களுக்கு வைட்டமின் டி - Vitamin D for women in Tamil

பெண்களுக்கு வயது முதிர்ச்சியடையும் காரணத்தாலும் மற்றும் அதே வயது முதிர்ச்சியடையும்  காரணத்தால் ஏற்படும் மாதவிடாய் நிற்கும் தருவாய் அறிகுறிகளின் விளைவுகளாலும் எலும்பு இழப்பு உண்டாககிறது. பெண்களின் 45-55 வயதில் மாத மாதம் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி, ஏற்படாமல் நிற்க ஆரம்பிக்கும் காலத்தை குறிக்கிறது மாதவிடாய் நிற்கும் தருவாய்(மேனோபாஸ்) என்னும் வார்த்தை. இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு மன நிலை மாறுபாடுகள், மனச்சோர்வு, கவலை மற்றும் ஹார்மோன் தொந்தரவுகள் மற்றும் அதிகபட்ச எலும்புப்புரை நோய் ஆபத்து ஆகியவை பெரும்பாலும் ஏற்படுகிறது.

எலும்புப்புரை  என்பது வயது முதிற்சி காரணமாக எலும்புகள் பலவீனமடைவதைக் குறிக்கிறது. எலும்புப்புரை எலும்புகள் மென்மையாகவும், முறிவு ஏற்படுவதற்கு ஏதுவானதாகவும் மாற காரணமாகின்றன. அதிகரித்த எலும்பு வெகுஜன மற்றும் வலிமை இழப்பு இந்த நோயால் ஏற்படுகிறது. இதனால் இது 'பஞ்சு எலும்பு' என்ற பண்புடையதாக இருக்கிறது. மேனோபாஸ் காரணமாக உண்டாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைபாடால் ஏற்படும், எலும்பு திசு மீதான பாதுகாப்பு நடவடிக்கைகளே மேனோபாஸ் காலத்தில் அதிக எலும்பு இழப்பு காரணம் என்று கருதப்படுகிறது.

கால்சியம் உறிஞ்சப்படும் செயல் மேனோபாஸ் காரணமாக கடுமையாக குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதுவே எலும்பு தேய்மானம் ஏற்படக் காரணமாக உள்ளது. கால்சியம் உறிஞ்சப்படுதல் மற்றும் கட்டுப்பாடு செயல் முழுவதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் கட்டுப்பாட்டின் கீழ் செய்ல்படுகிறது என்று கூறப்படுகிறது. மேனோபாஸ் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும், வைட்டமின் டி அளவுகள் மேனோபாசை தொடர்ந்து ஹார்மோன் அளவுகளுடன் தொடர்புடையதாக இருப்பதாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த கட்டத்தில் பெண்கள் அனுபவிக்கும் மனநிலை கோளாறுகள் மற்றும் தசைக்கூட்டு சீர்குலைவுகளின் அறிகுறிகளுடன் இது தொடர்பு கொண்டுள்ளது.

மாதவிடாய் நின்ற் பின்னர் எலும்பு அடர்த்தி அதிகரிக்கவும், மேனோபாஸ் காலத்தில் ஏற்படும் விளைவுகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அதிக அளவு வைட்டமின் டி உதவுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் மிகவும் பரிந்துரைக்கின்றனர். எனவே நீங்கள் ஒரு 45-60 இடையில் வயதுடைய ஆண் அல்லது பெண்ணாக இருந்தால், உங்கள் வைட்டமின் டி அளவை நீங்கள் வழக்கமாக சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

பற்களுக்கு வைட்டமின் டி - Vitamin D for teeth in Tamil

பல் செல்கள் அல்லது பல் சிதைவு பல்லின் கட்டமைப்பு அழிவது அல்லது பற்களிலுள்ள கனிம நீக்கத்தை குறிக்கிறது, இது பாதிக்கப்பட்ட பல்லின் கட்டமைப்புகளை பொறுத்து வலி அல்லது வலியற்றதாக இருக்கும். இந்த நோய் ஒருமுறை ஆரம்பித்துவிட்டால், திரும்பி போகாது ஆனால் பல் துளையிடுதல் மற்றும் நிரப்புதல் பொருட்களின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட கூடியது. இந்த நோயைத் திருப்பி அனுப்ப முடியாது என்பதால், அதை வராமல் தடுப்பது மிகவும் அவசியம்.

