சுரைக்காய், உங்கள் உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமளிக்கும் காய்கறிகளில் ஒன்று ஆகும். லாகி, கியா அல்லது தூதி எனவும் அறியப்படும் இந்த வெளிர் பச்சை நிற காய்கறி, பல ஆண்டுகளாக இந்திய சமையல் முறையில் ஒரு முக்கியக் கூறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது ஒரு மிகச் சிறந்த சர்க்கரை குறைப்பான் (இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது), மற்றும் உங்கள் உடல் செயல்பாட்டைப் பராமரிக்க, மற்றும் நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ஒரு தொகுப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் லௌகி கி சப்ஸி -யின் ஒரு ரசிகராக இல்லை என்றாலும் கூட,  நீங்கள், அதை சாறு வடிவத்தில் உங்கள் வாழ்வில்  சேர்த்துக் கொள்ள முடியும். சுரைக்காய் சாறு, இந்த காய்கறியில்-நிறைந்த நன்மைகள் அனைத்தையும், ஒரு ஒற்றை கோப்பை சாறில் கொண்டிருக்கிறது.

சுரைக்காய் சாறை எடுத்துக் கொள்ள சிறந்தது காலை நேரம் ஆகும். அது மிக விரைவாக ஆக்சிஜனேற்றம் அடைகின்ற காரணத்தால், ஏறத்தாழ அது தயாரிக்கப்பட்ட உடனே அருந்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 

சுரைக்காய் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

  • தாவரவியல் பெயர்: லஜெனரியா சிசெரரியா
  • குடும்பம்: கொடிக்காய் குடும்பம்
  • சமஸ்கிருதப் பெயர்: क्षीरतुम्बी (க்ஷ்ரிட்டும்பி) or अलाबू (அலாபு)
  • பொதுவான பெயர்கள்: லாகி அல்லது கட்டு. வெள்ளை மலர் கொடிக்காய் அல்லது சுரைக்குடுக்கை காய், சுரைக்காய், நீண்ட வெள்ளரி, நியூகினியா பீன்ஸ், மற்றும் தாஸ்மானியா பீன்ஸ்.
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: சுரைக்காய், தென்னாப்பிரிக்காவில் உருவானதாக அறியப்படுகிறது. அது, உலகின் வெப்பமண்டல, மற்றும் மித வெப்ப  மண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
  1. சுரைக்காய் சாறு ஊட்டச்சத்து விவரங்கள் - Bottle gourd juice nutrition facts in Tamil
  2. சுரைக்காய் சாற்றின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Bottle gourd juice health benefits in Tamil
  3. சுரைக்காய் சாற்றின் பக்க விளைவுகள் - Bottle gourd juice side effects in Tamil
  4. முக்கிய குறிப்புகள் - Takeaway in Tamil

சுரைக்காய் 96% அளவு தண்ணீரைக் கொண்டிருக்கிறது மற்றும் அது, வைட்டமின் சி, கே, மற்றும் கால்சிய ம், ஆகியவற்றின் செறிவான ஒரு ஆதாரமாக இருக்கிறது. அது அதிக அளவில் தண்ணீரை உள்ளடக்கி இருப்பதால், சாறு எடுப்பதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. அது சந்தையில் தயாராகக் கிடைக்கிறது, மற்றும் மிகவும் விலை மலிவானது ஆகும். அது குறைந்த கொழுப்புக்களைக் கொண்டிருக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பு அளவுகளைக் குறைக்க உதவுகிறது. இந்த காரணங்களின் விளைவாக, இந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பானம் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

