பெரும்பாலான பெண்களுக்கு வாழ்க்கை மாறும் அனுபவமாக பிரசவம் உள்ளது. அப்படி இருக்க, ஒரு பெண் வந்து அவளது பத்தியத்தை கவனமாக திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியமானது. அதோடு பிரசவத்திற்கு பிறகுள்ள ஒரு ஆரோக்கியமான பத்தியமும் அத்தியாவசியமானது. பிரசவத்திற்கு பிறகு பின்பற்றவுள்ள பத்தியமானதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்ப்பதில் அம்மாவுக்கு பொறுப்புள்ளது. மேலும், தினசரி நடவடிக்கைகளுக்கு வலிமை மற்றும் ஆற்றல் அவளுக்கு தேவை என்பதால் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கொண்ட ஒரு சீரான உணவை சாப்பிடுவது என்பது பயனுள்ளதாக இருக்கும்.   

கர்ப்ப காலத்தின் போது எதிர்பார்த்த தாய்மார்களில் பெரும்பாலோர் எடை அதிகரிப்பைப் பெறுகின்றனர். புதிய தாய்மார்கள் வந்து கூடுதல் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தேடுகின்றனர். ஒரு சத்தான உணவை சாப்பிடுவதன் மூலம் எடையைக் குறைக்கலாம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துவோம்.

குழந்தை பெற்றெடுத்த பின் தாயின் உடலில் பால் சுரப்பதால் அவளது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பிரசவத்திற்குப் பின் சரியான பாலூட்டலுக்கு எடுக்கப்படும் உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக வேண்டும். ஏனென்றால் புதிதாக பிறந்த குழந்தைக்கு அது மட்டுமே ஊட்டச்சத்து தரக்கூடிய வழியாகும். தாய் மற்றும் குழந்தை இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் குழந்தையை பெற்றெடுத்த பின் ஒரு பெண் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து கூறுகள் மற்றும் உணவு பொருட்களை கொண்ட பத்தியத்தை குறித்து இந்த கட்டுரை விவாதிக்கிறது.

 1. நார்மல் டெலிவரிக்குப் பிறகுள்ள பத்தியம் உணவுமுறை - Postnatal diet after normal delivery in Tamil
 2. அறுவைசிகிச்சை பிரசவத்திற்குப் பிறகு புதிய தாய்க்கு உணவுமுறை - Postnatal diet after caesarian delivery in Tamil
 3. டெலிவரிக்குப் பின் இந்தியன் உணவுமுறை திட்டம் - Indian diet plan after delivery in Tamil
 4. உடல் எடையை குறைக்க புதிய தாய்க்கு உணவுமுறை விளக்கப்படம் - Post-pregnancy diet chart to lose weight in Tamil
 5. புதிய தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் - Foods to avoid post-pregnancy in Tamil

யோனி டெலிவரி என அழைக்கப்படும் சாதாரண முறையிலான பிரசவத்துக்கு யோனி வழியாக குழந்தையை அழுத்தம் கொடுத்து தள்ளுவது. இது தான் குழந்தை பிரசவத்திற்கு மிகவும் தீங்கற்ற முறையாகும். இந்த முறையானது தான் தாய் அல்லது குழந்தையை பல சிக்கல்களுக்கு உண்டாக்காமல் செய்கிறது. எனினும் பிள்ளையை பெற்றெடுத்த பின் அவள் வலிமையைத் திரும்பப் பெற வேண்டும். அப்போது தான் அவள் தன் குழந்தைக்கு ஒழுங்காக பாலூட்ட முடியும். இந்த அனைத்து தேவைகளையும் உறுதிப்படுத்த, பின்வரும் கூறுகளை உணவுமுறையில் இருக்க வேண்டும்:

 • கார்போஹைட்ரேட்டுகள்:
  குறைந்து போன சக்தியை மீண்டும் புதுப்பிக்க புதிய தாய்மார்களுக்கு கார்போஹைட்ரேட்டுகள் ஒரு அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இருப்பினும், உண்ணும் போது சரியான வகை கார்புகளை தேர்வு செய்வது அவசியம். தானியங்கள் முழுமையாக கொண்ட கோதுமை ரொட்டி, தானியங்கள், மற்றும் கார்புகளின் மற்ற ஆரோக்கியமான மூலத்தை உணவுகளில் சேர்க்கப்பட வேண்டும்.
   