உங்கள் வாய்வழி சுகாதாரம் மற்றும் குறைவான சர்க்கரையை பயன்படுத்தும் பராமரிப்பு, இந்த நோய் வராமல் தடுக்க முக்கியம். வைட்டமின் D, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுக்கப்படும்போது பல் செல்கள் நோய்களின் ஆபத்துகளை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பற்களின் கட்டமைப்பு முக்கியமாக கால்சியம் அயனிகளால்  (கால்சியம் பாஸ்பேட்) ஆனது என்பதால், இந்த நிலையில் உணவுடன் சேர்த்து வைட்டமின் டி வழங்கிகள் எடுத்துக்கொள்ளப்படுவது கால்சியம் அயனிகளை அதிகப்படுத்தி, வலுவான பற்களை விளைவிக்க உதவுகிறது, இதனால் பற்கலின் சிதைவு தடுக்கப்படுகிறது.

தசைகளுக்கு வைட்டமின் டி - Vitamin D for muscles in Tamil

வைட்டமின் டி தசை வலிமை மற்றும் வெகுஜனத்தின் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தையும் மற்றும் ஒரு தனிபட்ட நபரின் உடல் வலிமையையும், திறன்களையும் செயல்திறன் மீதும் அதே தாக்கத்தை கொண்டுள்ளது. இது உடலின் கால்சியம் அளவை சீராக்குகிறது, இது தசை வலிமை மற்றும் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது; அதன் குறைபாடு காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. பல ஆய்வுகள் தனிநபர்களிடையே வீழ்ச்சி விகிதத்தில் கணிசமான குறைப்பைக் கண்டறிந்துள்ளன, இது மேம்படுத்தப்பட்ட தசை வெகுஜன மற்றும் சமநிலை ஆகியவற்றைக் குறிக்கும். தசை நரம்புகள் மற்றும் அதன் உருவகம் மீதான அதன் தாக்கம் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.

வைட்டமின் டி எடை இழப்பு - Vitamin D weight loss in Tamil

வைட்டமின் டி நிறைந்த உணவுகள் பெரும்பாலும் எடை இழப்புக்கு உதவுகின்றன. எடை குறைப்புக்கான கட்டுப்பாடான உணவு முறையை ஏற்கெனவே பின்பற்றும் தனிநபர்கள் பெரும்பாலும், அவர்களின் ஆற்றல் அளவை அதிகரிக்க,  சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றைத் தடுக்க மற்றும் அவர்களின் உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்க உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்த எடை இழப்பு பயணம் ஆரோக்கியமான மற்றும் குறைந்த மன அழுத்தம் கொண்டதாக அமையும் என்பதை இது  உறுதி செய்கிறது.

வைட்டமின் டி மற்றும் புற்றுநோய் - Vitamin D and cancer in Tamil

சூரிய ஒளி பரவும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு  சில குறிப்பிட்ட புற்றுநோய் வகைகள் உருவாக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஒரு பொதுவான கவனிப்பு உள்ளது. அவர்களுக்கு வைட்டமின் டி அதிக அளவு இருப்பதன் இந்த கவனிப்பின் தொடர்பை பற்றி ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி விவாதித்திருக்கிறார்கள். உண்மையில், வைட்டமின் D இன் குறைந்த அளவு புற்றுநோய்களின் சில வகைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.   பெரும்பான்மையான ஆய்வுகள் புற்றுநோய்குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஆபத்துக்களை குறைக்க உடலில் வைட்டமின் டி பாதுகாப்பு பற்றிய தொடர்பை நிரூபித்துள்ளது. இதனால், வைட்டமின் டி வழங்கி மருந்துகள் புற்றுநோய் அபாயத்தையும் இறப்புக்களையும் குறைப்பதாக பரிந்துரைக்கப்படுகின்றன.

வைட்டமின் D இன் மருந்தின் அளவு உங்கள் உடலின் தேவைகள் மற்றும் பிற தேவைகளை சார்ந்தது. மேலும் பாலினம், வயது, மருத்துவ நிலை மற்றும் பகுதி / புவியியல் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். நம் நாட்டில் போதுமான அளவு சூரிய ஒளி கிடைக்கிறது என்றாலும், இந்தியர்கள் பெரும்பாலும் வைட்டமின் டி குறைபாட்டு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அதிக தோல் நிறமி மற்றும் சூரியனால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க சருமத்தின் மீது பயன்படுத்தப்படும் சன் க்ரீம்களின் மேற்பூச்சால், சூரிய ஒளி போதுமான அளவு உறிஞ்சப்படாததே காரணம் ஆகும்.

இந்திய சபையின் மருத்துவ சோதனையின் படி, சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் D ஐ பெறாத இந்தியர்கள் தினசரி 400 IU வைட்டமின் D ஐ உட்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இரத்தத்தில் வைட்டமின் D இன் சாதாரண அளவு ஆரோக்கியமான நபர்களுக்கு 20 nanograms / milliliter முதல் 50 ng / mL  வரை ஆகும். 12 ng / mL க்கும் குறைவான மதிப்பானது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாகும்.