யு.எஸ்.டி.ஏ ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி, 100 கி சுரைக்காய் சாறு பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 95.4 கி
ஆற்றல் 14 கி. கலோரி
புரதச்சத்து 0.62 கி
கார்போஹைட்ரேட் 3.39 கி
நார்ச்சத்து 0.5 கி
கொழுப்பு 0.02 கி
தாதுக்கள்  
கால்சியம் 26 மி.கி
இரும்புச்சத்து 0.2 மி.கி
மெக்னீஷியம் 11 மி.கி
பாஸ்பரஸ் 13 மி.கி
பொட்டாசியம் 150 மி.கி
சோடியம் 2 மி.கி
துத்தநாகம் 0.7 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் பி 1 0.029 மி.கி
வைட்டமின் பி 2 0.022 மி.கி
வைட்டமின் பி 3 0.32 மி.கி
வைட்டமின் பி 6 0.04 மி.கி
வைட்டமின் பி 9 6 µகி
வைட்டமின் சி 10.1 மி.கி
கொழுப்பு/கொழுப்பு அமிலங்கள்  
செறிவுற்றவை 0.002 கி
ஒற்றை செறிவற்றவை 0.001 கி
பன்மை செறிவற்றவை 0.009 கி
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

சுரைக்காய் சாறு, அதனை உங்கள் உணவுமுறைக்குப் பொருத்தமான சேர்க்கையாக ஆக்குகின்ற வகையில், ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றும் குணமளிக்கும் பண்புகளால் நிரம்பி இருக்கிறது. சுரைக்காய் சாற்றின் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நன்மைகளில் சிலவற்றை, நாம் இப்போது காணலாம்.

  • உடலைக் குளுமைப்படுத்துகிறது: சுரைக்காய் சாறு, உடலின் மீது ஒரு குளிர்ச்சியூட்டும் விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அது, வெப்பமான கோடை காலங்களில் உடலில் நீர் வற்றிப்போதல் ஏற் படாமல் தடுக்க, ஒரு மிகச்சிறந்த பானமாக இருக்கிறது.
  • எடைக்குறைப்பை ஊக்குவிக்கிறது: சுரைக்காய் சாறு, உங்கள் எடைக் குறைப்பு உணவுமுறையில் சேர்த்துக் கொள்வதற்கான, ஒரு குறைந்த-கலோரி, மற்றும் குறைந்த-கொழுப்பு சேர்க்கைப் பொருளாகும். அது, உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கிறது, ஒட்டு மொத்த கொழுப்பு அளவைக் குறைக்கிறது, மற்றும் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைக்கிறது. அதன் மூலம் எடைக்குறைப்பை ஊக்குவித்து, உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கிறது.
  • வயிற்றுக்கான நன்மைகள்: சுரைக்காய் சாறு, உங்கள் வயிற்றுக்கு இதமளித்து, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. அது, செரிமானத்தை அதிகரிப்பதற்கு நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
  • நீரிழிவு-எதிர்ப்பு: ஆய்வு சான்று, சுரைக்காயின் சதைப்பகுதி, நீரிழிவு உள்ள நபர்களின் கணைய செயல்பாட்டை மேம்படுத்துகிறது என சுட்டிக் காட்டுகிறது. அதன் காரணமாக அது, இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது. மேலும், நீரிழிவு நோயாளியாக இருந்தால், அது இதயப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தையும் குறைகிறது.
  • முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது: சுரைக்காய் சாறு, வைட்டமின் சி போன்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ஒரு களஞ்சியம் ஆகும். ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், சரும முதிர்ச்சியை தாமதப்படுத்துகின்ற இயற்கையான மூலப்பொருட்கள் ஆகும், மற்றும் வைட்டமின் சி, சரும கொலாஜென்களை அதிகரிப்பதாகவும், மற்றும் உங்கள் சருமத்தைத் தொய்வின்றி இளமையாக வைத்திருப்பதாகவும் அறியப்படுகிறது.
  • சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்களைத் தடுக்கிறது: சுரைக்காய் சாறு, உடலின் மீது ஒரு சிறுநீர் பெருக்கி விளைவை கொண்டிருக்கிறது. அது, உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் நோய்க்கிருமிகளை வெளியேற்ற உதவுகிறது. அதன் மூலம், சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சுரைக்காய் சாறு அருந்துவது, யு.டி.ஐ அறிகுறிகளைக் குறைக்கவும் உதவக் கூடும்.