 • புரதங்கள்:
  பொதுவாக கோழி பண்ணையிலுள்ள பறவைகள், லீன் கோழி இறைச்சி, முட்டை, மீன், மற்றும் பருப்பு வகைகள் போன்ற லீன் இறைச்சியை தான் புதிய தாய்க்கு பரிந்துரைக்கப்படும் புரதச்சத்து. வயறு நிரம்பிய உணர்வை அதிகரிக்கவும் புரதங்கள் உதவுகின்றன. எடை இழப்பு அடைய முயற்சிக்கும் தாய்மார்களுக்கு இது அவசியமானது. (மேலும் வாசிக்க: எடை இழப்பு உணவுமுறை விளக்கப்படம்)
   
 • நார்ப்பொருள்கள்:
  பெண்கள் பெரும்பாலும் புதிய தாய்மையை அடைந்தவுடன் மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். புதிய தாய்க்கு ஒரு சீரான உணவு அமைய ஆப்பிள், மாம்பழம், போன்ற நார்ச்சத்து கூடுதலாக நிறைந்த பழங்கள் அல்லது காய்கறிகள் அல்லது ஓட்ஸ், ஆளி விதை போன்ற நார்ப்பொருள்களின் உணவுமுறையை உங்கள் உணவில் சேர்ப்பது அவசியமானது.
   
 • பால் பொருட்கள்:
  பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற கால்சியம் நிறைந்த மூலங்களான பால் உணவு பொருட்களும் கூட தாய்க்கும் குழந்தைக்கும் அவசியமானது. சைவர்கள் அல்லது லாக்டோஸ்-சகிப்புத்தன்மையற்ற தாய்மார்கள் அல்லது லாக்டோஸ்-சகிப்புத்தன்மையற்ற குழந்தைகளுடன் கூடியவர்கள் சைவ உணவுப் பொருட்களை தேர்வு செய்யலாம்.
   
 • ஃப்ரஷ் பழங்கள் மற்றும் காய்கறிகள்:
  போதுமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்குகிற போதுமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவையை வந்து தாய்மார்கள் மற்றும் புதிய தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் பழக்கவழக்கத்தை உறுதி செய்ய வேண்டும். புதிய தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையாச்சும் ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  (மேலும் வாசிக்க: வைட்டமின் ஏ வளமுள்ள உணவுகள்)

பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படுகையில் சிசேரியன் டெலிவரி அல்லது சி-பகுதி பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சிசேரியன் டெலிவரிக்குப் பிறகு பிறந்த குழந்தைக்கும் தாய்க்கும் கூடுதல் கவனம் தேவை. டெலிவரிக்கு பின் சரியான உணவை தாயார் எடுத்துக்கொள்ளும் போது அவரது உடலில் இருந்த ஆற்றலை மீண்டும் துவக்க உதவும். சிசேரியன் டெலிவரிக்குப் பின் புதிய தாய்க்கு தேவையான ஊட்டச்சத்து வகைகள் பத்திய உணவுமுறையை குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 • நார்ப்பொருள் அதிகம் நிறைந்த உணவு:
  பாஸ்தா அல்லது ஜங்க் உணவுகள் போன்ற நார்ச்சத்து குறைந்த உணவுகளை சிசேரியன் டெலிவரிக்கு பிறகுள்ள தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவுகள் வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் இத்தகைய நிலைமைகளைத் தவிர்க்க உதவுகிறது. இதன் மூலம் ஒரு நல்ல குடல் இயக்கத்துக்கு வழிவகுக்கும்.
   
 • புரதங்கள்:
  போதுமான அளவு புரதத்தை உணவில் சேர்க்கப்படும் போது அது சி-பகுதியை குணப்படுத்தும் செயலுக்கு உதவலாம். திசுக்களின் உருவாக்கம் மற்றும் பழுது உள்ளிட்டவை குணப்படுத்துவதில் உதவுகின்ற வகையில் புரதங்கள் ஈடுபடுகின்றது. இது அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலின் தசை வெகுஜனத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மீன் (ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை) மற்றும் முட்டைகள் உணவுமுறையில் சேர்க்கப்படுவதால் தேவையான புரதங்கள் நல்குகிறது.
   
 • இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
  சில சமயங்களில், பிரசவத்தில் தாய்மார்கள் சி-பகுதி வழியாக அதிகப்படியான இரத்தத்தை வெளியிடுவர். ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் பிரசவத்தின் போது இழந்த இரத்தத்தை மீண்டும் புதுப்பிக்க இரும்புச்சத்து தேவைப்படுகிறது. முட்டை கருக்கள், வால்நட், பாதாம், போன்ற உலர்ந்த பழங்கள் ஆகிய இரும்புச்சத்து நிறைந்த உணவினை வந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
   
 • வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:
  புதிய தாய்மார்கள் வைட்டமின் சி தேவைப்படுகிறது. ஏனென்றால் தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்பட இது உதவுகிறது. இந்த வைட்டமின் ஓட ஆன்டி-ஆக்ஸிடன்ட்யின் தன்மை வந்து திசுப் பழுதுபார்க்கும் செயல்முறையை அதிகரிக்கவும் மற்றும் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது. புதிய தாய்மார்களுக்கு எலுமிச்சை மற்றும் கிவி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவுமுறையில் சேர்க்கப்பட்டு கொடுக்க வேண்டும்.
   
 • கால்சியம் நிறைந்த உணவுகள்:
  எலும்புகள் வலுவடைய மற்றும் இரத்த உறைதலுக்கு தேவையான கால்சியம் வந்து பால் அல்லது பால் பொருட்களில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. சீஸ், டோஃபு, தயிர் போன்ற பால் பொருட்களில் போதுமான அளவில் கால்சியம் உள்ளது.
  பால் பொருட்களை தவிர பசலைக் கீரையிலும் அதிக அளவு கால்சியம் காணப்படுகிறது. தங்கள் குழந்தைக்கு ஒரு சிறந்த ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வந்து போதுமான அளவில் கால்சியம் எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

உணவில் மசாலா மற்றும் மூலிகைகள் பயன்படுத்தப்படுவதற்கு இந்தியா பொதுவாக அறியப்படுது. குழந்தையை பெற்றெடுத்தப் பின் பின்பற்றும் உணவுமுறையில் இந்த மசாலாக்கல் அதிசயங்கள் செய்யலாம். புதிய தாய்மார்களின் உணவுமுறையில் பொதுவாக பின்வரும் பொருட்களை பயன்படுத்த பரிந்துரைக்கிறது:

 • மஞ்சள்:
  இது பல வைட்டமின்கள், பொட்டாசியம், நார்ப்பொருள், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் உள்டக்கத்தை கொண்டது. இந்திய சமையலில் மஞ்சள் வந்து ஒரு நிலையான மூலப்பொருளாக இருக்கிறது. உள் மற்றும் வெளிப்புற காயங்கள் குணமடையவும் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். மஞ்சள் வந்து வீக்கம் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு பிள்ளையை பெற்றெடுத்த பின் உண்டாகும் காயங்களை குணப்படுத்துவதிலும் உதவுவதாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஆய்வுகள் மற்றும் ஆதாரங்கள் கொண்டு தான் நிறுபிக்க வேண்டும்.
   
 • உலர்ந்த இஞ்சி தூள்:
  வைட்டமின் ஈ மற்றும் பல மினரல்களை கொண்டது தான் உலர வைத்து மற்றும் நசுக்கிய தூள் வடிவத்திலுள்ள இஞ்சி
   
 • பயறு வகைகள்:
  இந்திய உணவுமுறையில் ஒரு பகுதியாக உள்ளது தான் பருப்பு வகைகள் (டால்). அவை புரதங்கள், நார்ப்பொருள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவையானது. கொழுப்பை உடலில் சேரவிடாமல் இது தடுப்பதோடு ஜீரணிக்கவும் எளிதானது. புதிய தாய்மார்கள் தங்களது பத்திய உணவுமுறையில் பருப்பு வகைகளை சேர்த்துக்கொண்டால் விரும்பிய எடை இழப்பு பெற அவர்களால் முடியும்.
   
 • காரோம் விதைகள்:
  இந்த விதைகள் பொதுவாக இந்தியாவில் ஓமம் என்று அழைக்கப்படுகின்றன. புதிய தாய்மார்களுக்கு மார்பில் பால் சுரப்பை அதிகரிக்க ஓம விதைகள் உதவக்கூடும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. இந்த கூற்றை ஆதரிக்கும் விஷயத்தில் ஆய்வுகள் தேவை. ஓமத்தில் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தன்மை உள்ளதால் அது தாய் மற்றும் குழந்தை இரண்டிற்கு நன்மை பயக்கும். இதனால் உங்கள் உணவுமுறையில் இதை சேர்த்துக்கொள்வதில் பரிந்துரைக்கப்படுகிறது.
   