25-ஹைட்ராக்ஸி வைட்டமின் D இரத்த பரிசோதனையால் பிரதிபலித்தபடி இரத்தத்தில் வைட்டமின் சாதாரண அளவை பராமரிக்க தினசரி, வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டில் வைட்டமின் டி நிர்வகிக்கப்படுகிறது.

கடுமையான குறைபாடுகளைச் சமாளிக்க, 300,000 ஐ.யூ. உயர் போலுஸ் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து அடிக்கடி குறைந்த அளவிலான செறிவுடைய மருந்துகள் கொடுக்கப்படும். வைட்டமின் டி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 6 முதல் 8 வாரங்கள் வரை 50,000 IU வைட்டமின் D3 வாரா வாரம் கொடுக்கப்படுகிறது, அதன் பிறகு ஒரு நாளைக்கு 600 முதல் 1000 IU வரை மாதா மாதம் வழங்கப்படும், ஒரு வருதத்திற்கு இதை தொடரவும் தேவைப்படலாம். (1 IU = 0.025 MCG)

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.

நீண்ட காலத்திற்கு வைட்டமின் D வழங்கிகளின் பயன்பாட்டின்  சில பொதுவான பக்க விளைவுகள்:

மிக அதிக அளவில், வைட்டமின் D பயன்பாட்டால் ரத்த சுண்ணம் ( தசை வலி, திசைதிருப்பல் மற்றும் குழப்பம், தசை பலவீனம் மற்றும் தீவிர சோர்வு மற்றும் தாகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது), சிறுநீரக சேதம் அல்லது சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படலாம்.

Dt. Surbhi Upadhyay

Dt. Surbhi Upadhyay

Nutritionist
3 Years of Experience

Dt. Manjari Purwar

Dt. Manjari Purwar

Nutritionist
11 Years of Experience

Dt. Akanksha Mishra

Dt. Akanksha Mishra

Nutritionist
8 Years of Experience

Surbhi Singh

Surbhi Singh

Nutritionist
22 Years of Experience

மேற்கோள்கள்

  1. Y. Lhamo, Preeta Kaur Chugh, C. D. Tripathi. Vitamin D Supplements in the Indian Market. Indian J Pharm Sci. 2016 Jan-Feb; 78(1): 41–47. PMID: 27168680
  2. Cedric F. Garland et al. The Role of Vitamin D in Cancer Prevention. Am J Public Health. 2006 February; 96(2): 252–261. PMID: 16380576
  3. Song M et al. Plasma 25-hydroxyvitamin D and colorectal cancer risk according to tumour immunity status. Gut. 2016 Feb;65(2):296-304. PMID: 25591978
  4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Vitamin D and Cancer Prevention
  5. Lisa Ceglia. Vitamin D and Its Role in Skeletal Muscle. Curr Opin Clin Nutr Metab Care. 2009 Nov; 12(6): 628–633. PMID: 19770647
  6. Lars Rejnmark. Effects of Vitamin D on Muscle Function and Performance: A Review of Evidence from Randomized Controlled Trials. Ther Adv Chronic Dis. 2011 Jan; 2(1): 25–37. PMID: 23251739
  7. Khosravi ZS, Kafeshani M, Tavasoli P, Zadeh AH, Entezari MH. Effect of Vitamin D Supplementation on Weight Loss, Glycemic Indices, and Lipid Profile in Obese and Overweight Women: A Clinical Trial Study. Int J Prev Med. 2018 Jul 20;9:63. PMID: 30123437
  8. Erin S. LeBlanc et al. Vitamin D levels and menopause-related symptoms. Menopause. 2014 Nov; 21(11): 1197–1203. PMID: 24736200
  9. Daniel D. Bikle. Vitamin D and Bone. Curr Osteoporos Rep. 2012 Jun; 10(2): 151–159. PMID: 22544628
  10. Eamon Laird, Mary Ward, Emeir McSorley, J.J. Strain, and Julie Wallace. Vitamin D and Bone Health; Potential Mechanisms. Nutrients. 2010 Jul; 2(7): 693–724. PMID: 22254049
  11. Yoshida T, Stern PH. How vitamin D works on bone. Endocrinol Metab Clin North Am. 2012 Sep;41(3):557-69. PMID: 22877429
  12. Marwaha RK. Regional and seasonal variations in ultraviolet B irradiation and vitamin D synthesis in India.. Osteoporos Int. 2016 Apr;27(4):1611-1617. PMID: 26630977
Read on app