சுரைக்காய் சாறு உடலைக் குளுமைப்படுத்துகிறது - Bottle gourd juice cools the body in Tamil

சுரைக்காய், அதிக அளவில் தண்ணீரைக் கொண்டிருக்கும் ஒன்றாகும். அதனால் அது, கோடைக்காலத்தில் உங்கள் உடலை நீர்ச்சத்தோடு வைத்திருக்கிறது, மேலும், சுரைக்காய் சாறு, நமது உடல் மீது ஒரு குளிர்ச்சியூட்டும் விளைவைக் கொண்டிருக்கிறது. அது உங்கள் வயிற்றைக் குளிரச் செய்து, உடலில் இருந்து சூட்டைக் குறைக்கிறது.

தண்ணீரின் இடத்தை அது நிரப்ப முடியாத போதிலும், அது ஒரு வெப்பமான கோடைக்கால மதியத்தில், உறுதியாக உங்களுக்கு ஒரு ஆறுதலை அளிக்கக் கூடியது ஆகும். ஒரு ஜாடி சுரைக்காய் சாற்றினை நீங்களே தயாரித்து, ஒரு வல்லுனரைப் போல வெப்பத்தைத் தோற்கடியுங்கள்.

சருமத்துக்காக சுரைக்காய் சாறு - Bottle gourd juice for skin in Tamil

சுரைக்காய் சாறு, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வறட்சியைக் குறைக்க உதவக் கூடிய வைட்டமின் சி -யை செறிவாகக் கொண்டுள்ளது. வைட்டமின் சி -யானது, மன அழுத்தம், சுற்றுப்புற மாசுக்கள், மற்றும் ஆரோக்கிமற்ற உணவு முறை ஆகியவற்றோடு தொடர்புடைய ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைக்க உதவுகின்ற, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. உள்மூலக்கூறு சேதாரம், முதுமை அடையும் செயல்முறையின் வேகத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் சி எடுத்துக் கொள்வது, இந்த செயல்முறையைத் தாமதப்படுத்த உதவக் கூடியது ஆகும்.

மேலும், வைட்டமின் சி, உங்கள் சருமத்தின் கட்டமைப்பு ஒருங்கிணைப்பைப் பராமரிக்கின்ற பொறுப்பையுடைய புரதமான, கொலாஜென் கூட்டிணைப்பில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சுரைக்காய் சாறு எடுத்துக் கொள்வது, சரும தளர்ச்சி மற்றும் சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தைப் போக்குகின்ற வைட்டமின் சி- யை, நீங்கள் தினந்தோறும் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட அளவை விரைவாக எடுத்துக் கொள்ள உதவுகிறது.

நீங்கள் மேலும் கொஞ்சம் படைப்பாற்றல் உள்ளவராக மாறி, உங்கள் முகத்துக்கு வைட்டமின் சி -யை மேற்பூச்சாக அளிக்க, கொஞ்சம் சுரைக்காய் சாற்றை உங்கள் முகத்திலும் பூசிக் கொள்ளலாம்.

எடைக்குறைப்புக்காக சுரைக்காய் சாறு - Bottle gourd juice for weight loss in Tamil

சுரைக்காய் சாறு, அதன் எடைக்குறைப்பு நன்மைகளுக்காக மிகவும் புகழப்படுகிறது, மற்றும் அது உங்களின் அதிகப்படியான இஞ்சுகளின் எண்ணிக்கையை மிகவும் விரைவாக கீழே கொண்டு வர உதவுவதாகக் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், சுரைக்காய் சாறு, உடல் பருமன் தடுப்பு நடவடிக்கையில், அல்லது உங்கள் உடல் எடைக்குறைப்புத் திட்டத்தில் ஒரு சேர்க்கையாக, உதவிகரமாக இருக்கக் கூடிய சில குணங்களைக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக, அது குறைந்த கொழுப்பு மற்றும் அதிகத் தண்ணீரைக் கொண்டது ஆகும். எனவே, அது உங்கள் குறை-கொழுப்பு  உணவுமுறைக்கு இடையூறு செய்யாது, அல்லது நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அது மேலும் அதிக கொழுப்புக்களை அதில் சேர்க்காது.