 • வெந்தயம்:
  வெந்தயம்  அல்லது மேத்தி விதைகள் வந்து கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவற்றின் வளமான மூலத்தை கொண்டது. இந்த ஊட்டச்சத்துக்கள் தாய் மற்றும் குழந்தைகளில் போதுமான அளவில் தேவைப்படுகின்றன. எனவே பால் கொடுக்கும் தாய்மார்கள் மத்தியில் வெந்தய தேநீர் ஒரு பிரபலமான பானமாக இருக்கிறது.
   
 • விரல் தினை:
  இந்தியாவில் ராகி என பிரபலமாக அறியப்படும் இவை வந்து இரும்புச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவற்றின் சிறந்த மூலப்பொருளாக இருக்கின்றது. இவை இரண்டும் டெலிவரிக்குப் பிறகு பெரும் அளவில் தேவைப்படுகின்றன. பால் மற்றும் பால் பொருட்கள் ஒவ்வாமையுள்ள தாய்மார்களுக்கு ஒரு நல்ல மாற்றாக விரல் தினை உள்ளது.

தேவையான முடிவுகளை அடைவதற்கு சரியான உணவு தேர்வுகளைத் உண்பதற்கு உணவுமுறை விளக்கப்படம் புதிய தாய்மார்கள் பின்பற்றலாம். தினசரி தேவைப்படும் ஊட்டச்சத்துக்களின் அளவைக் கண்டறிய ஒரு உணவுப் பட்டியல் தேவைப்படுகிறது. அது குழந்தை பெற்றெடுத்த பின் தாய்க்கும், குழந்தைக்கும் மிகவும் அவசியமானது.

உணவு வகை ஒரு பகுதியினுள் சேர்க்க வேண்டிய அளவு நாள் ஒன்றுக்கு பகுதிகளின் எண்ணிக்கை
தானியங்கள் (நவதானியம்) உணவுகள், பெரும்பாலும் முழு தானிய மற்றும்/அல்லது உயர் நார்ப்பொருள் தானிய வகைகள்
 • 1 துண்டு (40 கிராம்) ரொட்டி
 • ½ (40 கிராம்) பிளாட்ரொட்டி
 • ½ கப் (75-120 கிராம்) சமைத்த அரிசி/பாஸ்தா, முழு கோதுமை நூடுல்ஸ்/ரவை
 • 2/3 கப் (30 கிராம்) கோதுமை தானிய ஃப்லேக்குகள்
 • ¼ கப் (30 கிராம்) மியூஸ்லி
 • ஒரு சிறிய (35 கிராம்) மஃப்ஃபின்
9
காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள்/பீன்ஸ் கிட்டதக்க 75 கிராம்
 • ½ கப் சமைத்த காய்கறிகள்
 • ½ கப் சமைத்த நிலையில் உலர்ந்த அல்லது கான் இல் பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள்
 • 1 கப் பசலைக் கீரை, காலெ, ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகள் அல்லது வெள்ளரிகள், கேரட் போன்ற சாலட்
 • ½ கப் இனிப்பு சோளம்
 • ½ மீடியம் உருளைக்கிழங்கு அல்லது மற்ற மாவுச்சத்துள்ள காய்கறிகள்
 • 1 மீடியம் தக்காளி
7
பழங்கள் கிட்டதக்க 150 கிராம்
 • 1 மீடியம் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரிக்காய்
 • 2 சிறிய வாதுமை பழங்கள், பிளம்ஸ்
 • எப்போதாவது:
 • சர்க்கரை சேர்க்கப்படாத ½ கப் (125 மிலி) பழச்சாறு
 • 30 கிராம் உலர்ந்த பழம்
2
பால், தயிர், சீஸ் மற்றும்/அல்லது மாற்று வழிகள்
 • 1 கப் (250 மில்லி) மோர்
 • 2 துண்டுகள் (40 கிராம்) கடின சீஸ்
 • குறைந்தது 100 மி.கி / 100 மிலி கால்சியம் கொண்ட 1 கப் (250 மில்லி) சோயா, அரிசி அல்லது பிற தானிய பானம்
 • 100 கிராம் தோலுடனான பாதாம்
 • 100 கிராம் டோஃபு
லீன் இறைச்சி மற்றும் கோழி பண்ணையிலுள்ள பறவைகள், மீன், முட்டைகள், டோஃபு, நட்ஸ் மற்றும் விதைகள், பருப்பு வகைகள் அல்லது பீன்ஸ்
 • 65 கிராம் சமைத்த லீன் இறைச்சி
 • 80 கிராம் சமைத்த லீன் கோழி பண்ணை பறவைகள்
 • 100 கிராம் சமைத்த மீன் அல்லது மீன் கொண்ட ஒரு சிறிய கான்
 • 2 பெரிய (120 கிராம்) முட்டைகள்
 • 1 கப் (150 கிராம்) வேகவைத்த பருப்பு வகைகள் அல்லது பயறு, சுண்டல், பட்டாணி போன்ற பீன்ஸ்
 • 170 கிராம் டோஃபு
 • 30 கிராம் நட்ஸ்கள், விதைகள், அல்லது நட்ஸ் அல்லது விதை பேஸ்ட்