இரண்டாவதாக, அது, உடலில் உள்ள மொத்த கொழுப்பு அளவைக் குறைக்க, மற்றும் எடைக்குறைப்பை ஊக்குவிக்க உதவிகரமாக இருக்கின்ற, வைட்டமின் சி -யின் செறிவான ஒரு ஆதாரம் ஆகும். 

ஆய்வுகள், உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள் சேர்தல், மற்றும் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மை ஆகியவை, உடல் பருமனின் பக்க விளைவுகளில் ஒன்றாக இருப்பதுடன், உடல் பருமனை ஏற்படுத்தும் காரணியாகவும் இருக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சாற்றில் இருக்கின்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், அந்த சேதார மூலக்கூறுகளை அழித்து ஒழிக்கின்றன. அதன் மூலம், உடல் பருமன் மற்றும் அதன் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கின்றன. 

இறுதியாக, அது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்ற, மற்றும் எடைக்குறைப்பை ஊக்குவிக்கின்ற வகையில், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும்  உதவுகிறது.

(மேலும் படிக்க: எடைக்குறைப்பு உணவுமுறை விளக்கப்படம்)

நோய் எதிர்ப்பு மண்டலத்துக்காக சுரைக்காய் சாறு - Bottle gourd juice for immune system in Tamil

சுரைக்காய் சாறு, உடலின் மீது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்ற விளைவைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. அது இரத்த வெள்ளை அணுக்கள், மற்றும் பிற நோய் எதிர்ப்பு மண்டல செல்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நமது உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது. முழு சுரைக்காயில் இருந்து தயாரிக்கப்படும் சுரைக்காய் சாறு, இந்தப் பண்புகளை உறுதியாகக் கொண்டிருக்கின்றது. இது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்ற, மற்றும் நமது உடலுக்குள் நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் நுழைவதைத் தடுக்கின்ற வைட்டமின் சி -யின் காரணமாக இருக்கலாம்.

மேலும் அது, ஒருஆக்சிஜனேற்ற எதிப்பியாக செயல்பட்டு, இரத்த வெள்ளை அணுக்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. சுரைக்காய் சாற்றில் இருக்கின்ற மற்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளுடன் இணைந்து, அது மன அழுத்தம், மற்றும் உள்மூலக்கூறு  சேதாரத்தினால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளைத் தடுப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது.

(மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்)

இரைப்பை மண்டலத்துக்காக சுரைக்காய் சாறு - Bottle gourd juice for gastrointestinal system in Tamil

பாரம்பரியமாக, சுரைக்காய் செரிமானத்தை மேம்படுத்த, மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுபட, மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது, இந்தச் சாறு சிறிது நார்ச்சத்து, மற்றும் ஏராளமான அளவு தண்ணீரைக் கொண்டிருக்கும் காரணத்தால் நடைபெறுவதாக இருக்கலாம். நார்ச்சத்து உங்கள் உணவுக்கு ஒரு திரட்சியைக் கொடுக்கின்ற அதே  வேளையில், தண்ணீர் உள்ளடக்கம் நமது செரிமானப் பாதையை சுத்திகரிக்க உதவுகிறது. இந்தப் பண்புகள் இணைந்து மலம் கழித்தல் செயல்பாட்டை எளிதாக்க உதவுகிறது. 

மேலும்,மலச்சிக்கல், மூல நோய் ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுரைக்காய் சாறு, முறையான மலம் கழித்தல் செயல்பாட்டை உறுதி செய்வதன் மூலம், உங்கள் இரைப்பை மீது ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தைக் குறைக்கிறது. அதன் மூலம் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. 

நீரிழிவுக்காக சுரைக்கை சாறு - Bottle gourd juice for diabetes in Tamil

தொடர்ந்து முறையாக சுரைக்காய் சாறு எடுத்துக் கொள்வது , நீரிழிவு நோயாளிகளுக்கும், மற்றும் இந்த நோய் ஏற்படும் அதிகபட்ச அபாயத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும், மிகவும் நன்மை அளிக்கக் கூடியது ஆகும். முன் மருத்துவ ஆய்வுகள், சுரைக்காய் சாறு இரத்த சர்க்கரை அளவில் திடீரென ஏற்படும் அதிகரிப்பைத் தடுக்கிறது, மற்றும் வழக்கமாக நீரிழிவு நோயினால் பலவீனமடைகின்ற கணைய செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது எனத் தெரிவிக்கின்றன.

இது மட்டும் அல்லாமல், சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு இதயநாள சேதத்தையும், மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தையும், குறைப்பதிலும் உதவிகரமாக இருக்கிறது. இது, சுரைக்காய் சாற்றில் உள்ள, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்பு அளவுகளைப் பராமரிக்க உதவுகின்ற, துத்தநாகத்தின் காரணமாக நடக்கிறது.

(மேலும் படிக்க: நீரிழிவு மேலாண்மை)

சுரைக்காய் சாறு அழற்சியைக் குறைக்கிறது - Bottle gourd juice reduces inflammation in Tamil

நமது உடலில் ஏற்படும் அழற்சியானது, நோய்த்தொற்று மற்றும் காயங்களுக்கு எதிரான நமது உடலின் இயல்பான எதிர்வினை ஆகும். இருப்பினும், அமைப்புரீதியான அல்லது நீண்ட கால அழற்சி என்பது, ஒரு மறைந்திருக்கும் நோயை சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம். மூட்டழற்சி, முடக்குவாதம், மற்றும் குடல் அழற்சி நோய் ஆகியவை, சில பொதுவான அழற்சி நோய்கள் ஆகும். அவை, வீக்கம், சிவந்து போதல் மற்றும் வலி ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன, மற்றும் அவை ஒரு பெரிய அசௌகரியத்துக்குக் காரணமாக இருக்கின்றன. நல்ல செய்தி என்னவென்றால், ஒரு தம்ளர் சுரைக்காய் சாறு அருந்துவது, வலி மற்றும் வீக்கம் இரண்டில் இருந்தும், நிவாரணம் பெற உதவக் கூடியதாகும். விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், சுரைக்காய் சாறு அருந்துவது, எந்த வித பக்க விளைவுகளும் இன்றி, குறிப்பிடத்தக்க அளவில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது எனத் தெரிவிக்கின்றன. இருந்தாலும், இந்த ஆய்வில் சுரைக்காய் சாறு  செயல்படும் சரியான முறை வரையறுக்கப்படவில்லை.

இந்த சாற்றில் இருக்கின்ற வைட்டமின் சி போன்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், இதன் அழற்சி எதிர்ப்பு பண்புக்குப் பொறுப்பான  காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். இது, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைப்பதன் மூலமாக அழற்சியைக் குறைக்கின்ற, ஒரு ஆக்சிஜனேற்ற மூலக்கூறினைக் கொண்டிருக்கிறது. 