குழந்தை பெற்றெடுத்த பின் தாய் மற்றும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை பார்க்கனும். பிரசவத்திற்கு பிறகு ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது வந்து தாய்க்கும் பிள்ளைக்கும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புதிய தாய்மார்கள் உட்கொள்ள கூடாத உணவுகளை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 • வாயுவை உண்டாக்கக்கூடும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கப்படுவது சிறந்தது. வழக்கமாக இத்தகைய பானங்கள் சேர்க்கப்பட்ட செயற்கை இனிப்பான்கள் பிறந்த குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம்.
 • தேயிலை மற்றும் காபி போன்ற காஃபின் அதிக அளவு கொண்டிருக்கும் பானங்கள் வந்து நீர்ப்போக்கு மற்றும் சிறுநீரக விகிதம். குழந்தையின் வளர்ச்சி சீர்குலைவுகளுக்கு காஃபின் வழிவகுக்கலாம். ஆகையால் பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் இத்தகைய உணவுகளை மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • புதிய தாய்மார்கள் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது பாலூட்டலை குறைக்கிறது மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையின் வளர்ச்சி கோளாறுகளுக்கு வழிவகுக்கவும் செய்யலாம்.
 • வெள்ளைப் பருப்பு வகைகள், சிவப்பு கிட்னி பீன்ஸ், சுண்டல், கறுப்புநிற கண்ணுள்ள பீன்ஸ், பச்சை பட்டாணி போன்ற உணவுகளை படிப்படியாக உணவுமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு பிறகு ஆரம்ப 40 நாட்களுக்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, வெண்டைக்காய் மற்றும் வெங்காயம் போன்ற வீக்கம் தரும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
 • வறுத்த உணவுகள் ஜீரணிக்க மிகவும் கடினமானது. அதன் மூலம் அஜீரணமும் வாயுவும் ஏற்படக்கூடும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
 • சிசேரியன் டெலிவரியின் போது, ​​குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களில், புதிய தாய்மார்கள் அரிசினை தவிர்ப்பது சிறந்தது. அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. அதனால் இரத்தத்தில் சுகர் அதிகரிக்கலாம். இது குணப்படுத்தும் செயல்முறையை நீடிக்கிறது. பிரவுன் அரிசி தேவையான ஆற்றலை வழங்குகிறது. அது மட்டுமின்றி இது குறைவான கலோரிகளை மட்டுமே தருகிறது.
 • கான் இல் உணவுப் பொருட்கள், குறிப்பாக கான் இல் அடைக்கப்பட்ட மீன்கள் மற்றும் இறைச்சி வந்து தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவை சோடியத்தில் அதிகமாகவும் பதப்படுத்தல் உள்ளடக்கம் கொண்டதாகவும் இருப்பவை. இத்தகைய உணவுகளில் உயர் சோடியம் வந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியது. இது தாய்க்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.
  (மேலும் வாசிக்க: உயர் இரத்த அழுத்தத்தின் மேலாண்மை)

மேற்கோள்கள்

 1. Franca Marangoni et al. Maternal Diet and Nutrient Requirements in Pregnancy and Breastfeeding. An Italian Consensus Document. Nutrients. 2016 Oct; 8(10): 629. PMID: 27754423
 2. National Health Service [Internet]. UK; The Pregnancy Book
 3. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; The New Mother - Taking Care of Yourself After Birth
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Losing weight after pregnancy
 5. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Recovering from birth.
 6. Department of Health Strong Bones for You and Your Baby. New York state Government [Internet]
ऐप पर पढ़ें