(மேலும் படிக்க: அழற்சி நோய்களின் வகைகள்)

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்களுக்காக சுரைக்காய் சாறு - Bottle gourd juice for urinary tract infections in Tamil

சுரைக்காய் சாறு தொடர்ந்து அருந்துவது, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் அது, அதற்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. சுரைக்காய் ஒரு சிறுநீர் பெருக்கி ஆகும். அதாவது, அது நமது உடல் அமைப்பில் சிறுநீர் கழித்தல் நிகழ்வுகளை அதிகரிக்கிறது. அதன் ஒரு விளைவாக, நமது உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீர், மற்றும் நச்சுப்பொருட்கள்  வெளியே அடித்துச் செல்லப்படுகின்றன. இதைத் தவிர, நமது உடலில் காணப்படும் வைட்டமின் சி போன்ற ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், நமது சிறுநீரகங்களுக்கு ஏற்படுகின்ற ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைத் தடுக்க உதவுகின்றன.

இதய ஆரோக்கியத்துக்காக சுரைக்காய் - Bottle gourd for heart health in Tamil

சுரைக்காய் சாறு, நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த சாற்றில் உள்ள துத்தநாகம், எச்.டி.எல் அல்லது நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கின்ற அதே வேளையில், எல்.டி.எல் அல்லது கெட்டகொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது. அது, அதன் ஆக்சிஜனேற்ற பண்புகளுடன் சேர்ந்து, இரத்தக் குழாய்களில் படிமங்கள் மூலமாக அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இவ்வாறு, இதயநாள நோய் ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது. அதற்கும் மேலாக, துத்தநாகம் இரத்த அழுத்த அளவுகளைத் தகுந்த அளவில் பராமரிக்க, மற்றும் இதயத்துக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 

ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மை, மற்றும் உள்மூலக்கூறு சேதாரத்தைக் குறைப்பதன் மூலம், இதய செயல்பாட்டினை மேம்படுத்தவும் செய்கிறது.

(மேலும் படிக்க: இதய நோய் தடுப்புமுறை)

சுரைக்காய் சாற்றின் பிற நன்மைகள் - Other benefits of bottle gourd juice in Tamil

மேலே குறிப்பிடப்பட்ட ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளைத் தவிர, சுரைக்காய் சாறு மற்ற சில நன்மைகளையும் கொண்டிருக்கிறது. சுரைக்காய் சாறு உங்கள் உடல் மற்றும் ஆரோக்கி யத்துக்கு உதவக்கூடிய கூடுதல் வழிகளின் ஒரு பட்டியல் இங்கே தரப்பட்டு இருக்கிறது.

  • சுரைக்காய் சாறு, தேள் கடிப்பதனால் ஏற்படும் விஷத்தன்மையை முறிக்க ஒரு விஷமுறிவுப் பொருளாக செயல்படுகிறது.
  • அது, ஆஸ்துமா, இருமல், மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியைக் கொண்டவர்களுக்கு ஒரு சத்து மருந்தாக இருக்கிறது.
  • சுரைக்காய் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த உதவுகிறது.
  • அது நமது உடலை நீரேற்றத்துடன் வைக்கிறது, மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • சுரைக்காய் சாற்றில் உள்ள மெக்னீஷியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள், எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.
  • அது நமக்கு கடும் ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் தடுக்கிறது.
  • அது பல்வலிக்கு ஒரு திறன்மிக்க நிவாரணி ஆகும்.
  • அது புழுக்களால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களைத் தடுக்கிறது.
  • இளநரை ஏற்படாமல் தடுக்கிறது.
  1. கசப்பு சுவையுடன் இருக்கும் சுரைக்காய் சாறு நச்சுத்தன்மை மிக்கது
    ஒரு ஆரோக்கியமான உடலுக்கு சுரைக்காய் சாறு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. ஆனால், உங்கள் சுரைக்காய் சாறு கசப்பாக இருந்தால், அதை அருந்துவது உங்கள் உடலுக்கு அதிக அளவில் நச்சுத்தன்மை அளிக்கக் கூடியது மற்றும் உயிரிழப்புக்குக் கூட காரணமாகக் கூடியது என ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. மேலும் அது, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, அசௌகரியம், அல்லது அமைதியின்மையின் ஏதேனும் உணர்வு போன்ற பல்வேறு பக்க விளைவுகளுக்கும் காரணமாகிறது. எனவே, சாற்றை அருந்தும் முன்னால், அதன் சுவையைப் பரிசோதிப்பது மிகவும் அவசியமானதாகும். ஒருவேளை மேலே கூறப்பட்ட பக்க விளைவுகளில் எதையேனும் நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.
     
  2. இரைப்பை பிரச்சினைகள்
    கசப்பு சுவையுடைய சுரைக்காய் சாற்றினை அருந்துவது, சிறுகுடல் அழற்சி (மேல் சிறுகுடலில் ஏற்படும் அழற்சி), இரைப்பை அரிக்கப்படுதல் (வயிற்று சவ்வுக்கு சேதம் ஏற்படுதல்), இரைப்பை புண்கள்,மற்றும் உணவுக்குழாய் அழற்சி (உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சி) போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும். கசப்பான சுரைக்காய் சாற்றை அருந்துகின்ற போது, இரைப்பையின் மேல் பகுதியில் இரத்தக்கசிவுக்கு வழிவகுக்கிறது.
     
  3. மற்ற பக்க விளைவுகள்:  
  • அளவுக்கு அதிகமாக சுரைக்காய் சாறு அருந்துவது, சர்க்கரை குறைவு பிரச்சினைக்கு (குறை இரத்த சர்க்கரை) ஏற்படக் காரணமாகலாம்.
  • சுரைக்காய் சாறு, ஒரு சில நபர்களுக்கு ஒவ்வாமை எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

சுரைக்காய், ஒரு ஆரோக்கியமான உடல், மற்றும் மனதுக்கு மிகவும் நல்லது ஆகும். அது பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. உங்கள் உணவுமுறையில் இந்த சாற்றை சேர்த்துக் கொள்வது, ஒரு சாதகமான மாற்றத்தைக் கொணர்ந்து, உங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இருந்தாலும், இந்த சாற்றினை அருந்தும் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சாறு, மனித உடலினால் தாங்க இயலாமல் இருக்கக் கூடிய குறிப்பிட்ட மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதால், இது தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கக் கூடும். இந்த சாற்றினை வீட்டில் தயாரிப்பது மிகவும் நல்லது. ஆனால், நீங்கள் சுரைக்காய் சாற்றினை கடையில் வாங்கினால், நீங்கள் இயற்கை முறையில் விளைந்த சுரைக்காயினால் தயாரிக்கப்பட்ட சாற்றினையே நாட வேண்டும். மேலும், இந்த சாறை மற்ற காய்கறி சாறுகளுடன் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இந்த சாறு கசப்பு சுவையைக் கொண்டிருந்தால், அதை அருந்துவது பாதுகாப்பற்றது ஆகும்.

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 11218, Gourd, white-flowered (calabash), raw. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Parle Milind et al. [LINK]. IRJP 2 (6) 2011 13-17
  3. Indian Council of Medical Research Task Force. Assessment of effects on health due to consumption of bitter bottle gourd (Lagenaria siceraria) juice. Indian J Med Res. 2012;135:49-55. PMID: 22382183
  4. Puri R et al. Gastrointestinal toxicity due to bitter bottle gourd (Lagenaria siceraria)--a report of 15 cases. Indian J Gastroenterol. 2011 Sep;30(5):233-6. PMID: 21986853
  5. Garcia-Diaz DF, Lopez-Legarrea P, Quintero P, Martinez JA. Vitamin C in the treatment and/or prevention of obesity. J Nutr Sci Vitaminol (Tokyo). 2014;60(6):367-79. PMID: 25866299
  6. R Jayawardena et al. Effects of zinc supplementation on diabetes mellitus: a systematic review and meta-analysis. Diabetol Metab Syndr. 2012; 4: 13. PMID: 22515411
Read on app